Featured Posts

முஸ்லிம்களும் பொங்கலும்

சகோதரர் ஜோ ‘தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்’ என்ற பதிவில் பொங்கல் திருநாளை ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சார திருநாளாகச் சொல்லி இருந்தார்.மேலும்,”கிறிஸ்தவக் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; தமிழர் என்ற அடிப்படையில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்” என்று சொல்லி இருந்தார். இதேபோல் சென்றவருடம் ‘கல்வெட்டு’ என்ற பதிவர், “தமிழர்களாகிய முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை?” என்று கேட்டிருந்தார்.

கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். நடைமுறையில் பொங்கல் தினம் என்பது சூரிய வழிபாடு, பசு வழிபாடு என இந்து மதம் சார்ந்த தமிழர்கள் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. எனவே,பொங்கல் என்பது முஸ்லிம்களும் கொண்டாடும் பொதுவான திருநாள் அல்ல. படைப்புகளுக்கு வணங்குவதைவிட படைத்தவனை வணங்குவதே பகுத்தறிவு!

பொங்கல் குறித்த முஸ்லிம்களின் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது.இறைவனைக்கு நன்றி செலுத்துவதையும் படைப்புகளுக்கு நன்றி செலுத்துவதையும் இஸ்லாம் தெளிவாகச் சொல்லியுள்ளது:

* வணங்குவதற்குரியவன் படைத்த இறைவனேயன்றி படைப்புகள் அல்ல.

* மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்,இறைவனுக்கு நன்றி செலுத்தியன் ஆக மாட்டான்.

* உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம்.

முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஜகாத் பொருளில் கஷ்டப்பட்டு நீர் பாய்ச்சி, உழுது விளைந்த விளைபொருளுக்கு 5% சதவீதமும், இயற்கையாக விளைந்த பொருள்களுக்கு 10% சதவீதமும் ஜகாத் என உடலுழைப்பைக் போற்றுகிறது இஸ்லாம்.

ஒருபக்கம் நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் அதே நாளில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம் இதை வீரம் என்றும் சொல்கிறோம்! மாடுகளால் மனிதன் அடையும் கொடுமையை ‘விழுப்புண்’ என்று ஏமாற்றுகிறோம். நாளெல்லாம் நமக்காக உழைத்த தொழிலாளியை விலங்குகளுடன் மோத விட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறோம். இதுவா உழைப்பவருக்கும் அதற்கு உதவிய விலங்குகளுக்கும் செய்யும் நன்றி? இஸ்லாம் இவ்விசயத்திலும் தெளிவாக இருக்கிறது . விலங்குகளைக் கொடுமை படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் முஹம்மது நபி தன் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். நபிகளார் வரும் பாதையில் இருந்த புற்றிலிருந்து எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு , அவ்வெறும்புகளால் நபிகளாருக்கு சிரமம் ஏற்பட்டு விடும் என்று கருதி, ஒரு தோழர் எறும்பு புற்றுக்கு தீ வைத்தார் . இதனைக் கண்ட முஹம்மது நபி (ஸல்…) உயிர்களை தீயிட்டு எரிப்பதைக் வன்மையாகக் கண்டித்தார்கள்.

அபூஹுரைரா ரலி… அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் ” என்று பெருமானார் சொன்னபோது, “இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?” என்று வினவியபோது, “ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு” என்றார்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).

உழைப்பவரின் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது,வெறும் வாய் வார்த்தைகளால் அல்ல.

57 comments

  1. ✪சிந்தாநதி

    இது நியாயமான வாதமல்ல நண்பரே!
    பொங்கலையும் ஜல்லிக்கட்டையும் போட்டுக் குழப்புகிறீர்கள். ஜல்லிக் கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாகப் போற்றப் படுகிறது. அதை பொங்லையொட்டி நடத்துகிறார்கள் என்பது தவிர அதுதான் பொங்கல் என்று யார் உங்களுக்குச் சொன்னது?
    மனிதர்களுக்கும், உழைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாகவே பொங்கலைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பொங்கல் குறிப்பிட்ட எந்தக் கடவுளையும் குறிப்பிடுவதாகவோ, எந்தக் கடவுள் தொடர்பான விழாவோ அல்ல.

    வைதீக இந்துக்களும் பொங்கலைவிட தீபாவளிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் இதுவே தான்.

    இந்துக்கள் பொங்கலை இந்து முறைப்படி கொண்டாடுகிறார்கள் என்பது தவிர பொங்கல் இந்துமத விழாவாக அல்லாமல் தமிழர் திருநாளாகவே அன்றும் இன்றும் இருந்து வருகிறது.

    பொங்கல் யாரையும் வணங்குவதல்ல. மாறாக நன்றி செலுத்துவது மட்டுமே. (இயற்கைக்கு நன்றி என்பதை இந்துக்கள் சூரிய வழிபாடாக வணங்குகின்றனர். அதற்காக அதுவேதான் பொங்கல் அல்ல)

    உங்கள் மொழியிலேயே சொன்னால் //மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்,இறைவனுக்கு நன்றி செலுத்தியன் ஆக மாட்டான்.//

    உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான்.

    எனவே பகுத்தறிவுக்கும் மதநம்பிக்கைக்கும் முடிச்சுப் போட முயலாதீர்கள். உங்கள் மனதில் தமிழுணர்வு இருந்தால் எந்தத் தயக்கமும் இன்றி தமிழ்ப்பொங்லைக் கொண்டாடலாம். அதை உங்கள் சம்பிரதாயப்படியே கொண்டாடலாம்.

    மாறாக தேசியக் கொடியேற்றுவதே முஸ்லிம் விரோதம் என்று சொல்லும் சிலரைப்போல, இந்துத்வா வெறியர்களுக்கு ஏன் நீங்களே அவல் கொடுக்கிறீர்கள்?

  2. சரியாகச் சொன்னீர்கள் சிந்தாநதி,அன்பு சுவனப்ப்ரியன், பொங்கல் எந்த மதத்தையும் சாராதது.அதன் பெயரே உழவர் திருநாள்.எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    லியோ சுரேஷ்
    துபாய்

  3. //உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல்//

    மட்டும்தான் எனில் எல்லாத் தமிழராலும் கொண்டாடப் படும் நாளாகவே பொங்கல் அமைந்திருக்கும்.

    ஆனால், யதார்த்தம் அவ்வாறில்லை என்பதே உண்மை.

    பொங்கல் பானையின் நெற்றி(!)யில் ஏன் திருநீறு?

  4. //சரியாகச் சொன்னீர்கள் சிந்தாநதி,அன்பு சுவனப்ப்ரியன், பொங்கல் எந்த மதத்தையும் சாராதது.அதன் பெயரே உழவர் திருநாள்.எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

    ரிப்பீட்டு!!! ரிப்பீட்டு!!! ரிப்பீட்டு!!!

    //படைப்புகளுக்கு வணங்குவதைவிட படைத்தவனை வணங்குவதே பகுத்தறிவு! //

    படைத்தவன் இல்லை என்று சொல்வதே பகுத்தறிவு??!!

    //* உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம். //

    உங்களுக்காக ஏர் சுமந்து, வியர்வை சிந்தி, தன் உழைப்பை கொடுக்கும் உங்களுக்கு உணவு பயிரிட உதவும் மாடுக்கு எந்த வகையில் நீங்க கூலி தருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா??

    நன்றி சொல்வது வணங்குவது அல்ல நன்பரே!! பொங்கல் மதம் சாரா ஒரு திருவிழா!!

  5. மரைக்காயர்

    //உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான்.

    எனவே பகுத்தறிவுக்கும் மதநம்பிக்கைக்கும் முடிச்சுப் போட முயலாதீர்கள். உங்கள் மனதில் தமிழுணர்வு இருந்தால் எந்தத் தயக்கமும் இன்றி தமிழ்ப்பொங்லைக் கொண்டாடலாம். அதை உங்கள் சம்பிரதாயப்படியே கொண்டாடலாம்.//

    தமிழுணர்வுக்கும் பொங்கலுக்கும் முடிச்சு போடுவது நியாயமல்ல நண்பரே! உழவுத்தொழிலால் பயனடைபவர்கள் தமிழர்கள் மட்டுமா? இல்லையே! மனிதகுலம் முழுவதும்தான் உழவுத்தொழிலால் பயனடைகிறது! அதை தமிழருக்கு மட்டுமான கொண்டாட்டமாக பார்ப்பது ஒரு குறுகிய கண்ணோட்டமாக தெரியவில்லையா? இந்த நாளை அகில உலக அளவில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் இந்தியா முழுவதுமாகவாவது கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை ஏன் இதுவரை எழவில்லை?

    //பொங்கல் குறிப்பிட்ட எந்தக் கடவுளையும் குறிப்பிடுவதாகவோ, எந்தக் கடவுள் தொடர்பான விழாவோ அல்ல.// என்று நீங்கள் சொன்னாலும், ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் ஆயுத பூஜை, கல்வியை வணங்கும் சரஸ்வதி பூஜை போன்ற இந்துமத விழாக்களை போன்றதுதான் உழவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் பொங்கல் விழாவும்.

    தமிழுணர்வு கொண்டவர்களெல்லாம் பொங்கல் கொண்டாடத்தான் வேண்டும் என்பதில்லை. பொங்கல் கொண்டாடதவர்களெல்லாம் உழவுத்தொழிலை மதிக்காதவர்கள் என்பதும் இல்லை.

    உழைப்பவரின் மேன்மை உயர படைத்தவன் அருளட்டும். பொங்கல் கொண்டாடும் சக தமிழ்ச் சகோதரர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.

  6. புன்னகைக்க மட்டுமே தோன்றுகிறது நல்லடியார். உங்களுக்கு நான் எதுவும் பதில் சொல்ல வேண்டியதில்லை. :-)

    // அழகு said…
    மட்டும்தான் எனில் எல்லாத் தமிழராலும் கொண்டாடப் படும் நாளாகவே பொங்கல் அமைந்திருக்கும்.

    ஆனால், யதார்த்தம் அவ்வாறில்லை என்பதே உண்மை.

    பொங்கல் பானையின் நெற்றி(!)யில் ஏன் திருநீறு? //

    அழகு, திருநீற்றை நம்புகிறவர்கள் அதைப் பூசுகிறார்கள். நம்பாதவர்கள் பூச வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

    யார் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பொங்கல் தமிழர் திருநாள்தான். பொங்கல் வைத்து இறைவனை வணங்கும் நாள். சூரியனை இறைவனாக நினைப்பவர்கள் சூரியனை வணங்குகிறார்கள். வேறு இறைவனை வணங்குகிறவர்கள் அந்தந்த இறைவனை வணங்கிக் கொள்ளலாம். பொங்கல் கொண்டாடக் கூடாது என்று முடிவு செய்து விட்டால்….எந்தச் சமாதானமும் நமக்குச் சொல்லிக் கொள்ளலாம்.

