For
better view of Arabic letters
install Traditional Arabic Font
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
اَلـحَمْدُ ِللهِ وَحْدَهُ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى مَنْ لاَ
نَبِيَّ بَعْدَهُ
ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்ட விளக்கங் களையும் ஆய்வுகளையும்
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் உள்ளடக்கிய தொகுப்பே தங்கள்
கையில் தவழும் இச்சிறியநூல். இதனை எனக்காகவும் அல்லாஹ் நாடும் பிற
முஸ்லிம்களுக்காகவும் தொகுத்துள்ளேன். இதன் சட்டங்களை ஆதாரங்களுடன்
குறிப்பிட முயன்றுள்ளேன்.
இந்நூல் முதல் முறையாக ஹிஜ்ரீ 1363-ம் ஆண்டு கண்ணியமிகு மன்னர்
அப்துல் அஜீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்ஃபைஸல் அவர்களின் செலவில்
அச்சிடப்பட்டது. -அல்லாஹ் அவர்களின் ஆன்மாவை தூய்மையாக்கி, அவர்களின்
தங்குமிடத்தை சிறந்ததாக்குவானாக!
அதன் பிறகு இந்நூலின் சட்டங்களை சற்று விரிவாக்கினேன். தேவைப்படும்
சட்டங்களுக்கு ஆய்வுகளை அதிகமாக்கினேன். அல்லாஹ்வின் அடியார்களில்
அவன் நாடுபவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அதனை மீண்டும் அச்சிட
விரும்பினேன். இதற்கு ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும் என
பெயரிட்டுள்ளேன். முழுமையாக பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதன்
பிறகும் சில முக்கிய விளக்கங்களையும் பயனுள்ள குறிப்புகளையும் அதில்
இணைத்துள்ளேன். இந்நூல் பலமுறை அச்சிடப்பட்டு விட்டது.
அல்லாஹ் இதனை அனைவரும் பயனடையும் நூலாக ஆக்கியருள்வானாக! இம்முயற்சி
அக்கருணையாளனின் திருப் பொருத்தத்தைப் பெறவும், அவனிடத்தில் இனிய
சொர்க்கங்களைப் பெற்று வெற்றியடையக் காரணமாக அமையவும் அவனிடம்
பிரார்த்திக்கின்றேன். நிச்சயமாக அவனே நமக்குப் போதுமானவன். அவனே
பொறுப்பாளர்களில் மிகச் சிறந்தவன். மகத்துவமிக்க மிக உயர்ந்தவனான
அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய)
சக்தி பெறவோ முடியாது.
நூலாசிரியர்
அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்
ஸவூதி அரேபியாவின் தலைமை முஃப்தீ
பேரறிஞர்கள் சபை, மார்க்க ஆய்வு மற்றும்
மார்க்கத் தீர்ப்பு நிறுவனத் தலைவர்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|