முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்
திருப்பெயரால்...
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அவனுடைய பேரருளும் பெருங்கருணையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் நல்லோர்
அனைவரின் மீதும் பொழியட்டுமாக!
(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்களே அவர்களைப்
போன்று ஆகிவிடாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ் அத்தகையவர்களை) தங்களைத்
தாங்களே மறக்குமாறு செய்துவிட்டான். நிச்சயமாக அவர்களே பாவிகள்.
(அல்குர்ஆன் 59:19)
அல்லாஹ்வை நினைவூட்டுவதில் பிரார்த்தனைக்கு மகத்தான பங்குண்டு.
மனிதன் பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ்வை உடனே நெருங்குகிறான்.
அவனிடம் சரணடைகிறான், மன்றாடுகிறான், தனது இயலாமையையும் அடிமைத்
தனத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே இஸ்லாம் பிரார்த்தனையை ஓர்
வணக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
அல்லாஹ் திருமறையில் பல பிரார்த்தனைகளை கற்றுத் தருகிறான். மேலும்
நபி(ஸல்) அவர்கள் பல பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அவைகளில் சிலவற்றை மதிப்பிற்குரிய அறிஞர் ஸயீத் பின் அலீ பின் வஹப்
அல்கஹ்தானீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். -அல்லாஹ் அவர்களுக்கு
பரிபூரண கூலியை வழங்குவானாக!- அதனை பொருளுணர்ந்து பிரார்த்திக்க
வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பேருதவியால்
மொழிப்பெயர்த்துள்ளேன். இவை கருத்துக்களின் மொழியாக்கமே என்பதை
கவனத்தில் கொள்க!
இச்சிறிய முயற்சிக்கு பெருந்துணையாக இருந்த அன்புச் சகோதரர்
முஹம்மது இப்ராஹீம் மதனீ (இஸ்லாமிய அழைப்பு, வழிகாட்டி மையம்
-சனாயிய்யா - ஜித்தா) அவர்களுக்கும் மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும்
எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு
இதற்கான நற்கூலியை வழங்குவானாக! மேலும் இச்சிறிய முயற்சியை ஏற்று,
இதன் மூலம் பலரை பயனடையச் செய்து, அதன் கூலியை பன்மடங்காக
மறுமையில் தருவானாக!
சகோதரன்
எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ
பிரார்த்தனை பற்றி
திருமறையும் நபிமொழியும் |