    // தமிழுணர்வுக்கும் பொங்கலுக்கும் முடிச்சு போடுவது நியாயமல்ல நண்பரே! உழவுத்தொழிலால் பயனடைபவர்கள் தமிழர்கள் மட்டுமா? இல்லையே! மனிதகுலம் முழுவதும்தான் உழவுத்தொழிலால் பயனடைகிறது! அதை தமிழருக்கு மட்டுமான கொண்டாட்டமாக பார்ப்பது ஒரு குறுகிய கண்ணோட்டமாக தெரியவில்லையா? இந்த நாளை அகில உலக அளவில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் இந்தியா முழுவதுமாகவாவது கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை ஏன் இதுவரை எழவில்லை?//

    மரைக்காயரே….தமிழர்களுக்குள்ளேயே கொண்டாட ஒற்றுமையில்லை…அப்புறம் எந்த மாநிலத்தின் கதவைத் தட்டுவது?

    மொத்தத்தில் அனைவருக்கும் ஒன்று. கொண்டாட விரும்புகிறவர்கள் கொண்டாடுங்கள். விரும்பாதவர்கள் கொண்டாடாதீர்கள். அவ்வளவுதான். அதை விட்டு விட்டு….அட…நான் ஒன்னும் சொல்லலைங்க.

  7. ✪சிந்தாநதி

    //பொங்கல் பானையின் நெற்றி(!)யில் ஏன் திருநீறு?//

    அதைத்தான் முதலிலேயே சொன்னேன். இந்துக்கள் கொண்டாடும்போது தங்கள் மதச்சம்பிரதாயப்படி கொண்டாடும் அதே நேரம் ஒவ்வருவரும் தங்கள் மதச் சம்பிரதாயப்படி கொண்டாடலாம் என்று.

    //தமிழுணர்வுக்கும் பொங்கலுக்கும் முடிச்சு போடுவது நியாயமல்ல நண்பரே!//

    //தமிழுணர்வு கொண்டவர்களெல்லாம் பொங்கல் கொண்டாடத்தான் வேண்டும் என்பதில்லை.//

    இங்கே யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதே சமயம் மத்த்தின் பெயரால் மொழியையும் அதன் பண்பாட்டையும் வெறுப்பதோ, மறுப்பதோ சரியானதா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். இது உங்களுக்கு மட்டுமல்ல கடவுள் சமற்கிருதம் மட்டுமே புரிந்து கொள்வார் என்று பிதற்றுவோருக்கும் சேர்த்தே தான் சொல்கிறேன்.

    உங்களில் பலரும் இன்னும் அரபி மொழிக்கு இணையாக தமிழைப் போற்ற மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

    தமிழ்ப்பண்பாட்டை இங்குள்ள பெரும்பான்மை மதம் சுவீகரித்துக் கொண்டு தன் ஆளுமையை அதனுள் செலுத்தி வருவதாலேயே தமிழ்ப் பண்டிகைகள் மதப் பண்டிகைகள் ஆகிவிடமாட்டாது. அது பன்முகப் படவேண்டுமானால் குறிப்பிட்ட மத்த்தின் பிடிக்குள் இருந்து விடுபட வேண்டும். அதற்கு உங்களைப் போன்றவர்கள் முயற்சிக்கலாமே. அதன் முதற்படியாகவே தமிழர் பண்டிகையை தமிழ் முஸ்லிம்களும் ஏற்று கொண்டாடலாம்.

    மாறாக நீங்கள் விலகிச் செல்லச் செல்ல, பிளவுகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும்.

    இல்லையெனில் இன்னும் சிலகாலத்தில் இப்போது நீங்கள் கருதும் கருத்து உறுதிப்படும் விதமாக பொங்கல் நாளையும் ஏதேனும் ஒரு அவதார தினமாக ஆக்கிவிடுவார்கள்.

  8. ✪சிந்தாநதி

    //தமிழுணர்வுக்கும் பொங்கலுக்கும் முடிச்சு போடுவது நியாயமல்ல நண்பரே! உழவுத்தொழிலால் பயனடைபவர்கள் தமிழர்கள் மட்டுமா? இல்லையே! //

    தமிழன் மட்டும்தான் அதைக் கொண்டாடுகிறான். அதனால் தான் பொங்கல் தமிழனுக்கான தனிப் பண்டிகை ஆகிறது.

  9. அபூ முஹை

    //உழைப்பவரின் மேன்மை உயர படைத்தவன் அருளட்டும். பொங்கல் கொண்டாடும் சக தமிழ்ச் சகோதரர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.//

    பொங்கட்டும்! திரு நீரு இல்லாத பானையில் பொங்கல் என் வீட்டிலும் பொங்கட்டும்!!

    திலகமிட்டு, தீபாராதனைக் காட்டாத மாடுகள் என் வீட்டுத் தொழுத்திலிருந்தும் வெளியேறட்டும்!

    உழவர்களுக்கும், உழவு மாடுகளுக்கும் அது என்ன வருடத்தில் ஒருநாள் மட்டும் நன்றி? நன்றி கெட்டவர்கள்!

    அவர்களென்ன வருடத்தில் ஒருநாள் மட்டுமா உலகுக்கெல்லாம் உணவு வழங்குகிறார்கள்? அதனால்…

    ஒவ்வொரு முறையும் உண்ணும் போதும் அந்த உணவில் உழவர்களைக் கண்டு, வருடம் முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்!

    அன்புடன்,
    அபூ முஹை

  10. நல்லடியார் பாய்,
    சக தமிழ் சகோதரர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துடனே முடித்திருக்கிறீர்கள். நன்றி.

    பொங்கல் என்பதை ஒரு உழவர்த்திருநாள் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளலாம். அழகு அவர்கள் சொல்லியிருப்பது போல, பொங்கல் பானைக்கு திருநீறெல்லாம் பூசுவது, இந்து தெய்வ உருவப்படங்களை காட்சியில் வைப்பது ஒரு பொதுவான பண்டிகையை ‘மத’ப்படுத்தும் செயலே. இதுவே முஸ்லீம்களை விலக்கிவைத்தது போல ஆகிவிட்டது தான்.

  11. //ஒருபக்கம் நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் அதே நாளில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம் இதை வீரம் என்றும் சொல்கிறோம்! மாடுகளால் மனிதன் அடையும் கொடுமையை ‘விழுப்புண்’ என்று ஏமாற்றுகிறோம். நாளெல்லாம் நமக்காக உழைத்த தொழிலாளியை விலங்குகளுடன் மோத விட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறோம். இதுவா உழைப்பவருக்கும் அதற்கு உதவிய விலங்குகளுக்கும் செய்யும் நன்றி? இஸ்லாம் இவ்விசயத்திலும் தெளிவாக இருக்கிறது . விலங்குகளைக் கொடுமை படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.//

    நல்லடியார் அய்யா,
    நீங்கள் சொல்வது சரிதான். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடக்கும் கேவலமான விளையாட்டு காட்டுமிராண்டித் தனமானது.இது என்ன வீர விளையாட்டு என்று தெரியவில்லை.

    ஆனால் இஸ்லாம் கருணை மிகுந்த மதம், அப்படி இப்படீன்னு ரீல் விடுவது கொஞ்சம் ஓவர்.

    பாலா

  12. History Of Pongal

    The history of Pongal can be traced back to the Sangam Age, ie, 200 B.C. to
    300 A.D. Pongal is an ancient festival of the Tamils and it is not known
    when exactly the Tamils began celebrating the festival, but some historians
    identify it with the Thai Un and Thai Niradal, believed to have been
    celebrated during the Sangam Age. Pongal, a traditional Tamilian food item
    that has found a place in the menu of Indian restaurants across the globe,
    is perhaps the only dish to have lent its name to a festival.

    As part of the festivities, maidens of the Sangam era observed penance
    during the Tamil month of Margazhi (December-January). Throughout the
    month, they avoided milk and milk products. They would not oil their hair
    and refrained from using harsh words while speaking. The women had their
    ceremonial baths early in the morning.

    They worshiped the image of Goddess Katyayani, which would be carved out of
    sand. They ended their penance on the first day of the month of Thai
    (January-February). This penance was to bring abundant rains and
    agricultural prosperity for the country.

    Thai Niradal was a major festival during the reign of the Pallavas (4th to
    8th Century A.D.). Andal’s Tiruppavai and Manickavachakar’s Tiruvembavai
    vividly describe the festival. According to an inscription found in the
    Veeraraghava temple at Tiruvallur, the Chola king Kiluttunga used to gift
    lands to the temple specially for the Pongal celebrations.

    According to Hindu mythology, this is when the day of the gods begins,
    after a six-month long night. The festival is spread over three days and is
    the most important and most fervently-celebrated harvest festival of South
    India. A special puja is performed on the first day of Pongal before the
    cutting of the paddy. Farmers worship the sun and the earth by anointing
    their ploughs and sickles with sandal wood paste. It is with these
    consecrated tools that the newly-harvested rice is cut.

    According to a legend, once Shiva asked his bull, Basava, to go to the
    earth and ask the mortals to have an oil massage and bath every day and to
    eat once a month. Inadvertently, Basava announced that everyone should eat
    daily and have an oil bath once a month. This mistake enraged Shiva who
    then cursed Basava, banishing him to live on the earth forever. He would
    have to plough the fields and help people produce more food. Thus the
    association of this day with cattle.

    Each of the three days are marked by different festivities. The first day,
    Bhogi Pongal, is a day for the family. Surya Pongal, the second day, is
    dedicated to the worship of Surya, the Sun God. Boiled milk and jaggery is
    offered to the Sun God. The third day of Pongal, Mattu Pongal, is for
    worship of the cattle known as Mattu. Cattle are bathed, their horns
    polished and painted in bright colors, and garlands of flowers placed
    around their necks. The Pongal that has been offered to the Gods is then
    given to cattle and birds to eat.

    Legend of Pongal

    All the festivals have some interesting legends associated with it. Pongal,
    the much awaited festival of South India particularly Tamil Nadu also has
    interesting legends associated with it. The most popular legends attached
    to Pongal celebration are discussed below:

    Legend of Mount Govardhan
    The first day of the festival Bhogi Pongal has an association with legend
    of Lord Indra (the God of clouds and rains) and Lord Krishna. Earlier,
    people used to worship Lord Indra who was the King of the deities. This
    honor given to Lord Indra made him full of pride and arrogance. He thought
    himself to be the most powerful of all the beings. When child Krishna came
    to know about this he thought of a plan to teach him a lesson. He persuaded
    his cowherd friends to worship Mt. Govardhan rather than Lord Indra. This
    angered Lord Indra and he sent forth the clouds to generate non-stop
    thunder, lightning, heavy rains and flood the land. As per the tale, Lord
    Krishna lifted the huge Govardhan Parvat on his little finger to protect
    the cowherds and the cattle. He kept standing with the lifted mount to save
    all the humans from the ravaging storm of Lord Indra. The rains continued
    for three days and at last Indra realized his mistake and divine power of
    Lord Krishna. He promised humility and begged Krishna’s forgiveness. Since
    then, Krishna allowed to let the Bhogi celebrations continue in honor of
    Indra. Thus, the day gave the origin to the Pongal celebration. The
    festival got another name of Indran from this legendary story.

