( أَنَّ رَجُلًا مَاتَ فَدَخَلَ الْجَنَّةَ فَقِيلَ لَهُ مَا
كُنْتَ تَعْمَلُ قَالَ فَإِمَّا ذَكَرَ وَإِمَّا ذُكِّرَ فَقَالَ
إِنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فَكُنْتُ أُنْظِرُ الْمُعْسِرَ
وَأَتَجَوَّزُ فِي السِّكَّةِ أَوْ فِي النَّقْدِ فَغُفِرَ لَهُ )
மரணித்து பிறகு சொர்க்கத்தில்
நுழைந்துவிட்ட ஒருவரிடம் நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்? என
கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார் :
நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.
கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு
பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிது படுத்தாது
வாங்கிக் கொள்வேன் என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ்
மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி நூல் :
முஸ்லிம் 2919)
|