Featured Posts

அல்லுஃலுவு வல்மர்ஜான்

உளுச் செய்யும் முறை………

135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது கால்களையும் …

Read More »

தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…

பாடம் – 2 சுத்தம் 134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். புகாரி- 6954:அபூஹூரைரா (ரலி)

Read More »

ஆயிரத்தில் ஒருவர்……..

133- (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் (இறைவா!) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் (உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள் என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள். அதற்கு அவன் ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப்பிரித்திடுங்கள்) என்று …

Read More »

சொர்க்கம் முஸ்லிமுக்கு மட்டுமே!

132- நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். அவர்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருக்க …

Read More »

அந்த எழுபதினாயிரம் பேர் யார்? கவனியுங்கள்!

131- நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் …

Read More »

பௌர்ணமி நிலவின் பிரகாசம் வேண்டுமா?

130- நிச்சயமாக என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர், அல்லது ஏழு லட்சம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை-அவர்களின் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும். புகாரி-6554: …

Read More »

கேள்வி கணக்கின்றி சுவனம் புகும் விசுவாசிகள்

129- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள் என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடு போட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து அல்லாஹ்பின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். நபி …

Read More »

இரத்த உறவை காய்ந்து போகச் செய்யலாமா?

128- இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர், என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம் என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன் என்று கூறியதாக அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன் என்றார்கள். புகாரி-5990: அம்ர் பின் ஆஸ் (ரலி)

Read More »

மிக இலேசான நரகவேதனை

127- மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6562: நுஃமான் பின் பஷீர்(ரலி)

Read More »

ஆனால்?……………..

126- நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், அவருக்கு என் பரிந்துரை மறுமைநாளில் பயனளிக்கக்கூடும். (அதனால்) நரகநெருப்பு அவரது (முழுஉடலையும் தீண்டாமல்) கணுக்கால் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும் என்று சொல்ல நான் கேட்டேன். புகாரி-3885: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

Read More »