Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 83)

அல்லுஃலுவு வல்மர்ஜான்

முகீரா பின் ஷூஃபா (ரலி)யின் கூற்று!

157- நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றார்கள். அப்போது அவர்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றி விட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி (ஸல்) அவர்கள் உளூ செய்து விட்டு இரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். புகாரி-203: முகீரா பின் ஷூஃபா (ரலி)

Read More »

நிர்பந்தமான நேரத்தில்……

156- நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை …

Read More »

காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…

155- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்து, தமது இரு கால் உறையின் மீது மஸஹ் செய்து விட்டுப் பின்னர் எழுந்து தொழுவதை நான் கண்டேன். இது பற்றி ஜரீர் (ரலி)இடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனப் பதில் கூறினார்கள். புகாரி-387: ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரலி)

Read More »

நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…

153- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரப்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம் (தேவையை முடித்து) தண்ணீரால் அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள். புகாரி-152: அனஸ் (ரலி)

Read More »

நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!

152- நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் அவர்களுடைய எல்லா விஷயங்களையும் வலது புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். புகாரி-168: ஆயிஷா (ரலி)

Read More »

மறைவிடங்களைச் சுத்தம் செய்வது பற்றி….

151- உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விடவேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-153: அபூ கதாதா (ரலி)

Read More »

இப்னு உமர் (ரலி)யின் கூற்று!

150- ஹப்ஸா (ரலி)வின் வீட்டுக் கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையை பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தமது (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன். புகாரி-149: இப்னு உமர் (ரலி)

Read More »

நீர் உம்முடைய தேவைக்காக…..

149- ‘நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். புகாரி-148: இப்னு உமர் (ரலி)

Read More »

மல ஜலம் கழிக்கும் போது….

148- நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாக ஆக்கியோ பின்பக்கமாக ஆக்கியோ உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன் நோக்குங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அறிவித்து விட்டுத் தொடர்ந்து நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதை விட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடினோம் …

Read More »

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

146- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை அடர்த்தியாக வளரவிடுங்கள் மீசையை ஒட்ட நறுக்குங்கள். புகாரி-5892: இப்னு உமர் (ரலி) 147- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள் தாடியை வளரவிடுங்கள். புகாரி-5893: இப்னு உமர் (ரலி)

Read More »