Featured Posts

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே தவிர பலமான செய்திகள் அல்ல என்பதற்காகவே மக்களின் பார்வைக்கு தருகிறோம்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எமக்கு அருள்புரிவாயாக! ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக என நபியவர்கள் கூறினார்கள். (நூல்: பஸ்ஸார். தபரானி)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஸாயித் பின் அபீ ருகாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இவர் பலஹீனமானவர் என்று இமாம் நஸயீ (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– ரமழானின் ஆரம்ப (பத்து நோன்புகளு)ம் ரஹ்மத்தாகவும் அதன் நடுப்பகுதி (பத்து நோன்புகளும்) மஃபிரத்தாகவும் அதன் இறுதி பகுதி (கடைசிப் பத்து) நரக விடுதலையாகவும் உள்ளது நபியவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு குஸைமா)

இதன் அறிவிப்பாளர் தொடரில் அலி இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும் இந்த செய்தியை பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் இது பலவீனமானது என்பதை குறிக்க ‘இது உறுதியானதாக இருந்தால்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்கள். பலஹீனமான ஹதீஸை அடையாளம் காட்டுவதற்கு இமாம்கள் கையாளும் முறை இது.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– ரமழானில் உள்ள சிறப்புகளை அறிந்தால் வருடம் பூராவும் ரமழானாக இருக்க வேண்டும் என எனது உம்மத்தவர்கள் ஆசைகொள்வார்கள் என நபியவர் கள் கூறினார்கள். (நூல்: அபூயஃலா)

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜரீர் இப்னு அய்யூப் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும், இது பலஹீனமானது என்பதை இமாம் இப்னு குஸைமா (ரஹ்) மேல் கூறியவாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

எனது உம்மத்தில் ஒரு மனிதனை கண்டேன். அவர் தாகத்தோடு தடாகத்திற்கு (அவ்லுல் கவ்ஸரக்கு) வரும் போதெல்லாம் தடுக்கப்பட்டார். அப்போது நோன்பு வந்து அவருக்கு நீர் புகட்டியது என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: தபரானி)

இதன் அறிவிப்பாளர் தொடரில் சுலைமான் இப்னு அஹ்மத் அல்வாஸிதி என்பவ ரும் காலித் இப்னு அப்துர் ரஹ்மான் அல் மக்சூமி என்பவரும் இடம்பெறுகிறார்கள். இவ்விருவரும் பலஹீனமானவர்கள். இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் இதை பலஹீனமானது என விமர்சனம் செய்கிறார்கள்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– நோன்பாளிகளின் வாய்களிலிருந்து கஸ்தூரி வாடை வெளிப்படுகிறது. அவர்களுக்கு அல்லாஹ்வின் அர்ஷுக்குக் கீழ் (உணவு) தட்டு வைக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அத்துர் ருல் மன்சூர் 1/182 எனும் நூலில் இச்செய்தியை குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இது பலஹீனமானது என இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்களும் ஏனைய இமாம்களும் விமர்சனம் செய்கிறார்கள்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– நோன்பாளியின் தூக்கம் இபாதத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அல் ஜாமிஉஸ் ஸகீரில் (9293) குறிப்பிடுகிறார்கள். இதில் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்பா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஸைனுத் தீன் அல் ஈராகி (ரஹ்) இமாம் பைஹகி (ரஹ்) இமாம் சுயூத்தி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்பிர்தவ்ஸ் 4/248) (இந்தச் செய்தியை வைத்தே சிலர் பகல் முழுவதும் தூக்கத்தில் காலத்தை கழிக்கிறார்கள்)


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– எவர் ரமழானில் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழுகிறாரோ அவர் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொண்டவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் இஸ்பஹானி). இது முர்ஸல் எனும் பலஹீனமான செய்தியாகும். இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்னு குஸைமாவில் வரும் இச்செய்தியில் உக்பத் இப்னு அபீல் ஹஸ்னா என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என அறியப்படாதவர். பலஹீனமானவர் (மஜ் ஊல்) என இமாம் இப்னு முதீனி (ரஹ்) கூறுகிறார்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– நோன்பு பொறுமையின் பாதியாகும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா).