    Legend of Lord Shiva
    Another legend associated with the festival relates to Lord Shiva. The
    third day of Pongal known as Mattu Pongal involves Lord Shiva and his
    mount, Nandi (Basava), the bull. According to the legend, Lord Shiva once
    asked his bull to go to the Earth and deliver his message to the people to
    have an oil massage and bath daily and to eat food once a moth. Mistakenly,
    Basava announced to have an oil massage and bath once a month and to eat
    food daily. Enraged Shiva cursed Basava and said that due to this mistake
    there would be lack of grains on the Earth. He banished the bull to live on
    earth forever and help people plough the fields. Thus, Mattu Pongal has an
    association with the cattle. It is also called Kanu Pongal. The
    celebrations of the festival are similar to the festivals of Raksha Bandhan
    and Bhai Dooj of North India.

  13. திருவடியான்

    நல்லடியார்..

    பொங்கல் இந்துக்களின் பண்டிகை என்று ஒற்றுமையாக இருக்கின்ற முஸ்லிம்களைப் பிரிக்க வந்த அரபியாவில் வசியம் செய்யப்பட்டவர்கள் சொன்னது. ஒற்றுமையாக இருந்தால் எப்படி அவர்களின் பேச்சைக் கேட்கப் போகிறார்கள். எனவே தான் இந்த மாதிரியான விதண்டாவாதம் எல்லாம்.

    பொங்கல் என்பது உழைத்தவன் திருவிழா. உழைப்புக்கு மதமோ சாதியோ கிடையாது. இந்துக்கள் சூரியனுக்குப் படைத்தால், கிறிஸ்துவர்கள் யேசுக்குப் படைக்கிறார்கள். முஸ்லிம்கள் வீட்டில் பாத்தியா ஓதுகிறார்கள். அவ்வளவுதான். அரபியாக் கலாச்சாரம் அரபியாவுடன் தான் நிற்க வேண்டும். அரபியாவிலேயே யாரும் குல்லாய் போடுவதில்லை, இங்கே குல்லாய் போடாதவனை பள்ளிவாசலில் விடுவதில்லையாமே. என் முஸ்லிம் நண்பர் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

    இது கலாச்சாரம். மதத்துடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அடுத்தவரையும் குழப்பாதீர்கள். முஸ்லிம் மதம் மட்டுமே இங்கு இறக்குமதியானது. முஸ்லிம் கலாச்சாரம் அல்ல. தாங்கள் எல்லாம் தமிழ் முஸ்லிம்கள் என்று பெருமையாக இன்றும் கடல்கடந்து வாழும் நான் கண்ட தமிழ்பேசும் முஸ்லிம்கள் அத்துணை பேரும் பெருமிதத்துடன் கூறிக்கொள்கின்றனர். இதற்கிடையில் உங்கெளுக்கேன் வீண் வேலை.

  14. நல்லடியார்

    //பொங்கல் எந்த மதத்தையும் சாராதது.அதன் பெயரே உழவர் திருநாள்// – லியோ சுரேஷ்

    லியோ,

    ஒப்புக்காகச் சொல்லப்படும் வாதம் இது. மதசார்பற்றது என்றால் சூரியனுக்குப் படைப்பதும், பசுவை வணங்குவதும் இஸ்லாமியர்கள் செய்யக் கூடாதது. இவையின்றி பொங்கல் சாத்தியமா?

  15. நல்லடியார்

    //தமிழருக்கு மட்டுமான கொண்டாட்டமாக பார்ப்பது ஒரு குறுகிய கண்ணோட்டமாக தெரியவில்லையா?// – மரைக்காயர்

    மரைக்காயர்! தமிழக எல்லையோர நிலங்களுக்கு அண்டை மாநிலங்களிலிருந்தும் கூலிக்கு ஆட்கள் கொண்டுவரப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. உழவர்களுக்கு நன்றி என்றால் அனைத்து உழவர்களுக்கும் பொதுவானதுதானே? மொழியளவில் கூட ஒன்றாகக் கொண்டாட முடியவில்லை. தமிழகத்தில் பொங்கல் ஆந்திராவில் யுகாதி!!!

  16. நல்லடியார்

    //புன்னகைக்க மட்டுமே தோன்றுகிறது நல்லடியார். உங்களுக்கு நான் எதுவும் பதில் சொல்ல வேண்டியதில்லை. :-) சூரியனை இறைவனாக நினைப்பவர்கள் சூரியனை வணங்குகிறார்கள். வேறு இறைவனை வணங்குகிறவர்கள் அந்தந்த இறைவனை வணங்கிக் கொள்ளலாம்.//- G.Ragavan

    அன்பின் ராகவன்,

    உங்களிடமிருந்து பொங்கல் வாழ்த்து இல்லாத புன்னகையை ஏற்க மாட்டேன் :-(

    பொங்கல், தமிழர்களுக்குப் பொதுவான பண்டிகை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவரவர் விரும்பிய கடவுளை வணங்கி பொங்கலிட்டு பகிர்ந்தளித்து சாப்பிடுவதுபோல், அவரவர் விரும்பிய வகையில் சமைத்ததை பரிமாறிக்கொள்ள முடியுமா? மகிழ்ச்சியான நன்னாளில் சைவப் உணவை நீங்கள் விரும்பலாம்; ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தால் அசைவம்தான் :-) நீங்கள் தரும் சைவப்பொங்கலை என்னால் சாப்பிடமுடியும். ஆனால் நான் தரும் அசைவத்தை உங்களால் மனம் ஒப்பி சாப்பிடமுடியாதுதானே. இந்த நடைமுறைச் சிக்கலையும் கருத்தில் கொண்டால் பொங்கல், மதம் சார்ந்த பண்டிகையாக முன்னிருத்தப் படுகிறது.

    பொங்கல் வாழ்த்துக்கள்!

  17. நல்லடியார்

    //பொங்கல் என்பதை ஒரு உழவர்த்திருநாள் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளலாம். அழகு அவர்கள் சொல்லியிருப்பது போல, பொங்கல் பானைக்கு திருநீறெல்லாம் பூசுவது, இந்து தெய்வ உருவப்படங்களை காட்சியில் வைப்பது ஒரு பொதுவான பண்டிகையை ‘மத’ப்படுத்தும் செயலே. இதுவே முஸ்லீம்களை விலக்கிவைத்தது போல ஆகிவிட்டது தான். // – தமிழ்வாணன்

    தமிழ்வாணன்,

    சிந்தாநதிக்கு நான் சொல்ல நினைத்ததை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்!

  18. நல்லடியார்

    //பொங்கல் என்பது உழைத்தவன் திருவிழா. உழைப்புக்கு மதமோ சாதியோ கிடையாது. இந்துக்கள் சூரியனுக்குப் படைத்தால், கிறிஸ்துவர்கள் யேசுக்குப் படைக்கிறார்கள். முஸ்லிம்கள் வீட்டில் பாத்தியா ஓதுகிறார்கள். அவ்வளவுதான். அரபியாக் கலாச்சாரம் அரபியாவுடன் தான் நிற்க வேண்டும். அரபியாவிலேயே யாரும் குல்லாய் போடுவதில்லை, இங்கே குல்லாய் போடாதவனை பள்ளிவாசலில் விடுவதில்லையாமே. என் முஸ்லிம் நண்பர் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இது கலாச்சாரம். மதத்துடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அடுத்தவரையும் குழப்பாதீர்கள். முஸ்லிம் மதம் மட்டுமே இங்கு இறக்குமதியானது. முஸ்லிம் கலாச்சாரம் அல்ல. தாங்கள் எல்லாம் தமிழ் முஸ்லிம்கள் என்று பெருமையாக இன்றும் கடல்கடந்து வாழும் நான் கண்ட தமிழ்பேசும் முஸ்லிம்கள் அத்துணை பேரும் பெருமிதத்துடன் கூறிக்கொள்கின்றனர். இதற்கிடையில் உங்கெளுக்கேன் வீண் வேலை.// – திருவடியான்

    திருவடியான்,

    ஒவ்வொரு மதத்தவரும் தனித்தனியே பொங்கலைக் கொண்டாடலாம் என்றால் எப்படி பொதுவான பண்டிகை என்று சொல்ல முடியும்? உழைப்பவனும் மனிதனே என்று சமத்துவமாக நடத்தப்பட்டிருந்தால் அரேபியாவிலிருந்து இஸ்லாத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமிருந்திருக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் சிந்தனை. அரேபியாவிலிருந்து கலாச்சாரம் அவசியமில்லை என்று குறுகிய மனப்பான்மையுடன் சொல்லும் நீங்கள் தமிழரா?

  19. //மதசார்பற்றது என்றால் சூரியனுக்குப் படைப்பதும், பசுவை வணங்குவதும் இஸ்லாமியர்கள் செய்யக் கூடாதது. இவையின்றி பொங்கல் சாத்தியமா?//

    சாத்தியம் தான் .இதுவரை நான் சூரியனுக்கு படைத்ததும் இல்லை..பசுவை வணங்கியதும் இல்லை .பொங்கல் ஒரு அறுவடையின் நன்றித் திருவிழா .உழவர் திருநாள் .கிறிஸ்தவர்கள், இஸ்லாமியரும் உழவராக இருப்பவர் தானே? புத்தரிசியை பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு பகிர்ந்துண்டு ,இந்துக்கள் சூரியனுக்கோ தங்கள் கடவுளுக்கோ நன்றி சொல்ல ,கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு ,முஸ்லீம்கள் அல்லாவுக்கு நன்றி சொல்வதால் ஒன்றும் ஆகி விடாது ..அப்படியானால் ஐரோப்பியாவிலே செய்கிறார்களா ,அரேபியாவிலே செய்கிறார்களா என்று கேட்காதீர்கள் .அங்கெல்லாம் சாம்பார் சாப்பிடுவதில்லையென்று நாமும் சாப்பிடுவதில்லையே என்ன ?

    அவரவர் மத நம்பிக்கை சிதையாமல் பொங்கல் கொண்டாடுவதில் எந்த சிக்கலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை ..சூரியனுக்கு படைக்கா விட்டால் பொங்கல் ஆகுமா ?இந்துக்கள் ஏற்ற்றுக்கொள்வார்களா ? என்றால் ..அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டாயமா ? நீங்கள் உங்களுக்கு தெரிந்த வரையில் நன்றி செலுத்தி விட்டு போங்களேன் (அது தான் நாங்க தினமும் நன்றி சொல்லுறோமே -ன்னா நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல)

  20. //உழைத்தவனுக்கு வருடத்தில் ஒருநாள் “பொங்கல் வாழ்த்துக்கள்” என்று வாயளவில் சொன்னால் மட்டும் அவனை போற்றுவதாகாது! உழைப்புக்கேற்ற கூலி, வட்டியில்லா விவசாயக் கடன், தடையற்ற நீர்வரத்து இவற்றைச் செய்யாமல் வருடத்தில் ஓரிரு முறைவேஷ்டி-சேலை மட்டும் கொடுத்தால் அது உழைப்பைப் போற்றுவதாகாது. வறட்சியிலும் வறுமையிலும் வருடமெல்லாம் உழைத்தவன் வாழவழியின்றி தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு, தை மாதத்தில் மூன்றுநாள் உழவனைப் போற்றுகிறோம் என்பது ஏமாற்றுவேலை!//

    இது ஒரு சுத்த சால்ஜாப்பு .ஆப்பிரிக்காவிலே லட்சக்கணக்கான முஸ்லீம்கள் உண்ண உணவின்றி தவிக்கும் போது லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஹஜ் பயணம் செய்வது தான் ஒரு முஸ்லீமுக்கு முக்கியமா ? என்று நான் கேட்டால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

  21. //ஒப்புக்காகச் சொல்லப்படும் வாதம் இது. மதசார்பற்றது என்றால் சூரியனுக்குப் படைப்பதும், பசுவை வணங்குவதும் இஸ்லாமியர்கள் செய்யக் கூடாதது. இவையின்றி பொங்கல் சாத்தியமா?//
    பலரும் இந்த கருத்தில் வந்துதான் முட்டிக்கொள்கிறார்கள்.நான் அடுத்தவர் மத/மணத்தை புண்படுத்தாத கிருஸ்தவன் நான் பொங்கல் கொன்டாடும் பொழுது அதையெல்லாம் செய்யவேண்டிய அவசியம் இருக்காது.புத்தாடை உடுத்தி, பொங்கல் செய்து அந்த உழவர்களுக்காக
    பிரார்த்தனை செய்வோம்.இப்படித்தான் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் எதிர்ப்பார்தால் எவ்வளவு முட்டாள் தனமோ, அப்படி இருக்கிறது நீங்கள் கூறுவது.

