Featured Posts

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – (18) – ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – 10

ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்’ என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்’ இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம்: 14 – கியாமுல் லைல்

கியாமுல் லைல் கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட அதிகமாகவும் தொழலாம் என்ற கருத்துடைய அறிஞர்களின் …

Read More »

இரவுத் தொழுகை இரண்டு இரண்டா?

ஒரு மனிதர் இரவுத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டாகும். சுப்ஹை பயந்தால் (ஒரு ரக்கத்து) வித்ரை தொழவும். புகாரி, முஸ்லிம். இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவும் தொழலாம். என்று சில அறிஞர்களை மேற் கோள் காட்டி பேசியும், எழுதியும், வருவதை காணலாம்.

Read More »