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் மூஸா இப்னு உபைதா என்பவர் பலஹீனமானவர் என அஷ் ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– மாதங்களின் தலைவர் ரமழானாகும். அம்மாதங்களில் கண்ணியமான மாதம் துல்ஹஜ் மாதமாகும். (நூல்: பஸ்ஸார், தைலமி)

இதன் அறிவிப்பாளர் தொடரில் யஸீத் இப்னு அப்துல் மாலிக் அன்னுபைலி என்ப வர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் மஜ்மூஉல் ஸவாத் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். (3/140)


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– வானத்தில் சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். ரமழான் மாதம் வந்துவிட்டால் முஹம்மது நபியின் உம்மத்தினருடன் சேர்ந்து கொள்ள அவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: பைஹகி)

பைஹகி நூலில் இது அலி (ரலி) அவர்களின் வார்த்தையாக (மவ்கூப்) பதிவாகியுள்ளது. மேலும் இச்செய்தி பலஹீனமானது என இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அத்துர்ருல் மன்சூரில் (8ஃ582) குறிப்பிடுகி றார்கள். மேலும் கன்ஸுல் உம்மால் (8ஃ410) நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ: அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வலாரிஸ்திக அப்தர்து’ என்று வரும் ஹதீஸ் அபூதாவூத் (2358) மற்றும் இப்னு ஸுன்னு பிஅமலில் யவ்மி வல்லைலா (481) எனும் நூலில் பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மலிக் பின் ஹாரூன் பின் அன்தரா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் அஹ்மத் (ரஹ்) தாரகுத்னி (ரஹ்) இமாம் அபூ ஹாதம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

இது உறுதியான செய்தியல்ல என இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடு கிறார்கள். (நூல்: ஸாதுல் மஆத் (2÷54)


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

ரமழானில் ‘அல்லாஹ்வை நினைவூட்டு பவர் (திக்ரு செய்பவரது) பாவங்கள் மன் னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.

இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்களுடைய அல்ஜாமிஉஸ் ஸகீர் நூலிலும் தபரானியிலும் பைஹகியிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹிலால் இப்னு அப்துர் ரஹ்மான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலஹீனமானவராவார்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

– நோன்பாளியாக இருக்கும்போது பகலில் (கண்ணுக்கு) சுர்மா) இடக்கூடாது என நபி இவர்கள் கூறினார்கள். (நூல் அபூதாவூத்)

இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இச்செய்தி நிராகரிப்பட வேண்டியதென விமர்சனம் பண்ணுகிறார்கள்.


நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

14 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அல்லாஹ் உங்களுடைய கல்வியை மென்மேலும் அதிகபடுத்துவானாக அதிகமான சகோதரர்களால் ஓதப்பட்டுவரும்
    ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

    இதுவும் பலஹீனமான ஹதீஸ்

  2. haja jahabardeen

    Enna porul itharkku thayavusaithu sollavum nirvahi thangalukku allahu thangalukku kirbai saivaanahaa.

  3. மேல் கூரபட்ட கதீத் களுக்கு இனையான கருதுடைய ஆதரமான கதீத்கள் இல்லையா????? இல்லை அனைத்து கருதுகளும் நம்பகூடாததா.தெளிவுபடுத்தவும்

  4. “நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

    What about this hadees is it true. Please clarify.

    Wassalam.

    Mohammed Shahul

  5. ஆசிரியர் வாசகர் கருத்துகளுக்கு பதிலலிகாமல் இருப்பது வருத்தபடவேண்டியது,மேலும் கட்டுரயின் நம்பக தண்மயை பாதிக்கிறது

  6. நிர்வாகி

    கட்டுரைகளை நமக்கு நேரடியாகவோ அல்லது பிறர் மூலமோ இத்தளத்தில் பதிவதற்கு அனுப்புகின்றார்கள். அதனை பதிப்பது நாம்தான்.