    லியோ சுரேஷ்

  22. ✪சிந்தாநதி

    இது என்ன விதண்டாவாதம் என்று புரியவில்லை நண்பரே…

    ஆண்டு முழுவதும் பண்டிகை கொண்டாட முடியுமா? பண்டிகை என்பது ஒரு குறியீடுதான். நீங்கள் மதரீதியாக ரம்சான், பக்ரீத், முகரம் கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போல உழவர் திருநாளும் ஒரு குறியீடாக ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப் படுகிறது. இதை ஆண்டு முழுதும் நன்றி சொல்ல வேண்டாமா என்பது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?

    //மற்றபடி பொங்கல் திருநாளை மதசார்பற்று அனைவரும் கொண்டாட வழி செய்யாமல் முஸ்லிம்கள் விலகிச் செல்கிறார்கள் என்பது அபத்தம்!//

    இந்த வரிகளில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யார் உங்களை பொங்கலை மதச்சார்பற்று கொண்டாட வேண்டாம் என்று தடுப்பது? அவரவர் வழியை அவரவர்தான் தேர்ந்தெடுத்துக கொள்ள வேண்டும். ஏன் அடுத்தவரை எதிர்பார்க்கிறீர்கள்?

    உங்களால் உங்கள் மதமும், மதவாதிகளும் சொல்வது தவிர வேறொன்றை செயல்படுத்த முடியாது. அத்தனை தூரம் மதவிலங்கால் உங்களை நீங்களே பூட்டிக் கொண்டுள்ளீர்கள். அந்த விலங்கையும் பொன்விலங்காக கருதிக் கொள்கிறீர்கள்.

    இந்த நிலையில் செவிடன் காதில் சங்கு ஊதுவதால் எந்த பலனும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். மன்னிக்கவும்.

  23. மிருகவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது எனக்கு சந்தோசமளிக்கிறது. மிருகவதைப் பற்றிய உங்கள் எண்ணம், பொங்கல், ஜல்லிக்கட்டு என்பதோடு நின்றுவிடாமல் இருந்தால் சரி.

    அதைத்தவிர உங்களது வாதம் வெறும் விதண்டாவாதமாகத்தான் எனக்குப் படுகிறது.

  24. // நல்லடியார் said…
    //புன்னகைக்க மட்டுமே தோன்றுகிறது நல்லடியார். உங்களுக்கு நான் எதுவும் பதில் சொல்ல வேண்டியதில்லை. :-) சூரியனை இறைவனாக நினைப்பவர்கள் சூரியனை வணங்குகிறார்கள். வேறு இறைவனை வணங்குகிறவர்கள் அந்தந்த இறைவனை வணங்கிக் கொள்ளலாம்.//- G.Ragavan

    அன்பின் ராகவன்,

    உங்களிடமிருந்து பொங்கல் வாழ்த்து இல்லாத புன்னகையை ஏற்க மாட்டேன் :-( //

    மன்னிக்க வேண்டும் நல்லடியார். வாழ்த்து என்பது கொடுப்பவரும் பெருகின்றவரும் விரும்பி ஒப்பியிருப்பதாக இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளாத ஒரு பண்டிகைக்கு நான் வாழ்த்துச் சொல்லத் தயாராக இல்லை.

    // பொங்கல், தமிழர்களுக்குப் பொதுவான பண்டிகை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவரவர் விரும்பிய கடவுளை வணங்கி பொங்கலிட்டு பகிர்ந்தளித்து சாப்பிடுவதுபோல், அவரவர் விரும்பிய வகையில் சமைத்ததை பரிமாறிக்கொள்ள முடியுமா? மகிழ்ச்சியான நன்னாளில் சைவப் உணவை நீங்கள் விரும்பலாம்; ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தால் அசைவம்தான் :-) நீங்கள் தரும் சைவப்பொங்கலை என்னால் சாப்பிடமுடியும். ஆனால் நான் தரும் அசைவத்தை உங்களால் மனம் ஒப்பி சாப்பிடமுடியாதுதானே. இந்த நடைமுறைச் சிக்கலையும் கருத்தில் கொண்டால் பொங்கல், மதம் சார்ந்த பண்டிகையாக முன்னிருத்தப் படுகிறது. //

    ம்ம்ம்ம்….கண்டிப்பாக ஈத் திருநாளின் போது பிரியாணி கொண்டு வந்து தாருங்கள். வாங்கிக் கொள்கிறேன். உங்களோடே உட்கார்ந்து சாப்பிடவும் செய்கிறேன். எனக்குத் தயக்கமில்லை. பொங்கலன்று நான் கறிசோறுதான் தருவேன் என்பது விதண்டாவாதம்.

    சொல்ல வேண்டியதையெல்லாம் மேலே நண்பர்கள் அனைவரும் சொல்லி விட்டார்கள். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. சொல்லியும் பயனில்லை. வாய்ப்பிற்கு நன்றி.

  25. They worshiped the image of Goddess Katyayani, which would be carved out of sand. They ended their penance on the first day of the month of Thai (January-February). This penance was to bring abundant rains and
    agricultural prosperity for the country.

    A special puja is performed on the first day of Pongal before the
    cutting of the paddy. Farmers worship the sun and the earth by anointing their ploughs and sickles with sandal wood paste.

    The first day, Bhogi Pongal, is a day for the family. Surya Pongal, the second day, is dedicated to the worship of Surya, the Sun God. Boiled milk and jaggery is
    offered to the Sun God. The third day of Pongal, Mattu Pongal, is for
    worship of the cattle known as Mattu.

    The first day of the festival Bhogi Pongal has an association with legend of Lord Indra (the God of clouds and rains) and Lord Krishna. Earlier, people used to worship Lord Indra who was the King of the deities. This
    honor given to Lord Indra made him full of pride and arrogance. He thought himself to be the most powerful of all the beings. When child Krishna came to know about this he thought of a plan to teach him a lesson. He persuaded his cowherd friends to worship Mt. Govardhan rather than Lord Indra.

    The Pongal that has been offered to the Gods is then
    given to cattle and birds to eat

    மேற்காண்பவை மட்டும் பொய்யாயிருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை நம் அனைவர் வீட்டிலும் பொங்கல் வைத்து எல்லாரும் ஒன்றாயமர்ந்து, பகிர்ந்து உண்ணும் மகிழ்வில் கலந்து கொள்வதற்கு எந்த முஸ்லிமும் தயங்க மாட்டான்.

  26. நல்லடியார்

    //உழவர்களுக்கும், உழவு மாடுகளுக்கும் அது என்ன வருடத்தில் ஒருநாள் மட்டும் நன்றி? நன்றி கெட்டவர்கள்!அவர்களென்ன வருடத்தில் ஒருநாள் மட்டுமா உலகுக்கெல்லாம் உணவு வழங்குகிறார்கள்? அதனால்…ஒவ்வொரு முறையும் உண்ணும் போதும் அந்த உணவில் உழவர்களைக் கண்டு, வருடம் முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்!//அபூமுஹை

    அபூமுஹை,

    நியாயமான கேள்வி! நாம் ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் முஸ்லிம்கள் நாளெல்லாம் நன்றி செலுத்துகிறார்கள் என்பதை மற்றவர் அறிந்து கொள்ளலாமே!

    This comment is edited with correction.

  27. நல்லடியார்

    //தமிழகத்தில் பொங்கல் ஆந்திராவில் யுகாதி!!! //

    Not யுகாதி; It is Makara Sankranti
    ———
    In Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled in a pot of milk, and this festival has more significance than even Diwali. It is very popular particularly amongst farmers. Rice and pulses cooked together in ghee and milk is offered to the family deity after the ritual worship. In essence in the South this Sankrant is a ‘Puja’ (worship) for the Sun God.

    http://www.vmission.org/hinduism/festivals/sankranti/#relig

  28. நல்லடியார்

    //அவரவர் மத நம்பிக்கை சிதையாமல் பொங்கல் கொண்டாடுவதில் எந்த சிக்கலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை //

    //அவரவர் மத நம்பிக்கை சிதையாமல் பொங்கல் கொண்டாடுவதில் எந்த சிக்கலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை //

    ஜோ,

    எந்த தேவையுமற்றவன் இறைவன் என்று நம்புவதால் படையல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோம். மற்றபடி, பொங்கல் என்பது புத்தரிசியைச் சமைத்து சாப்பிடுவதுதான் என்றால், முஸ்லிம்களுக்கு ஆட்சேபனையில்லை.

  29. சிநேகிதன்

    தமிழ் நாட்டில் உள்ள, ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை மதிப்பதில்லை. இன்னும் அவர்கள் மனதளவில் பாகிஸ்தானியர்களாகவே இருக்கின்றனர்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது இந்திய வீரர் அவுட்டானால் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டத்தை கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் காணலாம். இந்தியாவுக்கு ஆதரவாக எவனாவது கைதட்டினால் அவர் தகுந்த?! முறையில் கவனிக்கப்படுவார்.

    இது போல பல உதாரணங்களை என்னால் தரமுடியும்

  30. நல்லடியார்

    //ஆப்பிரிக்காவிலே லட்சக்கணக்கான முஸ்லீம்கள் உண்ண உணவின்றி தவிக்கும் போது லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஹஜ் பயணம் செய்வது தான் ஒரு முஸ்லீமுக்கு முக்கியமா ? என்று நான் கேட்டால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?//

    உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய அறியாமை நிறைய உண்டு என்று எடுத்துக் கொள்வேன் அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடத் தெரிந்தவர் என்று எடுத்துக் கொள்வேன்.

