Index | Subscribe mailing list | Help | E-mail us

ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) ஏகத்துவத்தில் மீண்டும் குழப்பங்கள்

மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

 

To Play video/audio without any trouble please Download Latest RealOne player

இதனை அச்செடுப்பவர்கள் இந்த உதவிப் பக்கத்தை (Print help) பார்வையிடவும்.

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

பி.ஜே சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து நான் சொல்வதையெல்லாம் யாராவது கண்மூடித்தனமாக (தக்லீது) செய்தால், மறுமை நாளில் அவ்வாறு நம்பியவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் சாட்சி சொல்லுவேன். [Play video] - பி.ஜைனுல் ஆபிதீன்.


ஜகாத் சட்டங்கள்:

ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்


"ஜகாத் கொடுத்து விட்ட எந்த ஒரு பொருளுக்கும் மீண்டும் ஜகாத் இல்லை" என்ற குழப்பமான கருத்தினை தவறான சான்றுகளை முன் வைத்து கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஒரு தனிமனிதர் மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். பல இடங்களில் இத்தனி நபரால் கூறப்பட்டதை மொத்தமாக ஒரே சி.டி.யில் தொகுத்து பரவலாக அதை வினியோகித்தும் வந்தனர். குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக இவ்வாறு கருத்துக் கூறிவருதையும், அதனைப் பரப்புவதற்காக ஒரு சிறிய கூட்டமே பாடுபடுவதையும் அறிந்த நான், இதனை முறியடிக்கும் விதமாக சுமார் கடந்த பத்து மாதத்திற்கு முன்பு அவர்களின் ஆதாரங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, தாயிஃப் நகரில் தமிழ் வெள்ளி மேடையின் மூலம் மக்கள் மன்றத்தில் பல வாரங்களாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன்.

'துஹ்ரத்தன் லில்அம்வால்' என்பதை நபிமொழி (ஹதீஸ்) என்று கூறிவருகிறார்கள்
[Play video Clip 1Clip 2 | Clip 3 | Clip4 | Clip5]. அதை நிரூபித்தால் இரண்டு இலட்சம் பரிசாகத் தருகிறேன். ஜகாத்தை தொடர்ந்து வழங்கி வந்ததால் ஒருவன் பிச்சைக்காரனாகி விட்டான் [Play video Clip 1 | Clip 2 | Clip 3 | Clip 4] என 1425 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் ஒரே ஒரு நபரை உதாரணமாக எடுத்துக் காட்டினால் 10ஆயிரம் ரியால்கள் பரிசாகத் தருவதாகவும் சவால் விட்டிருந்தேன். இதுதான் நான் விடுத்திருந்த சவால்களில் முதலாவது.

இந்த சூழ்நிலையில், உண்மையான இந்தக் கருத்தை தாயிஃப், ஜித்தாவில் உள்ள மார்க்க அறிஞர்கள் உட்பட தவ்ஹீத் சகோதரர்கள் பலர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். காலங்கள் மாற, நம்முடைய இந்தக் கருத்தில் உண்மை இருப்பதை இவர்கள் அனைவரும் புரிந்து கொண்டு, பிறருக்கும் அதனைப் பிரச்சாரம் செய்து வர ஆரம்பித்தனர்.

இதன் பிறகு இந்தக் கருத்தை உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதி, 'ஜகாத் ஓர் ஆய்வு' என்ற இவர்கள் வெளியிட்ட தொகுப்பு சி.டி.யில் மட்டும் பதிவாகியுள்ள எல்லா வகையான சான்றுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றில் உள்ள தவறுகளையும், முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டி விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி முடித்து, இணைய தளத்தில் வெளியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தேன்.

இச்சூழ்நிலையில், நாம் கூறிய இந்த உண்மையை ஜித்தாவில் உள்ள சில தவ்ஹீத் அறிஞர்கள் அந்த தனிநபரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன் பிறகு, சுமார் நான்கு ஆண்டுகளாக ஒரு தனிநபரின் கருத்தாக மட்டுமே இருந்த இவ்விஷயம் மூன்று நாட்களில் T.N.T.J.யின் ஒட்டு மொத்த அறிஞர்களது கருத்தாக மாற்றப்பட்டு ஏகத்துவம் செப்டம்பர் (2005) மாத இதழில் வெளியாகின்றது என்றால், T.N.T.J.யில் உள்ள மவ்லவிகளின் சிறகுகள் கட்டப்பட்டுள்ளன என்றுதானே புரிகின்றது. சுமார் நான்கு வருடங்களாக கருத்தளவில் வேறுபட்டிருந்ததை கடந்த காலங்களில் எந்தவொரு சந்தர்பத்திலும் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வராமல் மௌனம் காத்து வந்த இவர்கள், நாம் பிரச்சனையைக் கிளப்பியதும் வெறும் மூன்றே தினங்களில் எவ்வாறு ஒன்றுபட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டிருந்த இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துக்கு வந்துவிட்டதாக சொல்லி, ஒரு தனிநபரின் கருத்து ஏகத்துவம் இதழில் வெளிவருவதாகச் செய்திகள் கிடைத்தது. (ஏகத்துவம் இதழில் பிரசுரிக்கப்பட்ட சிறிது நாட்களுக்குள் ஒரு தனிநபரின் பெயரால் புத்தக வடிவில் விற்பனைச் சந்தைக்கும் வந்துவிட்டது என்பதே இது தனிநபரின் கருத்து மட்டும்தான் என்பதற்கு வலுவான சான்றாகும்)

இவர்கள் என்னதான் எழுதியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் வரை எனது ஆய்வுக் கட்டுரையை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன்.

ஆனால், வெள்ளி மேடையின் மூலம் கேள்விகளாகவும், சவால்களாகவும் வைக்கப்பட்டு ஆதரவாளர்களின் மூலம் இவர்களது கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும் செப்டம்பர் மாத (2005) ஏகத்துவம் இதழில் உருப்படியான பதில் ஏதுமில்லை. மேலும், இறைத்தூதர் மீது பொய்யுரைத்துள்ளதாக நான் எடுத்துக் காட்டியது குறித்து இவர்கள் பொருட்படுத்தவேயில்லை, என்பதை அறிந்த நான் மட்டுமல்ல தாயிஃப், மற்றும் ஜித்தாவில் உள்ள அவர்களது ஆதரவாளர்களும்கூட ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். ஜித்தாவில் உள்ள ஆதரவாளர்களில் பலர் இவர்களை பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த காலங்களில் இவர்கள் கூறிவந்த உதாரணங்கள், எடுத்து வைத்த சான்றுகள் ஆகிய அனைத்தும் தவறானதுதான் என்பதை உணர்ந்து கொண்டு விட்டதாக வாசகர்களில் எவரும், குறிப்பாக இவர்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றி வருபவர்கள் அறவே புரிந்து கொள்ளக் கூடாது என்பதை, கவனத்தில் கொண்டு, செப்டம்பர் (2005) ஏகத்துவம் மாத இதழை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தயாரித்திருந்தார்கள்.

'வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்' என்பதற்கு நான் எடுத்துக்காட்டிய சான்றுகள் குறித்து மட்டும் தவறான சில செய்திகளை தந்து கடந்த காலத்தில் தமது ஆதரவாளர்களை ஏமாற்றியது போலவே, இப்போதும் ஏமாற்ற முயற்சித்திருந்தார்கள். அவற்றிற்கான பதிலை மட்டும் நமது ஆய்வுக் கட்டுரையில் இணைத்து தாமதிக்காமல் இணைய தளத்தில் வெளியிட்டேன்.

நமது மறு ஆய்வுக் கட்டுரையை இணைய தளத்தின் மூலம் அறிந்து கொண்ட 'அல்ஜன்னத்' ஆசிரியர் குழு தங்களது இதழில் பிரசுரிக்க முன் வந்த போது, மக்களை விரைவாகச் சென்றடைய இதுவே மிகச் சரியான வழி என்றுணர்ந்து அதற்கான ஒப்புதல் அளித்தேன்.

இவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் (2005) அல்ஜன்னத் மாத இதழில் நமது ஆய்வுக்கட்டுரை வெளிவந்த பிறகுதான் பரபரப்படைந்து எழுத்து வடிவில் நமது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டு விட்டதே என்று ஆத்திரமடைந்த இவர்கள், அதற்கான மறுப்பை ஜனவரி(2006) ஏகத்துவம் இதழில் பிரசுரம் செய்தார்கள். ஏற்கனவே மூடி மறைத்த பல்வேறு உண்மைகளை இனிமேலும் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டதால், அதனை ஜனவரி(2006)ஏகத்துவம் இதழில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டனர். இதற்கு அவர்களது வாக்கு மூலமே தெளிவான சாட்சி.

"அதை (வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற கருத்தை) நிறுவுவதற்காக எடுத்து வைத்த சில காரணங்களும், சில சான்றுகளும் சரியானவை அல்ல என்ற முடிவுக்கும் அனைவரும் வந்தனர்." ...'எந்தக் காரணம் எதிர்க் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு வலிமையானதாகவுள்ளதோ அதை மட்டுமே கூற வேண்டும் என்ற முடிவும் அன்றைய தினம் எடுக்கப்பட்டது' (ஏகத்துவம், ஜனவரி -2006)


தங்களை எதிர் கொள்ள யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த இவர்களை சற்று சிந்திக்க வைத்து தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளச் செய்யும் அளவிற்கு வலிமைமிக்கதாக நமது ஆய்வுக் கட்டுரையை ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். அல்ஹம்து லில்லாஹ்.

மேலும், ஏகத்துவம் (ஜனவரி -2006) இதழில் வெளியான கட்டுரையின் மூலம் நாம் எடுத்துக் காட்டிய எல்லா உண்மைகளையும் குறிப்பாக ஒரு முறை ஜகாத் வழங்கியவற்றுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் தங்களை அறியாமலேயே இவர்கள் ஒப்புக் கொண்டு விட்டார்கள். ('இவர்கள் ஒப்புக் கொண்ட உண்மைகள்' என்ற தலைப்பில் இதற்கான விளக்கம் விரிவாக தரப்பட்டுள்ளது.)

ஆனாலும், எல்லா உண்மைகளையும் உடனடியாக ஒப்புக் கொண்டுவிடக் கூடாதே என்ற ஈகோ இன்னமும் இவர்களிடம் இருந்தே வருகிறது. 'எந்தக் காரணம் எதிர்க் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு வலிமையானதாகவுள்ளதோ அதை மட்டுமே கூற வேண்டும்' என்ற அவர்களது வரிகளே இதற்கு சாட்சி. அதாவது, கடந்த காலங்களில் இவர்கள் எடுத்து வைத்த சான்றுகள் அனைத்தும் தவறானதுதான் என்றாலும், அவ்வளவு விரைவில் நாம் பின் வாங்கிவிடக் கூடாது. எதிர் கருத்து சொல்ல முடியாத வேறு கருத்துக்கள் ஏதேனும் உண்டா? எனத் தேடிப்பிடித்து, அதைக் கண்டறிந்து அவற்றை கூறி மீண்டும், மீண்டும் மக்களை குழப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

மேலும், இதே ஜனவரி (2006) ஏகத்துவம் இதழில், 'ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்' என்ற தலைப்பில் நாம் கூறாத சில செய்திகளையும் எடுத்தெழுதி விட்டு, அதை நாம் ஒப்புக்கொண்டு விட்டதாக விஷமத்தனமாக எழுதியுள்ளனர்.

 

நாம் கூறாத செய்திகள்

  • அனாதைகளின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நபிமொழி.

  • இரண்டு ஆண்டிற்கான ஜகாத்தை முன் கூட்டியே அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கியதாகக் கூறப்பட்ட நபிமொழி.

  • ஒரு பொருளை ஒருவன் பெற்றுக்கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற நபிமொழி. (இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானதுதான் என ஒரு காலத்தில் இவர்கள்தான் கூறிக் கொண்டிருந்தனர். இப்போது தங்களது மனோ இச்சைக்கு ஒத்து வராததால் பலவீனமானது என பல்டி அடித்து விட்டனர்)

  • கால் நடைகளின் ஜகாத் பற்றிய நபிமொழி.

மேற்கூறப்பட்டவையில் முதல் மூன்று நபிமொழிகளும் பலவீனமானவை, கால்நடைகள் சம்பந்தப்பட்ட நபிமொழியில் விதண்டாவாதம் பேசி மக்களை திசைதிருப்புவார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அதனை நமது மறு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடவில்லை என்பதுமட்டுமல்ல, வெள்ளி மேடையிலும் இவற்றை உதாரணத்திற்குக் கூட நாம் எடுத்துக்காட்டவில்லை.
ஆனால், இவர்களின் முன்னாள் ஆதரவாளராக இருந்த ஒரு அறிஞரால்தான் இக்கருத்து எடுத்து வைக்கப்பட்டது. அவற்றை நாம் கூறவில்லை என்பதால், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என்ற அடிப்படையில் அதனைப் பொருட்படுத் வில்லை. சம்பந்தப்பட்டவர்கள்தான் இவற்றிற்கு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

மறு ஆய்வுக் கட்டுரையில் நாம் எடுத்துக்காட்டிய பல உண்மைகளை மறுத்துரைக்க முடியாமல் அதனை ஒப்புக் கொண்டவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் ஏற்க மறுத்துள்ளனர். சான்றுகளின் அடிப்படையில் அறிவார்ந்த வாதங்களை முன் வைத்து மறுத்திருப்பார்களேயானால் நாம் வரவேற்றிருப்போம். அதில் உண்மைகள் இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்கவும் தயங்க மாட்டோம். ஆனால், இவர்கள் ஏற்க மறுத்ததற்கான காரணம் என்ன? என்பதை அவர்களது எழுத்தே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

"அவர் அறிவித்த இரண்டு இலட்சம் பரிசு சவாலை எதிர் கொள்ளாமல் அவரை விடப் போவதில்லை என்பதில் பி.ஜே. உறுதியாக இருக்கிறார்" (ஏகத்துவம், 47வது பக்கம், ஜனவரி -2006)

 
இவர்கள் ஏற்க மறுத்துள்ள இரண்டு விஷயங்களும் 'இலட்சம்' தொடர்புடையவை.

1) 'துஹ்ரத்தன் லில் அம்வால்'
[Play video Clip 1Clip 2 | Clip 3 | Clip4 | Clip5] என்பதை ஹதீஸ் என நிரூபித்தால் ரூபாய் இரண்டு இலட்சம் பரிசு தரப்படும் என நாம் ஏற்கனவே அறிவித்தது. (ஆனால், அது ஹதீஸ் அல்ல, நபித்தோழரின் கூற்றுதான் என்பதை அவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டதால் அந்தப் பரிசுத் தொகையினை பரிதாபமாக இழந்து விட்டனர். எனவே, பணம் கிடைக்கும் என்று இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம்.)


2) 'வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும்' என ஒரு ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த நூலிலுமில்லை. அவ்வாறு ஒரு ஹதீஸை எடுத்துக்காட்டினால் ரூபாய் ஒரு இலட்சம் பரிசு என ஏற்கனவே அவர்கள் அறிவித்தது.
[Play video] (அபூ தாவூதில் உள்ளது பலவீனமானது என்றுகூட அவர்கள் அப்போது குறிப்பிடவில்லை. பல ஆண்டுகளாக ஜகாத் குறித்து ஆய்வு செய்த இவர்களுக்கு இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகவே அறவே தெரியாது என்பதுதான் காரணம்)


ஏகத்துவம் (ஜனவரி -2006) இதழில் வெளியான கட்டுரையின் மூலம் நாம் எடுத்துக் காட்டிய எல்லா உண்மைகளையும் குறிப்பாக ஒரு முறை ஜகாத் வழங்கியவற்றுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் தவிர்க்கப்பட்ட ஆதாரங்கள் என்ற தலைப்பின் கீழ் பட்டியலிட்டு பல உண்மைகளை ஒப்புக் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் அல்ஹம்து லில்லாஹ்.

அவர்கள் ஒப்புக் கொண்ட உண்மைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


ஒப்புக்கொண்ட உண்மைகள் (ஏகத்துவம் ஜனவரி-2006)
 

1. கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுத்தால் ஏழ்மை ஏற்படும் என்பது போன்றவற்றை உதாரணமாகக் கூட கூறக் கூடாது.


2. "ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால்தான் அதிகமானோர் ஜகாத் கொடுப்பார்கள்" என்பது போன்ற வாதங்களையும் தவிர்க்க வேண்டும்.


3. அபூ பக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்பதுதான் சட்டமாக இருந்து வந்தது.


4. மனிதனின் அழுக்கே ஜகாத்.


கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுத்தால் பிச்சைக்காரனாகி விடுவானா?

[Play video Clip 1 | Clip 2 | Clip 3 | Clip 4]


இவர்கள், தங்களின் கருத்தினை நிலைநிறுத்த கடந்த காலங்களில் எடுத்து வைத்த சான்றுகளிலேயே மிகவும் கண்டனத்திற்குரியது "ஜகாத் கொடுத்தால் விரைவில் பிச்சைக்காரனாகி விடுவான்" என்ற ஆபத்தான இந்தக் கருத்தாகும். இதுதான் பலபேரை (ஷைத்தானின்) கவர்ச்சியால் ஆட்டிப்படைத்து இவர்களின் ஜகாத் பற்றிய புதிய கருத்தில் விழச்செய்ததாகும்.


'ஏழ்மை' என்ற நாசூக்கான வார்த்தையால் தற்போது குறிப்பிட்டுள்ளவர்கள் கடந்த காலங்களில் ஜகாத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஜகாத் தொடர்ந்து வழங்கினால் 'பிச்சைக்காரனாகிவிடுவான்' என்ற மோசமான வார்த்தையால் விமர்சித்தே பிரச்சாரம் செய்து வந்தனர். இவர்களின் ஜமாத் காரர்களிடம் ஜகாத் சம்பந்தமாக பேசினால் முதலில் பேசக்கூடிய வார்த்தை இதுதான்.

'தர்மம் செய்தால் பிச்சைக்காரனாகிவிடுவாய் என ஷைத்தான்தான் எச்சரிக்கின்றான்' என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வசனத்தை முன்னிறுத்தியும் மாறாக, ஜகாத் வழங்குவதால் மேலும், மேலும் செல்வம் பெருகிக் கொண்டேதான் இருக்கும் என்று குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து தக்க சான்றுகளை எடுத்துக் காட்டியிருந்தேன்.

இதனடிப்படையில் நமது கேள்வி,


ஜகாத் வழங்கிய பொருளுக்கே தொடர்ந்து மீண்டும் ஜகாத் வழங்கி வந்ததால் ஒருவன் பிச்சைக்காரனாகி விட்டான் என 1426ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் ஒரே ஒரு நபரை மட்டும் உதாரணத்திற்காகவேனும் எடுத்துக்காட்டமுடியுமா?

இதைத் தொடர்ந்து, உண்மையை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லாததால், இனிமேல் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான இக்கருத்தை உதாரணத்திற்கு கூட எங்களில் யாரும் கூற மாட்டோம் என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்களை பின்பற்றுபவர்கள் இதனடிப்படையிலாவது இந்த கேடுகெட்ட வார்த்தையை சொல்லாமல் இருக்கட்டும். ஏற்கனவே சொன்னவற்றிற்காக இறைவனிடம் தவ்பா செய்து மீளட்டும்.

சட்டத்தை எளிமையாக்க வேண்டுமாம். [Play video]


"ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால்தான் அதிகமானோர் ஜகாத் கொடுப்பார்கள்" என்பது போன்ற வாதங்களையும் தவிர்க்க வேண்டும்


வருடா வருடம் ஜகாத் கொடு என்ற கடினமான சட்டம் கூறப்படுவதால்தான் ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவதில்லை. ஒரு தடவை கொடுத்தால் போதும் என்று சட்டத்தை எளிமையாகக் கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் (அதிகமானோர் என்பது இப்போதைய திருத்தம்) கொடுத்து விடுவார்கள் என்று கடந்த காலங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். [Play video]

ஜகாத் ஒரு தடவைதான் என்ற எளிமையான சட்டம் அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் இருந்திருந்தால், ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் வழங்கியிருப்பார்கள். ஜகாத் வழங்க மறுத்தவர்களுடன் போர் செய்ய வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.

மேலும், ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழ வேண்டும், ரமளான் 30 நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்பதனால் மிகக் குறைந்த சதவிகித மக்கள்தான் இதைக் கடை பிடித்து வருகின்றனர். எல்லோரும் செய்யும் விதத்தில் இச்சட்டம் எளிமையாக்கப்பட்டால் அது அனைவருக்கும் பயனாக இருக்குமே, எப்போது இதனைச் செய்து தருவார்கள்? என்ற வேண்டுகோளையும் முன் வைத்திருந்தேன்.

இதன் பிறகுதான், சட்டம் எளிமையாக்கப்பட வேண்டும் என்ற தங்களது கருத்தில் உள்ள அதிகப்பிரசங்கித் தனத்தை புரிந்து கொண்டு, "ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால்தான் அதிகமானோர் ஜகாத் வழங்குவார்கள் என்பது போன்ற வாதங்களையும் தவிர்க்க வேண்டும்" என்று ஒப்புக் கொண்டு, இனிமேல் இது போன்ற கருத்துக்களை கூறிக் கொண்டிருக்க மாட்டோம் என்று மனம் திருந்தி உள்ளனர்.

அபூ பக்கர் (ரலி) ஆட்சியில் ஜகாத் சட்டம்


அபூ பக்கர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் 'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற சட்டம் இருந்திருந்தால், அனைவரும் ஜகாத் வழங்கியிருப்பார்கள். வழங்க மறுத்தவர்களோடு சண்டை போட்டு இரத்தம் சிந்த வேண்டிய அவசியமும் அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு ற்பட்டிருக்காது.

வழங்கிய பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்ற இறைத் தூதரின் காலத்தில் இருந்து வந்த அதே சட்டத்தை, அவர்களின் மரணத்திற்கு பின் உடனடியாக ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்கர் (ரலி) அவர்களும் நடைமுறைப்படுத்தியதால்தான் சிலர் ஜகாத் வழங்க மறுத்து வந்தனர் என்பதை, இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.


அதற்கான மறுப்பை தங்களது இதழில் குறிப்பிடாததால், மௌனம் சம்மதம் என்ற அடிப்படையில் இறைத் தூதர் மற்றும் அபூபக்கர் ஆட்சி காலங்களில் ஒரு பொருளுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்பதுதான் நடைமுறைச் சட்டமாக இருந்து வந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
 
மனிதனின் அழுக்கே ஜகாத்


ஜகாத்தாக வெளியேற்றப்பட்ட பொருள் மனிதனின் அழுக்குத்தானே தவிர செல்வத்தின் அழுக்கல்ல என்பதை இப்னு குஜைமாவில் இடம் பெற்ற நபிமொழியை அரபி மூலத்துடன் சுட்டிக் காட்டி, தூய்மையாக்கப்பட வேண்டியவன் மனிதனே தவிர, செல்வமல்ல என்பதை விவரித்திருந்தேன். ஜனவரி (2006) ஏகத்துவம் இதழில் இதற்கான எந்த ஒரு மறுப்பும் வெளியிடவில்லை என்பதால், மௌனம் சம்மதம் என்ற அடிப்படையில் ஜகாத் என்பது மனித அழுக்குதான். ஜகாத் வழங்குவது மனிதனை மட்டுமே தூய்மைப்படுத்துகிறது பொருளாதாரத்தை அல்ல என்ற உண்மையையும் இவர்கள் ஒப்புக்கொண்டு விட்டார்கள்.


வரவேற்கிறோம்


இவர்களிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றத்தை வரவேற்கும் அதே வேளையில், தாங்கள் ஒப்புக் கொண்ட உண்மைகளை பகிரங்கப்படுத்தியதோடு இவர்களது பொறுப்பு முடிந்து விடவில்லை. மாறாக, இந்த நச்சுக் கருத்துக்களை பரப்பிட, அவற்றை கண் மூடித்தனமாகப் பின்பற்றி வருவோரின் உள்ளங்களில் திணிக்க இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை விட பல ஆயிரம் மடங்குகள் முயற்சித்து, இவர்களது பிரச்சார மேடைகளை இதற்காகவே அதிகமதிகம் பயன்படுத்தி தவறாகப் பதிந்து விட்ட அக்கருத்தினை மாற்றவும் முயற்சிக்க வேண்டும். அதுவே இவர்கள் செய்துவிட்ட மாபெரும் தவறுக்குரிய பரிகாரமாக அமையும் என்பதை அறிவுறுத்துகிறேன்.

தங்களை அறியாமலேயே ஒப்புக் கொண்ட மாபெரும் உண்மை


"ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்ற கருத்து கடந்த காலங்களிலும் இருந்துள்ளது என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் கூட தெரிவிக்கின்றார்கள்" என தனது உரையில் பி.ஜே. கூறி இருந்தார் . "கால்நடைகளுக்கும், நகைகளுக்கும் ஒரு தடவைதான் ஜகாத் என்ற கருத்துடையவர்களுக்கு எதிராக இப்னு ஹஸ்ம் கேள்வி எழுப்புகின்றார் என்றால் அந்தக் காலத்திலும் இந்தக் கருத்துள்ளவர்கள் இருந்துள்ளனர் என்பது தானே பொருள்" (ஏகத்துவம், ஜனவரி -2006)


நமது விளக்கம்

"எல்லா இனங்களுக்கும் ஒரு தடவைதான் ஜகாத் என்ற இக்கருத்தை நாம் மட்டும் கூறவில்லை. இவ்வாறு கூறியோர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இப்னு ஹஸ்ம் கூட அவ்வாறு கூறியோரை தனது நூலில் பட்டியலிட்டுள்ளார்" [Play video] என்று கூறி விட்டு,  'அவ்வாறு கூறியோரின் பட்டியலை இவர்கள் வெளியிடவில்லை. மாறாக, அணியும் நகைகள், தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு மட்டும்தான் ஒரு தடவை ஜகாத். மற்ற எல்லாப் பொருட்களுக்கும் மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற மாற்றுக் கருத்துடையவர்களின் பட்டியலை மேற்கோளாக எடுத்துக்காட்டினால் அதை மோசடி என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது?

இப்னு ஹஸ்ம் யாரை நோக்கி கேள்வி எழுப்புகிறார்


இப்னு ஹஸ்ம் யாரை நோக்கி கேள்வி எழுப்புகிறார் என்றால்,
தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கும், அணியும் நகைகளுக்கு மட்டும் ஒரு தடவைதான் ஜகாத் என்ற கருத்துடையவர்களுக்கு எதிராகத்தான். அப்படியென்றால், அந்தக் காலத்தில் இந்தக் கருத்துள்ளவர்கள் மட்டும்தான் இருந்துள்ளனர்.

இக்கருத்தை தங்களது ஏகத்துவம் (ஜனவரி -2006) இதழில் பிரசுரித்ததன் மூலம், இப்னு ஹஸ்ம் காலத்தில் தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் ஆபரணங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே ஒரு தடவை ஜகாத் என்ற கருத்துடையவர்கள் மட்டும்தான் இருந்துள்ளனர். இப்னு ஹஸ்மின் காலத்தில் இருந்தவர்கள் கூறிய கருத்தும் நாங்கள் கூறிவருவதும் ஒன்றுதான்.

அதாவது, ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்று நாங்கள் கூறுவது தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் நகைகள் ஆகியவற்றுக்கு மட்டும்தான். மற்ற அனைத்துப் பொருட்களுக்கும் மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் நாங்களும் கூறி வருகிறோம் என்ற இந்த மாபெரும் உண்மையைத் தங்களையும் அறியாமலேயே ஒப்புக்கொண்டு விட்டனர்.

இதன் மூலம், கடந்த 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றிலும்கூட 'ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத்தில்லை' என்று கூறியோர் ஒருவரும் இருந்ததில்லை என்ற நம் கருத்தே வலுவடைகிறது.


இவ்வாறு தெளிவாக ஒரு உண்மையை ஒப்புக்கொண்ட பிறகும், தாங்களும் குழப்பமடைந்து பிறரையும் குழப்பி வருகிறார்களே ஏன்?

(தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் நகைகள் ஆகியவற்றுக்கு மட்டும் ஒரு தடைவதான் ஜகாத் என்று சிலர் கூறக் காரணம், உபயோகப் பொருளுக்கு ஜகாத்தில்லை என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் சில நபிமொழிகள் உள்ள அதே வேளையில், ஜகாத் வழங்கவேண்டும் என்ற பொதுவான சான்றுகளும் உண்டு என்பதே.

இவ்வாறு இரு வேறுவிதமான சான்றுகள் வந்திருப்பதாகக் கருதிய மேற்கண்ட இரு இனங்கள் விஷயத்தில் எவ்வாறு முடிவெடுப்பது என்று யோசித்து விட்டு, ஒரே ஒரு தடவைதான் என்று தவறாகக் கூறிவிட்டார். இது தவறனாது குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானது என்பதை இப்னு ஹஸ்ம் அவர்களே தனது நூலில் அந்த இடத்திலேயே தெளிவு படுத்திவிட்டார்)

 

ஏன் இந்தத் தடுமாற்றம்?

"ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்களில் ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் சரியாக உள்ளது. ஆயினும் அந்த ஹதீஸின் வாசகத்திலிருந்து கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது" என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது. ஏனெனில் இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல" (ஏகத்துவம், ஜனவரி -2006)


'ஆதாரப்பூர்வமானதுதான்' [Play video] என சமீபகாலம் வரை இவர்கள் கூறிக் கொண்டிருந்த ஒரு நபிமொழியை இன்று பலவீனமானது என பகிரங்கமாக திடீரென மாற்றி அறிவித்துள்ளனர். குறுகிய கால இடைவெளியில் ஏன் இந்தத் தடுமாற்றம்?

ஆனால், இந்த நபிமொழி பற்றிய எந்த ஒரு செய்தியையும், எந்த இடத்திலும் நான் சுட்டிக்காட்டியதே கிடையாது. நான் கூறாத விஷயம் என்ற அடிப்படையில் இதற்கு எந்த மறுப்பும் வெளியிடவில்லை. உடனே ஒப்புக்கொண்டு விட்டார் பாருங்கள் என்று, பித்தலாட்டம் செய்துள்ளார்கள். எப்படியோ நம்மை சீண்டிப் பார்த்ததால் இதற்கும் நாம் விளக்கம் தருகிறோம்.

நமது விளக்கம்:


அன்று இனித்த அல்பானி இன்று கசந்து போனது ஏனோ?


'ஒருவன் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஜகாத் இல்லை' என்ற கருத்தில் வந்திருக்கும் நபிமொழியின் அனைத்து அறிவிப்பாளர் தொடரையும் ஆய்வு செய்த அல்பானி அவர்கள் அதன் இறுதியில்,


ثم وجدت للحديث طريقاً أخرى بسند صحيح عن علي رضي الله عنه خرّجته في ((صحيح أبي داود-1403)) فصح الحديث والحمد لله. (إرواء الغليل 258/3ج)

 
"பின்னர், அலி (ரலி) அவர்களின் மூலம் சரியான தொடரில் வந்துள்ள ஒரே ஒரு அறிவிப்பைப் பெற்றுக் கொண்டேன்.... அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்" என இர்வாவுல் கலீல் என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

அன்று...


இதனை அப்படியே காப்பியடித்து, அல்பானியின் பெயரைக்கூட பயன்படுத்தாமல் அவரின் கூற்று சரியானதுதானா? என்ற ஆய்வுக்கும் உட்படுத்தாமல், என்னமோ தாங்கள்தான் மாதக்கணக்கில் அமர்ந்து மூளையை? கசக்கி ஆய்வு செய்து கண்டு பிடித்துவிட்டது போல் 'இந்தக் கருத்தில் ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் ஆதாரப்பூர்வமானதாக உள்ளது' [Play video] என்று கூறினார்கள். (அல்பானி அரபியில் கூறியதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்திருந்ததுதான் இவர்கள் செய்த ஆய்வின் சாதனை. இதை என்னமோ அதிமேதாவித்தனம் என்று நினைத்து கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதைத்தான் ஈயடிச்சான் காப்பி என்று கூறுவார்கள்)

இன்று...


அல்பானி கூறியதைக் காப்பியடித்து 'ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் ஆதாரப்பூர்வமானது' என்று சமீபகாலம் வரை இவர்கள் கூறிக் கொண்டு வந்தத இந்த நபிமொழி, தற்போதைய மனோ இச்சையின்படி எடுத்துக் கொண்ட புதிய நிலைபாட்டினை (அதாவது ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு வருடம் வரை காத்திருக்காமல் உடனடியாக ஜகாத் வழங்கிவிட வேண்டும். மாத வருமானம் உள்ளவனாக இருந்தால், ஒவ்வொரு மாதமும், வாரம் வருமானம் உள்ளவனாக இருந்தால் ஒவ்வொரு வாரமும், தினசரி வருமானம் உள்ளவனாக இருந்தால் தினமும் ஜகாத் வழங்கி விட வேண்டுமாம்) இதே அல்பானியின் கூற்று ஆட்டம் காண வைப்பதால் இக்கருத்தில் ஒரு ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று தங்களது முந்திய முடிவை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்து விட்டனர்.

(ஒரு மணி நேரம் வருமானம் உள்ளவனாக இருந்தால், ஒரு நிமிடம் வருமானம் உள்ளவனாக இருந்தால், இவன் தனது எல்லா அலுவல்களையும் விட்டு விட்டு, ஜகாத்தைக் கணக்குப் பார்த்து நிமிடம் நிமிடம் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறார்களா? தெரியவில்லை. இந்த நவீன இமாம்கள்தான் அதைத் தெளிவு படுத்தவேண்டும்)

தங்களது மனோ இச்சைகளை மார்க்கத்தில் திணிக்க முயற்சிக்கும் போது, இது போன்ற முரண்பாடுகள் குறுகிய கால இடைவெளிகளில் இவர்களிடம் அடிக்கடி நிகழ்ந்து வருவது சகஜம்தான். ஆனால், இவர்களைக் கண் மூடித்தனமாகப் பின்பற்றுவோரின் நிலைதான் அந்தோ! பரிதாபம். தனிமனித மாயையிலிருந்து அல்லாஹ்தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

இவர்களது மனோ இச்சைக்கு ஏற்ப வளைக்க முனைந்த பல ஹதீஸ்கள் பலவீனமானவை என்றும், இவர்களது மனோ இச்சைக்கு எதிரான பல ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்றும் அல்பானி அவர்கள் கூறியிருப்பதால், தற்போது அவர் பிடிக்காமல் போய்விட்டார்.


அன்று இனிப்பாக இருந்த அல்பானி இன்று கசந்து போனதற்கு இதுதான் காரணம்.

 

ஏற்க மறுத்தவைகள்


'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற கருத்தை நிலைநாட்ட கடந்த காலங்களில் சில சான்றுகளை(?) கூறிவந்தார்கள்.

  • "செல்வத்தைத் தூய்மைப்படுத்தக் கூடியதாக (துஹ்ரத்தன் லில் அம்வால்) ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்" என்று இறைத்தூதர் கூறியதாக பிரச்சாரம் செய்தது. [Play video Clip 1Clip 2 | Clip 3 | Clip4 | Clip5]

இறைத்தூதர் கூறியதாக எந்த ஒரு நூலிலும் இல்லை என்று நாம் எடுத்துக் காட்டிய பின்,

  • 'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்' என்று ஆபூ தாவூத்தில் ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழி உள்ளது என்று மாற்றிக் கூறினர்.

அபூ தாவூத்தில் பதிவாகியுள்ள இந்த நபிமொழியில்,

  • உஸ்மான் என்ற பலவீனமான ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்,

  • முஜாஹிதிடம் ஜஃபர் கேட்கவில்லை.


இதை ஜஃபரின் மாணவரும், அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து விளங்கியவருமான இத்துறை அறிஞர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்த ஷுஃபா அவர்கள், முஜாஹித்திடம் ஜஃபர் என்பவர் கேட்கவில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார். இதையே யஹ்யா பின் சயீத், இப்னு மயீன், அஹ்மத் பின் ஹன்பல், அலி பின் அல் மதினீய்யி, இப்னு ஹஜர், தஹபி, இப்னு அதி, அல் மிஜ்ஜியி போன்ற இக்கலையின் தலை சிறந்த மற்ற அறிஞர்களும் இதை உறுதி செய்துள்ளனர் என்பதால் இந்த நபிமொழி பலவீனமானது என்று விளக்கம் அளித்திருந்தேன்.

மேலும், தூய்மைப்படுத்துதல் என்ற அர்த்தத்தையும் இந்த நபிமொழியிலிருந்து புரிந்து கொள்ள முடியாது என்பதையும் என் மறு ஆய்வுக் கட்டுரையில் விரிவாக எழுதி இருந்தேன்.

இதனை ஏற்க மறுத்து ஜனவரி (2006) ஏகத்துவத்தில் மறுப்பு என்ற பெயரில் எதை எதையோ கூறி விட்டு, வழக்கம் போல் பல்வேறு செய்திகளை இருட்டடிப்புச் செய்து விட்டு, நாம் இருட்டடிப்புச் செய்துவிட்டதாக நம் மீது வீண் பழி சுமத்தியுள்ளார்கள். இருட்டடிப்புச் செய்தது யார்?
இவர்களின் மண்டையில் உறைக்கும் விதத்தில் இன்னும் விரிவாக இதனை அலசுவோம்.


அவர்களது மறுப்புரை (ஏகத்துவம், ஜனவரி 2006)


"ஷுஃபா கூறும் இந்தக் காரணம் சரியானது என்றால்தான் ஷுஃபா கூறுவதை ஏற்க வேண்டும். அவர் கூறும் காரணம் சரியில்லை என்றால் அவரது கூற்றை நாம் விட்டு விட வேண்டும். "முஜாஹிதிடம் ஜஃபர் பின் இயாஸ் செவியுற்றிருக்கிறாரா? என்பதை எப்படி நாம் முடிவு செய்வது? இதில் முதல் தரத்தில் எடுத்துக் கொள்ளப்படுவது சம்பந்தப்பட்டவரின் வாக்குமூலம்தான். ஒருவர் நம்பகமானவராக இருந்து இன்னாரிடம் கேட்டேன் எனவும் கூறினால் அது தான் அவர் கேட்டதற்கு முதன்மையான ஆதாரமாகும்"

"சம்பந்தப்பட்டவரே கேட்டேன் என்று கூறியிருக்கும் போது அதில் சம்பந்தப்படாத இன்னொருவர் கேட்டதில்லை என்று கூறினால் அவரிடம் போதிய தகவல் இல்லை என்று ஆகுமே தவிர சம்பந்தப்பட்டவர் கேட்கவில்லை என்று ஆகாது. .... ஜஃபர் நம்பகமானவராக இருக்கும் போது, 'நான் கேட்டேன்' என்று அவர் கூறுவதைத்தான் ஏற்க வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அரிச்சுவடி கூடத் தெரியாமல் மறு ஆய்வு செய்யப் புகுந்து விட்டனர்.

புகாரி இமாம் அவர்கள் பதிவு செய்யும் ஹதீஸ்களில் முஜாஹிதிடமிருந்து ஜஃபர் வழியாக 4940வது ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரி இமாமின் விதிப்படி முஜாஹிதிடமிருந்து ஜஃபர் கேட்டிருக்காவிட்டால் அதைப் பதிவு செய்யவே மாட்டார்கள். மேலும், புகாரி 4310வது ஹதீஸில், 'நான் முஜாஹிதிடம் கேட்டேன்' என்று ஜஃபர் பின் இயாஸ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்காக வலிந்து கற்பித்த தவறான காரணம் அடியோடு வீழ்ந்து விட்டது"


நமது விளக்கம்


முஜாஹித்திடம் ஜஃபர் கேட்கவில்லை என்பதே உண்மை


கேட்டேன் என்ற வாதம் எப்போது சரி என ஏற்கமுடியும்?


முஜாஹிதிடம் கேட்டதாக சம்பந்தப்பட்ட ஜஃபரே கூறிவிட்டதாக புகாரியில் 4310-வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளதாம். அதனால் அவரது கூற்றுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டுமாம். இவ்வாறு எழுதியதன் மூலம் நியாயமான ஒரு வாதத்தை எடுத்து வைத்து விட்டதாகப் பூரிப்படைந்து வருகின்றனர்.

'கேட்டேன்' என்று சம்பந்தப்பட்டவர் கூறிய வாக்கு மூலத்தைத்தான் முதன்மைச் சான்றாக ஏற்க வேண்டும் என்ற இந்த வாதம் எப்போது சரியாக இருக்குமென்றால், சம்பந்தப்பட்டவர் அளித்த இவ்வாக்கு மூலத்தை இமாம் புகாரி அவர்களே நேரடியாகக் கேட்டு, அல்லது ஷுஃபா அல்லாத வேறொருவரின் வழியாக அறிவிக்கப்பட்டிருந்து அதை இமாம் புகாரி அவர்கள் நேரடியாகக் கேட்டுப் பதிவு செய்திருந்தால் மட்டும்தான்.


இப்படி ஏதேனும் ஒரு முறையில் பதிவானதை எடுத்துக்காட்டி விட்டு, இவர்கள் இவ்வாறு வாதித்தால் அவர்களிடம் கொஞ்சமாவது நியாயம் உண்டு என ஏற்கலாம். ஆனால், இவற்றில் எந்த ஒரு முறையிலும் இச்செய்தி புகாரியில் பதிவாகவில்லை.

புகாரியில் பதிவான இரண்டு வகையான செய்திகள்

  • 'இன்னார் எனக்கு அறிவித்தார்', 'இன்னாரிடம் கேட்டேன்' என்று தனக்கு அறிவித்தவரின் பெயர் கூறப்பட்டு பதிவான செய்திகள் முதல் வகை. (நபிமொழிகளும், துணைச் சான்றுகள் என்ற அடிப்படையில் நபித்தோழர்கள் மற்றும் தாபியின் ஆகியோரின் கூற்றுகளும் இம்முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன)

  • தனக்கு அறிவித்தவர் யார் என்பதைத் தெரிவிக்காமல் 'இன்னார் கூறினார்', 'இன்னாரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது' என்று கூறி பதிவான செய்திகள் இரண்டாவது வகை. இம்முறையில் பதிவானவற்றுக்கு 'முஅல்லக்' என்று கூறப்படும். (குறைவான நபிமொழிகளும், அதிகளவில் நபித்தோழர்களின் கூற்றுகளும் இம்முறையிலும் பதிவு செய்யப்படுள்ளன. புகாரியில் முஅல்லக்கான செய்திகள் சுமார் 1342 இருப்பதாக தத்ரீப் (48) நூல் கூறுகின்றது. இவற்றில் பலவீனமானவையும் உண்டு என்பது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்.)

முதல் வகையில் அமைந்த ஹதீஸ்களைப் பதிவு செய்வதே இமாம் புகாரி அவர்களின் முக்கிய நோக்கம் என்பதால், கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து எந்த வகையிலும் குறை கூற முடியாத ஹதீஸ்களை மட்டுமே தேர்வு செய்து பதிவு செய்துள்ளார்கள். அவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானது தான். எனினும், விதிவிலக்காக ஒன்றிரண்டு பலவீனமானவை என இக்கலை அறிஞர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்முறையில் அமைந்த துணைச் சான்றுகளான நபித்தோழர்கள் மற்றும் தாபியின்கள் ஆகியோரின் கூற்றுகளைப் பதிவு செய்வதில் தான் கடைபிடித்து வந்த கடுமையான விதியை சற்று தளர்த்திக் கொண்டுள்ளார்கள்.

இரண்டாவது வகையில் பதிவான முஅல்லக்கான செய்திகளில் சிலவற்றை துணைச் சான்றாக பதிவு செய்துள்ள அதே வேளையில், வேறுசிலவற்றை அவை தன்னிடம் ஆதாரப்பூர்வமானதல்ல என்பதை உணர்த்துவதற்காகவும் இவ்வாறு பதிவு செய்தவையும் உண்டு. இதனால், இந்த முறையிலான செய்திகளை பதிவு செய்வதிலும் தான் கடைபிடித்து வந்த விதிகளைத் தளர்த்திக் கொண்டுள்ளார்கள்.

புகாரியில் சில செய்திகள் முஅல்லக்காக பதிவு செய்யப்பட்டதற்கான காரணங்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் விளக்கும் போது,

 

'..அறிவித்தவரிடமிருந்து நேரடியாக கேட்டிருக்காவிட்டால், அல்லது கேட்டிருப்பதை உறுதி செய்ய முடியாத வகையில் சந்தேகம் இருந்தால் அப்போதும் அச்செய்தியை 'முஅல்லக்'காக இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்வது வழக்கம்' என்று விவரித்துள்ளார். (ஃபத்ஹுல் பாரியின் முன்னுரை -24)

புகாரியில் இடம் பிடித்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற முஅல்லக்கான செய்திகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானதுதான் என்ற பொதுவான முடிவுக்கு வர முடியாது. காரணம் அவற்றில் ஆதாரப்பூர்வமானது, பலவீனமானது என இரு வகையாகவும் கலந்து இருக்கலாம்.

சிலவற்றை பலவீனமானது என இமாம் புகாரி அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார். வேறு சிலவற்றை பலவீனமானது என இக்கலையின் வேறு அறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.

"புகாரியில் இடம்பெற்றுள்ள 'முஅல்லக்'கான செய்திகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானதுதான் என பொதுவான முடிவுக்கு வந்து விட முடியாது" என்று இவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டி எழுதி வரும் தத்ரீப் என்ற நூல் (பக்கம் 54) கூறுகின்றது.

இதே கருத்தை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் ஹத்யுஸ் ஸாரி (பக்கம் 24) என்று நூலில் பதிவு செய்துள்ளார்.

 

இறைத்தூதர் பிறந்த மகிழ்ச்சியில் ஃதுவைப்பா என்ற அடிமைப் பெண்ணை அபூ லஹப் விடுதலை செய்தான். அதற்காக அவனது விரல்களின் மூலம் நரகத்தில் அவனுக்கு நீர் புகட்டப்படுவதாக அவனது குடும்பத்தினரில் ஒருவர் கனவு கண்டார் என்று உர்வத் பின் ஜுபைர் ஒரு செய்தியை அறிவித்துள்ளார். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளுக்கு எதிரான பலவீனமான இக்கனவுச் செய்தியை இமாம் புகாரி அவர்கள் 5101வது செய்தியாக தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

 

('இப்னு அப்பாஸ், ஜர்ஹத் மற்றும் முஹம்மது பின் ஜஹஷ் ஆகியோர் மூலம் தொடை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும் என அறிவிக்கப்படுகிறது' என்று இமாம் புகாரி அவர்கள் முஅல்லக்காகப் பதிவு செய்த நபிமொழிகளை பலவீனமானது என ஜுலை மாத (2005) ஏகத்துவம் இதழில் இவர்களே எழுதியுள்ளார்கள்)

இதனால் புகாரி நூலின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுமா?


இது போன்ற புகாரியில் இடம் பெற்றுள்ள முஅல்லக்கான செய்திகளில் சில பலவீனமானவை என்று வாதிப்பதால் அது இந்நூலின் நம்பகத்தன்மைக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. காரணம், இவ்வாறு இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்திருப்பததின் நோக்கம் தன்னிடத்தில் இச்செய்தி ஏற்கத்தக்கதல்ல, உறுதி செய்யப்படாதது என்று நிலையில் உள்ளதாகும் என்பதை உணர்த்துவதேயாகும். இதனால், இமாம் புகாரி அவர்களின் விதிப்படி பதிவான செய்திகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

 

இருட்டடிப்புச் செய்தது யார்?

 
இந்த அடிப்படைப் புரிந்து கொண்டு, 'கேட்டேன்' என்ற சம்பந்தப்பட்டவரின் வாக்கு மூலம் பதிவாகி உள்ள 4310வது செய்தியை இனி விரிவாகப்பார்ப்போம்.

'ஜஃபர் கேட்கவில்லை' என்று உறுதியாகக் கூறிய ஷுஃபாவின் மூலமே 'கேட்டார்' என்ற இச்செய்தியும் பதிவாகியுள்ளது. அதாவது 'கேட்டார்', 'கேட்கவில்லை' என்ற இருவேறு முரண்பட்ட கருத்துக்களும் ஷுஃபாவின் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. முரண்பட்ட இந்த இரண்டு கருத்துக்களில் ஏதேனும் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்.

புகாரியில் பதிவாகியுள்ள 'கேட்டார்' என்ற இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரை சற்று உன்னிப்பாகப் பார்த்தாலே இச்செய்தியின் தரம் என்ன? என்பது தெளிவாகிவிடும். இவ்வுண்மையை இவர்களும் தெரிந்து கொண்டதால்தான் அறிவிப்பாளர் வரிசையை வெளியிடாமல் ஜஃபரிடம் இச்செய்தியை இமாம் புகாரி அவர்களே நேரடியாகக் கேட்டு பதிவு செய்தது போல் எழுதி பல்வேறு இருட்டடிப்பு வேலைகளை அரங்கேற்றி விட்டு, நான் இருட்டடிப்புச் செய்து விட்டதாக என் மீது வீண் பழி சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு இருட்டடிப்பு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அதாவது, புகாரி தமிழாக்கத்தில் 'ஜாஃபர் கேட்டார்' என்ற செய்தியின் அறிவிப்பாளர் வரிசை மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதால் இதை தங்களுக்குச் சாதமாக எடுத்துக் கொண்டனர்.

புகாரியில் பதிவான இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை


4310- وَقَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ أَخْبَرَنَا أَبُو بِشْرٍ سَمِعْتُ مُجَاهِداً قُلْتُ لاِبْنِ عُمَرَ........... رواه البخارى


'முஜாஹித்திடம் நான் கேட்டேன்' என ஜஃபர் கூறியதாக ஷுஃபா எங்களுக்கு அறிவித்தார் என்று நள்ர் என்பவர் கூறியதாகவே இமாம் புகாரி அவர்கள் இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள்.(புகாரி -4310)


(புகாரியில் 4310வதாக பதிவாகியுள்ள இச்செய்தி இறைத்தூதர் கூறியதல்ல. மாறாக, இப்னு உமரின் கூற்றுதான். இவ்வாறு நபித்தோழர்கள் கூறியவற்றுக்கு 'மவ்கூஃப்' என்றும் இக்கலை வழக்கில் கூறப்படும்)

இச்செய்தியைக் கூட 'நள்ர் எனக்கு அறிவித்தார், நள்ரிடம் நான் கேட்டேன்' என்று இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. மாறாக தனக்கு அறிவித்தவர் யார்? என்பதைத் தெரிவிக்காமல் 'நள்ர் கூறினார்' என்று முஅல்லக்காகவே பதிவு செய்துள்ளார்.

நள்ர் என்பவர் ஹிஜ்ரி 203-ம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டதாக இமாம் புகாரி அவர்களே கூறியுள்ளார்கள். வேறு சிலர் 204-ம் ஆண்டின் துவக்கத்தில் மரணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். (தாரிகுல் கபீர் 7/395, தஹ்தீபுல் கமால் 10/299, தஹ்தீபுத் தஹ்தீப். 6/547)

ஹிஜ்ரி 194 -ம் ஆண்டில் பிறந்த இமாம் புகாரி அவர்கள் 205 -ம் ஆண்டுதான் முதன் முதலாக ஹதீஸைப் படிக்கத் துவங்குகிறார்கள். (தஃத்கிரத்துல் ஹுஃப்பாழ் 2/104) அதாவது புகாரி அவர்கள் ஹதீஸ் துறையில் அடியெடுத்து வைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நள்ர் என்பவர் மரணமடைந்து விட்டார். எனவே, இச்செய்தியை நள்ர் என்பவரிடமிருந்து இமாம் புகாரி அவர்கள் நேரடியாக கேட்டிருக்க அறவே வாய்ப்பில்லை.

இந்த அடிப்படையில் 4310வதாகப் பதிவாகியிருக்கும் (இவர்கள் எடுத்துக் காட்டிய) முஜாஹிதிடம் கேட்டேன் என்ற சம்பந்தப்பட்டவரின் வாக்கு மூலம் இமாம் புகாரி அவர்களால் ஏற்கப்பட்டதல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


இச்செய்தியை நள்ரிடம் கேட்டது யார்?


நள்ர் என்பவரிடம் இமாம் புகாரி அவர்கள் இச்செய்தியை நேரடியாகக் கேட்கவில்லை. மாறாக, அஹ்மத் பின் மன்சூர் என்பவர்தான் நள்ரிடம் கேட்டுள்ளார் என இஸ்மாயிலி என்பவர் அறிவித்ததாக தஃக்லீகுத் தஃக்லீக் என்ற நூலில் ஹாஃபிழ் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்த அஹ்மத் பின் மன்சூரையும் இமாம் புகாரி அவர்கள் சந்தித்ததாகவோ, அல்லது அவரிடம் ஹதீஸ்களைக் கேட்டதாகவோ எக்குறிப்பும் இல்லை.

'அஹ்மது பின் மன்சூர் உண்மையானவர்' என்ற அர்த்தத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தையான 'சதூக்' என்று இமாம் அபு ஹாதிம் அவர்கள் மட்டும் விமர்சனம் செய்துள்ளார். ஒர் அறிவிப்பாளர் குறித்து 'சதூக்' என்று அபூ ஹாதிம் விமர்சனம் செய்தால், 'அவர் அறிவிப்பதை எழுதிக் கொண்டு, அது போன்று வேறு யாரும் அறிவித்துள்ளனரா? எனத் தேடிப்பார்க்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். மற்ற அறிஞர்கள் இவர் குறித்து எந்த விமர்சனத்தையும் கூறவில்லை.

இதன் அடிப்படையில், 'முஜாஹிதிடம் ஜஃபர் கேட்டார்' என்ற செய்தியை நள்ர் என்பவரிடமிருந்து அஹ்மத் பின் மன்சூரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை என்பதால்தான், இமாம் புகாரியின் பார்வையில் மட்டுமல்லாமல் மற்ற அறிஞர்களிடமும் இது ஏற்கத்தக்க ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவேதான், 'முஜாஹித்திடமிருந்து ஜஃபர் கேட்கவில்லை' என்று அறிவிக்கப்பட்ட செய்தி மட்டுமே உறுதியாகிறது.

'கேட்கவில்லை' என்பதற்கு இன்னொரு காரணம்


மேலும், முஜாஹித்திடம் ஜஃபர் கேட்டார் என்ற செய்தி சரியாக இருக்க முடியாது என்பதற்கு இதைவிட தெளிவான, வலுவான, மறுக்க முடியாத முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. அதாவது 'ஜஃபர் கேட்கவில்லை' என உறுதிபடக் கூறிய ஷுஃபாவின் மூலம்தான் இச்செய்தியும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு முரண்பட்ட செய்தி ஒரே நபரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதால் எது சரியாக இருக்க முடியும் என சீர் தூக்கிப் பார்க்க முனைந்தால், 'கேட்கவில்லை' என்ற கருத்தே சரியாக இருக்க முடியும் என்பதை யஹ்யா பின் சயீத், இப்னு மயீன், அலி பின் அல் மதீனியீ, அஹ்மத் பின் ஹன்பல், அல் முஃபழ்ழல் பின் ஃகஸ்ஸான், சாலஹ் பின் அஹ்மத், இப்னு அதியி, இப்னு அபீ ஹாதிம், இமாம் தஹபி, ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்ற இக்கலையின் முன்னோடிகளாக விளங்கும் மேதைகள் அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளதன் மூலம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம்.


எனவே, 'முஜாஹிதிடம் ஜஃபர் கேட்கவில்லை' என்பதே சரியானதாகும் என்ற இந்த அறிஞர்களின் உறுதியான முடிவின் அடிப்படையிலும் ஷுஃபாவின் கருத்தே ஐயத்திற்கு இடமின்றி உறுதியாகிவிட்டது.

'கேட்கவில்லை' என்பதே சரியானதாகும் என்ற இந்த அறிஞர்களின் உறுதியான முடிவின் படி 'கேட்டேன்' என சம்பந்தப்பட்டவர் வாக்கு மூலத்தைதான் ஏற்க வேண்டும் என்ற அடிப்படையற்ற இவர்களது வாதம் அடியோடு வீழ்ந்து விட்டதால்,

முஜாஹிதின் மூலம் ஜஃபர் அறிவித்த 'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்' என்ற அர்த்தத்தில் உள்ளதாக இவர்கள் வாதிக்கும் அபூ தாவூத்தில் உள்ள நபிமொழி பலவீனமானதாகும்.

இமாம் புகாரி அவர்கள் வகுத்துக் கொண்ட விதி என்ன?


"முஜாஹித் வழியாக ஜஃபர் அறிவித்ததாக 4940 வது ஹதீஸ் புகாரியில் பதிவாகி உள்ளது. புகாரி இமாமின் விதிப்படி முஜாஹிதிடம் ஜஃபர் கேட்டிருக்காவிட்டால் அதைப் பதிவு செய்திருக்கமாட்டார்கள் அல்லவா?" (ஏகத்துவம், ஜனவரி-2006)

இவ்வாறு எழுதி இமாம் புகாரி அவர்களின் விதி குறித்து தவறான தகவலைத் தந்து மக்களை திசை திருப்பியுள்ளார்கள்.

நமது விளக்கம்:

  • இது ஹதீஸ் (நபிமொழி) அல்ல. மாறாக இப்னு அப்பாஸின் கூற்று (அஃதர்)தான்.

  • இச்செய்தியில், 'முஜாஹிதிடம் கேட்டேன்' என்று ஜஃபர் கூறியதாக பதியப்பட்டிருக்கவில்லை.

  • இச்செய்தி ஹுஷைம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தியை இவர் மட்டும் அறிவித்தால் அது மறுக்கப்பட வேண்டியதாகும் என இக்கலை அறிஞர்களில் பலர் கூறியதாக இமாம் தஹபி அவர்கள் அல் மூகிழா என்ற நூலில் 57வது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனக்கு அறிவித்தவரை விட்டு விடும் பழக்கமுள்ளவர் என்ற குற்றசாட்டும் இவர் மீது உள்ளது.

உதாரணமாக புகாரியில் 3849வதாகப் பதிவாகியுள்ள செய்தியை எடுத்துக் கொள்ளலாம்.
"அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்குரங்கொன்றை மற்ற குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கல்லெறிந்தேன்" (புகாரி-3849) என்று அம்ர் பின் மைமூன் கூறும் செய்தி ஹுஷைம் என்பவரின் வழியாகவே புகாரியில் பதிவாகியுள்ளது.

இந்த அம்ர் பின் மைமூன் அறியாமைக் காலத்தில் வாழ்ந்திருந்தாலும், இறைத்தூதரைச் சந்திக்க வில்லை என்பதால் இவர் ஒரு நபித்தோழர் அல்லர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

புகாரியில் பதிவான இச்செய்திக்கு ஹதீஸ்கலையின் அறிஞர் பெருமக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். காரணம் விபச்சாரம் நடந்தது, கல்லெறிந்து தண்டித்தது என்பது போன்ற சமாச்சாரம் விலங்கினங்களில் கூற முடியாத ஒன்றாகும்.

இவ்வாறு யாரும் கூறாத நிலையில் ஹுஷைம் மட்டும் ஒரு செய்தியை கூறினால் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, இக்கலையின் முன்னோடிகளான ஷுஃபா, யஹ்யா ஆகியோர் கூறியதற்கு எதிராகக் கருத்துச் சொன்னால் அதனை அறவே ஏற்ககூடாது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

'கேட்கவில்லை' என்ற ஷுஃபா, யஹ்யா மற்றும் பல அறிஞர்கள் கூறியதற்கு எதிராக ஹுஷைம் என்பவர் கூறியுள்ளதை ஏற்க இயலாது என்ற அடிப்படையில் முஜாஹிதிடம் ஜஃபர் கேட்கவில்லை என்பதே உறுதியான மறுக்க முடியாத செய்தியாகும்.


எது இமாம் புகாரியின் விதி?


'புகாரி இமாமின் விதிப்படி முஜாஹிதிடம் ஜஃபர் கேட்டிருக்காவிட்டால் அதைப் பதிவு செய்திருக்க மாட்டார்கள்' என்று கூறியது இவர்களது அறியாமையாகும். இவ்வாறு எழுதுவதன் மூலம் எதைக் கூற வருகிறார்கள் என்றால், ஒரு செய்தியை ஒருவர் யாரிடமிருந்து அறிவிக்கிறாரோ அதை அவரிடமிருந்து கேட்டதாக உறுதி செய்யப்பட்டதை மட்டுமே தமது நூலில் பதிவு செய்வதாக இமாம் புகாரி அவர்கள் விதியை ஏற்படுத்திக் கொண்டார் என்று இமாம் புகாரி கூறாத விதியை அவரின் மீது திணிக்க முயலுகிறார்கள்.

இதுதான் இமாம் புகாரியின் விதி


இமாம் புகாரி அவர்கள் அவ்வாறு அறவே கூறவில்லை. மாறாக 'நம்பகமான ஓர் அறிவிப்பாளர் இன்னொரு நம்பகமான அறிவிப்பாளரிடமிருந்து அறிவிக்கும் செய்தியை ஏற்க வேண்டுமெனில், இருவரும் ஒரு முறையேனும் சந்தித்துக் கொண்டனர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கவேண்டும். இவ்வாறுள்ள ஒருவர் அறிவிக்கும் ஒவ்வொரு செய்தியையும் அவர் நேரடியாகக் கேட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்காவிட்டாலும் அறிவிப்பவர் நம்பகமானவர் என்ற அடிப்படையில் அதைக் கேட்டிருப்பார் என நம்பி ஏற்கலாம் என்பதே இமாம் புகாரி வகுத்துக் கொண்ட விதியாகும்.

இமாம் புகாரி அவர்களின் விதிப்படி புகாரியில் இடம் பெற்ற அனைத்து ஹதீஸ்களும் நேரடியாகக் கேட்கப் பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றாலும், விதிவிலக்காக மிக மிகக் குறைந்த சொற்ப எண்ணிக்கையில் இதற்கு மாற்றமாகவும் நடந்துள்ளது என்பதை பின்னர் தோன்றிய அறிஞர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் இடம் பெற்று விட்டதுதான் முஜாஹிதிடமிருந்து ஜஃபர் அறிவிப்பதாக உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சில செய்திகளும் உண்டு. (பார்க்க ஃபத்ஹுல் பாரியின் முன்னுரை)

ஜஃபர் பற்றிய சில கூடுதல் தகவல்:

  • மேலும், "ஜஃபர் என்பவர் சுலைமானுல் யஷ்கரி என்பவரிடம் ஒன்றும் கேட்கவில்லை என்பதால் அவரின் மூலம் அறிவிக்கும் செய்தியை ஏற்கக்கூடாது" என இமாம் புகாரி அவர்களே விமர்சனம் செய்துள்ளார்கள் என்று திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஹபீப் பின் ஸாலிம் என்பவரிடமும் ஜஃபர் ஒன்றும் கேட்கவில்லை என்பதை இக்கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். தான் நேரடியாக கேட்காத சிலரின் பெயரால் ஜஃபர் சில செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால்தான் அக்குறிப்பிட்டவற்றை ஏற்க இயலாது என இக்கலை அறிஞர்கள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு கூறுவதால் அவர் நம்பகத்தன்மையற்றவர் என்ற முடிவுக்கு வர முயற்சிப்பது ஹதீஸ் கலை குறித்த அறியாமையின் வெளிப்பாடாகும். காரணம், குறிப்பிட்ட அறிவிப்பாளர் இன்னொரு குறிப்பிட்ட அறிவிப்பாளரிடம் 'நேரடியாகக் கேட்கவில்லை' என்ற காரணத்தினாலும், தனக்கு அறிவிப்பவரை விட்டு விடும் பழக்கம் கொண்ட நம்பகமான அறிவிப்பாளர் 'இன்னாரின் மூலம்" என்ற அர்த்தத்தை குறிக்கும் 'அன்' என்ற வார்த்தையால் அறிவித்தாலும் இவர்களது அறிவிப்பினை ஏற்கக்கூடாது என்று குறை கூறப்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளது. (புகாரியில் பதிவாகியுள்ள இவர்கள் குறிப்பிட்ட 4940-வது செய்தியை அறிவித்த ஹுஷைம் என்பவரும் இந்தப் பட்டியலில் உள்ளவர்தான்)

இந்த அறிஞர்கள் அரிச்சுவடி தெரியாதவர்களா?


'முஜாஹிதிடம் ஜஃபர் கேட்கவில்லை' என்பதை ஷுஃபா அவர்கள் கூறியதாக யஹ்யா பின் சயீத் வழியாக வந்த செய்தியை இப்னு மயீன், அலி பின் அத்மதீனிய்யீ, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆகிய அறிவிப்பாளர் ஆய்வில் முன்னோடிகளாக விளங்கிய இம்மேதைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதை சரிகண்ட பின்புதான் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தஹ்தீபுத் தஹ்தீப், தக்ரீபுத் தஹ்தீப், ஹத்யுஸ் ஸாரி ஆகிய தனது மூன்று நூல்களிலும், இமாம் தஹபி அவர்கள் அல் காஷிப், மிஜானுல் இஃதிதால், மற்றும் அல் முக்னி ஃபில் ளுஃபா ஆகிய தனது மூன்று நூல்களிலும், அல் மிஜி அவர்கள் தஹ்தீபுல் கமால் என்ற தனது நூலிலும், இப்னு அதிய் அவர்கள் அல் காமில் ஃபில் ளுஃபா என்ற நூலிலும், இப்னு அபீ ஹதீம் அவர்கள் மராஸில் என்ற தனது நூலிலும் பதிவு செய்துள்ளனர்.

(நூல்களின் பாகங்கள், பக்கங்கள் குறிப்பிடப்படவில்லை என்ற மொட்டைக் காரணம் கூறி இவற்றைத் தட்டிக்கழிக்க முயற்சிக்க வேண்டாம். நாம் கூறியது இல்லை என்று இவர்கள் மறுத்தால், அரபி மூலத்துடன் பாகம், பக்கம் உட்பட அனைத்தையும் மீண்டும் எழுதுவோம் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறோம்)

மேற்கண்ட ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவர் கூட குறிப்பாக புகாரியின் விளக்க உரைகளில் மிகப் பெரும் பொக்கிஷமாக விளங்கும் ஃபத்ஹுல் பாரியைத் தந்த இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூட புகாரியில் பதிவாகி உள்ள சம்பந்தப்பட்டவரின் இந்த வாக்கு மூலத்தை முன்னிறுத்தி 'ஜஃபர் கேட்கவில்லை' என்ற ஷுஃபாவின் கருத்தை மறுக்கவில்லை.

"ஜஃபர் நம்பகமானவராக இருக்கும் போது, 'நான் கேட்டேன்' என்று அவர் கூறுவதைத்தான் ஏற்க வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அரிச்சுவடி கூடத் தெரியாமல்..." என்று நம்மைக் நோக்கி கூறிய இந்தத் தரக்குறைவான விமர்சனத்தை 'கேட்கவில்லை' என்ற கருத்தை உறுதி செய்திருக்கும் இக்கலையில் முன்னோடிகளான இந்த அறிஞர் பெருமக்கள் அனைவரையும் நோக்கி இவர்கள் கூறத்தயாரா? என்று அறைகூவல் விடுக்கின்றேன்.

'ஜஃபர் கேட்கவில்லை' என்ற இந்தக் கருத்தை இன்று எனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக நான் சொல்லவில்லை. மாறாக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், நடு நிலை தவறாது ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் அனைவரும் என்னுடைய இந்தக் கருத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

 

ஊசிப் போன பிரியாணிக் கதை


'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்' என்ற அர்த்தத்தில் உள்ளதாக இவர்கள் வாதிக்கும் இந்த நபிமொழி இன்னொரு காரணத்தின் அடிப்படையிலும் பலவீனம் அடைகிறது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தேன்.

அதாவது, கைலான் என்பவருக்கும், ஜஃபர் என்பவருக்கும் இடையில் உஸ்மான் என்றொரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அவர் பலவீனமானவர் என இக்கலை அறிஞர்கள் அனைவரும் கூறியருப்பதால் இந்த நபிமொழி மேலும் பலவீனமடைகிறது என்பதை தக்க சான்றுகளை முன் வைத்து உறுதிசெய்திருந்தேன்.

மேலும், ஓர் அறிவிப்பில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பாளரை நீக்கிவிட்டு அறிவித்தால் அந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானதாக ஆகிவிடுமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தேன். ஆனால், மெஜாரிட்டி அடிப்படையில்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தவறாகச் சித்தரித்து, அதை மறுப்பதற்காக கடந்த செம்படம்பரில் (ஏகத்தும்-2005) காதறுந்த ஊசிக் கதை விட்டது போல, தற்போது ஊசிப் போன பிரியாணிக் கதை விட்டுள்ளார்கள். இது போன்ற கட்டுக் கதைகளை அள்ளிவிடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!

இவர்கள் கூறியது என்ன?


"மேற்கண்ட அறிவிப்பைப் பொறுத்த வரை... கைலான் என்பவர் நேரடியாக ஜஃபரிடம் கேட்டிருக்கின்றார். உஸ்மான் வழியாகக் கேட்டிருக்கின்றார். இரண்டு வகையாகக் கேட்டுள்ளார் என்று நம்புவதற்கு எந்த முட்டுக்கட்டையும் தடையும் இல்லை. எனவே, நால்வரை ஏற்று மூவரை விடும் அவசியம் ஏதும் இல்லை" (ஏகத்துவம், ஜனவரி -2006)


இருவரும் சந்தித்துக் கொள்வதற்கு சாத்தியமான சம காலத்தில் வாழ்ந்துள்ளதாலும், கைலான் தனக்கு அறிவிப்பவரை விட்டு விட்டு அறிவிக்கும் பழக்கமுடையவர் அல்லர் என்பதாலும், அறிவிப்பாளர் வரிசையில் யாரும் விடுபடவில்லை என்று தவறாக வாதித்து வருகின்றனர்.

இது சரியா?


சமகாலத்தில் வாழ்ந்திருந்த இவ்விருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதையும், கோளாறு கைலானின் மூலம் ஏற்படவில்லை. மாறாக, வேறு வகையில்தான் ஏற்பட்டது என்பதையும் நிரூபித்துவிட்டால் இந்நபி மொழி பலவீனமானது என்பதை அடம்பிடிக்காமல் ஒப்புக்கொண்டு விடுவார்கள் என்றே நம்புகிறேன்.

சமகாலத்தில் வாழ்ந்த அனைவரும் சந்தித்துக் கொள்வது சாத்தியமா?


சமகாலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட இருவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? என்ற சர்ச்சை எழுந்து விட்டால் அதனை எவ்வாறு முடிவு செய்வது?

சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்திருப்பதற்கு சாத்தியம் இருப்பது போலவே, இருவருக்கிடையே சந்திப்பு நிகழாமல் இருப்பதற்கும் சாத்தியம் உள்ளது என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


நம்பகமான அறிவிப்பாளர் ஒருவர் சமகாலத்தில் வாழ்ந்த இன்னொரு நம்பகமானவரிடமிருந்து ஒரு செய்தியை 'நான் கேட்டேன்', 'எனக்கு அறிவித்தார்' போன்ற வார்த்தைகளால் அவர் அறிவித்தால், இருவருக்குமிடையே சந்திப்பு நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் 'கேட்டேன்' என்று அறிவிக்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட செய்தியை, 'கேட்கவில்லை' என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் ஐயத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தினால் அப்போது அதைத்தான் ஏற்க வேண்டும்.


இவ்வாறில்லாமல், இன்னாரிடமிருந்து அறிவிக்கிறார் என்பதைக் குறிக்கும் 'அன்' போன்ற வார்த்தைகளால் அறிவித்திருந்து, வேறு வெளிச் சான்றுகளின் மூலம் இருவருக்குமிடையே சந்திப்பு நடந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டிருந்தாலும் இருவருக்குமிடையே சந்திப்பு நடந்துள்ளது என்பதை அப்போதும் உறுதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு சந்திப்பு நடந்துள்ளது என உறுதி செய்யப்பட்ட ஓர் அறிவிப்பாளர் குறிப்பிட்ட ஒரு செய்தியை 'கேட்டேன்' 'எனக்கு அறிவித்தார்' என்று கூறியிருந்தாலும்கூட, அக்குறிப்பிட்ட செய்தியை தனக்கு அறிவித்தவரிடமிருந்து நேரடியாக அவர் கேட்கவில்லை என்று இக்கலை அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டால் அப்போது அக்குறிப்பிட்ட ஹதீஸை ஏற்கக் கூடாது என்பது ஹதீஸ் கலையின் விதியாகும்.

'அன்' என்ற வார்த்தைகளால் அறிவித்திருந்து, சமகாலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதைத் தவிர, இருவருக் குமிடையே சந்திப்பு நடந்ததற்கான வேறு எவ்விதச் சான்றுகளும் இல்லாத நிலையில் சந்திப்பு நடந்துள்ளது என்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பதே நம் முன் எழுந்துள்ள கேள்வி?

ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்து


இவ்விருவரும் நம்பகமானவர்களாகவும், தனக்கு அறிவிப்பவரை விட்டுவிடும் பழக்கம் இல்லாதவர்களாகவும் இருக்கும் பட்சத்தில், அவ்விருவரிடையே சந்திப்பு நடந்துள்ளதாகக் கருதி இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் போன்ற சில ஹதீஸ் கலை அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.

இமாம் புகாரி, அலி பின் அல் மதீனீய்யி போன்ற சில அறிஞர்கள் இக்கருத்திலிருந்து மாறுபடுகிறார்கள். அதாவது இரு அறிவிப்பாளரும் ஒரு முறையேனும் சந்தித்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.

இந்நிலையில் சம காலத்தில் வாழ்ந்திருந்த இருவர் சந்தித்துத் கொள்ளவில்லை என்றோ, அல்லது குறிப்பிட்ட நபிமொழியை தனக்கு அறிவித்தவரிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை என்றோ இக்கலை அறிஞர்களில் ஒருவரால் உறுதி செய்யப்படுமானால், அப்போது அந்த ஹதீஸ் தொடர்பறுந்தது என்றுதான் முடிவுக்கு வர வேண்டுமே தவிர, இருவரும் சமகாலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதை மட்டும் சான்றாக முன் வைத்து இதைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்று வாதித்து அந்த அறிஞரின் கருத்தைப் புறக்கணிக்க அறவே முடியாது. அவ்வாறு புறக்கணிப்பதாக இருந்தால், 'நேரடியாகக் கேட்டுள்ளார்' என்பதை இக்கலையின் வேறொரு அறிஞர் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்திருந்தால் மட்டுமே முதல் அறிஞரின் கூற்றை புறக்கணிக்க முடியும்.

சர்ச்சைக்கிடமான அபூதாவூத்தில் இடம் பெற்ற இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையை எடுத்துக் கொள்வோம். இந்த நபிமொழியை,

  • ஜஃபரிடமிருந்து உஸ்மான் என்பவரும்,

  • உஸ்மான் என்பவரிடமிருந்து கைலான் என்பவரும்,

  • கைலான் என்பவரிடமிருந்து யஃலா என்பவரும்

அறிவிப்பதாகவே பதிவாகியுள்ளது.

இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்ற உஸ்மான் மற்றும் கைலான் ஆகிய இரு பெயர்கள் விடுபட்ட நிலையில்,

  • ஜஃபர் என்பவரிடமிருந்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள

  • யஃலா அறிவிப்பதாக

வேறொரு நூலில் பதிவாகி உள்ளது என்று உதாரணத்திற்காக வைத்துக் கொள்வோம்.

ஜஃபர் ஹி.126ம் ஆண்டில் மரணித்தவர், யஃலா ஹி.168-ம் ஆண்டில் மரணித்தவர், இருவரின் மரணத்திற்கும் இடையில் 42 ஆண்டுகள்தான் இடைவெளி உள்ளது. இவ்வாறு இருவரும் சந்தித்துக் கொள்வதற்கு சாத்தியமான சமகாலத்தில் அடுத்தடுத்த ஊர்களில் (கூஃபா, பஸரா) வாழ்ந்து வந்துள்ளதால், இவ்விருவரும் சந்தித்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது எனக் கருதி யஃலா தனக்கு அறிவிப்பவரை விட்டுவிடும் பழக்கமற்றவர் என்ற அடிப்படையிலும் இந்த நபிமொழியை கைலான் என்பவரிடமும் கேட்டுள்ளார், ஜஃபரிடமும் நேரடியாகக் கேட்டுள்ளார். அதாவது இருவரிடமும் கேட்டுள்ளார் என்றுதான் முடிவு செய்வோம்.


அவ்வாறு முடிவு செய்ய எந்தத் தடையோ, முட்டுக்கட்டையோ இல்லை. 42ஆண்டுகள் கால இடைவெளி உள்ள இருவர் சந்தித்துக்கொள்ள வாய்ப்பில்லை என்றெல்லாம் வாதிக்க முடியாது. ஏனெனில், இதைவிட இரு மடங்கு கூடுதலான கால இடைவெளி உள்ள இரண்டு அறிவிப்பாளர்களிடையே சந்திப்பு நடந்து, பல ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அவ்வாறு அறிவித்தவர்களின் பட்டியல் இதோ!

  • ஹி.241வது ஆண்டு மரணமடைந்த அஹ்மத் பின் ஹன்பல் என்பாரிடமிருந்து ஹி.317வது ஆண்டு மரணமடைந்த அப்துல்லாஹ் பின் முஹம்மது அல் பஃகவி அவர்கள் அறிவிக்கிறார்கள். இருவரின் மரணத்திற்குமுள்ள இடைவெளி 76 ஆண்டுகளாகும்.

  • ஹி.317வது ஆண்டு மரணமடைந்த இதே அப்துல்லாஹ் பின் முஹம்மது அல் பஃகவி அவர்களிடமிருந்து ஹி.399-வது ஆண்டு மரணமடைந்த அபூ முஸ்லிம் முஹம்மது பின் அஹ்மத் என்பவர் அறிவிக்கிறார். இருவரின் மரணத்திற்குமுள்ள இடைவெளி 82 ஆண்டுகளாகும்.

  • ஹி.290வது ஆண்டு மரணமடைந்த அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் என்பாரிடமிருந்து ஹி.368வது ஆண்டில் மரணமடைந்த அஹ்மத் பின் ஜஃபர் பின் ஹம்தான் பின் மாலிக் என்பவர் அறிவிக்கிறார். இவ்விருவரின் மரணத்திற்குமுள்ள இடைவெளி 78 ஆண்டுகளாகும்.

  • ஹி.179வது ஆண்டு மரணமடைந்த இமாம் மாலிக் அவர்களிடமிருந்து ஹி.259வது ஆண்டு மரணமடைந்த அஹ்மத் பின் இஸ்மாயில் அஸ்ஸஹ்மி என்பவர் அறிவிக்கிறார். இருவரின் மரணத்திற்குமுள்ள இடைவெளி 80ஆண்டுகளாகும்.

இவ்வாறு நீண்ட கால இடைவெளியை கொண்ட அறிவிப்பாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதன் அடிப்படையில் யஃலா என்பவர் 42ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஜஃபர் என்பவரிடம் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றெல்லாம் வாதிக்க முடியாது. யஃலா என்பவர் ஜஃபரிடம் கேட்கவில்லை என்றெல்லாம் யாரும் கூறவும் இல்லை.

எனவே, யஃலா என்பவர் தனக்கு அறிவிப்பவரை விட்டு விட்டு அறிவிக்கும் பழக்கமற்ற நம்பகமானவர் என்ற அடிப்படையில், 'உஸ்மான், கைலான் ஆகிய இரு அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளனர்' என்பது இக்கலையின் அறிஞர்களால் உணர்த்தப்படாத நிலையில் இந்த ஹதீஸ் தொடர்பு அறுந்ததல்ல என்றே நம்புவோம். காரணம் தொடர்பு அறுந்தது என்பதை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு நுட்பமான கலையாகும். இதற்கு இவர்கள் அளித்துள்ள வாக்கு மூலமே சாட்சி.

"முதல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இவர்கள் எழுதிய விஷயம் நாம் கூறாத ஒன்றாகும். ஆனாலும், இது நம் கவனத்துக்கு வராத ஒன்றாகும்" (ஏகத்துவம், ஜனவரி-2006)


(அதாவது தொடர்பறுந்தது என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது) இவர்களது கவனத்துக்கு வராத ஒன்றாகும் என்று ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம் தொடர்பறுந்தவற்றை அறிந்து கொள்ளும் திறன் இவர்களிடம் இல்லை என்பதை இவர்களே ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

 

பல ஆண்டுகளாகச் செய்த ஆய்வின் லட்சணம்

ஜகாத் குறித்து பல வருடங்களாக ஆய்வு(?) செய்து முடிவு எடுத்ததாகக் கூறிவரும் இவர்கள், நாம் சில கேள்விகளை முன் வைத்த போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார்கள். மீண்டும் ஆய்வு என்ற பெயரில் பல நாட்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒட்டு மொத்த அறிஞர்களும்(?) ஒன்று கூடி கண்களில் எண்ணைய் ஊற்றிக் கொண்டு ஆய்வு செய்து ஒருமித்த கருத்துக்கு வந்துவிட்டதாகவும் ஏகத்துவம் செப்டம்பர் (2005) இதழில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தொடர்பு அறுந்தது என நாமாக செய்தி வெளியிடும் வரை இவர்களில் ஒருவராலும் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், இவர்களது பல ஆண்டின் ஆய்வுத் திறனை, பல அறிஞர்கள் கூடி ஒருமித்த கருத்துக்கு வந்ததாக சொல்லிக் கொண்ட ஆய்வின் தரத்தை இதற்கு மேல் நாம் விவரிக்க வேண்டாம்.

இவ்வாறு தொடர்பறுந்ததை இவர்கள் போன்ற ஆய்வுத்திறனும், அறிவுத்திறனும் ஒரு சேரக் குன்றியவர்களால் அறிந்து கொள்ள முடியாது என்பது மட்டும் உறுதியான விஷயமாகும். மாறாக இக்கலையில் தேர்ச்சி பெற்ற விற்பன்னர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதை இவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டி எழுதி வரும் 'தத்ரீப்' என்ற நூல் தெளிவாக விவரிக்கின்றது.


والنوع الثامن الثلاثوتون المراسل الخفي إرسالها هو فن عظيم الفائدة, يدرك بالإتساع في الرواية وجمع الطرق مع المعرفة التامة.وهو ما عرف إرساله لعدم اللقاء أو السماع منه. ومنه مايحكم بإرساله لمجئه من وجه أخر بزيادة شخص ............. وهو يشتبه على كثير من أهل الحد يث ولا يدركه إلا نقاد الحديث. ( تدريب الراوي في شرح تقريب النووي 279ص)


"தெளிவாகாத வகையில் அறிவிப்பாளர் தொடர்பு அறுந்தது 38வது வகையாகும். இதை அறிந்து கொள்வது மிகப்பெரும் பயன் நிறைந்த ஒன்றாகும். அறிவிப்புக்கலையை விரிவாக அறிந்து, அறிவிப்பாளர் வரிசைகளை ஒருசேர ஒன்று சேர்த்துப் பார்ப்பதன் மூலமே தொடர்பறுந்தது என அறிந்து கொள்ள முடியும்.

(இரு அறிவிப்பாளர்களிடையே) சந்திப்பு நிகழவில்லை அல்லது (ஒருவர் மற்றவரிடம்) கேட்கவில்லை என்பதின் மூலம் அறிவிப்பாளர் வரிசை தொடர்பறுந்தது என அறிந்து கொள்ளப்படும். வேறு தொடர்களில் ஒருவர் கூடுதலாக இடம் பெற்றிருப்பதின் மூலமும் சில வேளைகளில் இது அறிந்து கொள்ளப்படும். ஹதீஸ் கலையினரில் அதிகானோருக்கு இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும், ஹதீஸ்கலையின் விற்பன்னர்கள் மட்டுமே இதனைத் தெளிவாக அறிந்து கொள்வார்கள். (தத்ரீப் 279, 280)

இந்த விளக்கத்தின் அடிப்படையில், இக்கலையின் விற்பன்னராகத் திகழும் அறிஞர்கள் உறுதிப்படுத்தினால் மட்டுமே அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும். அறிவிப்பாளர் வரிசையில் தொடர்பு அறுந்துள்ளது என ஓர் அறிஞர் உறுதி செய்து விட்டால், சமகாலத்தில் வாழ்ந்திருந்த, தனக்கு அறிவிப்பவரை விட்டுவிடும் பழக்கமற்ற நம்பகமானவராக விளங்குவதால் நேரடியாகக் கேட்டிருப்பதற்கு எந்த தடையும், முட்டுக்கடையும் இல்லை என்ற கற்பனையான காரணத்தை மட்டும் கூறி, ஹதீஸ்கலையின் அறிஞர்கள் கூறியதைப் புறக்கணிக்க முடியாது. இது அனைவரும் அறிந்து வைத்துள்ள உண்மையும், ஹதீஸ்கலையின் பொது விதியுமாகும். தத்ரீப் என்ற நூலிலும் இது குறித்து விவரம் 105, 280 பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில்தான் ஜஃபர், கைலான் ஆகிய இருவரும் சமகாலத்தில் அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்திருந்தாலும் இந்த குறிப்பிட்ட ஹதீஸை ஜஃபரிடமிருந்து கேட்டவர் உஸ்மான் என்பவர்தான் கைலான் அல்லர். இந்தக் கோளாறு கைலான் என்பவரின் மூலம் ஏற்பட்டதல்ல மாறாக, இதே தொடரில் இடம் பெறும் யஹ்யாவின் மாணவர்களில் சிலர்தான் உஸ்மான் என்பவரை விட்டு விட்டு இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர் என இக்கலையில் சிறந்து விளங்கியவரும், இந்த நபிமொழியை தனது நூலில் இரு அறிவிப்பாளர் தொடரின் மூலம் பதிவு செய்தவருமான இமாம் பைஹகி அவர்கள் அறிவிப்பாளர் விடுபட்டுள்ள உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை மிகத் தெளிவாக விவரித்திருந்தேன்.

இமாம் பைஹகி கூறியதாக நான் எடுத்துக் காட்டிய இந்த சான்றை மறைத்து விட்டு, மெஜாரிட்டியின் அடிப்படையில் கற்பனையாக முடிவெடுத்துக் கொண்டது போல் சித்தரித்து இதற்கு சற்றும் தொடர்பில்லாத ஊசிப் போன பிரியாணிக் கதையை கட்டவிழ்த்து விட்டு, பிரச்சனையை திசைத் திருப்ப முனைந்துள்ளார்கள். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்து மோசடியாகும்.

ஆக, அபூ தாவூதில் உள்ள இந்த நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசை தொடர்பறுந்தது என இமாம் பைஹகி அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டதால், பலவீனம் என்ற நம் வாதம் மேலும் வலுவடைகிறது.
ஆக,

  • தான் கேட்காத முஜாஹிதிடமிருந்து ஜஃபர் என்பவர் அறிவிப்பதாலும்,

  • அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்ற பலவீனமான அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதாலும்

'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்' என்ற அர்த்தத்தில் உள்ளதாக இவர்கள் வாதிக்கும் அபூ தாவூதில் உள்ள இந்த நபிமொழி பலவீனமானது என்பது ஐயத்திற்கு இடமின்றி உறுதியாகிவிட்டது.

செல்வத்தை சேமிக்க தடை இல்லை என்பதே இந்த நபிமொழியின் நோக்கம்:


ஜகாத் வழங்கியது போக மீதியுள்ள செல்வத்தை ஹலாலாக ஆக்கத்தான் ஜகாத் கடமையாக்கப் பட்டது என்று ஏற்கனவே நமது மறு ஆய்வில் குறிப்பிட்டிருந்தேன்.

நினைவூட்டலுக்காக அதை மீண்டும் அப்படியே தருகிறேன்:

இந்நபி மொழி ஸஹீஹ hனது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அர்த்தத்தின் அடிப்படையிலும் அவர்களுக்கு இது சான்றாக ஆகாது. ஏனெனில், ஷலியுதய்யிப| என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்றோர் அர்த்தம் இருந்தாலும், இந்நபி மொழியின் முன் பின் தொடரை கவனத்தில் கொள்ளும் போது, ஷஅனுமதித்தல்| என்ற அதன் வேறொரு அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை கையாளப்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். காரணம், ஷபொன்னையும் வெள்ளியையும் சேமித்துவைத்து என்ற வசனம் (9:34) அருளப்பட்டதும், செல்வத்தை சேமிக்க தடை வந்துள்ளதாக சில நபித்தோழர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, இறைத்தூதரிடம் விளக்கம் கேட்ட போது,

'செல்வத்தை சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்தால், ஜகாத்தையும், வாரிசுரிமைச் சட்டத்தையும் இறைவன் கடமையாக்கி இருக்க மாட்டான். இவ்விரு சட்டங்களையும் கடமையாக்கியது, செல்வத்தை சேமிப்பதை அனுமதிப்பதற்காகத்தான் என நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நபி மொழியில் இடம் பெற்றுள்ள, ஷலி யுதய்யிப மா பகிய மின் அம்வாலிக்கும்| என்ற வாசகத்தை நன்கு ஆராய்ந்தால், ஷகடமையான ஜகாத்தை வழங்கியது போக மீதி இருக்கும் செல்வத்தை உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் சேமித்து வைத்துக் கொள்ள தடை இல்லை| என்று கூறுவதுதான் இந்த ஹதீஸின் நோக்கமாகும் என்பது தெளிவாகத் தெரியவரும்.

அதாவது, செல்வத்தை சேமிப்பது கூடுமா? கூடாதா? என்றுதான் இந்நபி மொழியில் பேசப்படுகிறதே தவிர, செல்வம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்ற பேச்சிற்கே இடமில்லை. செல்வம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்ற சந்தேகம் தான் வினவப்பட்டது என்றிருந்தால், வாரிசுரிமைச் சட்டத்தைப் பற்றி இங்கு கூற வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. ஜகாத்தை மட்டும் கூறி நிறுத்திக் கொண்டிருப்பார்கள்.

ஷஒரு மனிதன் சேமித்து வைப்பதில் சிறந்தது நற்குணமுள்ள மனைவிதான்| என இந்த நபிமொழியின் இறுதியில் இடம் பெற்றுள்ள செய்தி, ஷபொருள் சேமிப்பது குறித்தே இந்நபி மொழியில் விவரிக்கப்படுகிறது| என்ற நாம் கூறிய அர்த்தத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது.

மேலும், அபூ தாவூதின் விரிவுரையாளர் ஷம்சுல் ஹக் என்ற அறிஞரும், ஷதத்யீப்| என்ற வார்த்தை அனுமதித்தல் என்ற அர்த்தத்தில்தான் கையாளப்பட்டுள்ளது என்பதை அவ்னுல் மஃபூத் என்ற தனது நூலில் உறுதி செய்கிறார். அந்நூலில் கூறப்பட்ட செய்தி இதோ!


(إلاّ ليطيب) من التفعيل أي ليحلّ بأداء الزكاة لكم مابقي من أموالكم . ومعنى التطييب أن أداء الزكاة أن يحلّ ما بقي من ماله المخلوط بحق الفقراء (عون المعبود)


"தய்யிப" என்ற வார்த்தை "தஃப்யீல்" என்ற அமைப்பைச் சார்ந்ததாகும். "லியுதய்யிப" என்றால், லியுஹில்ல என்பதாகும். "லியுஹில்ல" என்பதன் அர்த்தம் "ஹலாலாக ஆக்குவதற்காக" என்பதாகும். அதாவது, ஜகாத் வழங்குவதன் மூலம் எஞ்சிய செல்வத்தை ஹலால் ஆக்கத்தான் ஜகாத் கடமையாக்கப்பட்டது என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும். "எஞ்சிய செல்வத்தைத் தூய்மைப்படுத்தவே ஜகாத் கடமையானது" என்று அர்த்தம் செய்ய இங்கு அறவே சாத்தியம் இல்லை"
மேற்கண்டவாறு எழுதியிருந்தோம். இதற்கு அவர்கள் பின் வருமாறு மறுப்பு எழுதியுள்ளனர்.

 

ஏகத்துவம் ஜனவரி (2006) மாத இதழின் மறுப்பு

'யுதய்யிப' என்பதன் பொருள் 'தூய்மை'தான் தூய்மையானவை மட்டுமே இறைவனால் அனுமதிக்கப் பட்டுள்ளதால் மிகச் சில நேரங்களில் அனுமதிக்கப்பட்டவை என்று பொருள் கூறப்படுவதுண்டு.

ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தம் கொள்ளத் தடை ஏதும் இருந்தால் மட்டுமே மாற்று அர்த்தத்துக்குச் செல்ல வேண்டும். சிங்கம் என்ற சொல் குறிப்பிட்ட வன விலங்கைக் குறிக்கும். இதுதான் அதன் நேரடிப் பொருள். சில நேரங்களில் வீரமான மனிதனையும் இந்த வார்த்தையில் குறிப்பிடலாம். அரபி அகராதியில் இதற்குப் பொருள் கூறும் போது வனவிலங்கு எனவும், வீரமான மனிதன் எனவும் இரண்டையுமே குறிப்பிடுவார்கள். அதற்காக எல்லா இடங்களிலும் மனிதர்கள் என்ற பொருள் கொள்ள முடியாது.... 'தய்யிப்' என்பதன் நேரடிப் பொருள் 'தூய்மை' என்பதுதான் என்பதை ஏராளமான வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்' ('ஏகத்துவம்', ஜனவரி -2006)


(சில காரணங்களின் அடிப்படையில் பன்றி இறைச்சி, இரத்தம், செத்த பிராணி ஆகியவை இறைவனால் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதால், அவற்றையும் தூய்மையானவைதான் என வாதிப்பார்களா? தூய்மையானது மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது என்று இவர்கள் எழுதியதால் இச்சந்தேகம் ஏற்பட்டது அவ்வளவுதான்)

"தூய்மையானவை மட்டுமே இறைவனால் அனுமதிக்கப்படுவதால் மிகச் சில நேரங்களில் அனுமதிக்கப் பட்டவை என்று பொருள் கூறப்படுவதுண்டு" என்று எழுதி 'அனுமதித்தல்' என்றொரு அர்த்தம் இருப்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி!

