11-أَللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ وَوَلَدِيْ ، وَبَارِكْ لِيْ
فِيْمَا أَعْطَيْتَنِيْ
11. யாஅல்லாஹ்! எனக்கு
செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ
கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!
12-لاَ
إِلَـهَ إِلاَّ اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لاَإِلَـهَ إِلاَّ
اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لاَ إِلَـهَ إِلاَّ اللهُ
رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ اْلأَرْضِ وَرَبُّ الْعَرْشِ
الْكَرِيْمِ
12. வணக்கத்திற்குரியவன்
மகத்தான, கணிவான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
வணக்கத்திற்குரியவன் மேன்மைமிக்க, அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத்
தவிர வேறுயாருமில்லை. வணக்கத்திற்குரியவன் வானங்கள், பூமி மற்றும்
கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை.
13-أَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلاَ تَكِلْنِيْ إِلَى
نَفْسِيْ طَرَفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ، لاَ
إِلَـهَ إِلاَّ أَنْتَ
13. யாஅல்லாஹ்! நான் உனது
அருளையே ஆதரவு வைத்துள்ளேன். (அதனை) கண் மூடித்திறக்கும்
அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!.
மேலும் என்னுடைய அனைத்து காரியங்களையும் சீர்படுத்துவாயாக!
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
14-لاَ
إِلَـهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ
الْظَالِمِيْنَ
14. வணக்கத்திற்குரியவன்
உன்னைத் தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம்
இழைத்தோரில் ஒருவனாகி விட்டேன்.
15-أَللَّهُمَّ
إِنِّيْ عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، اِبْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ
بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ،
أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ
أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ
خَلْقِكَ،أَوِاسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ،
أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ،وَنُوْرَ صَدْرِيْ
وَجَلاَءَ حُزْنِيْ وَذَهَابَ هَمِّيْ
15. யாஅல்லாஹ்! நிச்சயமாக நான்
உனது அடிமை. உனது அடிமை மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது
நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ
செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு
நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது
படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது
மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப்
பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை
பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக,
துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!
16-أَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى
طَاعَتِكَ
16. யாஅல்லாஹ்! உள்ளங்களை
திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம்
திருப்புவாயாக!
17-يَا
مُقَلَّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ
17. உள்ளங்களை புரட்டுபவனே! என்
உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!
18-أَللَّهُمَّ أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا
وَاْلآخِرَةِ
18. யாஅல்லாஹ்! இவ்வுலகிலும்
மறுவுலகிலும் உன்னிடம் நலவைக் கேட்கிறேன்.
19-أَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَـتِيْ فِي اْلاُمُوْرِ كُلِّهَا،
وَأَجِرْنِيْ مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ اْلآخِرَةِ
19. யாஅல்லாஹ்! என்னுடைய
அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்குவாயாக!
இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் என்னை
பாதுகாப்பாயாக!
20-رَبِّ
أَعِنِّيْ وَلاَتُعْنِ عَليَّ، وَانْصُرْنِيْ وَلاَ تَنْصُرْ
عَلَيَّ، وَامْكُرْ لِيْ وَلاَ تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِيْ
وَيَسِّرِ الْهُدَي إِلَيَّ، وَانْصُرْنِيْ عَلَى مَنْ بَغَي
عَلَيَّ، رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ
رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهًا
مُنِيْبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ، وَاغْسِلْ حَوْبَـتِيْ،
وَأَجِبْ دَعْوَتِيْ، وَثَبِّتْ حُجَّتِيْ، وَاهْدِ قَلْبِيْ،
وَسَدِّدْ لِسَانِيْ، وَاسْلُلْ سَخِيْمَةَ قَلْبِيْ
20. யாஅல்லாஹ்! எனக்கு
கிருபைசெய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக! எனக்கு
உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்காக
சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக!
எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக!
எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு
நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக
அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக,
அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக! இறைவா! எனது
பாமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது
பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச்
செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை
பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!
துஆ
எண் |
ஆதார நூல் |
11 |
புகாரி |
12 |
புகாரி, முஸ்லிம் |
13 |
அபூதாவூத், அஹமத் |
14 |
திர்மிதி, அஹமத் |
15 |
அஹமத் |
16 |
முஸ்லிம் |
17 |
திர்மிதி |
18 |
திர்மிதி |
19 |
அஹமத், தப்ரானி |
20 |
திர்மிதி,
அபூதாவூத் |
அடுத்த பக்கம்
|