    மேலும், ஆசிரியர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் இங்கு பதியப்படும் விமர்சனங்களை படிப்பதில்லை. ஏனென்றால் இணைய இணைப்பு, நேரம் போன்ற விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

    எனவே, இப்பதிவில் வந்த விமர்சனங்களை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முயற்சி செய்கிறேன்.

  7. inta hadeeshal palaveenamanavaiyay yirundalum sila nalla vidayangalai solluhinrana

  8. Assalamu Alaikum,

    In this hadith msg very useful,
    but today’s people, Quran ulla vasanagalil Nabi(Alai) avarkal pinpathiya seyalkal eppothum pinpachu nataka vendum enpathuthan intha hadith Advantage.

  9. Ellam balaweenam enral nangalum (Ella manidargalum) balawenawargal thane? balaweenam balaweenam enraal enn iwwalawukaalam nadaimuraiil Ulladu?
    balaweenamana hadiskalai (idai) arivippadan karanam enna? yarukku labam? nangal Idu patri eppadi Theluvu peruwadu? Dayawu seydu Willkawum

    Salam

  10. Salaam உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

    Why no respond from your end its not fair publish an article and keep silent.

  11. இம்தியாஸ் ஸலபி

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ”நோன்பின் பெயரால் ஆதாரமற்ற ஹதீஸ்கள்”எனது கட்டுரைக்கான உங்களது விமர்சனங்களுக்கு பதிலளிக்கக்கூடிய நேரமும் சூழுலும் அமையவில்லை. தஃவாவுடைய நிகழ்ச்சிகளுக்காக ஒரு மாதம் குவைத் சென்றதனாலும் அதன் பின் எமது மாதாந்த பத்திரிகை வேலையின் சுமைகூடியதாலும் உடனே பதிலளிக்கக்கூடியதாக நிலமை இருக்கவில்லை. அதற்காக மனப்பூர்வமாக வருந்துகிறேன்.

    நோன்பின் பெயரால் ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தபோதும் ஆதாரமற்ற ஹதீஸ்கள் தான் கூடுதலாக மக்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஹதீஸ்களை மக்கள் முன் எடுத்துவைப்பது தான எனது நோக்கமாக இருந்தது. அதன் நிமித்தமே நோன்பின் பெயரால் ஆதாரமற்ற ஹதீஸ்களை எடுத்து காட்டினேன்.

    சகோதரர் முஹம்மத் கேட்பது போல் நோன்பை பற்றி கூறப்படும் ஆதாரபூர்வமான வேறு ஹதீஸ்கள் உண்டு. ஆனால் குறித்த ஹதீஸ் பற்றி கூறப்படும் போது அந்த ஹதீஸூக்குரிய தீர்வு என்ன வென்றுதான் முதலில் பார்க்க வேண்டும். அது ஸஹீஹானதா பலஹீனமானதா என்று தெரிந்து வைத்து பின்பற்றவேண்டும்.இது தான் ஹதீஸ் பற்றி கையாளும் முறையாகும். அதனைத்தான் நான் இங்கே செய்துள்ளேன் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

    நான் சுட்டிகாட்டடியுள்ள பலஹீனமான ஹதீஸ்களுக்கு இணையான வேறு ஹதீஸ் இல்லையா எனற கேள்வியை பொறத்தவரை ஹதீஸ்கள் உண்டு. உதாரணமாக முஹம்மத் ஹமீத் (விமர்சனத்தில்)குறிப்பிட்ட பின்வரும ஹதீஸை குறிப்பிடலாம்.

    1. ‘நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ நுல்: புகாரீ (1894)

    இந்த ஹதீஸ் மிக மிக ஆதாரப்பூர்வமானது. இதே கருத்துடைய இன்னுமொரு ஹதீஸ் ”நோன்பாளியின் வாயிலிலிருந்து கஸ்தூரி வாடை வெளிப்படுகிறது. அவர்களுக்கு அல்லாஹ்வின் அர்ஷூக்குக் கீழ் (உணவு) தட்டு வகைப்படுகிறது. என்ற ஹதீஸ் பலஹீனமானது.