    பொங்கல் பண்டிகையை மதக்குறீயீடு இன்றி அனைவரும் கொண்டாட முஸ்லிம்களுக்குள்ள சிரமத்தைச் சொன்னேன். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பவர்கள் இந்த ஒருமதக் குறியீடுகளை அகற்றி அனைவரும் ஒன்றாகக் கொண்டாட வழிசெய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல், முஸ்லிம்கள் விலகிச் செல்கிறார்கள் என்பது அபத்தம் என்றதற்கு, ஏன் இந்துக்களுக்காகப் பார்க்கிறீர்கள், நீங்கள் அல்லாஹ்விற்கு படையல் செய்து கொண்டு கொண்டாட வேண்டியதுதானே என்கிறீர்கள்.! (முந்தைய பின்னூட்டத்தில் இதை விளக்கியுள்ளேன்).

    நன்றித் திருநாளென்று ஏதாவது ஒருநாளில் ‘சால்ஜாப்பு’ செய்யாமல் வருடம் முழுதும் நன்றியாளர்களாக இருப்போம் என்பதில் என்ன விதன்டாவாதம் கண்டீர்கள்? எதிர்வினை செய்ய வேண்டுமென்பதர்காக சிலர்தான் விதண்டாவாதமாக எழுதுகிறீர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

  31. சுல்தான்

    [‘ஒரு பாயோட பொங்கலைப் பாழாக்கின பகுத்தறிவு’ என்ற பதிவில் என்னுடைய பின்னூட்டம். இப்பதிவுக்கும் தேவையானதாக இருப்பதால் இங்கேயும்.]

    பொங்கல் பண்டிகையை இப்போதிருக்கும் நிலையில் ஒரு முஸ்லீமால் கொண்டாட முடியாது. அவனுடைய ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையை அது தகர்க்கக் கூடிய விதமாக இருக்கிறது. அதை தமிழர் திருநாள் என்று சொல்லிக் கொண்டாலும் சரியே.

    //பொங்கல் கொண்டாடறதே தப்புன்னு ஒரு மகா தீர்ப்பை வேற வாசிச்சிருக்காரு.//
    இல்லை. அவர் சொன்னது நீங்கள் எடுத்தாண்டது போல
    //நடைமுறையில் பொங்கல் தினம் என்பது சூரிய வழிபாடு, பசு வழிபாடு என இந்து மதம் சார்ந்த தமிழர்கள் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. எனவே,பொங்கல் என்பது முஸ்லிம்களும் கொண்டாடும் பொதுவான திருநாள் அல்ல// என்றுதான்.

    //எல்லாரும், ரம்ஜான் நோம்பு, ஈத், பக்ரீத் மொதலான பண்டிகையை எல்லாம் வேற மாரிக்கா, பகுத்தறிவ ஊஸ் பண்ணீ, …. … … … …. அவங்கங்க மத வழியில வழிபட்டு கொண்டாடுவோம்னு முடிவுபண்ணி, அப்டியே ஆரம்பிச்சுட்டாங்கன்னா, உங்க நெல என்னாகும் பாய்?//

    நாங்கள் ரம்ஜானையும் பக்ரீத்தையும் தமிழரின் பொதுத்திருநாளாகவோ, அல்லது குறைந்த பட்சம் அரபித் திருநாளாகவோ கூட காட்டவில்லை. அவை இஸ்லாமியத் திருநாட்கள் என்றுதான் சொல்கிறோம்.
    எனவே, அவர்கள் அவ்வாறு கொண்டாடினால் எங்கள் நிலை என்னவாகும்? ஒன்னுமாகாது. இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை தமது மன இச்சைப்படி தப்பும் தவறுமாய் செய்வதாக சொல்வோம். அவ்வளவுதான்.

    இனி உங்கள் கவலைகளைப் பார்ப்போம்
    //1.ஒன்னுமொன்னா என்னோட பயகுற பாய்மாருங்கல்லாம், அவங்களோட பண்டிகையை கொண்டாடுறதை வுட்டுட்டா, வருஷத்தில ரெண்டு நாள் ஓசில கெடைக்கிற நல்ல பிரியாணிக்கு ஆப்புதானா?//

    நாங்கள் எங்களுக்கென்று இருக்கிற பண்டிகையை மற்றவர்களுக்காக விட மாட்டோம். மற்றவர்கள் ‘எந்தக் கடவுளுக்காகவும் படைக்காத விருந்தை’ எங்களுக்கு அளித்தால், நாங்கள் உண்பதைப் போன்றே, நாங்களும், எந்த கடவுளுக்கும் படைக்காத விருந்தை, எங்கள் நண்பர்களுக்கும், விருந்தினருக்கும் அன்புடன் வழங்குவோம்.

    //2. பாய்மார் வீட்டுலேருந்து வர்ற ‘குர்பானி’ கறிய, மண்டபத்துல வெச்சு நாங்களே சமைச்சு(?), கொள்ளிடம் சாராயம் உதவியோட தின்னு, ஒரு ரெண்டு நாளு மட்டையாகி மோட்சமடையறது எல்லாம் அப்புறம் பழங்கதைதானா//

    உறவினருக்கும் இல்லாதவர்களுக்குமாக வழங்கப்படும் கறியைக் கொண்டு இந்தாட்டம்தான் போடுறீங்களா? அந்தக்கறி சாராயத்துக்கு சாக்னாதானா? ‘தவறுக்கு துணை போவதும் தவறெ’ன்ற அடிப்படையில் இயலாத வறியவர்களை தேடிப்பிடித்து கொடுங்கள் என்று மற்றவர்களுக்கும் உபதேசம் செய்யலாம்.

    //3.அப்புறம், வருஷத்துல ஒரு நாள், ஒரு தொப்பிய ஒன்னயும் போட்டுவுட்டு, கோப்பையில கஞ்சி கொடுப்பாங்களே, அதெலாம் உட்றுவாங்களா?//
    முதல் கேள்வியோட பதில்தான்.
    மற்றவர்களுக்காக எங்கள் பெருநாட்களை நாங்கள் விட மாட்டோம்.

    //4. அட உள்ளதெல்லாம் பத்தாதுன்னு, உங்க பகுத்தறிவை… … … … கொள்கை சிங்கம் வைகோ ரேஞ்சுக்கு சொல்லிக்கிறீங்க, //ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம்//
    ஏம் பாய் இதெல்லாம் தேவையா? ஒங்களுக்கே ஓவரா தெரியலியா?//

    ஓவரா தெரியலியே! மாட்டுக்கு நன்றி செய்ய நினைத்தால், அவற்றுக்கு சிறந்த முறையில், தேவையான ஓய்வளித்து, சுகாதாரமான இடங்களில் தங்க வைத்து, அவை விரும்பும் உணவையளித்து, அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும். அதைத் தொடர்நது செய்தால் மிகவும் நல்லது.

    இது பகுத்தறிவா தெரியுதா? ஜல்லிக்கட்டுதான் பகுத்தறிவா என்று சிரிக்காமல் யோசித்தால் நல்லதில்லையா?.

    //உட்டா, ‘பாப்பனெல்லாம் கறி துன்றான். அத்தொட்ட

  32. ✪சிந்தாநதி

    புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் எல்லோரும் பொங்கல் கொண்டாடுவார்கள். குறிப்பாக மாட்டுப்பொங்கலை. ஆனால் இஸ்லாத்தில் கற்றுத்தேர்ந்த ஞானிகளான நல்லடியார்கள் எங்களை முஸ்லீம்கள் இல்லையென்று சொல்லக்கூடும்.

    – அப்துல்லா, கோட்டைப்பட்டினம்

    குறிப்பு: எனக்கு ப்ளாக்கர் கணக்கு இல்லை, இதை நல்லடியாரில் பதிவில் இட்டுவிடுங்கள்.

  33. நல்லடியார்

    //வாழ்த்து என்பது கொடுப்பவரும் பெருகின்றவரும் விரும்பி ஒப்பியிருப்பதாக இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளாத ஒரு பண்டிகைக்கு நான் வாழ்த்துச் சொல்லத் தயாராக இல்லை. பொங்கலன்று நான் கறிசோறுதான் தருவேன் என்பது விதண்டாவாதம்.//

    ராகவன்,

    உங்களின் விரக்தியான பின்னூட்டம் சற்று வருத்தமளித்தது,

    பொங்கலை மதசார்பற்று எல்லோரும் இணைந்து கொண்டாட முடியாத நடைமுறைச் சிக்கலைச் சொன்னதற்காக விதண்டாவாதம் என்றால், இறைவன் எந்தத் தேவையுமற்றவன்; படைத்தவனைத் தவிர மற்ற எதையும் வணங்கக் கூடாது என்று நம்புபவர்களிடம் பொங்கலை அல்லாஹ்வுக்குப் படையுங்கள் என்பதை என்ன ___வாதம் என்று சொல்வது?

    சைவ அசைவ உணவு பற்றி சொன்னது சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்த அல்ல.! பொங்கலை கொண்டாடவில்லை என்பதற்காக வாழ்த்தக் கூடாது என்பதுதான் உங்களின் பண்பாடு/ நாகரிகம்/கலாச்சாரம் என்றால் அந்தத் தவறை இஸ்லாம் எனக்குக் கற்றுத் தரவில்லை!

    4:86 உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

    நன்றி நண்பரே!

  34. ✪சிந்தாநதி

    நாங்கள் தமிழர்களாக இருக்க விரும்பவில்லை மதவாத முஸ்லிம்களாகவே இருப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு நன்றி

  35. மரைக்காயர்

    //நாங்கள் தமிழர்களாக இருக்க விரும்பவில்லை மதவாத முஸ்லிம்களாகவே இருப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு நன்றி – சிந்தாநதி//

    இதத்தான் நான் முன்னாடியே சொன்னேன்..
    //தமிழுணர்வு கொண்டவர்களெல்லாம் பொங்கல் கொண்டாடத்தான் வேண்டும் என்பதில்லை. பொங்கல் கொண்டாடதவர்களெல்லாம் உழவுத்தொழிலை மதிக்காதவர்கள் என்பதும் இல்லை. // என்று.

    பொங்கல் கொண்டாடாவிட்டாலும் நாங்கள் தமிழர்கள்தான்.

    முஸ்லிம்களுக்கு ஏற்கனவே இருக்கும் பட்டங்கள் போதாது என்று – வகாபிஸ்ட், ஜிகாதிஸ்ட், இஸ்லாமிஸ்ட், அடிப்படைவாதி இத்யாதி இத்யாதி – இப்போது ‘தமிழரல்லாத மதவாத முஸ்லிம்’ என்ற புதிய பட்டம் ஒன்று தந்த சகோதரர் சிந்தாநதி அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்!

    பொங்கல் வாழ்த்துக்கள்!

  36. நல்லடியார்

    //தமிழ் நாட்டில் உள்ள, ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை மதிப்பதில்லை. இன்னும் அவர்கள் மனதளவில் பாகிஸ்தானியர்களாகவே இருக்கின்றனர்.//

    பண்டைய கலாச்சாரங்களில் 1,2,3… என எடுத்து விடுங்களேன். அதை யாரெல்லாம் மதிக்கிறார்கள், யாரெல்லாம் மிதிக்கிறார்கள் என்று தனிப்பதிவாக விவாதிப்போம். அப்புறம் தெரியாமத்தான் கேட்கிறேன், முஸ்லிம்கள் எதையாவதுச் செய்தால் பழமைவாதிங்கள் என்கிறீர்கள். அப்ப பண்டைய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களெல்லாம் பழமைவாதிகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

    //இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது இந்திய வீரர் அவுட்டானால் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டத்தை கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் காணலாம். இந்தியாவுக்கு ஆதரவாக எவனாவது கைதட்டினால் அவர் தகுந்த?! முறையில் கவனிக்கப்படுவார். //

    விளையாட்டை விளையாட்டாக மட்டும் ரசிக்கத் தெரிந்தவர்கள்.

  37. நல்லடியார்

    //நாங்கள் தமிழர்களாக இருக்க விரும்பவில்லை மதவாத முஸ்லிம்களாகவே இருப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு நன்றி //

    சிந்தாநதி,

    நீங்க சிந்திய முத்துக்களில் கொஞ்சம் எடக்குமுடக்கான சிந்தல் இது. நீங்களெல்லாம் விதாண்டாவாதம் பற்றி பேசுகிறீர்கள்.

    தமிழனாக இருக்க முஸ்லிமாக இருக்கக் கூடாது என்பதுதான் உங்களின் நிலைப்பாடா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன்! என்று எந்த மதவாத முஸ்லிமும் சொல்லி வைக்கவில்லை என்பதை அறிவீர்களோ? மொழியால் தமிழன்; மதத்தால் முஸ்லிம், தேசத்தால் இந்தியன். இனத்தால் மனிதன்! இதைச் சொல்ல எமக்கு என்றுமே வெட்கமில்லை.

    நன்றி மீண்டும் வருக!

  38. திருவடியான்

    //யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் சிந்தனை. அரேபியாவிலிருந்து கலாச்சாரம் அவசியமில்லை என்று குறுகிய மனப்பான்மையுடன் சொல்லும் நீங்கள் தமிழரா?//

    “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.” —
    பாவேந்தர்.

  39. சிநேகிதன்

    ////இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது இந்திய வீரர் அவுட்டானால் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டத்தை கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் காணலாம். இந்தியாவுக்கு ஆதரவாக எவனாவது கைதட்டினால் அவர் தகுந்த?! முறையில் கவனிக்கப்படுவார். //

    “விளையாட்டை விளையாட்டாக மட்டும் ரசிக்கத் தெரிந்தவர்கள்.”

    இதிலிருந்தே உங்களின் இன வெறி பளிச்சிடுகிறது

    விளையாட்டில் கூட நாட்டுப்பற்று இல்லாத உங்களிடம் எப்படி தமிழினப்பற்றை எதிர்பார்ப்பது.

    உங்களைப் போன்ற ஆட்கள் இருக்கும் போது சிவவேனா, விஸ்வஹிந்து பரிஸத் போன்ற அமைப்புகளை இருப்பதிலும் அவர்களின் நடவடிக்கைகளிலும் தவறில்லை என்றுமே தோன்றுகிறது.

  40. சிநேகிதன்

    //தமிழுணர்வு கொண்டவர்களெல்லாம் பொங்கல் கொண்டாடத்தான் வேண்டும் என்பதில்லை. பொங்கல் கொண்டாடதவர்களெல்லாம் உழவுத்தொழிலை மதிக்காதவர்கள் என்பதும் இல்லை.//

    பொங்கல் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் படையெடுப்புகளுக்கு முன்னரே நம் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் (சேர,சோழ பாண்டியர் காலத்தில் கூட) கொண்டாடப்பட்ட திருநாள். இது நம்மை வாழவைக்கும் வாழும் தெய்வங்களுக்கு நாம் செய்யும் வழிபாடு என்றே சொல்லலாம். இதற்கு எந்த இன, மத வேறுபாடும் கிடையாது.
    உண்மையான தமிழர்கள் இதை இன்றும் கொண்டாடுகின்றனர். முஸ்லீம் மன்னர்களுக்கும், வெள்ளைக்காரனுக்கும் பயந்து மதம் மாறியவர்கள் வேண்டுமானால் இதை கொண்டாட விரும்பாமல் இருக்கலாம்.

    அப்படி இருப்பவர்களிடம் தாய்நாட்டுப்பற்றையோ ஏன் தாய்பற்றையோ எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே இவர்களிடம் விவாதித்து மற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  41. //ஏற்றுக்கொள்ளாத ஒரு பண்டிகைக்கு நான் வாழ்த்துச் சொல்லத் தயாராக இல்லை. //

    ஜி.ராகவன் என்கிற பண்பாளர் சறுக்கிய இடமாக இது எனக்குத் தெரிகிறது.

    தீபாவளியை முஸ்லிம்களோ, ரம்ஜானை பிராமணர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக வாழ்த்துக்களை பரஸ்பரம் சொல்லிக்கொள்ளக் கூடாதா ராகவன்?

    புத்தரிசி இட்டுப் பொங்கலிட்டு (Creatorஐ மட்டுமே வணங்கவேண்டும் என்ற தம்கொள்கைக்கு பாதகம் வராமல்) Creationகளை வணங்காமல் பொங்கலைக் கொண்டாட முஸ்லீம்கள் ரெடி என்று தான் சொல்கிறார்கள்.

    ஆனால் அதை பொங்கல் என்று ஒத்துக்கொள்ளப்படுமா?

  42. ✪சிந்தாநதி

    //மொழியால் தமிழன்; மதத்தால் முஸ்லிம், தேசத்தால் இந்தியன். இனத்தால் மனிதன்! இதைச் சொல்ல எமக்கு என்றுமே வெட்கமில்லை.//

    இதை நீங்கள் மனதார கடைப்பிடித்தால் பிரச்சினை ஒன்றுமே இல்லை.

    நானும் இதையே தான் கூறி வருகிறேன். மொழியால் தமிழன் என்பதை அடையாளப் படுத்த, தமிழர்கள் ஒன்று கூட, இந்தப் பண்டிகையை நான் பயன்படுத்திக் கொள்வோமே என்றுதான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். நீங்களோ அது இந்துக்களால் கொண்டாடப் படுவதால் இந்துப் பண்டிகை என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறீர்கள்.

    மொழியால் தமிழன் என்று வெறும் வாயால் முழம் போட்டால் போதுமா? தமிழர்களோடு ஒருங்கிணைய இருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தூக்கி எறியும் உங்களால் எப்படி தமிழன் என்று மனதார கூற முடியும்.

    இதற்கு நீங்கள் மறுபடியும் இந்துப் பண்டிகையை நாங்கள் கொண்டாடா விட்டால் தமிழன் அல்ல என்று சொல்கிறாயா என்றுதான் பதில் தருவீர்கள். அதை இந்துப் பண்டிகை என்று நினைப்பதை முதலில் விடுங்கள். அதை மதச்சார்பற்ற தமிழர் திருவிழாவாக்க உங்கள் ஒத்துழைப்பையும் தாருங்கள் என்றுதானே கேட்கிறோம். அனைவரும் பொதுவில் கொண்டாடும்போது பொங்கல் முழுவதுமாக மதச் சடங்குகளிலிருந்து விடுபட்டு விடும்.

    ஒரு ஒருங்கிணைப்பிற்கான மகிழ்ச்சித் திருவிழா, அதற்கான ஒரு நாள் அதை உருவாக்க துணைவர முடியுமா உங்களால்?

    மறுபடியும்
    ஆண்டு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவையில்லையா? ஒருநாள் ம்ட்டும் போதுமா? என்றொரு கேள்வி உங்களிடமிருந்து வருமெனில்
    இந்த நாளை உலகின் மிக சபிக்கப் பட்ட தினமாக நான் கருதிக் கொள்கிறேன். நன்றி.

  43. வாசகன்

    //நிச்சயமாக மனிதன் நன்றி மறந்தவனாகவே இருக்கிறான்; மனிதருக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவானாக மாட்டான். இவையெல்லாம் குர்ஆனிலும் நபி மொழிகளிலும் சொல்லப்பட்டுள்ள அறவுரைகள்.

    சாதாரணமாக அருகிலிருப்பவர் தும்மியதற்கு “அல்ஹம்துலில்லாஹ்” (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!) என்று சொன்னவருக்கு “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உனக்கு அருள் பாலிப்பானாக!) என்று பரஸ்பரம் நன்றி சொல்லிக் கொள்வதை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது.

    அதே போல் தமிழர் பண்பாட்டிலும் நன்றி செலுத்துவது தலையாய பண்பாடாக இருக்கிறது. செய்நன்றியறிதல் என்று திருக்குறளிலும் தனி அதிகாரம் உண்டு, இன்னும் பல தமிழர் இலக்கியங்களிலும் நன்றியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நன்றி மறந்தவனை “நன்றி கெட்ட நாயே” என்று விளிப்பதன் மூலம் நன்றி செய்வதன் அவசியத்தை தமிழன் எந்த அளவு முன்னிலைப்படுத்தியுள்ளான் என்பது விளங்கும்.

    தமிழில் “நன்றி” என்கிறோம். அதையே ஆங்கிலத்தில் (Thanks) தாங்ஸ் என்கிறோம். இந்தி/உருது/அரபியில் சுக்ரியா/சுக்ரன் என்கிறோம். இதே போல் அனைத்து மொழிகளிலும் நன்றிக்கு வெவ்வேறான வார்த்தைகள் உண்டு. சீனர்களும் ஜப்பானியர்களும் நன்றி என்று வாயளவில் சொல்வதோடு உடலை வளைத்து செய்கையாகவும் சொல்வர்.

    உண்மையில் நன்றி என்பது என்ன? வாயாளவிலும் உடலளவிலும் சொல்லி விட்டால் உண்மையான நன்றியாகி விடுமா என்பதையும் அறிந்து கொண்டால் “நன்றி” செலுத்துவதற்கு இஸ்லாம் வரையறுத்திருக்கும் இலக்கணம் எல்லோருக்கும் பாரபட்சமின்றியும் அறிவுப்பூர்வமாகவும் உண்மையாகவும் இருப்பது புலப்படும்.

    நன்றி என்பது ஒருவர் செய்த உதவிக்கு ஈடாக அதே அளவு மறு உதவி செய்வது அல்லது அதை விட அதிகமான உதவியைச் செய்வதாகும்.

    மனிதர்களுக்குள் இப்படி பரஸ்பரம் உதவி செய்து கொள்வதை நன்றி என்று சொல்கிறோம். பொங்கல் திருநாளை தமிழர்கள் சூரியனுக்கும், பூமிக்கும், உழவனுக்கும், உழவுக்கு உதவியாக இருந்த மாட்டிற்கும் நன்றி செலுத்துவதாகச் சொல்கிறோம். இதை தமிழ் இந்துக்கள் கொண்டாடுவது போல் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஏன் கொண்டாடுவதில்லை என்று கேட்கின்றனர்.

    கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதனை ஏற்றுக் கொண்டால்தான் முஸ்லிம். படைத்து பரிபாலித்து, இறக்கச் செய்து பிறகு உயிர்த்தெழச் செய்பவன் அல்லாஹ்வே என்றும் அவனே செலவத்தையும், இன்பத்தையும் அதேபோல் சோதனைகளையும், துன்பத்தையும் தருபவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை.