'அனுமதித்தல்' என்ற அர்த்தம் இருப்பதை ஒப்புக் கொண்டிருந்தாலும் அதனை மாற்று அர்த்தம் என்று வாதித்து, நேரடி அர்த்தம் செய்ய சாத்தியம் இல்லாத போது மட்டும்தான் மாற்று அர்த்தத்தை தர வேண்டும் என்று எழுதியுள்ளனர்.

நமது விளக்கம்


இது தவறான வாதமாகும். 'தூய்மை' என்பது எப்படி அதன் நேரடி அர்த்தமோ அது போன்றுதான் 'அனுமதித்தல்' என்பதும் அதன் நேரடி அர்த்தமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பல நேரடி அர்த்தங்கள் கொண்ட வார்த்தைக்கு அது பயன்படுத்தப்பட்டுள்ள இடமறிந்து அர்த்தம் செய்ய வேண்டும் என்பதே அர்த்தமுள்ள வாதமாகும்.
[Play Video]

இதனடிப்படையில்தான்,
இக்குறிப்பிட்ட நபிமொழியில் இடம் பெற்ற 'லியுதய்யிப' என்ற வார்த்தைக்கு அதன் இன்னொரு நேரடி அர்த்தமான 'அனுமதித்தல்' என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும். இவ்வாறுதான் அர்த்தம் செய்ய வேண்டும் என்பதை இந்நபிமொழிக்கு விளக்கம் எழுதியுள்ள இக்கலை அறிஞர் ஷம்சுல் ஹக் என்பவரும் உறுதி செய்துள்ளார் என்று நான் எழுதியிருந்தேன்.

இவ்வாறு நான் எழுதியதை 'தய்யிப' என்ற வார்த்தை கையாளப்பட்ட எல்லா இடங்களிலும் அவ்வாறுதான் அர்த்தம் செய்ய வேண்டும் என்று நாம் வாதித்தது போல் சித்தரித்து, 'தூய்மை' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட சில வசனங்களையும் சுட்டிக்காட்டி நம்மை கேலியும், கிண்டலும் செய்து எழுதியுள்ளனர்.

நாம் கூறிய அர்த்தத்தை உறுதிப்படுத்திய அபூதாவூதின் விரிவுரையான அவ்னுல் மஃபூதின் ஆசிரியர் ஷம்சுல் ஹக் என்பவரை நோக்கியும் இவ்வாறு கேலியும், கிண்டலும் செய்து எழுதுவார்களா?

நேரடியான பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு வார்த்தை அதிகமான இடங்களில் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா இடத்திலும் அவ்வாறே அர்த்தம் செய்ய வேண்டும் என்ற தவறான கோணத்தில் எடுத்துக் கொண்ட தவறான முடிவாகும்.

இவர்களின் தவறான கருத்துக்கு எதிராக நாமும் சில வசனங்களை எடுத்துக் காட்ட முடியும்.
இளமைப் பெண், அடிமை பெண், கப்பல், சூரியன் போன்ற நேரடியான பல அர்த்தங்களைக் கொண்ட 'ஜாரிய்யா' என்ற வார்த்தை நபிமொழிகளில் அதிகமான இடங்களில் இளமைப் பெண், அடிமைப்பெண் என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது. அதிகமான இடங்களில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா இடங்களிலும் அவ்வாறே அர்த்தம் செய்ய வேண்டும் என்ற பெரியண்ணன் வகையறாவின் தவறான வாதப்படி,

"(நூஹ் (அலை) அவர்களின் காலத்தில்) தண்ணீர் எல்லையைக் கடந்த போது, உங்களை ஜாரிய்யாவில் (கப்பலில்) ஏற்றினோம்" என்ற வசனத்தில், (69:11)


'உங்களை இளமைப் பெண்ணில் ஏற்றினோம்' என்றுதான் அர்த்தம் செய்வார்களா?

அதே போல் கண், நீர் ஊற்று என்ற பல நேரடியான அர்த்தங்களைக் கொண்ட 'ஐன்' என்ற வார்த்தை 'கண்' என்ற அர்த்தத்தில்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் எல்லா இடங்களிலும் அவ்வாறே அர்த்தம் செய்ய வேண்டும் என்ற பெரியண்ணன் வகையறாவின் தவறான சிந்தனைப்படி,

"அங்கே (சுவனத்தில்) ஓடும் 'ஐன்' (நீர் ஊற்று) உண்டு" (88:12) என்ற வசனத்தில்,


"சுவனத்தில் ஓடும் கண்கள் உண்டு" என்றுதான் அர்த்தம் செய்வார்களோ?

அதே போன்று, "இறைவனை அஞ்சுவோர் சோலைகளிலும், உயூன்களிலும் (நீரூற்றுகளிலும்) இருப்பார்கள்"


(15:45, 51:15) என்ற வசனங்களில்,
"இறைவனை அஞ்சுவோர் சோலைகளிலும், கண்களிலும் இருப்பார்கள்" என்றுதான் பெரியண்ணன் வகையறாக்கள் அர்த்தம் செய்வார்களா?

"இறைவனை அஞ்சுவோர் நிழல்களிலும், உயூன்களிலும் (நீரூற்றுக்களிலும்) இருப்பர்கள்" (77:41)
என்ற வசனத்தில்
"இறைவனை அஞ்சுவோர் நிழல்களிலும், கண்களிலும் இருப்பார்கள்" என்றுதான் பொருள் கொள்வார்களா?

"சோலைகளையும், உயூன்களையும் (நீரூற்றுகளையும்) விட்டு அவர்களை வெளியேற்றினோம்" (44:25)
என்ற வசனத்தில்


"சோலைகளையும், கண்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம்" என்றுதான் பெரியண்ணன் வகையறாக்கள் அர்த்தம் செய்வார்களோ?

"அவர்கள் எத்தனையோ சோலைகளையும் உயூன்களையும் (நீரூற்றுகளையும்) விட்டுச் சென்றனர்" (44:26) என்ற வசனத்தில்,


"அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும், கண்களையும் விட்டுச் சென்றனர்" என்றுதான் பிறரை மட்டும் கிண்டல் செய்து வரும் பெரியண்ணன் வகையறாக்கள் அர்த்தம் செய்வார்களோ?

 

இது போன்று எண்ணற்ற உதாரணங்களை நம்மாலும் எடுத்துக்காட்ட முடியும்.

நேரடியான பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு வார்த்தை அது பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப அர்த்தம் செய்ய வேண்டும் என்ற இலக்கணத்தின் படி,

'லி தய்யிப மா பகிய மின் அம்வாலிக்கும்' என்ற தொடரில் இடம் பெற்ற 'யுதய்யிப' என்ற வார்த்தைக்கு 'தூய்மைப்படுத்துதல்' என்றொரு அர்த்தம் இருந்தாலும், 'அனுமதித்தல்' என்ற அதன் நேரடியான இன்னொரு அர்த்தத்தைத்தான் இந்த இடத்தில் தர வேண்டும் என்று எழுதி விட்டு அதற்கான காரணத்தையும் தெளிவாக விவரித்திருந்தேன்.

அதாவது, இந்நபிமொழியின் முன் பின் தொடர், இறைவசனம் தெரிவிக்கும் கருத்து, நபித்தோழர்கள் கேள்வி எழுப்பிய சூழ்நிலை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் போது, நாம் கூறிய அர்த்தம்தான் சரியானதாகும் என்று பாமர மக்கள்கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக விளக்கி இருந்தேன்.

ஆனால், இவற்றையெல்லாம் வழக்கம் போல் மறைத்து விட்டு, இந்த நபிமொழியின் ஒரு பகுதியை மட்டும் மொழி பெயர்த்து வெளியிட்டு மறுபகுதியை வழக்கம் போல் இருட்டடிப்புச் செய்து விட்டனர்.

இந்த நபிமொழியை முழுவதுமாக மொழி பெயர்த்து வெளியிடட்டும். அப்போது நாம் கூறிய அர்த்தம் சரியானதா? அல்லது அவர்கள் செய்த அர்த்தம் சரியானதா? என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டும்.

"தொழுவோருக்கு நாசம் உண்டாகட்டும்", "தொழுகையின் பக்கம் நெருங்காதே" என்ற வசனங்களின் முன் பின் தொடர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, இவற்றை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு தொழுவோர் குறித்து இறைவன் கண்டனம் செய்துள்ளான் என்று பேசி வர முயற்சிப்போருக்கு நாம் கூறிவரும் உண்மைகள் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.

மேலும், "இஸ்லாத்தின் துவக்க காலத்தில் தேவைக்கு அதிமான பொருளை சேமித்து வைப்பது குறித்து கடுமையாக எச்சரிக்கப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஜகாத் கடமையாக்கப்பட்டதன் மூலம் இத்தடை நீக்கப்பட்டு, பொருளை எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு விட்டது" என்று இப்னு ஹஜர் அவர்கள் ஜகாத் கடமையாக்கப்பட்டதன் நோக்கத்தை ஃபத்ஹுல் பாரியில் (3/345) விவரித்துள்ளார்.

ஆக, 'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்' என்ற அர்த்தத்தில் எந்த ஒரு நபிமொழியும் அறவே இல்லை என்பதை நமது மேற்கண்ட விளக்கம் உறுதியாக்கிவிட்டது.

"பொருளைத்தூய்மைப்படுத்தவே ஜகாத்" என்ற கருத்தில் ஹதீஸ் இருப்பதாக ஒரு வேளை இவர்கள் நிரூபித்தாலும், அதன் மூலம் 'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற தங்களின் தவறான வாதத்தை எந்நிலையிலும் நிலை நிறுத்த முடியாது.

ஏனெனில், இந்தக் கருத்தைக் கூறிய இப்னு உமர் (ரலி) அவர்கள் கூட வருடா வருடம் ஜகாத் வழங்கியே வந்துள்ளார்கள். மேலும், 'ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத்' என்று கூற குர்ஆனிலும், நபிமொழியிலும் எந்த ஒரு சான்றும் இல்லை என்பதுதான் உண்மை. இதனை அவர்களே பின் வருமாறு எழுதி ஒப்புக்கொண்டுள்ளனர்.


"ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்றக் கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர். ஒரு சொல்லுக்கு இதுதான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது அதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடமையாகுமா?" (ஏகத்தும், செப்டம்பர்-2005, ஜனவரி-2006)


அதாவது என்னிடம் ஆதாரமில்லை என்றாலும் சரி, குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, நான் கூறினேன் என்பதற்காக கண் மூடித்தனமாக அதை ஏற்றுக் கொள்ள என்னிடம் ஒரு சிறிய கூட்டம் உண்டு என்பதைத்தான் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். இந்த சிறிய கூட்டத்திற்கு எப்போது உண்மை உறைக்கப் போகிறதோ!

("பொருளைத் தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்" என்பது நபிமொழியே அல்ல. அவ்வாறு இருப்பதாக எடுத்துக்காட்டினால் அதற்கு இரண்டு இலட்சம் பரிசாகத் தருவேன் என்ற எனது முந்தைய சவாலிலிருந்து (சவடால் அல்ல) நான் ஒரு போதும் பின் வாங்கமாட்டேன்)


ஏற்க மறுத்த இரண்டாவது விஷயம்

'வருடா வருடம் ஜகாத் வழங்கி வர வேண்டும்' என்று ஆதாரப்பூர்வமான நபிமொழி அபூ தாவூதில் உள்ளதாக சுட்டிக்காட்டியதற்கு, மீண்டும் மறுத்து கருத்துக் கூறியுள்ளார்கள். இவர்களது மறுப்பு சரியா?


ஏற்க மறுப்பது ஏன்?

'ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத்' என்று கடந்த சில காலங்களாக தவறாக பிரச்சாரம் செய்து வருவதால் செல்லும் இடமெல்லாம், பொது மக்கள் இவர்களை இடைமறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அப்போதைய நிலைமையைச் சமாளிக்க எதையாவது பதிலாக கூறிவிட்டுத் தப்பி விடுவது இவர்களது வாடிக்கை.

அந்த அடிப்படையில், 'ஜகாத் மனிதனைத் தூய்மைப்படுத்துவதாகத்தான்' குர்ஆனிலும், நபி மொழியிலும் உள்ளதே தவிர, பொருளைத் தூய்மைப்படுத்துவதாக ஒரு சான்றும் இல்லையே. மேலும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என அபூ தாவூதில் ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் உள்ளதே என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் வினவுகின்றார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த பி.ஜே., "பொருளைத்தூய்மைப்படுத்துவதாக குர்ஆனில் உள்ளது என்று நான் கூறவில்லை. மாறாக, நபிமொழியில்தான் உள்ளது. துஹ்ரத்தன் லில்அம்வால் என்று ரசூலுல்லாஹ் கூறியுள்ளார்கள் என்று கூறி விட்டு, வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என அபூ தாவூதில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த ஒரு நூலிலும் இப்படியான ஒரு ஹதீஸ் அறவே கிடையாது. 'அப்படி ஒரு ஹதீஸைக் கொண்டு வந்தால் ஒரு இலட்சம் பரிசாகத் தருகிறேன்' என்று தனது அறியாமையால் சவடால் (சவால் அல்ல) விட்டு விட்டார் பாவம்.

அபூ தாவூதில் உள்ள ஹதீஸ் பலவீனமானது என்றுகூட அப்போது மறுக்கவில்லை. காரணம், அப்படி ஒரு ஹதீஸ் இருப்பது இவர்களுக்கே தெரியாது. இந்த நபிமொழியை எடுத்துக்காட்டியதும் திடுக்கிட்டுப் போன இவர்கள் எப்பாடு பட்டேனும் இதனை மறுத்தே ஆக வேண்டும் என்பதற்காக எதையாவது உளறிக் கொட்டுகிறார்கள்.

ஒப்புக் கொண்டால், சவடால் விட்ட பரிசுத் தொகையையும் இழக்க வேண்டியிருக்குமே என்பதும், இந்த ஹதீலை பலவீனமானது என்று கூறுவதற்கு ஒரு முக்கிய காரணமாகக்கூட இருக்கலாம்.

இதை மறுப்பதற்காக சில நூல்களிலிருந்து பொது இலக்கணம் என்று சிலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இவர்கள் எந்த எந்த நூல்களை சான்றாக கூறினார்களோ அதே நூல்களிலிருந்து நாமும் இக்கலையில் ஏற்கப்பட்ட சில பொது விதிகளை சுட்டிக் காட்டுகிறோம்.

'எங்களது மனோ இச்சைக்கு ஒத்திருந்தால் மட்டுமே ஏற்போம். மாற்றமாக இருப்பின் ஏற்க மாட்டோம்' என அடம் பிடித்து வரும் இக்கூட்டம் இவற்றையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ளவார்களா என்ன? எனினும், இதனை வாசிப்போர் உண்மையைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?


"அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினரிடமிருந்த அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய நூலிலிருந்து வாசித்தேன் என்று கூறி அபூ தாவூத் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். அம்ர் பின் ஹாரிஸின் நேர்மை நிரூபணமாகவில்லை என்று தஹபி கூறுகிறார்" என கடந்த செப்டம்பரில்(2005) செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இதை மறுத்து, தஹபி அவ்வாறு கூறவில்லை. தனக்கு அறியவில்லை என்றுதான் எழுதியுள்ளார். அதனை தவறாக மொழி பெயர்த்து மக்களை ஏமாற்ற வேண்டாம். மேலும், இப்னு ஹிப்பான் அவர்கள் 'முஸ்தகீமுல் ஹதீஸ்' (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று நற்சான்று தந்துள்ளார் என்று குறிப்பிட்டு விட்டு, இப்னு ஹிப்பான் அவர்கள் மீது கூறப்பட்டு வரும் ஒரு தவறான செய்திக்கு விளக்கமும் அளித்திருந்தேன். இதனை மறுத்து பின் வருமாறு எழுதியுள்ளார்கள்.

"இப்னு ஹிப்பான் சிறந்த ஆய்வாளர் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் தவறான அளவுகோலைப் பயன்படுத்துகிறார்...... நம்பகமானவர் என்று ஒருவரைப் பற்றி இப்னு ஹிப்பான் கூறினால் உண்மையில் நம்பகமானவராக இருக்கலாம். மற்றவர்கள் அவரைப் பற்றி கூறியுள்ளதைத் தேடி இதை உறுதி செய்ய வேண்டும்...." (ஏகத்துவம், ஜனவரி - 2006)


நமது விளக்கம்


பிறருக்குக் கூறுகின்ற இந்த விதியை இவர்களும் மதித்து அதைக் கடைப்பிடித்து வந்திருப்பார்களேயானால் தங்களது வாதத்தில் நேர்மையாளர்கள் என்று இவர்களைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், தங்களது மனோ இச்சைக்கு சாதகமான ஒரு ஹதீஸை சரிகாணும் போது மட்டும் பிறருக்காகக் கூறிய இந்த விதியை கடுகளவுகூட கடைபிடிக்காது காலில் போட்டு மிதித்துள்ள சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சில.

  • தொடையின் பெரும் பகுதியை திறந்த நிலையில் தொழுதால் குற்றமில்லை என்ற புதிய ஆடைக் குறைப்புக் கொள்கையை அறிவித்து, ஆடைத் தட்டுப்பாட்டை சமாளிக்க தீர்வு கண்ட இந்த மேதைகள்(?) தங்களின் வாதத்தை நிலைநாட்ட எடுத்துக்காட்டிய நபிமொழிகளில் அஹ்மதில் பதிவான செய்தியும் ஒன்று. இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் உபைதுல்லாஹ் பின் ஸய்யார் என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவரை இப்னு ஹிப்பான் அவர்கள் கூட 'நம்பகமானவர்கள்' என்ற தனது நூலில் இடம்பெறச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இவர் குறித்து 'அறியப்படாதவர்' என ஹுசைனி, இப்னு ஹஜர், அவரது ஆசிரியர் ஜெய்னுத்தீன் அல்இராகி ஆகியோர் கூறியுள்ளனர். வேறு எந்த அறிஞரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

இதே நபிமொழி முஸ்னத் இஸ்ஹாக் என்ற நூலிலும் பதிவாகியுள்ளது. (இப்படி ஒரு அறிவிப்பு இருப்பது இவர்களுக்கு அறவே தெரியாது.) அந்த அறிவிப்பில், உபைதுல்லாஹ் என்பவருக்குப் பதிலாக அப்துல்லாஹ் பின் ஸய்யார் என்பவர் இடம் பெறுகிறார். இவரை இப்னு ஹிப்பான் தனது நூலில் இடம் பெறச் செய்திருந்தாலும், இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

வேறு அறிஞர்களும் இவர் குறித்து ஒன்றும் கூறாதநிலையில் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று இவர்கள் வாதித்து வருகிறார்களே காரணம் என்ன?. 'நம்பகமானவர்' என்று கூறிய மற்ற அறிஞர்கள் யார்?

  • சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இவர்களிடம் கொழும்பு நகரில் டவுன்ஹாலில் நடந்த கேள்வி - பதில் நிகழ்ச்சி ஒன்றில் 'பெண் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? என ஒரு பெண்மணி கேள்வி எழுப்புகின்றார். [Play video]

இதற்கு பதில் அளிக்கும்போது, "தனது வீட்டிலுள்ள பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஒரு பெண் இமாமாக நின்று தொழுகை நடத்தலாம். உம்மு வரகா என்ற நபித்தோழிக்கு இறைத்தூதர் அனுமதி அளித்துள்ளார்கள் என்ற ஆதாரப்பூர்வமான நபிமொழி அபூதாவூதில் உள்ளது" என பதிலளித்துள்ளார்.

இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் ஏகப்பட்ட கோளாறுகள் உண்டு. உரிய இடமில்லை என்பதால் அதைப் பற்றி விரிவாகக் கூற விரும்பவில்லை. எனினும் இந்த நபிமொழியை அப்துர்ரஹ்மான் பின் கல்லாத், லைலா பின்த் மாலிக் ஆகிய இருவரின் வழியாகவே வலீத் பின் யஜீத் என்பவர் அறிவித்ததாக அபூ தாவூதில் பதிவாகி உள்ளது.

அப்துர் ரஹ்மான் பின் கல்லாத், லைலா பின்த் மாலிக் ஆகியோரை 'நம்பகமானவர்கள்' என்ற தனது நூலில் இப்னு ஹிப்பான் இடம் பெறச் செய்துள்ளார் என்பதைத் தவிர, மற்ற அறிஞர்கள் யாரும் இவர்களது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள்கூட 'முஸ்தகீமுல் ஹதீஸ்', 'ஃதிகத்' போன்ற வார்த்தைகளால் இவர்களது நம்பகத்தன்மையை சிலாகித்துக் கூறவில்லை.

மாறாக, 'லைலா பின்த் மாலிக் யார் என அறியப்படாதவர்' என இப்னு ஹஜர் அவர்களும், 'அப்துர் ரஹ்மான் பின் கல்லாத் நிலை அறியப்படாதவர்' என இப்னு ஹஜர், இப்னு கத்தான் போன்ற அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இவர்களின் மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு நபிமொழியை ஆதாரப்பூர்வமானது என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்கள்?

கடந்த காலங்களில் இவர்கள் எடுத்துக்காட்டிய ஒவ்வொரு நபிமொழிகளையும் இது போன்று ஆய்வு செய்ய முற்பட்டால் ஏராளமான முரண்பாடுகளை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியும்.

இவ்வாறு தங்களது மனோ இச்சைக்கு சாதகமாக இருந்தால் மட்டும் இப்னு ஹிப்பானை சான்றாக எடுத்துக் கொள்வார்களாம். அதற்கு மாற்றமாக இருந்தால் இப்னு ஹிப்பானைப் புறக்கணிப்பார்களாம். இப்படிப்பட்டவர்கள் பிறருக்கு விதிகளைப் பற்றி அறிவுறுத்துவது வேடிக்கையாகத் தெரியவில்லையா?

ஏற்கத்தக்க காரணங்களா?

(முஸ்தகீமுல் ஹதீஸ்) 'ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்' என ஓர் அறிவிப்பாளர் குறித்து இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்தால் அதை ஏற்கக் கூடாது என்பதற்கு இரு காரணங்களைக் கூறுகின்றனர்.
அதாவது,

1. 'ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்' (முஸ்தகீமுல் ஹதீஸ்) என்று இப்னு ஹிப்பான் அவர்களால் சிலாகித்துக் கூறப்பட்ட சிலரை(இவர்கள் எடுத்துக் காட்டிய 5நபரை மட்டும்) வேறு சில அறிஞர்கள் பலவீனமானவர்கள் என்று கூறியுள்ளனர்.

2. இன்னும் சிலரை (இவர்கள் எடுத்துக்காட்டிய ஒரே ஒரு நபரை) சில அறிஞர்கள் இட்டுக்கட்டுபவர், பொய்யுரைப்பவர் என்று விமர்சனம் செய்திருப்பதுடன், இப்னு ஹிப்பான் அவர்களே பலவீனமானவர் என்றும் முரண்பட்டுக் கூறியுள்ளார்.

இவர்கள் கூறிய காரணம் ஏற்கத்தக்கது என்றால்தான் இவர்கள் வாதிப்பது சரியானதாக இருக்க முடியும். அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சிக்கும் அறிஞர்களை இவர்கள் கூறுகின்ற அளவுகோலை வைத்து ஆய்வு செய்தால் எந்த ஒரு அறிஞர்களது விமர்சனத்தையும் ஏற்க முடியாது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும்.

மேலும், நாம் சாதாரணமாகச் சிந்தித்துப் பார்த்தாலே இவர்கள் கூறும் இரு காரணங்களும் தவறானவை, இக்கலை அறிஞர்களால் ஏற்கத் தக்கவையல்ல என்பதும் தெளிவாகத் தெரியும்.

ஏனெனில், இக்கலையில் உள்ள அறிஞர்கள் சிலரால் 'நம்பகமானவர்' என்று கூறப்பட்ட அறிவிப்பாளரை வேறு சில அறிஞர்கள் குறை கூறி இருப்பார்கள். மேலும், 'நம்பகமானவர்' என்று விமர்சனம் செய்த அதே அறிஞர் பின்னர் 'பலவீனமானவர்' என்று தனக்கே முரண்பட்டும் கூறியுள்ளார். இது போன்ற செய்திகள் பல பாகங்களில் எழுதும் அளவிற்கு நிறைய உண்டு. உதாரணத்திற்காக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

அறிவிப்பாளர் ஆய்வில் மிகச் சிறந்து விளங்கிய விமர்சகர்களின் முன்னோடியான இப்னு மயீன் அவர்கள்,

  • காபூஸ் பின் அபீ ழப்யான், (தஹ்தீபுத் தஹ்தீப் -5/283)

  • முபாரக் பின் ஃபழாலா,(தஹ்தீபுத் தஹ்தீப் 6/162,163)

  • முஃதன்னா பின் ஸபாஹ், (தஹ்தீபுத் தஹ்தீப் 6/168,169)

  • ஜாபிர் பின் அம்ர் அபூ வாஜிஃ (அல் காமில் பி ளுஃபா 2/337)

போன்ற பல்வேறு அறிவிப்பாளர்களை நம்பகமானவர் என்று கூறி விட்டு, பின்னர் பலவீனமானவர் என்றும் மாற்றிக் கூறியுள்ளார். இவ்வாறு முரண்பட்டுக் கூறியுள்ளதால் 'நம்பகமானவர்' என்று இப்னு மயீன் மட்டும் கூறினால் அக்கூற்றை சான்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்குத்தான் வருவார்களா?

  • பொய்யுரைப்பவர், இட்டுக்கட்டக் கூடியவர் என்று பல அறிஞர்களால் உறுதி செய்யப்பட்ட ஹஃப்ஸ் பின் சுலைமான் குறித்து நல்லவர் என்று முதலில் சான்றளித்த இமாம் அஹ்மத் பின்னர் 'விடப்பட வேண்டியர்' என தனக்குத்தானே முரண்பட்டுக் கூறியுள்ளார். (தஹ்தீப்புத் தஹ்தீப்-2/140)

இதனால் இமாம் அஹ்மத் அவர்களது விமர்சனத்தை ஏற்கக் கூடாது என்பார்களா?
 

  • அபு பக்கர் பின் அப்துல்லாஹ் என்பவரை 'உண்மையாளர்' என்று இப்னு மயீன் கூறியுள்ள நிலையில் (அல் காமில் ஃபி ளுஃபா 2/207) மற்ற அறிஞர்கள் அவரை பலவீனமானவர் என்று முடிவெடுத்துள்ளனர்.

ஏன், கடந்த செப்டம்பர் (2005) ஏகத்துவத்தில், இஸ்ஹாக் பின் இப்றாஹீம் குறித்து எழுதும் போது "இப்னு மயீன் புகழ்ந்து கூறியுள்ளார். ஆயினும் நஸயீ அவர்கள் இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் எனக் கூறுகின்றார். இவர் பொய் சொல்வார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்று முஹம்மது பின் அவ்ன் கூறுகின்றார். இந்த அடிப்படையில் இவர் பலவீனமானவர் என முடிவு எடுக்க வேண்டும்" என எழுதப்பட்டுள்ளது.

அபூ ஹாதிம் அர்ராஜி அவர்களும் கூட இந்த இஸ்ஹாக் அவர்களை நல்லவர் எனினும் அவரின் மீது பொறாமை கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இப்னு மயீன், அபூ ஹாதிம் போன்ற அறிஞர்கள், இஸ்ஹாக் நல்லவர்தான் என்று கூறிய பின்பும் அதற்கு மாற்றமான முடிவு இஸ்ஹாக் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கலையின் முன்னோடிகளான இப்னு மயீன், அபூ ஹாதிம் போன்றோர் இனி யாரை நல்லவர் என்று கூறினாலும் அதை ஏற்கக் கூடாது என்று வாதிப்பார்களா?

இது போன்ற உதாரணங்கள் ஏராளம் உண்டு. ஒரு அறிஞர் நல்லவர் என்று கூறியுள்ள நிலையில் வேறொரு அறிஞர் காரணத்துடன் குறைகளை சுட்டிக்காட்டும் போது, அல்லது 'நம்பகமானவர்' என்று கூறிய அறிஞரே பலவீனமானவர் என்று மாற்றிக் கூறும் போதும் நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்ற இந்தக் கலையின் சரியான விதிப்படி அதையே ஏற்க வேண்டும் என்பதாலும், நம்பகமானவர்கள் என்று கூறிய அறிஞர்களின் எக்கூற்றையும் ஏற்கக் கூடாது என்று வாதிப்பது கால்வேக்காட்டுத்தமனாவர்களின் கூற்றாகும்.

இப்னு ஹிப்பான் கூறிய விதி என்ன?


"இப்னு ஹிப்பான் சிறந்த ஆய்வாளர் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் தவறான அளவு கோலைப் பயன்படுத்துகிறார். இந்த அளவுகோலை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை" (ஏகத்துவம், ஜனவரி-2006) என்று எழுதி இப்னு ஹிப்பானின் விதி குறித்து தங்களது அறியாமை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இப்னு ஹிப்பான் 'ஃதிகாத்' (நம்பகமானவர்கள்) என்றொரு நூலை எழுதியுள்ளார். ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்கள் பற்றிய செய்திகளை அதில் தொகுத்துள்ளார். ஓர் அறிவிப்பாளரை இந்நூலில் இடம் பெறச் செய்வதற்கான தகுதி என்ன? என்பதற்கான சில விதிமுறைகளையும் அவர் வகுத்துள்ளார்.

அதாவது, 'நம்பகமானவர்' என ஐயத்திற்கு இடமின்றி உறுதியாக தன்னால் அறிந்து கொள்ளப்பட்டவர்களை பதிவு செய்து அவர்களில் சிலருக்கு 'முஸ்தகீமுல் ஹதீஸ்' (ஹதீஸை சரியாக அறிவிப்பவர்), வேறு சிலருக்கு 'திகதுன்' (நம்பகமானவர்) என இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை சிலாகித்துக் கூறியிருப்பார்.

யாராலும் குறை காணப்படாதவர் என்று தான் தெளிவாக அறிந்துள்ள சில அறிவிப்பாளர்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். இத்தகையோரை தனது நூலில் இடம் பெறச் செய்திருந்தாலும் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையிலான 'முஸ்தகீமுல் ஹதீஸ்', 'ஃதிகத்' போன்ற எந்த வார்த்தையையும் அவர்கள் விஷயத்தில் பயன்படுத்தியிருக்கமாட்டார். அவர்களது நம்பகத்தன்மையை இவர் அறியவில்லை என்பதே அதற்கு காரணம்.

'ஃதிகாத்' என்ற நூலில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களில் சுமார் 180 நபர்களை மட்டும்தான் 'முஸ்தகீமுல் ஹதீஸ்' என்று சிலாகித்துக் கூறியுள்ளார். இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை மட்டும் பலவீனமானவர்கள் என்று ஜனவரி (2006) ஏகத்துவம் இதழில் வெளியிட்டனர்.

இதனால் இப்னு ஹிப்பான் கூறிய 180 அறிவிப்பாளர்களும் குறையுடையவர்கள்தான் என்ற முடிவுக்கு வர முடியாது. பலவீனப்படுத்துகின்ற காரணங்கள் மற்ற அறிஞர்களால் கூறப்படுமேயானால், அப்போது வேண்டுமானால் இப்னு ஹிப்பானின் கூற்றை ஏற்க முடியாது.

மற்ற அறிஞர்களால் குறை கூறப்படாத நிலையில், இப்னு ஹிப்பான் மட்டுமே ஒருவரது நம்பகத்தன்மையை 'முஸ்தகீமுல் ஹதீஸ்' போன்ற வார்த்தைகளால் உறுதி செய்தால் அதை தட்டிக்கழிக்காமல் ஏற்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு.


இந்த விதியைத்தான் தவறாகப் புரிந்து கொண்டு 'நம்பகமானவர் என்று ஒருவரைப் பற்றி இப்னு ஹிப்பான் கூறினால், உண்மையில் நம்பகமானவராக இருக்கலாம். மற்றவர்கள் அவரைப் பற்றி கூறியுள்ளதைத் தேடி இதை உறுதி செய்ய வேண்டும்' என்று எழுதி இப்னு ஹிப்பானின் மீது மாபெரும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்கள்.

எனவே, இப்னு ஹிப்பான் அவர்களால் 'முஸ்தகீமுல் ஹதீஸ்' என உறுதி செய்யப்பட்ட அம்ர் பின் ஹாரிஸ் அவர்களின் நம்பகத்தன்மையை மற்ற அறிஞர்கள் குறை கண்டுள்ளார்களா? என்பதே நமது கேள்வி. இதற்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் எதை எதையோ கூறி மழுப்பி வருகிறார்கள்.

இப்னு ஹஜர் பார்வையில் அம்ர் பின் ஹாரிஸ் ஏற்கப்பட்டவர்தான்:


'அம்ர் பின் ஹாரிஸ் ஏற்கப்படுபவர்' என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள் என விளக்கி இருந்தேன். இதற்கு பின் வருமாறு மறுப்பு எழுதியுள்ளனர்.


"இப்னு ஹஜர் அவர்கள் ஏராளமான அறிவிப்பாளர்கள் பற்றி 'மக்பூல்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கான அடையாளமாகத்தான் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர இவ்வாறு கூறப்பட்ட அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அர்த்தம் செய்தவற்காக பயன்படுத்தப்படவில்லை. தமது நூலில் இது போன்ற சொற்களை எந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதை இப்னு ஹஜர் அவர்கள் இதே நூலின் முன்னுரையில் விளக்கியுள்ளார்"

"மக்பூல்' (ஏற்கப்படுபவர்) என்ற சொல்லை எந்தக் கருத்தில் பயன்படுத்தினார் என்பதையும் அவரே விளக்கியுள்ளார். ஒருவர் குறைந்த எண்ணிக்கையிலான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். இவரைப் பற்றி இரண்டு விதமாக முடிவு செய்ய வேண்டும். அதாவது இவர் அறிவிக்கும் ஹதீஸைப் போன்று மற்றவர்களும் அறிவித்திருந்தால் அப்போது அவர் மக்பூல் (ஏற்கப்படுபவர்) எனக் குறிப்பிடப்படுவார். அவ்வாறு வேறு யாரும் அறிவிக்காவிட்டால் அவர் பலவீனமானவராவார்" (ஏகத்துவம், ஜனவரி -2006)


அதாவது அம்ர் பின் ஹாரிஸ் அறிவிக்கும் 'வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற நபி மொழியை வேறொருவர் அறிவித்திருந்தால் இவர் ஏற்கப்படுபவர் ஆவார் என்பது உறுதியாகி விடும் என இவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் அபூ தாவூதில் பதிவாகியுள்ள இதே ஹதீஸை அப்துல் ஹமீத் அபுத் தகி என்பவரும் அறிவிக்கிறார். இது தப்ராணி, முஃஜமுஸ் ஸஹாபா ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது. நினைவாற்றல் குறைவானவர் என்று மட்டும் குறைகூறப்பட்ட இவரது அறிவிப்பை தனி ஆதாரமாக ஏற்க முடியாது என்றாலும், பிறரின் அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் எடுத்துக் கொள்ளலாம் என இவர்கள் மேற்கோள் காட்டிப் பேசியும், எழுதியும் வரும் ஹதீஸ் கலையின் விதிகளை விவரிக்கும் தத்ரீப் என்ற நூல் கூறுகிறது.


ويدخل في المتابعة والإتشهاد رواية من لا يحتج به.(تدريب الراوى 121)


"ஆதாரமாக ஏற்கப்படாதவர்களின் அறிவிப்பு பிற அறிவிப்புகளை வலுவூட்டக்கூடியதாகவும், சான்றளிக்கக் கூடியதாகவும் அமையும்" (தத்ரீப் -121)

இதே கருத்தை இப்னு ஹஜர் அவர்களும் 'நுகத்' என்ற தனது நூலில் 171வது பக்கத்தில் தெரிவிக்கிறார்.
அதாவது நினைவாற்றல் குன்றியவர் போன்ற காரணங்களால் ஒருவர் அறிவிப்பதை ஆதாரமாக ஏற்க இயலாது என்றாலும், பிற அறிவிப்புகளை வலுவூட்டக்கூடியதாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். பொய்யுரைப்பவர், இட்டுக் கட்டுபவர் போன்ற காரணங்களால் பலவீனப்படுத்தப்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்பது இதற்கான நிபந்தனை. அது போன்ற குற்றச்சாட்டு அப்துல் ஹமீத் அபு தகி விஷயத்தில் கூறப்படவில்லை.

இவ்விதியின் அடிப்படையில் அப்துல்லாஹ் பின் ஸாலிமின் இன்னொரு மாணவரான அப்துல் ஹமீத் அபுத் தகி என்பவரும், அபூதாவூதில் இடம் பெற்ற அதே நபிமொழியை அறிவித்துள்ளதால், இப்னு ஹஜர் அவர்களது பார்வையில் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் 'ஏற்கப்படுபவர் ஆவார்' என்பது உறுதியாகி விட்டது.


எனவே,

  • அம்ர் பின் ஹாரிஸ் குறித்து 'முஸ்தகீமுல் ஹதீஸ்' (ஹதீஸ் உறுதியாக அறிவிப்பவர்) என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

  • 'மக்பூல்' (ஏற்கப்படுபவர்) என இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

  • நம்பகமானவரான அம்ர் பின் ஹாரிஸிடம் இன்னொரு நம்பகமானவரான அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய நூல் இருந்து வந்ததை அபூ தாவூத் அவர்களும் உறுதி செய்துள்ளார்கள்.

  • இமாம் தஹபியும் அவ்வாறு ஒரு நூல் இருந்ததை மிஃஜானுல் இஃதிதால் என்ற தனது நூலில் உறுதி செய்துள்ளார்.

இவர்களுக்கு மாற்றமாக எந்த அறிஞரும் அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத்தன்மையை குறை காணவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், 'அபூ தாவூத் அவர்கள் வேறு ஒரு நூலைப் பார்த்து விட்டு எழுதியிருக்கலாம்' என்று கற்பனையாக இவர்கள் வலிந்து கற்பித்த குற்றச்சாட்டு வேரறுந்த மரமாக அடியோடு வீழ்ந்து விட்டது.

 

நேர்மை அறியப்படாதவரா?

ஓர் அறிவிப்பாளர் குறித்து, 'அறியப்படாதவர்' என தஹபி கூறிவிட்டால் அதைத்தான் ஏற்க வேண்டும் என்றொரு தவறான வாதத்தையும் தங்களது அறியாமையினால் கூறியுள்ளனர்.

  • 'உண்மையானவர்', 'தெளிவான அறிஞர்' என்று இக்கலையில் சிறந்து விளங்கிய அபூ ஜுர்ஆ மற்றும் அபூ ஹாதிம் ஆகியோரால் சிலாகித்துக் கூறப்பட்ட ஷபீப் பின் அப்துல் மலிக் அத் தமீமிய்யி என்பாரை 'அறியப்படாதவர்' என தஹபி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப் 3/136)

  • 'ரைஹான் பின் யஜீத் நம்பகமானவர்' என்று இப்னு மயீன் கூறுகிறார். 'உண்மையாளர்' என்று ஷுஃபா கூறியுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப் 2/456) ஆனால், இமாம் தஹபியோ 'இவர் யார் என்று அறியப்படாதவர்' என்று கூறியுள்ளார்.

  • அல் காஷிஃப் என்ற தனது நூலில் 'நம்பகமானவர்' என்று சான்றளித்த 'ஜியாத் பின் அபீ மர்யம்' என்பவரை அல் முஜர்ரத் (பக்கம்-75)என்ற தனது வேறொரு நூலில், 'அறியப்படாவர்' என்று தனது முந்திய கூற்றுக்கு முரண்பட்டு எழுதியுள்ளார்.

  • 'ஹுஜைர் பின் அப்துல்லாஹ் என்பவர் உண்மையாளர் ஆவார்' என்று அல் காஷிபில் கூறிவிட்டு, 'அறியப்படாதவர்' என அல் முஜர்ரத் (72) என்ற தனது வேறொரு நூலில் முரண்பட்டுக் கூறியுள்ளார்.

இன்னும் சிலர் குறித்தும் இவ்வாறு இமாம் தஹபி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், அதை ஹதீஸ்கலையின் மற்ற அறிஞர்கள் ஏற்கவில்லை. ஏனெனில், ஒருவர் குறித்து இவ்வாறு விமர்சனம் செய்தால் தஹபிக்கு அறியாப்படாதவர் என்றாகுமே தவிர, உலகில் வேறு யாருக்கும் அறியப்படாதவர் என்றாகிவிடமாட்டார்.

'இப்னு மயீன் போன்ற ஹதீஸ்கலையின் முன்னோடிகளான பல அறிஞர்களால் 'நம்பகமானவர்கள்' என்று உறுதி செய்யப்பட்டவர்களையும் கூட 'அறியப்படாதவர்கள்' என இமாம் தஹபி எழுதிவிடுகிறார். ஆகவே, இமாம் தஹபியின் இக்கூற்று கண்டு யாரும் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது' என்று முக்பில் அல் வாதியி என்ற தற்கால ஹதீஸ்கலை அறிஞரும் எச்சரித்துள்ளார். (நூல்: அல் முக்தரஹ்-36)

தஹபி ஒருவரை அறியவில்லை என்று கூறிவிட்டதால் நம்பகமானவர் என்ற யார் கூறினாலும் ஏற்கக் கூடாது என்று வாதிப்பது அறிவுடமையாகாது என்பதால்தான், மற்றவர்கள் நற்சான்று அளித்திருந்தால் அப்போது அதனை ஏற்க வேண்டும் என்றே நாம் கூறிவருகிறோம். இந்த அடிப்படையில்தான் அம்ர் பின் ஹாரிஸ் குறித்து இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர் ஆகியோர் நற்சான்று அளித்துள்ளதால் அவர் நம்பகமானவர் என்று கூறிவருகிறோம்.

பலவீனமான அறிவிப்புகளைச் சான்றாக ஏற்கலாமா?


"தனிப்பட்ட நபரைப் பற்றிக் கூறும் போது தவறுக்கு அதிக வாய்ப்புள்ளது. பொது விதியைக் கூறும் போது இந்த வாய்ப்பு இல்லை. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த இலக்கணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" (ஏகத்துவம், ஜனவரி -2006)


அதாவது, இப்னு ஹஜர் அவர்கள் ஒரு பொது விதியைக் கூறினால் அது தவறாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், அதை ஏற்றாக வேண்டும் என்பதை மேற்கண்டவாறு எழுதி வலியுறுத்துகின்றனர்.

இந்த அடிப்படையில் இப்னு ஹஜர் கூறிய இன்னொரு பொது விதியை இங்கே குறிப்பிடுகிறேன். அதனை இவர்கள் அடம் பிடிக்காமல் ஏற்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் விருப்பம்.


من جملة صفات القبول التي لم يتعرض لها شيخنا أن يبفق العلماء على العمل بمدلول حديث فإنه يقبل حتي يجب العمل به. وقد صرح به جماعة. (النكت/ 171)


"அறிஞர்கள் பெருமக்கள் அனைவரும் ஒரு ஹதீஸை செயல்படுத்தி வர வேண்டும் என்பதில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டிருந்தால், அந்த ஹதீஸை ஏற்று செயல்படுத்துவது கட்டாயக் கடமையாகும். இக்கலையின் சிறந்த அறிஞர்கள் பலரும் இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்" (அந்நுகத் -171)


يحكم للحديث بالصحة إذا تلقاه الناس بالقبول وإن لم يكن له إسنداد صحيح. (التدريب 29)


"ஒரு நபி மொழியை மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டு விட்டால் அதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லையென்றாலும் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று தீர்மானிக்கப்படும்" (தத்ரீப் -29)

இவ்வாறு ஒப்புக் கொள்ளப்படுவதற்கு வேறு சில நிபந்தனைகளையும் இவர்கள் விதித்துள்ளனர்.

  • அதாவது 'பொய்யுரைப்பவர்', 'இட்டுக்கட்டுபவர்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத நினைவாற்றல் குன்றியதால் மட்டும் பலவீனமானவர் என்று குறை கூறப்பட்ட அறிவிப்பாளர் அறிவிக்கும் நபி மொழியாக இருக்க வேண்டும்.

  • மேலும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியுடன் நேரடியாக மோதக் கூடியதாக இருக்கக் கூடாது.

  • முக்கியமாக இக்கலையின் அறிஞர் பெருமக்கள் யாவரும் மறுக்காது அதன் கருத்தை செயல்படுத்தி வந்திருக்க வேண்டும்.

இந்நிபந்தனைப்படி ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதுதான் என ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலையின் பொது விதியாகும்.

(இவ்வாறு கூறுவதால் தர்ஹா வழிபாடு, கத்தம் ஃபாதிஹா போன்றவற்றையும் இந்த ரீதியில் இவர்கள் அனுமதிப்பார்களா? என நாம் கூறிய விதியைப் புரியாமல் கிறுக்குத்தனமான கேள்வி கேட்கக்கூடாது.)
மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ்கலையின் பொது விதிப்படி தப்ராணி மற்றும் முஃஜமுஸ் ஸஹாபா ஆகியவற்றில் இடம் பெற்ற 'வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற நபிமொழி அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் அபு தகி என்பவர் வழியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் 'பொய்யுரைப்பவர்', 'இட்டுக்கட்டுபவர்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர். மாறாக முதியவர், பார்வையிழந்தவர், நினைவாற்றல் குன்றியவர் என்றே அபூ ஹாதிம் அவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். அதாவது முதுமையினால் ஏற்பட்ட மறதி குறித்தே விமர்சனம் அமைந்துள்ளது.

இந்த அடிப்படையில்,

  • இவர் அறிவிக்கும் இந்த நபிமொழி குர்ஆனுக்கோ, நபிமொழிக்கோ எதிரானதல்ல.

  • இந்த ஹதீஸின் கருத்து நபித்தோழர்கள் காலம் முதல் இன்று வரை எல்லா அறிஞர்களாலும் ஏற்று செயல்படுத்தப்பட்டே வருகிறது.

எனவே, அப்துல் ஹமீத் அவர்கள் மூலம் தப்ராணி மற்றும் முஃஜமுஸ் ஸஹாபா ஆகிய நூல்களில் பதிவான நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமாகி விட்டது.

ஆக வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு தப்ராணி, முஃஜமுஸ் ஸஹாபா மற்றும் அபூ தாவூத் ஆகிய நூல்களில் பல அறிவிப்புத் தொடர்களில் பதிவான இக்கலையின் எந்த அறிஞராலும் மறுக்கப்படாத ஸஹீஹான நபிமொழி உள்ளது என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகிவிட்டது.

தொடர்பறுந்ததை நிவர்த்திக்கும் வழி முறை என்ன?


வருடா வருடம் ஜகாத் வழங்கி வர வேண்டும் என்ற அபூ தாவூத்தில் இடம் பெற்ற நபிமொழி தொடர்பறுந்தது என்பதை தெரியப்படுத்தி அது எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். இதற்கு மறுப்பாக கீழ்கண்டவாறு எழுதியுள்ளனர்.