    இப்போது நாம் பலஹீனத்தை விட்டு விட்டு ஸஹீஹானதை சொல்ல கடமைப்பட்டுள்ளோமே தவிர பலஹீனத்தையும் சொல்லி மக்களை இபாதத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை. என்னுடைய கட்டுறையில் பலஹீனத்தைத்தான் சுட்டிகாட்டியுள்ளேன்.

    அடுத்து சகோதரர் b.m Hamzath அவர்களுடைய செய்தியை பொறுத்தவரையில் எல்லாம் பலஹீனம் என்றால் என்ன செய்வது? இவ்வளவு காலம் நடைமுறையில் உள்ளதே என்ற ஆதங்கத்தில் கேட்கிறார்.

    உண்மை தான். பலஹீனமா ஹதீஸ்கள் பற்றி இன்று நேற்று சொல்லப்பட்டதல்ல. ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டிலே சொல்லப்பட்டு விட்டது. அதற்கான ஆய்வுகளும் தெளிவுகளும் விதிகளும் அன்றே சொல்லப்பட்டு விட்டது. இமாம்கள் ஹதீஸ்களை பதிவு செய்யும் போதே அதற்கான தீர்ப்பையும் சேர்த்தே சொன்னார்கள். அந்த தீர்ப்பைத்தான் நாம் எடுத்துகாட்டுகிறோம். புதிதாக நாம் எந்த தீர்ப்பையும் சொல்லவில்லை.

    காலாகாலமாக ஹதீஸ்கள் சொன்னவர்கள் அந்த ஹதீஸ்களின் தீர்வை பற்றி ஆராயாமல் சொல்லி வந்தார்கள். இன்னும் சொல்லிவருகிறார்கள். உண்மையாகவே இவர்கள் ஹதீஸ்களை திறனாய்வுடன் அணுகியிருந்தால் இந்தப்பிரச்னை வந்திருக்காது. கோளாறு எங்கே உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    மக்களுடைய அமல்கள் வீணாகிப் போகக்கூடாது என்பதற்காகத்தான் நம்பத்தகுந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை பின் பற்ற வேண்டும் என்கிறோம்.
    ஒரு ஹதீஸ் பற்றி உங்களிடம் சொல்லப்பட்டால் அது ஆதாரப்பூர்வமானதா பலஹீனமானதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய கடமைப்பாடு உங்களுக்குண்டு. அதுவே பாதுகாப்பானது.

    பலஹீனத்தை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமானதை மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும். ஹதீஸ் என்று சொல்லப்படுபவைகளை ஏன் பின்னற்றக்கூடாது என்ற சந்தேகத்திற்கான விளக்கத்தை விரைவில் எதிர்பாருங்கள் இன்ஷாஅல்லாஹ். உங்களது சந்தேகங்களுக்கு அது தெளிவாக இருக்கும்.

  12. dear editor, please consult ur publications with high level islamic teacher’s. and than publish. because ordinary muslims don’t understands our islamic rule’s and conditions.like example . strong hadeesh or weak hadish.

  13. Imaamkalthaan layeef anru sonnarhal Atrukkoalhirom. But ,
    1.Rawihal thoadar thaan layeef ; Hatez alla ..
    2. Leyeef aana hateezkalum Saheeh aahalam ; Layeef aana Hateez kalum Saheeh aahalam .
    3. Sila nifanthanaihaludan Falayel a’mal ukkaha sayatpaduthalam.
    1. Akeethawudan sampaththap padakkoodaathu.
    2. mihaum balaheenamaha irukka koodathu.
    3. Ithu zabithanathu anru uruzi koallamal penuthalukkaah amal sayya wendum

    Anpathaum Imamkale soannarhal.

    Note : layeef (belaheenaman hateezkal )lum aathaaramaanathe.
    Mawloo (Iddukkaddappadda hateezkalthaan aatharamatrawai.

    Nunippul meynthu wittu sattam pesi makkalai kuluppamal Amalil idupadunkal.

    kampeduththawanellam vettaikkaaranaaha mudiyaathu.
    Heading kai maatrunkal brother !

  14. to become best editor study deep

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *