விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும்,
உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவரை அல்லாஹ்
சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான் -ரலி, நூற்கள் : அஹ்மத் 387, நஸாயீ,
இப்னுமாஜா)
( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ بِسَمَاحَتِهِ قَاضِيًا وَمُتَقَاضِيًا )
உரிமையை கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக்
கடைபிடித்தவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : அஹ்மத் 6669)
( رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى )
விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும்
நலினத்தைக் கடைபிடிப்பவனுக்கு அல்லாஹ் கிருபை செய்கின்றான் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : புகாரீ
1934)