 

"முதல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இவர்கள் எழுதிய விஷயம் நாம் கூறாத ஒன்றாகும். ஆனாலும், இது நம் கவனத்துக்கு வராத ஒன்றாகும்"

 

"தற்போது நம் கைவசம் அபூ தாவூதின் எத்தனை பிரதிகள் உள்ளனவோ அத்தனை பிரதிகளிலும் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பதை அவ்னுல் மஃபூதின் ஆசிரியரும் ஒப்புக் கொண்டுள்ளார்" (ஏகத்துவம், ஜனவரி-2006)


'ஹதீஸ்கலையின் அரிச்சுவடி தெரியாதவன்' என்று இவர்களால் விமர்சிக்கப்பட்ட நான், தொடர்பறுந்ததை என் ஆய்வுக் கட்டுரையில் எழுதி வெளியிடுவது வரை, அறிவிப்பாளர் விடுபட்டதை இவர்கள் அனைவரும் பல நாட்களாக ஒன்று கூடி ஆய்வு செய்த போதும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அரிச்சுவடி தெரியாதவன் நானா? இவர்களா?

அறிவிப்பாளர் விடுபட்டதை ஒப்புக் கொண்ட அதே அவ்னுல் மஃபூத் ஆசிரியர்தான் இது சரியாக இருக்க முடியாது. பிரதி எடுப்போர் சிலரின் கவனக்குறைவால் ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். பிரசுரம் செய்வோருக்கு எந்தப் பிரதி கையில் கிடைத்ததோ அதில் தாங்களகவே எந்த வார்த்தையும் சேர்க்காமல் பிரசுரிப்பதுதான் அமானிதம் என்ற நியதியின் படி அவ்வாறே பிரசுரம் செய்து விட்டனர்.

ஆனால், இப்னு ஹஜர் கூறியதுதான் சரியாக இருக்க முடியும் என்று அவ்னுல் மஃபூதின் ஆசிரியர் உறுதிபட கூறிய மற்றொரு செய்தியை இருட்டடிப்புச் செய்து விட்டனர்.

இவ்வாறு அவ்னுல் மஃபூதின் ஆசிரியர் கூற்றை மறைத்து விட்டு, இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்து வந்த அபூதாவூத் நூலின் பிரதி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது என்ற வினோதமான கேள்வியை எழுப்புகின்றனர்?

இப்னு ஹஜர் அவர்கள் இஸாபா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளதை மேற்கோள் காட்டிய பின்னரும் இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்புவது கேலிக்கூத்தானது.

இப்னு ஹஜர் தன்னுடைய இஸாபா என்ற நூலில், தன்னிடம் இருந்து வந்த அபூ தாவூதின் பிரதியில் உள்ளது என இட்டுக்கட்டி எழுதிவிட்டார் என்று சொல்ல வருகிறார்களா? இப்னு ஹஜர் அவர்களையும் பொய்யராகச் சித்தரிக்கும் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

என்னமோ என்னிடம் பெரிய அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டு, இக்கலையின் அறிஞர் பெருமக்களை பொய்யராக சித்தரிக்கும் போக்கு இவர்களுக்குப் புரியவில்லையா?

அபூ தாவூதின் பிரதிகள் யார் யாரிடம் இருந்து வந்ததோ அவற்றையெல்லாம் திரட்டி அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருவது என்றால் அந்த ஒரு நூலுக்கு மட்டுமே பல அடுக்குகள் கொண்ட கட்டிடம் தேவைப்படும்.

மேலும், அறிவிப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து இப்னு ஹஜர் எழுதிய நூல்களில், பல அறிஞர்களின் கூற்றுகளை தெரியப்படுத்தியுள்ளார். இந்த அறிஞர்களின் கூற்றுகளை எந்த நூல்களிருந்து எடுத்தார், இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்து வந்த அந்த நூல்கள் எந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றெல்லாம் கேள்வி எழுப்பினால், இப்னு ஹஜர் எழுதிய எந்த ஒன்றையும் சான்றாக ஏற்க முடியாது.

 

விடுபட்டவர் யார்?


எனவே, ஜுபைரின் மூலம் அறிவிக்கப்படும் நபிமொழிகளை அவரது மகன் அப்துர் ரஹ்மானிடம்தான் யஹ்யா என்பவர் கேட்டுள்ளார். யஹ்யா என்பவர் தனக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிக்கும் பழக்கமுடையவர் அல்லர் என்பதாலும், அவர் நம்பகமானவர் என்ற அடிப்படையிலும் வேறு நூல்களில் அப்துர் ரஹ்மான் இடம் பெற்றிருப்பதாலும் இடையில் விடுபட்டவர் அப்துர் ரஹ்மான்தான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளலாம்.

நபித்தோழருக்கான இலக்கணம் புரியாதவர்கள் யார்?


blockquote>"13 நூல்களின் பட்டியலை வெளியிட்டு அந்த நூல்களில் அப்துல்லாஹ் பின் முஆவியா பற்றி நபித்தோழர் என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இப்படிக் கூறியவர்கள், மேற்கண்ட நூல்களில் எந்தப் பாகத்தில் எந்தப் பக்கத்தில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது என்று கூறாமல் மொட்டையாக எழுதியுள்ளனர்" (ஏகத்துவம், ஜனவரி -2006)


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக கடந்த காலங்களில் எதை, எதையோ உளறிக் கொண்டிருந்தவர்கள், ஹதீஸ்கலை அறிஞர்களும் அனைவரும் ஏகோபித்துக் கூறிய ஒரு நபித்தோழரை அவர் நபித்தோழர் அல்லர் என்று மறுத்து கூறுமளவிற்கு இன்று துணிந்துவிட்டார்கள்.

இவர்களுக்கு மீண்டும் என் அறைகூவல்


நபித்தோழர்தான் என உறுதி செய்யப்பட்ட நூல்களின் பாகம், பக்கம் ஆகியவற்றை குறிப்பிடாததால்தான் ஏற்க முடியவில்லை என தெரிவித்திருந்தார்கள். அவ்வாறு தந்து விட்டால் உண்மையை ஒப்புக் கொள்வார்களா?

மறுத்தால், 'அப்துல்லாஹ் பின் முஆவியா நபித்தோழர் அல்லர்' என்று எழுதிய நூல்களின் பட்டியலை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாரா?

இல்லையெனில், நபித்தோழருக்கான இலக்கணம் கூறிய இப்னு ஹஜர் உட்பட இக்கலையின் முன்னோடிகளான அனைத்து அறிஞர் பெருமக்களும் நபித்தோழருக்கான இலக்கணத்தின்படியே ஒருவரை நபித்தோழர் என முடிவு செய்ய வேண்டும் என்ற அரிச்சுவடி கூடத் தெரியாமல், அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) நபித்தோழர் என்று கூறி தவறிழைத்து விட்டனர் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கத் தயாரா? என்று அவர்களை நோக்கி அறைகூவல் விடுக்கின்றேன்.

நபித் தோழர் என்று எழுதப்பட்ட நூல்களின் பெயர், பாகம் பக்கங்களுடன் இதோ!


1. தக்ரீப் --------------------------------------- 226
2. தஹ்தீபுத் தஹ்தீப் ------------------------------2/670
3. அல் இஸாபா ---------------------------------2/371
(இம்மூன்று நூல்களும் நபித்தோழருக்கான இலக்கணம் கூறிய இப்னு ஹஜர் அவர்களுக்குரியதாகும். தாம் எழுதிய விதியை அறிந்து கொள்ளாமலேயே மூன்று இடத்திலும் தவறிழைத்துவிட்டார் என தலைக்கனத்துடன் குற்றம் சுமத்துகிறார்களா?)
4.  தாரிகுல் கபீர் --------------------------------------4/345 இந்நூல் இமாம் புகாரிக்குரியது.
5. அல் இஸ்திஆப் ------------------------------------3/117
6. அல் ஜரஹ் வத்தஃதீல் -------------------------------5/185
7. தஹ்தீபுல் கமால் ------------------------------------5/645
8. ஃதிகாத் -------------------------------------------1/365
9. தபகாத்துல் குப்ரா ----------------------------------7/421
10. உசுல் ஃகாபா --------------------------------------3/392
11. அவ்னுல் மஃபூத் -----------------------------------2/324
12. அல் காஷிஃப் ------------------------------------1/599
13. முஃஜமுஸ் ஸஹாபா -------------------------------2/37
14. மஃரிஃபத்துஸ் ஸஹாபா ----------------------------4/178
15. நைலுல் அவ்தார் ---------------------------------4/152
16. தஜ்ரீத் அஸ்மாவுஸ் ஸஹாபா -----------------------1/335

ஒவ்வொரு நூலும் பல முறை பிரசுரம் செய்யப்படுவதால் எண், பாகம், பக்கம் ஆகியவை மாறுபட்டிருக்கும். அப்துல்லாஹ் என்ற வரிசையில் பதிவு செய்யப்பட்ட தொடரில் அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை தெரிந்திருக்கும். அதைக் கூட பார்த்து அறிந்து கொள்ள முடியாத இவர்கள்தான் ஜகாத் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்கிறார்களாம்? இவர்களது ஆய்வின் லட்சணத்தை வாசகர்கள் புரிந்து கொண்டால் சரிதான்.

ஓர் அறிவிப்பாளர் குறித்து 'நம்பகமானவர்', 'பலவீனமானவர்', 'பொய்யுரைப்பவர்', 'இட்டுக் கட்டுபவர்', 'நபித்தோழர்', 'நபித்தோழர் அல்லர்' போன்ற எந்த ஒரு செய்தியை கூறுவதாக இருந்தாலும் இன்றைக்கு நாமாக ஒரு முடிவு செய்து கூறமுடியாது. ஒருவர் விஷயத்தில் இருவேறு கருத்துக் கூறப்பட்டிருக்குமானால் அதில் எது சரியாக இருக்க முடியும் என்பதையும் இக்கலையின் முன்னோடிகளான தீர ஆய்வு செய்த மேதைகளின் கூற்றை மேற்கோள் காட்டியே பேச வேண்டும்.

இந்த அடிப்படையில்,


வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை என்பதை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டேன். அல்ஹம்து லில்லாஹ். இவ்வாறுதான் இந்த ஹதீஸை நபித் தோழர்கள் முதல் இன்று வரை உள்ள அறிஞர்கள் அனைவரும் புரிந்து செயல்படுத்தி வந்துள்ளனர் என்பதை கீழ் கண்ட சான்றுகளின் மூலம் உறுதியாகப் புரிந்து கொள்ளலாம்.
 

  • அன்னை ஆயிஷா (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் வருடா வருடம் ஜகாத் வழங்கியதாக அறிவிக்கப்பட்ட செய்தி நாம் கூறியதை வலுப்படுத்துகிறது.

  • 'கலீஃபாக்களின் காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜகாத் வசூலிக்கப்பட்டு வந்தது' என்று இப்னு ஷிஹாப் அவர்கள் அறிவித்திருப்பது நபித்தோழர்கள் காலத்திலும், இப்னு ஷிஹாப் வாழ்ந்த தாபியீன்கள் காலத்திலும் வருடா வருடம்தான் ஜகாத் வசூலிக்கப்பட்டு வந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

  • 'நபி (ஸல்) அவர்கள் வருடா வருடம்தான் ஜகாத்தை வசூலித்து வந்தார்கள் என்றே எல்லோரும் கூறிவருகின்றனர்' என்று இமாம் ஷாஃபி அவர்கள் அர்ரிசாலா என்ற தனது நூலில் பதிவு செய்திருப்பதன் மூலம், அவர்கள் காலத்திலும் இதே கருத்தே நடைமுறைச் சட்டமாக இருந்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

  • 'ஜகாத்தை வசூலிப்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வருடா வருடம்தான் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்' என்பதை ஹிஜ்ரி 456வது ஆண்டு மரணமடைந்த இப்னு ஹஸ்ம் அவர்கள் உறுதி செய்து, தனது நூலில் பதிவு செய்துள்ளதால், அவரது காலத்திலும் அதே கருத்தே இருந்துள்ளது என்பது மட்டுமல்ல, 'குர்ஆன், ஹதீஸில் உள்ளதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த ளாஹிரிய்யாப் பிரிவு அறிஞர்கள்' என்று அழுத்தமாக இவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட (ஏகத்துவம், பக்கம்-46, ஆகஸ்ட் 2005) அனைவரின் கருத்தும் இதுவாகவே இருந்துள்ளது என்பதும் தெளிவாகிறது.

அனைவருக்கும் அன்பான அழைப்பு!

"இது பற்றி திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுக்கின்றது. உங்களிடம் நியாயம் இருந்தால் இதற்கு நீங்கள் அவசியம் முன் வரவேண்டும் என்று அழைக்கின்றோம்"


மாற்றுக் கருத்துடையோருக்கு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

வாய்ப்புக் கிடைக்கும் போது இன்ஷா அல்லாஹ் நேரில் சந்தித்துக் கொள்வோம். அது வரை நேரத்தை வீணடிக்காமல் பேனா முனையில் சந்திப்போம்.

ஏனெனில், போர் வீரரின் வாள் வீச்சை விட எழுத்தாளனின் பேனா வீச்சு பன் மடங்கு வலிமையும், வீரியமும் உள்ளது என்பதை எழுத்துலகம் பல முறை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
மேலும், விவாதத்தின் மூலம் எதை சாதிக்க முடியுமோ அதைத்தான் இப்போது சாதித்து வருகிறேன்.

1. இறைத்தூதர் மீது இட்டுக் கட்டியதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளச் செய்தேன்.

2. ஒருவன் தொடர்ந்து ஜகாத் வழங்கிவந்தால் விரைவிலேயே பிச்சைக்காரனாக மாறிவிடுவான் என பல மேடைகளில் இவர்கள் தொடர்ந்து கூறி வந்ததை, இனிமேல் கனவில் கூட சிந்தித்துப் பார்க்க மாட்டோம் என உறுதி மொழி எடுக்க வைத்தேன்.

3. ஒரு பொருளுக்கு ஒருதடவைதான் ஜகாத் என்று சட்டத்தை எளிமையாக்கினால்தான் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் வழங்குவார்கள் என்று புதிய சட்டம் கூறியோரை, இனி இதனை உதாரணத்திற்குக் கூட கூறமாட்டோம் என்று சபதம் ஏற்கச் செய்தேன்.

4. ஜகாத் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதில் இவர்கள் கூறிய தப்புக் கணக்கை சரி பார்க்கச் செய்து, ஓசையின்றி அதை ஒப்புக்கொள்ளச் செய்தேன்.

5. தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் ஆபரணங்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா இனங்களிலும் ஒரு பொருளுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்று அவர்களை அறியாமலேயே ஒப்புக்கொள்ளச் செய்தேன்.

இப்படி எண்ணற்ற பல உண்மைகளை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு இவர்களோடு விவாதம் செய்யவில்லை. மாறாக இவை அனைத்தையும் சாதித்தது பேனா முனையின் மூலம்தான் என்பதை அடக்கத்துடன் இவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அல்ஹம்து லில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

எனவே, 17.08.05, 18.08.05 மற்றும் 29.08.05 ஆகிய தேதிகளில் நடந்த ஆய்வரங்குகளில் பங்கு பெற்ற பி.ஜைனுல் ஆபிதீன், எஸ.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, எம். ஷம்சுல்லுஹா, எம்.ஐ.சுலைமான், எம்.எஸ். சுலைமான், எஸ்.கலீல் ரசூல், பி. அன்வர் பாஷா, பி.எம். முஹம்மத் அலி ரஹ்மானி, எஸ். ஏ. பஷீர் அஹ்மத் உமரி, யூசுப் பைஜி, எஸ். அப்பாஸ் அலி, கே.அப்துந்நாசிர், ஆர். ரஹ்மத்துல்லாஹ், பக்கீர் முஹம்மத் அல்தாஃபி, ஏ. சையது இப்ராஹீம் ஆகியோர் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.


யாரின் பக்கம் உண்மை உள்ளது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வரை, இன்ஷா அல்லாஹ் பேனா முனையில் தொடர்ந்து சந்திப்போம். அதுவே உண்மையை வெளிப்படுத்தும் சிறந்த ஆயுதம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீங்கள் அனைவரும் அதற்கு முன் வர வேண்டும்.

அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளைகளை ஏற்று நடப்பவர்களாக நம் அனைவரையும் ஆக்க வேண்டும். தீமைகள் செய்யத் தூண்டும் ஷைத்தான் மற்றும் தீய நஃப்ஸிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வோம்.


அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்.

 

- மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்ஃபோன்:
050-9746919   மின்னஞ்சல்: fazilbaqavi@gmail.com

வலைப்பதிவு முகவரி: http://fazilbaqavi.blogspot.com 

 


பெட்டி செய்திகள்


1) முஅல்லிமுல் யமானி முகவரியற்றவரா?


இப்னு ஹிப்பான் பயன்படுத்துகின்ற வார்த்தையின் அடிப்படையில்தான் ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவரா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும் என்று இப்னு ஹிப்பான் அவர்களின் "
ஃதிகாத்" (நம்பகமானவர்கள்) என்ற நூலை ஆய்வு செய்த 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த இக்கலையில் சிறந்து விளங்கிய அறிஞர் முஅல்லிமுல் யமானி என்பவரும் 'தன்கீல்' என்ற தனது நூலில் நமது கருத்தையே உறுதி செய்துள்ளார்.

இந்த முஅல்லிமுல் யமானி இது போன்ற பல ஹதீஸ் நூல்களை ஆய்வு செய்து பல்வேறு அடிக்குறிப்புகளையும் பதிவு செய்துள்ளார். யமன் நாட்டில் பிறந்த இவர், இந்தியாவிலும் தனது ஆய்வுப் பயணத்தை மேற் கொண்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அல்பானி அவர்கள் இவர் குறித்து சிலாகித்துக் கூறி இருப்பதுடன், இவர் எழுதிய 'தன்கீல்' என்ற நூல் ஹதீஸ் துறையில் ஈடுபடக் கூடிய அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்றுணர்ந்ததால் அதனை இரு முறை அச்சிடும் பணியை தானே முன்னின்று செய்துள்ளார்.

ஹதீஸ்கலையில் இவர் செய்துள்ள பாராட்டத்தக்க முயற்சியை ஆய்வு செய்து அதில் முதுகலைப் பட்டமும் சிலர் பெற்றுள்ளனர். தற்காலத்தில் இக்கலையில் ஈடுபட்டுள்ள யாரும் முஅல்லிமுல் யமானியை அறியாமல் இருக்கவே முடியாது என்றளவிற்கு மிகப் பிரபலமான இவரைப் போய் 'முகவரியற்றவர்' என்று எழுதியுள்ளார்கள்.

 

(உங்களுக்குத் தெரியாதென்றால் அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்)


 

2) 'சொற்கள் மாறி வருவது' என்றால் என்ன?


பேச்சிலும் தவறு


'துஹ்ரத்தன் லில் அம்வால்' என்பதை நபிமொழிதான் என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறைத்து விட்டு பி.ஜே., தவறுதலாகப் பேசி விட்டார் என்று பூசி மெழுக முயற்சிக்கின்றனர்.

'குப்புற விழந்து விட்டோம் ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பாருங்கள்' என்கிறார்கள். அதாவது பேசும் போது வார்த்தைகள் மாறி வருவது இயற்கையாம்.

ஒரு விஷயத்தை ஒரு முறை, இரு முறை மாற்றிக் கூறிவிட்டால் சொற்கள் மாறி வந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம். சரி மூன்றாவது ஓர் இடத்திலும் அவ்வாறு மாற்றிக் கூறிவிட்டால் மாறி வந்துவிட்டது என்றே புரிந்து கொள்ளலாம்.

 

நமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களின் படி 5 முறை இவ்வாறு கூறுகிறார்.

 

ஆதாரம் 1 - Play video Clip 1

ஆதாரம் 2 - Play video Clip 2

ஆதாரம் 3 - Play video Clip 3

ஆதாரம் 4 - Play video Clip 4

ஆதாரம் 5 - Play video Clip 5 (கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே)

 

அதிலும் ஒரு முறை தன் கண்ணெதிரே தெரியும் கம்யூட்டரில் பார்த்துக் கொண்டே உண்மைக்குப் புறமாகக் கூறிவிட்டு, (பிறரால் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்) 'தவறாக மாறி வந்து விட்டது' என்று வாதித்தால் அது திட்டமிட்டு செய்து வந்த மோசடி என்று எடுத்துக் கொள்வதா? தவறாகச் சொல்லப்பட்டு விட்டதாக எடுத்துக் கொள்வதா?

இது இப்னு உமரின் கூற்றுத்தான் என்பதை நன்கு அறிந்து கொண்டுதான் இறைத்தூதர் கூறியதாகவே பல இடங்களிலும் பி.ஜே. பேசி வந்துள்ளார் என்பதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே இதற்குத் தெளிவான சான்றாகும்.

கும்பகோணம் அருகில் மேலக்காவேரியிலுள்ள அந்நூர் பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜகாத் குறித்து எழுப்பப்பட்ட வினா ஒன்றுக்கு பதிலளித்த பி.ஜே., இப்னு உமரின் கூற்றான 'துஹ்ரத்தன் லில் அம்வால்' என்ற அரபி வாசகத்தை கம்யூட்டரில் பார்த்துக் கொண்டே
[Play video] இது இறைத்தூதர் கூறியதாக புகாரியில் பதிவாகியுள்ளது எனத் தெரிந்தே துணிச்சலாக உண்மையை மறைத்துள்ளார். 


 

3) மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடமோ?


எழுத்திலும் தவறா?


இவர்களோ பல மாதங்கள் யோசித்து எழுதும் போது இப்னு உமரின் கூற்றை நபிமொழி என்று எழுதுகின்றனர்" (ஏகத்துவம், ஜனவரி -2006)


பேசும் போது நாக்குப் புரண்டு (
Tongue Slip) தவறுதலாகப் பேசி விட்டதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், எங்களுடன் கருத்து மற்றும் சரியான சான்றுகளை முன் வைத்து மோத முடியாமல் அஃதரை (இப்னு உமரின் கூற்றை) ஹதீஸ் (நபிமொழி) என்று எழுதியுள்ளார்களே? என்று சுட்டிக்காட்டியதற்காக நம்மிடம் என்னமோ இமாலயத் தவறைக் கண்டு பிடித்து விட்டது போல் மார்தட்டிக் கொள்கிறார்கள். (நமது எழுத்தில் எப்படியாவது தவறு கண்டு பிடித்து விட வேண்டும் என்பதற்காக ஒரு குழுவே பூதக் கண்ணாடியோடு அலைந்துள்ளது)


"துஹ்ரத்தன் லில்அம்வால்' என்ற சொல் அடங்கிய ஹதீஸ்தான் இப்னு உமரின் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர அதே கருத்தைத் தரும் வேறு சொற்களில் நபிகள் நாயகம் கூறிய ஹதீஸ் உள்ளது" (ஏகத்துவம், ஜனவரி -2006)


என்ற இந்த சொற்றொடரில் இவர்கள் ஹதீஸ் என்று பல முறை அரபியில் எழுதியதைத்தான் நாம் நபிமொழி என்று தமிழாக்கம் செய்திருந்தோம் அவ்வளவுதான். ஒரு வேளை நாமும் இப்னு உமரின் கூற்றை ஹதீஸ் என்று அரபியில் எழுதியிருந்தால் தவறு என்று கூற மாட்டார்களோ.

இதில் பெரிய நகைச் சுவை என்னவென்றால்,


எங்களை குறை சொல்வதற்காக பயன்படுத்திய வாசகங்களில் கூட, இப்னு உமரின் கூற்றை மீண்டும் ஹதீஸ் என்றே அரபியில் எழுதியுள்ளார்கள். பேசும் போது நாக்குப் புரண்டு விட்டது சரி. எழுதும் போது கை (
Hand Slip) புரண்டு விட்டதா என்ன? யார் காதில் பூச்சுற்ற நினைக்கிறார்கள்? மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடமா?


 

4) நபிமொழிகளில் தொடரும் மோசடி.


'ஜகாத் வழங்குவது மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது' என்ற தெளிவான கருத்தைப் பிரதிபலிக்கக் கூடிய அதே வேளையில் வேறு மாற்றுப் பொருள் கொள்ள அறவே சாத்தியமில்லாத 'துஹ்ரத்தன் துதஹ்ஹிரு' என்ற வார்த்தை இடம் பெற்ற நபிமொழி ஹாகிம், அஹ்மத், முஸ்னத் அல் ஹாரிஸ், தர்கீப் வ தர்ஹீப், தஃப்ஸீர் இப்னு கஃதீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

'ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது' என்ற தங்களின் தவறான கருத்தை நிலைநாட்டுவதற்காக, இந்த நபிமொழியில் இடம்பெற்ற 'உன்னை' என்ற முன்னிலை மனிதனை குறிக்க இறைத்தூதர் கூறிய 'க' (
كَ) என்ற எழுத்தை மறைத்து விட்டு, 'ஜகாத் தூய்மைப்படுத்துகிறது' என மொழி பெயர்த்து, பொருளைத் தூய்மைப்படுத்துகின்றது என்ற தங்களது தவறான கருத்தைத் திணித்து மேற்கண்ட நபிமொழியை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.
[Play Audio]

 

இத்தவறு இவர்களுக்கு எதிரான கருத்து உள்ளவர்களால் சுட்டிக்காட்டப்படுவதற்கு முன், இத்தனிமனிதரைச் சுற்றியுள்ள எந்த மவ்லவிகளின் கண்ணிலும் படாதது இன்னும் ஆச்சரியத்தை வரவழைக்கிறது. அப்படியென்றால், பி.ஜே.வின் சொல்லுக்கு மறுபேச்சின்றி அப்படியே தலையாட்டுவதுதான் T.N.T.J. மவ்லவிகளுக்கு கொடுக்கப்பட்ட மேலிடத்து உத்தரவா?

 

இருட்டடிப்பு செய்துவிட்ட குட்டு வெளிப்பட்டுவிட்டதும், 'க' என்ற எழுத்து தவறுதலாக மறைந்துவிட்டது என்று பல்டி அடிக்கிறார்கள். [Play Video]

 

'துஹ்ரத்தன் துதஹ்ஹிருக்' என்பதைக் கூற வந்தவர்களுக்கு 'துதஹ்ஹிரு' வரை கூற முடிந்ததாம். ஆனால், அதன் இறுதியில் இடம் பெற்ற 'க' (كَ), பார்க்க முடியாத அளவு கண்ணிலிருந்து மறைந்து விட்டதாம். எனவே, தவறுதலாக அந்த எழுத்தை விட்டுவிட்டாராம்.

 

அதாவது கேப்பையிலிருந்து நெய் வழிகிறது என்கிறார். இதனை கேட்பவர்கள் அனைவரும் நம்ப வேண்டுமாம். இதை விடக் கேலிக்கூத்தானது உலகில் வேறொன்றும் இருக்க முடியாது.

 

அப்படி எதிர்பாராமல், தவறு நடந்துவிட்டது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஜகாத் மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என்ற குர்ஆனின் கருத்தையே (பார்க்க: அல்குர்ஆன் 9:103) இந்த நபிமொழி பிரதிபலிக்கிறது என்ற உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாமல், ஓரங்கட்டியது ஏன்?

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால்:

 

இவர்கள் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் இவர்களுக்கு எதிரானது என்று உறுதியாகிவிடும்போது, அதை ஓரங்கட்டிவிடுவது இவர்களின் வாடிக்கை.


 

5) ஏன் இந்த மோசடி?


இறைத்தூதர் மீது பொய்யுரைப்பவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் முன் பதிவு செய்து கொள்ளட்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் இவர்களுக்கு, இவ்வாறு மோசடித்தனத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஏன்?

ஜகாத் பொருளைத் தூய்மைப்படுத்துகிறது என்ற இவர்களின் கருத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்ட இப்னு உமர் கூறியதைத் தவிர வேறு நபிமொழி எதையும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், இப்னு உமர் கூறியுள்ளார் என்று விஷயத்தை எடுத்து வைத்தால், என்னய்யா? நபித்தோழர் கூறியதை திரும்பிக்கூட பார்க்கக் கூடாது என்று கூறி விட்டு, நீர் மட்டும் இப்போது அதை ஆதாரமாகக் கூறலாமா? என மக்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்பார்களே என்று யோசித்துப் பார்த்தவர்கள், நபித்தோழர் கூறியதாகச் சொன்னால்தானே பிரச்சனை.

ஹதீஸ் என்று நாம் எதைக் கூறினாலும் அதை பின்பற்ற கண்மூடித்தனமான ஒரு கூட்டம் எப்போதும் தயாராகத்தானே உள்ளது என்று எண்ணி இந்த மோசடியில் இறங்கி விட்டனர்.

 

ஆதாரம் 1 - Play video Clip 1

ஆதாரம் 2 - Play video Clip 2

ஆதாரம் 3 - Play video Clip 3

ஆதாரம் 4 - Play video Clip 4

ஆதாரம் 5 - Play video Clip 5 (கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே)

 


 

6) பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?


இமாம் புகாரி அவர்கள் முஅல்லக்காக பதிவு செய்துள்ள இச்செய்திகளின் தரத்தைப் பற்றி, இக்கலையின் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கரைத்துக் குடித்து விட்டதாகப்(?) பிதற்றிக் கொள்ளும் இந்த அதிமேதாவிகள்(!) அறிந்திருப்பார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இதற்கான விளக்கத்தைத் தவிர்த்திருந்தேன். ஹதீஸ் கலையில் இந்தளவு ஞானசூனியமாக இருந்து கொண்டு, இருட்டடிப்புச் செய்வார்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தால் இந்த விளக்கத்தை அப்போதே எழுதியிருப்பேன்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், 'முஜாஹிதிடம் ஜஃபர் கேட்டேன்' என்ற சம்பந்தப்பட்டவரின் வாக்கு மூலம் பதிவாகியுள்ள அறிவிப்பாளர் தொடரை மொழியாக்கம் செய்து இவர்கள் வெளியிட்டிருந்தால், 'கேட்கவில்லை' என்று கூறிய ஷுஃபாவின் பெயராலேயே இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று சிந்திக்க முனைந்து இறுதியில் யார் இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்ற உண்மையை படிப்போர் அனைவரும் புரிந்து கொள்வார்கள். அறிவிப்பாளர் வரிசையை அவ்வாறு மொழிபெயர்க்கவில்லையே ஏன்?

அவ்வாறு செய்யாமல், 'கேட்டேன்' என சம்பந்தப்பட்டவர் கூறியதை இமாம் புகாரி அவர்களே நேரடியாகக் கேட்டு பதிவு செய்துள்ளது போல் எழுதி உண்மையை மறைத்து விட்டு, நாம் இருட்டடிப்புச் செய்துவிட்டதாக நம் மீது வீண் பழி சுமத்தி அவர்கள் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். 'பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்' என்பது இது தானோ?


 

7) சிறிய மோசடிதானாம்


'அம்ர் பின் ஹாரிஸின் நேர்மை அறியப்படவில்லை' என்றுதான் தஹபி கூறியுள்ளார். ஆனால், 'நேர்மை நிரூபணமாகவில்லை' என்று மொழி பெயர்த்திருந்தனர். எனவே, மொழிபெயர்த்ததில் மோசடி நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தேன். இதற்கு அவர்களின் மறுப்பைப் பாருங்களேன்.

"நேர்மை அறியப்படவில்லை என்பதற்கும் நேர்மை நிரூபணமாகவில்லை என்பதற்கும் இவர்கள் கூறுவது போல் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது" (ஏகத்துவம், ஜனவரி 2006)


மிகப் பெரிய வேறுபாடு கிடையாதாம் சிறிய வேறுபாடுதானம். அதாவது, பெரிய மோசடியை ஒன்றும் நாங்கள் செய்துவிடவில்லை, இது ஒரு சிறிய மோசடிதான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இறைத்தூதர் மீது இட்டுக்கட்டியது நிரூபணமாகி விட்டால் அது பேசும் போது வார்த்தை மாறி வந்து விட்டது எனக் கருதிக் கொள்ள வேண்டுமாம். அது போன்றே மோசடி செய்தது நிரூபணம் செய்யப்பட்டு விட்டால் அது சிறிய மோசடிதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

மற்றவர்கள் இதே தவறைத் செய்தால் அதை மிகப் பெரிய அளவில் சித்தரித்து எழுதுவார்களாம். இது எந்த ஊர் நியாயம் என்று நமக்குத் தெரியவில்லை.


எது எப்படியோ தஹபி விஷயத்தில் தப்புச் செய்து விட்டோம் என்று ஒப்புக் கொண்ட வரை சரிதான்.


 

8) இவர்கள் கூறும் ஜகாத் சட்டம் தெளிவானதாம்!


1. "ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்று நாம் கூறுவதால் ஜகாத் சட்டத்தை இஸ்லாம் தெளிவு படுத்தவில்லை என்று எப்படி ஆகும்? ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் என்பதுதான் உண்மையில் தெளிவாகவுள்ளது(?). இஸ்லாம் மிகத் தெளிவாக ஜகாத் சட்டத்தைத் கூறியுள்ளது என்பதால்தான் மேற்கண்ட தெளிவான(?) சட்டத்தை நாம் கூறுகின்றோம்" (ஏகத்துவம், ஜனவரி-2006)


1425 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில், நபித்தோழர்கள் முதல் இன்றுள்ள அறிஞர்கள் வரை யாருக்கும் இஸ்லாத்தின் இந்த தெளிவான சட்டம் தெளிவாகவில்லையாம். ஆனால் இந்த அறிவு ஜீவிகளுக்கு(?) மட்டும் தெளிவாகத் தெரிந்துள்ளதாம்.

'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற புதிய சட்டத்தை சுமார் கடந்த ஐந்தாண்டுகளாகத் கூறிவருகிறார்கள். அப்படியென்றால், சுமார் 20ஆண்டுகளுக்கு மேலாக குர்ஆன், ஹதீஸைப் பற்றி ஆய்வு செய்து அதனைப் பிரச்சாரம் செய்து வருபவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த ஒரு உண்மையை மறைத்து வந்துள்ளார்களா?

நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் இச்சட்டத்தை அறிந்து கொண்டோம் என்று இவர்கள் சொன்னால், இச்சட்டம் தெளிவானது எனக் கூறுவது பெரிய பித்தலாட்டமல்லவா?

 
இவர்களது மனோ இச்சைப்படி ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத்(?) என்று இஸ்லாத்தில் தெளிவாக உள்ள ஜகாத் சட்டத்தை பல வருடங்களாக ஆய்வு செய்து வந்தது ஏன்?

இவ்வாறு இஸ்லாத்தில் தெளிவாக உள்ள சட்டங்களை ஆய்வு செய்துதான் அறிந்து கொண்டேன் என்று ஒருவர் கூறினால், அவரை மக்கள் வேறுமாதிரியான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்கள். அதற்காக ஆத்திரமடைவது அர்த்தமாற்றதாகும்.



9. அன்பான விருந்தழைப்பு

 
'ஆல்' என்ற வார்த்தை ஒருவரது குடும்பத்தினருக்கு கூறப்படுவது போலவே அவரையும் அவரைச் சார்ந்தவர்களை குறிக்கவும் சில நேரங்களில் பயன்படுத்தப்படும் என்று சான்றுகள் கூறி எழுதியிருந்தேன். இதனை மறுக்க இயலாமல் மீண்டும் தனிமனித விமர்சனத்தில் இறங்கி விட்டனர்.

"கமாலுத்தீன் மதனி தனது குடும்பத்தாரிடம் தொலைபேசியில் பேசினார் என்று கூறினால் அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டார் என்பதுதான் அதன் பொருள் என்று இவர்கள் கூறுவார்களா?" (ஏகத்துவம், ஜனவரி -2006)


இவர்களை நோக்கித் திருப்பிக் கேட்கிறேன்.
ஜைனுல் ஆபிதின் குடும்பத்தினரை பிரியாணி விருந்துக்கு அழைத்து வாருங்கள் என்று கூறினால், ஜைனுல் ஆபிதீனை விட்டு விட்டு, அவரது குடும்பத்தாரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றுதான் புரிந்து கொள்வார்களா? (அப்துல் கபூர் மட்டும்தான் பிரியாணி சாப்பிடுவாரா என்ன?)

மேலும்,
"நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆலு ஃபிர்அவ்னை மூழ்கடித்தோம்" (2:50)
என்ற வசனத்தில் ஃபிர்அவ்னை விட்டு விட்டு அவனைச் சார்ந்தவர்களை மட்டும்தான் இறைவன் மூழ்கடித்தான் என்று அர்த்தம் செய்வார்களா?

அதே போன்று, "ஆலு ஃபிர்ஆனை வேதனை சூழ்ந்து கொண்டது" (40:45),
"மறுமை நாள் ஏற்படும் போது ஆலு ஃபிர்அவ்னை கடுமையான வேதனையில் தள்ளுங்கள்" (40:46),
போன்ற வசனங்களிலும் 'ஆல்' என்ற வார்த்தை கையாளப்பட்டுள்ளது. ஃபிர்அவ்னின் ஆட்கள் மட்டும்தான் வேதனையில் தள்ளப்படுவார்கள் ஃபிர்அவ்னுக்கு ஒன்றுமே சம்பவிக்காது என்றுதான் அண்ணன் வகையறாக்கள் அர்த்தம் செய்வார்களோ?

மேலும், இறைவன் கொடுத்தனுப்பிய தூதுச் செய்தியைக் கொண்டு வரும் வானவர்கள், இறைத்தூதரிடம்தான் அதைச் சேர்த்து வைப்பார்களே தவிர, அவரது குடும்பத்தாரிடம் போய் அதைத் தெரிவிக்கமாட்டார்கள் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

'அத்தூதர்கள் (வானவர்கள்) ஆலு லூத்திடம் வந்தனர்' (15:61)


என்ற இந்த வசனத்தில் 'ஆல லூத்' என்ற வார்த்தை கையாளப்பட்டிருப்பதால், தூதுச் செய்தியைக் கொண்டு வந்த வானவர்கள், லூத் நபியிடம் செல்லாமல், அவரது குடும்பத்தினரிடம் சென்று தாங்கள் கொண்டுவந்த தூதுச் செய்தியை பாரிமாறிக் கொண்டார்கள் என்றுதான் அர்த்தம் செய்வார்களா?

ஒரு வார்த்தை அது பயன்படுத்தப்படும் இடமறிந்துதான் அதற்கு அர்த்தம் செய்ய வேண்டும் என்ற சாதாரண அடிப்படை உண்மை கூட தெரியாமல் ஜகாத் குறித்து ஆய்வு செய்யப் புறப்பட்டு விட்ட இவர்களை என்னவென்று கூறி அழைப்பது?


 

10) உண்மையை அறிந்து மறைத்தவர்கள் யார்?


"இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன்னர் நூர் முஹம்மது என்பவரும் தனக்குத் தெரிந்த உண்மையை நான்காண்டுகள் மறைத்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. இவர்களுக்கு சில கொள்கையற்ற புதிய நண்பர்கள் கிடைத்து, தூண்டுவதால்தான் இவர்கள் அறிந்து கொண்ட உண்மையை வெளியிட்டுள்ளார்கள்" (ஏகத்துவம், ஜனவரி-2006)


கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்களது ஜகாத் பற்றிய இந்த நச்சுக் கருத்தை எதிர்த்து வருகிறேன். தாயிஃபில் வாழும் இவர்களது இயக்கக் கண்மணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இது நன்றாகவே தெரியும். கடந்து பத்து மாதங்களுக்கு மேலாக பகிரங்கமாக நேர் நேருக்கு எதிர்த்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையை மறைத்தது இவர்கள்தான்


'தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சில அறிஞர்கள் (பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனிமனிதர் மட்டும்) 'ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்கத் தேவையில்லை' என்ற கருத்தை மக்கள் முன் வைத்ததே இவ்விவாதத்திற்குக் காரணம். இக்கருத்தை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேராதவர்கள் மட்டுமின்றி, தவ்ஹீத் அறிஞர்களில் பலரும் (ஒட்டு மொத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களும்?) ஏற்கவில்லை" (ஏகத்துவம், செப்டம்பர் -2005)

 

[Play Video]


"...எதிர் கருத்தில் இருந்து கொண்டே தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்களாகவும், நிர்வாகிகளாகவும் அவர்கள் இருந்தனர்" (ஏகத்துவம், ஜனவரி -2006)


இவ்வாறு எழுதியதன் மூலம், இத்தனிமனிதர் கருத்தை 18.08.05 தேதிவரை கடந்த ஐந்தாண்டுகளாக தவ்ஹீத் அறிஞர்களில் யாரும் ஏற்க மறுத்து விட்டனர் என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ளளர்.

  • இத்தனி மனிதர் கூறிவருவது தவறுதான் என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துக்கு வரும் வரை உண்மையை மறைத்து வந்தது ஏன்?

  • 'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற கருத்தில் பி.ஜே.க்கு மட்டும்தான் உடன்பாடு எங்களில் யாருக்கும் இதில் உடன்பாடில்லை என்ற இந்த உண்மையை ஒரு நாள்கூட மக்கள் மன்றத்தில் பகிரங்கமாகக் சுட்டிக்காட்டிப் பேசியதில்லையே ஏன்? இந்நிலையில் உண்மையை மறைத்தவர்கள் யார்? நானா? இவர்களா?

யதார்த்தத்தில் சத்தியத்தை மறைத்தவர்கள் யார் என்று இதனை வாசிப்போர் அனைவருக்கும் இப்போது தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.


 

11) வினை விதைத்தவர்கள் வினையைத்தான் அறுவடை செய்வார்கள்

 

'நம்மை நோக்கிக் கூறிய இந்த தரக் குறைவான விமர்சனத்தை இந்த அறிஞர்களை, இமாம்களை நோக்கி கூறுவார்களா?' என்று சமீபகாலமாக அடிக்கடி எழுதி வருகிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். இவர்கள் என்னமோ இமாம்களையும், அறிஞர்களையும் மதித்து வருவது போல் இந்த பசப்பு வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் பிறரை கண்ணியமாக விமர்சனம் செய்திருந்தால் அவ்வாறு இவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், மாற்றுக் கருத்துடையோரை, 'அவர்கள் சாக்கடைகள், அரிச்சுவடி தெரியாதவர்கள், அரை வேக்காடுகள்' போன்ற, ஏன் இதை விட தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்துவிட்டு, தங்களை மட்டும் மற்றவர்கள் கண்ணியமாக விமர்சனம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வினை விதைத்தவன் வினையைத்தான் அறுவடை செய்வான். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். குத்துதே குடையுதே என்று இப்போது அலறுவதை விட பிறரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். காலம் கடந்த ஞானோதயம்.


 

12) அறியாமையின் சிகரம்


'கால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும்' என்று ஜனவரி ஏகத்துவம் 41வது பக்கத்தில் பதிவு செய்தவர்கள், ஹஜ் என்ற கடமையை அதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளார்கள்.

அதாவது, 'ஹஜ் எப்போது செய்ய வேண்டும்' என்ற காலம் நிர்ணயம் இல்லாமல் ஹஜ்ஜை இறைவன் கடமையாக்கிவிட்டான் என்று சொல்ல வருகிறார்கள்.
 

'ஹஜ்ஜுக்குரிய காலம் அறிந்து கொள்ளப்பட்டதாகும்' (2:197) என்று கூறுகின்ற இறைவன், அக்குறிப்பிட்ட காலங்களில் தன்மீது ஹஜ்ஜை ஒருவன் கடமையாக்கிக் கொண்டால் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையும் அதில் தெரிவிக்கிறான்.

இந்த வசனத்தின் மூலம் அக்குறிப்பிட்ட காலத்தில்தான் ஹஜ் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தி 'எப்போது செய்ய வேண்டும்' என்பதற்கான காலத்தை இறைவன் தெளிவுபடுத்தி விட்டதால், ஹஜ்ஜுக்கு காலம் நிர்ணயம் செய்யவில்லை என்று வாதிப்போரை அறியாமையின் சிகரம் என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது?

'எத்தனை தடவை செய்ய வேண்டும்' என்பதை இந்த வசனத்தில் இறைவன் தெளிவுபடுத்த வில்லைதான். அதற்காக 'எப்போது செய்ய வேண்டும்' என்பதையும் தெளிவாக்கவில்லை என்றா வாதிக்க முடியும்?


'ஹஜ் எத்தனை தடவை செய்ய வேண்டும்' என்பதை இறைவன் நேரடியாகக் கூறாவிட்டாலும், அவனது கட்டளைகளை அவனிடமிருந்து பெற்றுத் தரும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹஜ் ஆயுளில் ஒரு தடவைதான்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

இவ்வாறு 'ஹஜ் எப்போது செய்ய வேண்டும், எத்தனை தடவை செய்ய வேண்டும்' என்பதை இறைவனும், இறைத்தூதரும் தெளிவுபடுத்திவிட்ட நிலையில், 'எப்போது கொடுக்க வேண்டும், எத்தனை தடவை கொடுக்க வேண்டும்' என்று தெளிவாக்கப்படவில்லை என இவர்கள் வாதித்துவரும் ஜகாத்துடன், ஹஜ்ஜைத் தொடர்பு படுத்தி பேசுவது கருத்து மோசடியாகும், அதை அறிவுடையோர் ஏற்கமாட்டார்கள்.


 

13) குர்ஆனின் உபதேசத்தை அலட்சியப்படுத்த வேண்டுமாம்


"தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளை மறைக்கும் இறை மறுப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்து வைத்துள்ளோம்". (அல்குர்ஆன் 4:37)

இந்த வசனத்தை எடுத்தெழுதி, இறைவன் கடமையாக்கிய ஜகாத்தை தானும் வழங்காமல் பிறரையும் வழங்கவிடாமல் தடுத்து இறைவனின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என்று எழுதியிருந்தேன். ஜகாத் வழங்காமலிருப்பவன் குறித்து எச்சரிக்கும் இறைவசனங்களில் சிலவற்றையும் இவர்களது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். அதற்குப் பதிலாக,

"கஞ்சத்தனம் கூடாது என்ற பயான், சோம்பேறிகளாக இருக்கக் கூடாது என்ற பயான், ஜகாத் கொடுப்பதின் சிறப்புப் பற்றிய பயான் என்று மறு ஆய்வுடன் தொடர்பில்லாத விஷயங்களை எழுதி பக்கத்தை நிரப்பி உள்ளனர். எனவே, அவை அலட்சியப்படுத்தப்பட வேண்டியை ஆகும்" (ஏகத்துவம், ஜனவரி-2006)


நாம் சுட்டிக்காட்டியதற்காக பல தவறுகளை ஏற்று, தங்களைத் திருத்திக் கொண்ட இவர்கள் இறைவன் கூறுகின்ற இந்த உபதேசங்களை ஏற்று தங்களைத் திருத்திக் கொள்ளமாட்டார்களாம். இந்த குர்ஆனின் உபதேசங்களை அலட்சியப்படுத்துவார்களாம்.

இறைவனின் உபதேசங்களை இவர்கள் கண்டு கொள்கிறார்களோ இல்லையோ, இதனை வாசிப்போர் இவர்களைத் தெளிவாக இனம் கண்டு கொள்ள வேண்டும்.


 

Related Links:

 

bullet

ஜகாத் ஓரு மறு ஆய்வு -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

bullet

அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

bullet

அரைக்கால் டவுசரில் தொழுகையா? -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி