Index

புகுமுன்

 

Download Unicode Font

For better view of Arabic letters install Traditional Arabic Font


அனைத்துப் புகழும் அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகுக! நல்ல முடிவு இறையச்சம் உடையவர்களுக்கே! இறையருளும் அமைதியும் அவனுடைய அடியாரும் அவன் தூதருமான முஹம்மது (ஸல் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவரின் மீதும் பொழியட்டுமாக!

ஹஜ்ஜைப் பற்றிய இச்சிறிய நூல், அதன் சிறப்புகள், ஒழுக்கங்கள், அதனை நிறைவேற்ற புறப்படுபவர் கடைபிடிக்க வேண்டியவைகள், ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் முக்கிய சட்ட விளக்கங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகின்றது. அல்லாஹ்வுடைய வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல் அவர்களின் சுன்னா ஆகியவற்றின் ஆதாரங்களின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க முஸ்லிம்களுக்கு உபதேசமாகவும் இதனை தொகுத்துள்ளேன். அல்லாஹுதஆலா கூறுகின்றான்:

 

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ

மேலும் (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில் நிச்சயமாக நல்லுபதேசம் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.
(அல்குர்ஆன் 51:55)

 

وَإِذْ أَخَذَ اللهُ مِيْثَاقَ الَّذِيْنَ أُوْتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلاَ تَكْتُمُوْنَهُ

(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மறைத்துவிடாது மக்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!)
(அல்குர்ஆன் 3:187)

 

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى

நன்மையான மற்றும் இறையச்சமுடைய காரியங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 5:2)


நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

( الدِّينُ النَّصِيحَةُ –ثلاثاً- قُلْنَا لِمَنْ؟ قَالَ : لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ )

மார்க்கம் என்பது உபதேசம் செய்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!- யாருக்கு (உபதேசம் செய்வது)? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் என பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: தமீம் அத்தாரீ-ரலி, நூல்: முஸ்லிம், அபூதாவூத்)


(مَنْ لَمْ يَهْتَمَّ بِأَمْرِ الْمُسْلِمِيْنَ فَلَيْسَ مِنْهُمْ، وَمَنْ لَمْ يُمْسِ وَيُصْبِحْ نَاصِحاً ِللهِ وَلِكِتَابِهِ وَلِرَسُوْلِهِ وَِلأَئِمَّةِ الْمُسْلِمِيْنَ وَعَامَّتِهِمْ فَلَيْسَ مِنْهُمْ)

முஸ்லிம்களின் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக் காதவர் அவர்களைச் சார்ந்தவர் அல்ல. மேலும் அல்லாஹ் வுக்கும் அவனுடைய வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்கும் உபதேசம் செய்யாதவராக காலைப் பொழுதை யும் மாலைப் பொழுதையும் அடைபவர் அவர்களைச் சார்ந்தவர் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹதைஃபா -ரலி, நூல் : தபரானீ)

இந்நூலின் மூலம் நானும் அனைத்து முஸ்லிம்களும் பயனடையவும் இம்முயற்சி கருணையாளனான அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், அவனிடத்தில் இனிய சொர்க் கங்களைப் பெற்று வெற்றியடையக் காரணமாக அமையவும் பொறுப்பாளனான அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். நிச்சயமாக அவனே செவிமடுப்பவன், பதிலளிப்பவன், அவனே நமக்குப் போதுமானவன், அவனே பொறுப்பாளர்களில் மிகச் சிறந்தவன்.
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்