Featured Posts

அல்லுஃலுவு வல்மர்ஜான்

குர்ஆன் ஏழு வட்டார முறைகளில் அருளப்பட்டது..

468. ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம் (ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்ற அங்கி)யை …

Read More »

பொறாமை கொள்ளும் இரு விஷயங்கள்..

466. இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :7529 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 467. ‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் …

Read More »

சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

465. ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 4008 அபூ மஸ்ஊத் (ரலி)

Read More »

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், …

Read More »

குர்ஆனை ஓதுவதில் சிறந்தவரிடம் ஓதக்கூறுதல்..

462. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, ‘வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..” என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), ‘என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்க, நபி (ஸல்) …

Read More »

குர்ஆனை மனனம் செய்தவரின் சிறப்பு..

460. குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நார்த்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் …

Read More »

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) …

Read More »

மக்கா வெற்றி போது ஓதிய குர்ஆனிய வசனங்கள்..

457. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி ‘அல்ஃபதஹ்’ என்னும் (48-வது) அத்தியாயத்தை ‘தர்ஜுஉ’ என்னும் ஓசை நயத்துடன் ஒதிக்கொண்டிருந்தததை கண்டேன்” என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) கூற கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அவர்கள் ‘தர்ஜுஉ’ செய்து ஓதிக்காட்டியதைப் போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன். புஹாரி:4281 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

Read More »

குர்ஆனை இனிய ராகத்துடன் ஓதுதல்..

455.அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா (ரஹ்) அவர்களின் தோழர் ஒருவர் (அப்துல் ஹமீத் இப்னு அப்திர் ரஹ்மான்) கூறுகிறார்: குர்ஆனை இனிமையாக ராகமாக ஓதுதலாகும். புஹாரி :5023 அபூஹூரைரா (ரலி) 456.நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) …

Read More »

குர்ஆனிய வசனங்கள் சில மறந்துவிடுதல் பற்றி..

451.ஒருவர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்க வைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள். புஹாரி:5038 ஆயிஷா (ரலி) 452.குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் …

Read More »