    பொங்கல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உதவிய மழை, சூரியன், காளை மாடு ஆகியவற்றிற்கு இந்த நாட்களில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளில் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது.இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. கானும் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்றாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள். (பார்க்க : http://uyirppu.yarl.net/archives/000190.html )

    பொங்கலை உழவுக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படும் பண்டிகை என்று சொல்லி விட்டு நம்மில் எத்தனை பேர் உழவர்களுக்கு சரியான கூலியை வழங்குகிறோம்? மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப்படுத்துகிறோம். இதுவா உழவுக்கு உதவிய

  44. பெத்த ராயுடு

    //
    ‘இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்)
    நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்:)
    உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்)
    அதற்கான நற்பலன் கிடைக்கும்”
    என்று கூறினார்கள் (புகாரி-6009)//

    குர்பானி இறைச்சிக்காக பலியிடப்படும் மிருகங்களுக்கும் இது பொருந்துமா?

    நீங்க கேரள முஸ்லீம்கள் ஓணம் கொண்டாடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    அதுவும் தவறா?

  45. அசுரன்

    இந்த விவாதத்தில் பங்கேற்க்கும் எண்ணமில்லை. ஆயினும் நண்பர் We The People-யை தற்பொழுது நான் கண் வைத்துள்ளேன் எனவே அவரிடம் இந்த கேள்வியை கேட்க்க வேண்டும்.

    ////படைத்தவன் இல்லை என்று சொல்வதே பகுத்தறிவு??!! உங்களுக்காக ஏர் சுமந்து, வியர்வை சிந்தி, தன் உழைப்பை கொடுக்கும் உங்களுக்கு உணவு பயிரிட உதவும் மாடுக்கு எந்த வகையில் நீங்க கூலி தருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?? – We The People

    //

    சரி We The People உழவர்களுக்கு நீங்கள் எப்படி கூலி கொடுக்கிறீர்கள்? அவர்களின் பிரச்சனை குறித்து உங்கள் பதிவுகள் பேசிய மாதிரி தெரியவில்லையே? இந்திய(or இந்து) தேசியவாதம் சம்ப்ந்தப்பட்ட விசயம் எனில் முன் வந்து கருத்து சொல்லும் நீங்கள், அதே இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விசயத்தில் மட்டுமே கருத்து சொல்கிறீர்களே அவர்களின் பிரச்சனைக்கு என்ன பதிவு எழுதியிருந்தீர்கள்?

    பொங்கல் கொண்டாடுவதுதான் கூலி கொடுப்பதா? நன்றீ செலுத்துவதா? உழவன் என்ன திருப்பதி கடவுளா? ஒன்னத்துக்கும் உதவாத மயிரை கொண்டு போய் போட்டுவிட்டால் கழுத கடன் முடிஞ்சது என்று அவனும் நாமும் சும்மா இருப்பது போல விவசாயியால் இந்த பொங்கல் பண்டிகையில் கிடைக்கும் நன்றியை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியுமா? ஏன் சமீப காலங்களில் சிறு நகரங்களில் பொங்கல் விமர்சையாக கொண்டாடப்படுவதில்லை? விவசாய பொருளாதாரத்தின் வீழ்ச்சியா? அப்படியெனில் நாம் செலுத்தக் கூடிய நன்றி என்பது அந்த பொருளாதார வீழ்ச்சிக்கான தீர்வாகத்தானே இருக்க வேண்டும்? அதை செய்து கொண்டே பொங்கலை கொண்டாடும் நேர்மையான உள்ளங்கள் இருந்தால் அவர்கள் முறூக்குடன் பேசலாம். அதை விடுத்து இந்தியா ராக்கேட் விட்டாலே வல்லராசாகிவிடும் என்று கதை விட்டுக் கொண்டு நன்றி, விசுவாசம், நேர்மை, தேசப் பற்று என்று கதை விடக் கூடாது.

    கூலி குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியதால் நானும் பதிலுக்கு எழுப்ப வேண்டியதாகிவிட்டது…

    அசுரன்

  46. மரைக்காயர்

    //சிநேகிதன் said…
    பொங்கல் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் படையெடுப்புகளுக்கு முன்னரே நம் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் (சேர,சோழ பாண்டியர் காலத்தில் கூட) கொண்டாடப்பட்ட திருநாள். இது நம்மை வாழவைக்கும் வாழும் தெய்வங்களுக்கு நாம் செய்யும் வழிபாடு என்றே சொல்லலாம். //

    இத..இத..இதத்தான் முஸ்லிம்களும் அப்போதிலேருந்தே சொல்லிக்கிட்டிருக்காங்க. வழிபாடு என்பதால்தான் முஸ்லிம்களால் பொங்கல் கொண்டாட முடிவதில்லை.

    //இதற்கு எந்த இன, மத வேறுபாடும் கிடையாது.//

    என்னங்க.. இப்பத்தான் சொன்னீங்க இது தெய்வ வழிபாடு என்று. அடுத்த வரியிலேயே பல்டி அடிச்சுட்டீங்களே!

    //உண்மையான தமிழர்கள் இதை இன்றும் கொண்டாடுகின்றனர். //

    அப்படின்னா பொங்கல் கொண்டாடாதவங்கள்லாம் பொய்யான தமிழர்களா?

    //முஸ்லீம் மன்னர்களுக்கும், வெள்ளைக்காரனுக்கும் பயந்து மதம் மாறியவர்கள் வேண்டுமானால் இதை கொண்டாட விரும்பாமல் இருக்கலாம்.//

    சமீபத்தில் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்த சிறந்த ஜோக்குகளில் ஒன்று இது :-)) ரொம்ப நன்றி.

    //அப்படி இருப்பவர்களிடம் தாய்நாட்டுப்பற்றையோ ஏன் தாய்பற்றையோ எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை. //

    இது இன்னொன்று. :-))

    //எனவே இவர்களிடம் விவாதித்து மற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.//

    மக்களே, கேட்டுக்கிட்டீங்களா?

  47. மரைக்காயர்

    வெற்றிகரமாக அரைசதம் அடித்து (அட.. பின்னூட்டத்திலேங்க..) தொடர்ந்து அடிச்சு ஆடிக்கொண்டிருக்கும் நல்லடியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    :-)

  48. விஷ்வா

    நல்லடியாருக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

    விரைவில் எல்லா முஸ்லிம்களும் பொங்கல் கொண்டாடி தமிழர் திருநாளை போற்ற அந்த அல்லாவிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html

  49. ///
    //
    ‘இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்)
    நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்:)
    உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்)
    அதற்கான நற்பலன் கிடைக்கும்”
    என்று கூறினார்கள் (புகாரி-6009)//

    குர்பானி இறைச்சிக்காக பலியிடப்படும் மிருகங்களுக்கும் இது பொருந்துமா? ///

    பொருந்தாது.
    உணவுக்காகவோ, தன் உயிர் பாதுகாப்புக்காகவோ அல்லாமல் உயிர்களைக் கொல்லக்கூடாது என்பது இஸ்லாம் கொள்கை.

    குர்பானி இறைச்சியாக இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கினை ஏழை எளியவர்களுக்குத் தான் வழங்கியாகவேண்டும். இன்னொரு மூன்றிலொரு பங்கினை உற்றம் சுற்றத்துக்கு வழங்கியாக வேண்டும்.

  50. ///சிநேகிதன் said…

    “விளையாட்டை விளையாட்டாக மட்டும் ரசிக்கத் தெரிந்தவர்கள்.”

    இதிலிருந்தே உங்களின் இன வெறி பளிச்சிடுகிறது

    விளையாட்டில் கூட நாட்டுப்பற்று இல்லாத உங்களிடம் எப்படி தமிழினப்பற்றை எதிர்பார்ப்பது. ///

    அய்யா சிநேகிதரே!
    “டெண்டுல்கர்லாம் என்னத்தய்யா வெளையாடுறான், லாரா மாதிரி வருமா? என்று சொல்கிற நண்பரை
    உங்களிடம் அதிகாரம் வரும் காலத்தில் தே.பா.சட்டத்தில் காராக்கிருகத்தில் அடைத்து விடுவீர்கள் போல:_))

    ‘விளையாட்டு’க்கு தேசபற்று இருக்கக்கூடாதுங்க, உண்மையான தேசபற்று இருக்கோணும்.

  51. நல்லடியார்

    //விளையாட்டை விளையாட்டாக மட்டும் ரசிக்கத் தெரிந்தவர்கள்.”இதிலிருந்தே உங்களின் இன வெறி பளிச்சிடுகிறது விளையாட்டில் கூட நாட்டுப்பற்று இல்லாத உங்களிடம் எப்படி தமிழினப்பற்றை எதிர்பார்ப்பது. //

    அட! கிரிக்கெட் விளையாட்டின் மூலம் நாட்டுப்பற்று வருமா? ‘பொங்கல் கிச்சுகிச்சு’ன்னு தனி பதிவே போடலாம் போலிருக்கு! கிரிக்கெட்டில் நாட்டுப்பற்று; டென்னிசில் பெண்ணுரிமை! சும்மா விளையாடாதீங்க சினேகிதன்!

    //உங்களைப் போன்ற ஆட்கள் இருக்கும் போது சிவவேனா, விஸ்வஹிந்து பரிஸத் போன்ற அமைப்புகளை இருப்பதிலும் அவர்களின் நடவடிக்கைகளிலும் தவறில்லை என்றுமே தோன்றுகிறது.//

    கிரிக்கெட்டில் கூட நாட்டுப்பற்று வருமென்றால், கிரிக்கெட் மைதானத்தை சூலாயுதங்களால் ஏன் சிவசேனா உழுதது? தேசபக்தர் தொகாடியா திரிசூலம் கொடுத்ததற்குப் பதிலாக கிரிக்கெட் ஸ்டெம்ப்ஸ் கொடுத்திருக்கலாமே?

  52. மரைக்காயர்

    //உங்களைப் போன்ற ஆட்கள் இருக்கும் போது சிவவேனா, விஸ்வஹிந்து பரிஸத் போன்ற அமைப்புகளை இருப்பதிலும் அவர்களின் நடவடிக்கைகளிலும் தவறில்லை என்றுமே தோன்றுகிறது.//

    சினேகிதன் சார், சிவசேனாவை ஏன் நீங்க ‘சிவவேனா’ன்னு எழுதியிருக்கீங்க? இந்த
    இயக்கம் நம்ம நாட்டுக்கு ‘வேணா’ம்னுதானே? ;-)

  53. நல்லடியார்

    இத்தலைப்புடன் தொடர்புடைய தருமியின் பதிவில் பின்னூட்டியது. January 20, 2007 11:20 AM
    ===
    தருமி,

    பொங்கல் பற்றிய முஸ்லிம்களின் கண்ணோட்டமாக நான் எழுதியதில் எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. தற்காலப் பொங்கல் முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடும் வகையில் அதன் கொண்டாட்டங்கள் இல்லை என்பது முதற்காரணம். அதற்கான என் தரப்பு வாதங்களையே வைத்தேன்.

    உழவர்களுக்கு நன்றி செலுத்தவே பொங்கல் பண்டிகை என்றால், உழவர்களுக்கு நன்றி செலுத்த இஸ்லாம் குறிப்பிட்ட நாளை/நாட்களை வரையறுக்கவில்லை. மேலும் இஸ்லாமியப் பண்டிகைகளில் அனைத்து நிலையிலுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நோன்புப் பெருநாளை ஈகைத் திருநாள் என்கிறோம். ஒருமாதம் நோன்பிருந்து பசித்திருக்கும் ஏழை உழவனின் நிலையை உணர்ந்து ஏழைகளுக்கு(ம் உழவர்களுக்கும்) தர்மம் செய்து, பெருநாள் அன்று ஃபித்ரா எனும் பெருநாள் பரிசு/அன்பளிப்பு கொடுத்து தமிழர்கள் என்று சகோதரத்துவத்தைக் குறுகிய வட்டத்திற்குள் அடக்காமல் ‘மனிதர்கள்’ என்று பரந்த மனப்பான்மையுடன் மக்கள் அனைவரும் பொதுவாகக் கொண்டாட தடையாக இருப்பது எது? இதனைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா? அல்லது தமிழனின் பண்பாட்டிற்கு இது ஒத்துவராதா? என்பதை தெளிவு படுத்துங்கள்.

    பெரும்பாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வசைபாடும் பிறபதிவுகளில் இஸ்லாம், அவர்களின் வழிபாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் அச்சுருத்தலாக இருக்கிறது என்பார்கள். மாறாக, பொங்கல் விசயத்தில் மட்டும் இஸ்லாம்/முஸ்லிம்கள் வலிந்து அழைக்கப்படும் காரணம் என்னவாக இருக்கும்? (முஸ்லிமாக இருப்பதை விட தமிழராக இருப்பதே சிறந்தது என்பதற்காகவோ என்னவோ?) முஸ்லிமாக இருப்பவர்கள் தமிழராக இருக்க முடியாதா? தமிழனாக இருந்தால் தெய்வ நம்பிக்கை கூடாதா? ஒன்றுமே புரியவில்லை! எனில், நாங்களெல்லாம் தமிழுக்கு எதிராகச் செய்த கலாச்சார சீரழிவுகள் யாவை?

    மேலும், தமிழனின் பண்பாடுகளில் ஒன்று பிறன்மணை நோக்காமை! இதற்கு வகைசெய்யும் பர்தாவை தமிழர்கள் அனைவரும் ஏற்று இதிலும் தமிழ் கலாச்சாரத்தைக்/பண்பாட்டைக் காக்கலாமே? முன்வருவார்களா?

    மது,சூது,கொலை, களவு பாவம் என்பதும் தமிழர் பண்பாடுதான். இதனை அழுத்தந்திருத்தமாக இஸ்லாம் தடுக்கிறது என்பதை தமிழ் பண்பாட்டு/கலாச்சாரக் காவலர்கள் அறிவார்கள்களா?

    இப்படி தமிழ்க்கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்க, இஸ்லாத்தில் ஏகப்பட்ட வழியுண்டு. விடுத்து, பொங்கலன்று மட்டும் தமிழ் கலாச்சாரத்தைக் காக்க வேண்டுமா?

    பி.கு: பெரும்பாலும் உங்கள் பதிவில் பின்னூட்டமிட விரும்பாதற்குக் காரணம் புதிய புதிய அணானிகளை அனுமதித்து சொல்லவந்த விடயத்தை/ வாதத்தை திசை திருப்ப வழிவகுப்பதாலேயே. மற்றபடி உங்களின் இப்பதிவில் சொல்லியுள்ள இஸ்லாம் சம்பந்தப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்பிருந்தால் என்பதிவில் பதிலளிக்கிறேன்.

    பொங்கல் வாழ்த்துக்கள்! (நீங்களும் இதை சகோ.G.ராகவன் போல் திருப்பியனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!:-)

    அன்புடன்,

  54. பசுவை வெட்டிச் சாப்பிடத்தான் இஸ்லாம் சொல்கிறது.
    பிஸ்மில் சொல்லி வெட்டவேண்டும் அது பாவமில்லை.

  55. arun said :

    உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல்
    I am said :

    Asthahfirullah, ulagukku unavu tharubavan aega iraivan ALLAH vai thavira yarummillai.

    ulavan unavu tharukiran enkireergalae. naam uduththum aadaiyai yaar yaaro thayarikkirargal. avargalukkena YEAN VIZA edukkakoodathu.

    உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம்.

    so neengal kuuriyathil thavarillai.

  56. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

    அன்புநிறை இஸ்லாமிய சொந்தங்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.(4:48)

    எனினும், நீங்களோ இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் மறுமையே சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (87:16,17)

    சமீபகாலமாக நாம் நம்பிக்கை கொள்ளாத செயலுக்காக, மார்க்கம் அனுமதிக்காத விஷயங்களுக்காக வாழ்த்து தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிப்பாத உள்ளது. நமது உயிரினும் மேலான ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் ஆழுகையின் கீழ் வாழ்ந்த யூத, நஸராக்களின் திருவிழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஒரு ஆதாரமும் இல்லை மாறாக அல்லாஹூத் தஆலா திருக்குர்ஆன் வழி,

    (நபியே!) நீர் சொல்வீராக: இறை நிராகரிப்பாளர்களே!
    நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
    இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
    அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
    மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
    உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.(109 : 1–9)
    என கட்டளையிட்டதை எந்த ஒரு சமரசத்திற்கும் இடமின்றி செயல்படுத்தி சென்றார்கள்.

    பிறந்த நாள், திருமண நாள் போன்ற பிற மதத்தினரின் மதம் சாரா கொண்டாட்டங்களை கூட நம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகவே இஸ்லாமியர்களாகிய நாம் அங்கீகரிக்கப்பதில்லை மேலும் திருவிழாக்களின் பெயரால் பிற மத சகோதரர்கள் அன்புடன் வழங்கும் உணவையும் நாம் உண்பதில்லை. நம் இஸ்லாத்தின் பெயரால் நுழைக்கபட்டுள்ள எத்தனையோ புதிய அனுஷ்டானங்களுக்கு நாம் வாழ்த்து சொல்லாததுடன் கண்டிக்கவும் செய்கிறோம். அவ்வளவு ஏன் மார்க்கம் நமக்கு அனுமதித்துள்ள இரு பெருநாட்களுக்கென்று கூட ரஸூல் (ஸல்) அவர்கள் பிரத்தியேக எந்த வாழ்த்தையும் நமக்குக் கற்றுத் தரவில்லை. ஈத் முபாரக் என்ற சொல் கூட நடைமுறை வாழ்த்தே தவிர இஸ்லாம் அல்ல ஆனால் அனைத்து சந்தோஷ தருணங்களுக்கும் பொருந்தும் தகப்பலல்லாஹூ மின்னா வ மின்கும் அமலன் ஸாலிஹா என்ற நபிவழி வாழ்த்து மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலம் விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்hடல் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வரவேற்போரையும், சமத்துவ பொங்கல் கொண்டாடுவோரையும் நாம் எந்த அளவுகோலின் கீழ் கொண்டு வருகின்றோமோ அதே அளவுகோல்கள் பிற மத பண்டிகை வாழ்த்துக்களுக்கும் பொருந்தும். வாழ்த்துக்கள் தெரிவிப்பதை செயல் அல்ல வெறும் வார்த்தைகள் என்று பிரித்து பார்க்கக்கூடாது.

    யார் எந்தச் சமுதாயத்தை பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்களும் அந்தச் சமுதாயத்தை சேர்ந்தவர்களே என ரஸூல் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். (நூல் : அபூதாவூது)

    சகோதரர்களே! பயங்கரவாத சங் பரிவாரங்கள் விரும்பும் தேசிய நீரோட்ட ச(க)திக்குள் சிக்க முயற்சிக்காதீர். கட்டாயமாக வற்புறுத்தப்பட்டு வரும் வந்தே மாதரம் பாடலுக்குப் பின் தற்போது வணக்கம் என்ற சொல் கூட முஸ்லீம்களும் பயன்படுத்தலாம் தவறில்லை என்று துவங்கப்பட்டுள்ள மூளைச்சலவையின் தொடர்ச்சியே ஒவ்வொன்றாக புகுத்தப்பட்டு வரும் காவித்துவத்தின் பாரிணாம வளர்ச்சி.

    தூய இஸ்லாம் தனது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதை, வளைந்து கொடுப்பதை அனுமதிக்காது என்பதை நாம் அனைவரும் அறியாமலில்லை. சங்கங்களின் பெயரில், நட்பின் பெயரில், சகோதரத்துவத்தின் பெயரில் நம் மார்க்கம் ஒருகாலும் ஒப்புக் கொள்ளாத, நாம் ஏற்றுக் கொள்ளாத விஷயத்திற்காக போலியான வாழ்த்தை ஏன் தெரிவிக்க வேண்டும்? வாழ்த்து போலி இல்லை என்றால் நாம் யார் என்பதை கீழ்க்காணும் எச்சரிக்கைகள் அடையாளம் காட்டும்

    உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர் – இறையச்சமுள்ளவர்களைத் தவிர (43:67)

    ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள். நூற்கள் : அபூதாவூது, திர்மிதி

    நம்முடன் நெருக்கமாக பழகும் பிற மத சகோதரர்கள் நம்மிடம் இது குறித்து வினவுவார்களேயானால் இஸ்லாத்தின் கொள்கையை தெளிவாக எடுத்துச் சொன்னால் நட்பு வேறு இஸ்லாமிய கொள்கை பிடிப்பு வேறு என்பதை அவர்களும் புரிந்து கொள்வார்கள் இதனால் இஸ்லாத்தின், ஓரிறைக் கொள்கையின் மதிப்புத் தான் இன்ஷா அல்லாஹ் உயருமே தவிர மாறாக நம் உள்ளங்கள் அவஸ்தை படுவதுபோல் அல்ல.

    நம்முடன் பணிபுரியும் பிற மத சகோதரர்களிடம் நீதமாகவும் சகோதர வாஞ்சையுடனும் நடந்து கொள்ளல், எனது அனுபவத்தில் துபையில் காணப்படும் நிலைக்கு மாற்றமாக அவர்களுடன் தங்குமிடத்தை பகிர்ந்து கொள்ளல், சிரமமான நேரங்களில் உற்ற தோழனாய் உதவுதல், சாதாரண காலங்களில் சேர்ந்து உணவருந்துதல் என இஸ்லாம் போதிக்கும் இனிய பண்புகளை நம் வாழ்வில் நடைமுறைபடுத்துவதன் மூலமாக, நம்முடைய மார்க்க கடமைகளை அனுஷ்டானங்களை நம்பிக்கைகளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு எடுத்து சொல்வதன் மூலமாக, அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களும் விளங்கிக் கொள்ள உதவுவதன் மூலமாக நம்மைப் பற்றி, நமது மார்க்கத்தைப் பற்றி அவர்கள் குதர்க்கமின்றி புரிந்து கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்.

    எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:39)

    என்ற வசனத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவுறுத்தியவனாக நிறைவு செய்கின்றேன்.

    அமீரகத்திலிருந்து
    அதிரைஅமீன்

  57. தவறான கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *