Featured Posts

42 வருடகால சர்வதிகாரியின் கதை முடிவுக்கு வந்தது

– அஷ்ஷைக்: எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி

என்னைச் சுடாதீர்கள்!, என்னைச் சுடாதீர்கள்! என்ற இறுதி வார்த்தையுடன் 42 வருடகால சர்வதிகாரியின் கதை முடிவுக்கு வந்தது.

நீதி, நேர்மை, பிரஜைகளின் மதிப்பு ஆகிய நல்ல பண்புகளால் அரபு மண் நிரம்பிக்காணப்பட்;ட காலம் மலைஏறி அநீதி, அடக்குமறை, சர்வதிகாரம் ஆகியவற்றால் நிரம்பிவழியும் பிரதேசங்களாக மாறியதால் ஆட்சியாளர்களை மக்கள் எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், மக்களை அநீதிக்குப் புறம்பாக ஆட்சி செய்யும் அரபு ஆட்சியாளர்களைக் கதிகலங்கச் செய்யும் மக்கள் புரட்சி துனிஸியாவில் ஆரம்பித்து எகிப்து, எமன், பஹ்ரைன், லிபியா, சிரியா, என ஆலவிருட்சமாகப் பரவியது.

கமால் அப்துல் நாஸிர், அன்வர் சதாத் போன்ற சர்வதிகாரிகளைத் தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் எகிப்தின் ஆட்சிக்கு வந்து யூத ஆட்சியை இரண்டு தசாப்தங்கள் நடத்திச் சென்ற யூதகர்ளின் நண்பன் முபாரகின் கதி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து,

ஸியோனிஸ மொஸாட்டின் துணையுடன் சனூஸிய இயக்கத்தை 1969-ம் ஆண்டு, வீழ்த்தி இராணுவப் புரட்சி மூலம் லிபியாவை நான்கு தசாப்தமாக ஆட்சி செய்து வந்த சரவதிகாரி கடாபியின் கதை (2011-10-20) அன்று முடிவுக்கு வந்தது.

இது அரபு மண்ணுக்கு மாத்திரமல்ல, சர்வதிகார ஆட்சியாளர்களின் கடைசிச் சரித்தரமாக என்றோ ஒருநாள் இவ்வாறு நடந்தேறும் என்பதை இந்த நிகழ்வுகள் ஆருடம் கூறுகின்றது. லிபிய மண் ஏற்கெனவே இருந்ததை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் சாத்தியங்கள் இருப்பதை நிகழ்கால ஆப்கான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. லிபிய மக்களை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.

கடாஃபியின் வாழ்க்கைச் சுருக்கம்:
முழுப்பெயர்: முஅம்மர் முஹம்மத் அப்துஸ்ஸலாம் அபூமின்யார் அல்கத்தாஃபீ. கதாதிஃபா கோத்திரத்தில் பிறந்ததால் கத்தாஃபீ என்று அழைக்கப்பட்ட இவர், 1942ம் ஆண்டு ஜுன், ஏழாம் திகதி சர்த் மாகாணாத்தில் “ஜஹன்னம்” என்றழைக்கப்படுகின்ற கிராமத்தில் பிறந்தார், 1969-ம் ஆண்டு பன்காஸி மாகாணாத்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்துக் கொண்டிருந்த யூத மாணவன் ஒருவன் மூலம் தனது யூதத் தொடர்பை உயிற்பிக்கலானார். ஏனெனில் இவரது பாட்டி யூதப் பெண்ணாக இருந்தார், இவரது தாயும் அந்த வளர்ப்பில் கச்சிதமான வளர்க்கப்பட்டார், இதற்கு கிரிஸ்தவப் பிரிவினரின் உதவியும், பக்கபலமும் இருந்தது. அதனால் கடாபி இராணுவக்கல்லூரியில் இணைந்து படிப்பதை விரும்பினார், யதர்களுடன் திரைமறைவில் நண்பனாக செயல்பட்டு வந்த கடாபிக்கு தல்அவீவ் நினைவு முத்திரையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடக்கத்தது. இந்த கடாபிக்கு இஸ்லாம் பற்றிய அறிவு அறவே கிடையாது.

1956ல் தனது ஆரம்பக் கல்வியை சர்த் நகரில் தொடர்ந்தார். பத்ஹிய்யா காலித், ஸபிய்யா பர்காஷ் ஆகிய இரு பெண்களை மணம் முடித்திருந்தார். இவர்களில் இவருக்கு ஏழு குழந்தைகள் ஒரு பெண், மற்றவர் அனைவரும் ஆண்கள். லிபிய ராணுவத்தில் இணைந்து கடமையாற்றும் போதே ஆட்சியில் இருந்த சனூஸிய இயக்கத்தை வீழ்த்திட திட்டம் தீட்டினார். அதன் பயனாக 1964-ல் சுதந்திரப்படை என்ற பெயரில் இராணுவ சிப்பாய் அமைப்பை தோற்றுவித்தார். 1969 ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி லிபியமக்கள் குடியரசு என்பதாக லிபியாவின் பெயரை மாற்றிக் கொண்டார்.

1975- 76 காலப் பகுதியில் அவர் எழுதிய “பச்சை நூல்” (Green Book) என்ற புத்தகத்தில் லிபியா எவ்வாறு கொண்டு செல்லப்படும் என்பதை விளக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அரபு தேசிய வாதம் பேசிய எகிப்தில் முன்னாள் அதிபரான கமால் அப்துல் நாஸிருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி இருந்தார். இருந்தும் அது சாத்தியமற்றுப் போனது. பின்னர், அவர் ஆப்ரிக்க ஐக்கியத்திற்கு குரல்கொடுத்தார், தன்னை ஆப்ரிக்க முடிசூடா, மன்னாதிமன்னராக நினைத்து செயல்பட்டு வந்தார். இவரிடம் மார்கிஸ, மற்றும் சமவுடமைக் கொள்கைக்கு இடம் இருந்தது. பச்சை நிறத்தை நாட்டின் நிறமாகவும், பச்சை நூலை லிபியா அரசாங்கத்தின் யாப்பாகவும் கொள்கைப் பிரகடனம் செய்து செயல்பட்டு வந்தார். இவர் மேற்குலகுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். பயங்கரவாதிகளுக்கு (அமெரிக்க மொழியில்) சோரம் போகின்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது ஸதாம் ஹுஸைனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தார், மேற்குலகைக் கைகழுவினார்.

1986-ம் ஆண்டு அnரிக்க விமானம் அவரது காரியாலயத்தில் குண்டு வீசிய போது கடாபி மயிரழையில் தப்பிப் பிழைத்தார். 1988-ம் ஆண்டு “பன்அமெரிக்கன்” என்ற விமானம் ஸ்கொட்லெண்டுக்கு மேலால் பறந்து கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 259 பயணிகளும், 11 ஸ்கொட்லாண் வாசிகளும் மரணத்தை தழுவினர். இந்தக் தாக்குல் லிபியாவால் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனும், அமெரிக்காவும் கூட்டாக சந்தேகம் வெளியிட்டன. அதன் விளைவாக 1992ம் ஆண்டு பொருளாதாரத் தடைக்கு லிபியா உட்படுத்தப்பட்டது. பொருளாதாரத் தடையால் நிலைகுலைந்து போன லிபியா தனது அணுஆயுதம் பற்றி முழுமையாக தகவலை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்ததுடன், பாகிஸ்தானி அணுவிஞ்சானியான அப்துல் கதீர்கானையும், இன்னும் சில இஸ்லாமிய நாடுகளையும் காட்டிக் கொடுத்து தனது அமெரிக்க எஜமானிடத்தில் நல்லவனாகவும் நடித்ததன் பயனாக 2003ம் ஆண்டு தனது பொருளாதராத்தடையை நீக்கிக் கொண்டது.

இஸ்லாத்திற்கு சகல வழிகளிலும் எதிரியாக செயல்பட்டு வந்த லிபியத் தலைவர் காடாபியின் அரசியல் வாழ்வுக்கு 2011-08-22 அன்று மக்கள் புரட்சியால் நிலைகுலைந்நதது. 2011- 10- 19 அன்று அவரது வாழ்க்கை சரித்திரம் மூடப்பட்டது.

சடலமாகக் காணப்படும் சர்வதிகாரி

கடாபியின் தீய பகுதிகள்
இலங்கை முஸ்லிம்கள் பலர் வரலாறு தெரியாத அப்பாவிகள் மாத்திரமல்ல, இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் அந்தரங்;கம் பற்றியும், அவர்களின் கொள்கைகோட்பாடுகள் பற்றியும் அறியாதவர்கள்.

இவர்கள், தலைப்பாகை கட்டி அமெரிக்காவை எதிர்த்த குமைனியையும், இஸ்ரவேலைத் துடைத்nதிறிவேன் என்று அறைகூறுவல் விடுக்கும் நஜாத்தியையும் குர்ஆனைக் குறைகண்ட ஷீஆ வழிவந்தவர்கள் என்பதை இன்றும் அறியாதவர்களாக இருப்பது போன்று, சர்வதிகாரி கடாஃபி பற்றியும் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

அவன் குர்ஆனையும், சுன்னாவையும் நிராகரித்து, ஹிஜாபைக் கிண்டல் செய்து, புனித கஃபாவை விமர்சனம் செய்து பச்சை நூலை எழுதி அகமுல் செய்ததை இன்றும் அறியாத முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் அவன் புகழ்பாடி காலம் கழிக்கின்றனர் என்றால் இதைவிடவுமா அறியாமை வேண்டுலம் !!! அதனால் இங்கு அவனது தீய பகுதிகள் ஆதாரத்துடன் தரப்படுகின்றது.

  • குமைனியர்களைப் போன்று குர்ஆனையும், கலீபாக்களையும் தரக்குறைவாக விமர்சித்தமை,
  • எஞ்சி இருக்கும் இறுதிச் சிலை என்று புனித கஃபா பற்றியும், ஏனெய இஸ்லாமிய புனிதஸ்தலங்களையும் இழிவாகப் பேசியமை,
  • ஹஜ்ஜையும், அதனுடன் தொடர்புடைய கல்லெறியும் வணக்கத்தையும் பரிகாசம் செய்து, கேலி செய்தமை,
  • மிஃராஜை கட்டுக்கதையாக சித்தரித்துப் பொய்ப்பித்தமை,
  • மனிதன் தன்னை வருத்திக் கொள்ளும் வழிமுறைதான் நோன்பு என்று அதை விமரிசனம் செய்தமை,
  • பலதார மணத்தை மறுத்துரைத்தமை,
  • ஹிஜாபை ஷைய்தானின் ஆடையாக சித்தரித்தல்,
  • 460 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் வைரஸ் ஊசி ஏற்றிக் கொலை செய்தமை,
  • பள்ளிவாசல்கள் பலவற்றைப் பாழாக்கியமை,
  • நபிகள் நாயகத்தின் மரணத்தின் பின்னால் அனைத்தும் தவறாக நடைபெறுகின்றன என்று சொன்னது
  • லிபியா தனது நாடு, அதன் வளங்கள் தனக்கும், தனது குழந்தைகளுக்கும் உரியது, லிபிய மக்கள் அந்நாட்டின் அடிமைகள் வாய் திறந்து எதையும் பேசுவதோ, கேட்பதோ கூடாது

கடாஃபி பற்றி முஸ்லிம் அறிஞர்கள் குழுவின் பார்வை

  • கடாபி தனது الكتاب الأخضر என்ற நூலை வெளியிட்ட பின்னரும், அவரது உரைகளையும் செவிமடுத்த பின்பும், சர்வதேச அறிஞர்கள் குழு 1980-ம் ஆண்டு மக்கா முக்கர்ரமாவில் கூடி அவரை ஒரு முர்தத் -மதம் மாறியவன்- என வர்ணித்தது. அதன் நஹல் பின்னர் தரப்பட்டுள்ளது.
  • எகிப்தின் பிரபலமான இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான “அப்துல் ஹமீத் கிஷ்க்” (ரஹ்) அவர்கள்: உமர் (ரழி) அவர்களை கடாஃபி சர்வதிகாரியாக விமர்சித்த காரணத்தால் கடாஃபியை சர்வதேச இஸ்லாமிய நீதிமன்றம் அமைத்து அதன் ஊடாக கடாபிக்கு தகுந்த சட்டம் நிறைவேற்றம் வேண்டும் என தனது உரை ஒன்றில் வேண்டிக் கொண்டார்கள்.
  • அல்முஜ்தமஃ, மற்றும் அல்புர்கான் போன்ற அரபு சஞ்சிகைள் இவனது உண்மை நிலை பற்றி அவ்வப்போது தோலுருத்துக்காட்டின.
  • டொக்டர் ஜிப்ரீல் ஸஃத் அல்உபைதி என்பவர் القذافي وأرواق الموساد கடாபியும், மொஸாட்டின் இரகசிய ஆவணங்களும் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் மொசாட்டின் பின்னணியில்தான் 1969-ம் ஆண்டின் இராணுவப் புரட்சி கடாபியால் நடத்தப்பட்;டதாக குறிப்பிடுகின்றார். அதை இவ்வாறு வர்ணிக்கின்றானர்.

عرف بفضيحة أوراق الموساد المفقودة أو ما سمى Taxi Paper وهي مستندات إسرائيلية سرية تكشف حقيقة القذافي وانقلاب سبتمبر1969 وعلاقته بالموساد وتنص المستندات حرفيا
فضيحة أوراق الموساد المفقودة

மொசாட்டின் தொலைந்து போன கேவலமான ஆவணங்கள், Taxi Paper என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. இது 1969-ம் ஆண்டு மொசாட்டின் துணையுடன் கடாபி இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் எவ்வாறு ஆட்சியைப் பிடித்தார் என்பதை விளக்கும் இரகசிய ஆவணமாகும்.

உலக முஸ்லிம் அமைப்பின் நிறைவேற்றுக் குழு ஹிஜ்ரி: 1400 துல்ஹஜ்-பிறை: 11-12 கி.பி. 1980-10-20 அன்று திங்கள் மாலை மினாவில் அமைந்துள்ள ராபிதாவின் தலைமைக்கட்டத்தில் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்றனர். இஸ்லாத்திற்கு மாற்றமாக கடாஃபி பேசியதைக் கூறியவைகள வைத்து கடாபிக்கு எதிரான பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினர். அவை எதற்காக என்பது கலந்து கொண்ட அறிஞர்களின் பெயர்களுடன் பின்வருமாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது

அல்குர்ஆன் ஒரு சமூகத்திற்கான மார்க்க போதனைகள் அடங்கிய நூல் மாத்திரம்தான், நபியின் வழிமுறையான ஸுன்னாவும் அவசியமற்றது என்று சுன்னாவை நிராகரித்து கடாஃபி 1978-ம் ஆண்டு திரிப்போலியில் நடை பெற்ற ஒரு மீலாத் தின உரையில்

இரண்டவாது மூலாதரமான சுன்னாவை நிராகரித்ததையும், குர்ஆனில் قل என்ற சொல்லை நீக்க வேண்டும் எனக் கூறியதையும், இத்தாலியப் பெண் பத்திரிக்கையாளர் பாலைவனத்தூதரே! என்று கடாபியை அழைத்த போது “ஆடு மேய்த்த காரணத்தால் தானும் நபிதான் என்று நபித்துவத்தை வாதிட்டதையும் உறுதி செய்யும் மற்றொரு இஸ்லாமிய அறிஞர்கள் சபையில் வாக்குமூலம்.

பெண்கள் தமது இயல்பான அழகை மறைக்க வேண்டியதில்லை என ஹிஜாபை நிராகரித்தது பற்றி கடாபியின் கூற்றை உறுதி செய்யும் அறிஞர்களின் வரிகள்

21 comments

  1. jazzakumullahu kairan

  2. Assalamu Alaikum (Rah)

    Intha Katturai sariyana Naratthil vanthullathu, Srilanka pola Tamil Nattilum En? Ulha Muslimkal palar Gaddafi Saritthiram theriyamal marra naduhalai kurai koorikondu alaihinranar. Unkal Katturai sariyana vilakkattai thanthullathu.

    Thodarattum unkal pani.

    Anbudan

    MOHAMED USMAN

  3. وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
    7:182. எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.

    وَمَنْ خَفَّتْ مَوَازِينُه ُُ فَأُوْلَائِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ
    7-9 யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.

    இப்படி அல்லாஹ்வின் வசனங்களை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறும்போதும் இவர்கள் செவி சாய்க்க மாட்டார்களா? நன்றி செலுத்த மாட்டார்களா? அல்லாஹ்வின் வசனங்களுக்கு மாறு செய்பவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

    சர்வாதிகார ஆட்சியாளர்களிடமிருந்து பாதுக்காக்க அல்லாஹ்வே நமக்கு போதுமானவன்

  4. அஸ்ஸலாமு அழைக்கும் வாரகுமதுள்ளஹி வாபரகதுஹு
    சரியான நேரத்தில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள்
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வனக

  5. dear rizwan mathani,

    you did a really a good job,jazakkallah for you to explain who is gaddaffi,because l was thinking that he was a good muslim and one of my thouheed friend told me that he was killed because he was developing TORIUM.and making nuclear wepons,now l understood what was going on.

  6. assalamu alaikum.
    inthakatiraiai unmaiyahawe nampa mudiyavillai.mihavum aakafoorvamana kaalathitku eatra katurai. jazakallahu khair.

  7. mashallah nice article .
    allah says in qurn
    al baqara 2:42

    And mix not truth with falsehood, nor conceal the truth (i.e. Muhammad Peace be upon him is
    Allahs Messenger and his qualities are written in your Scriptures, the Taurat (Torah) and the Injeel
    (Gospel)) while you know (the truth)

    nice u really convey the true message by removing the veil of gadafy

  8. It is not the same Qaddafi who ousted Idirisi;

    a handsome strong man..In nineteen seventy three..

    We were at BMICH as students of BCIC.*.

    it was at the NAM, there were lot of dignitaries..

    the guy surrounded by beautiful girls walking majestically..

    all carrying shining AK47 to save his body..

    But now you see..like an old lion..compromising for every thing..

    scrapped and shipped his ‘nuclear ambition’ to a foreign country..

    2.7 billion for Lockerbie, an oil deal with Brown for Megrahie..

    But the irony is..it is not only him ..the whole Arab countries..

    grooming theirs sons as the next ‘hierarchy’

    But Allah has His own plan for those are greedy;

    He will put some one else, that is His beauty;

    It is the Quran, not the ‘Green book’ our property!

    Now the crown and the billions gone, you have seen;

    what remains is the power of Almighty;

    So let the people come out from the this misery.

  9. Libya & QADDAFI …FACTS THAT CANT BE DENIED

    1. There is no electricity bill in Libya ; electricity is free
    for all its citizens.

    2. There is no interest on loans, banks in Libya are
    state-owned and loans given
    to all its citizens at 0% interest by law.

    3. Home considered a human right in Libya –
    Gaddafi vowed that his parents
    would not get a house until everyone in Libya had a
    home. Gaddafi’s father has
    died while him, his wife and his mother are still living
    in a tent.

    4. All newlyweds in Libya receive $60,000 Dinar (US$
    50,000 ) by the government
    to buy their first apartment so to help start up the
    family.

    5. Education and medical treatments are free in
    Libya . Before Gaddafi only 25%
    of Libyans are literate. Today the figure is 83%.

    6. Should Libyans want to take up farming career,
    they would receive farming
    land, a farming house, equipments, seeds and
    livestock to kick- start their farms
    – all for free.

    7. If Libyans cannot find the education or medical
    facilities they need in Libya ,
    the government funds them to go abroad for it –
    not only free but they get US
    $2, 300/mth accommodation and car allowance.

    8. In Libyan, if a Libyan buys a car, the government
    subsidized 50% of the price.

    9. The price of petrol in Libya is $0. 14 per liter.

    10. Libya has no external debt and its reserves
    amount to $150 billion – now
    frozen globally.

    11. If a Libyan is unable to get employment after
    graduation the state would
    pay the average salary of the profession as if he or
    she is employed until
    employment is found.

    12. A portion of Libyan oil sale is, credited directly to
    the bank accounts of all
    Libyan citizens.

    13. A mother who gave birth to a child receive US
    $5 ,000

    14. 40 loaves of bread in Libya costs $ 0.15

    15. 25% of Libyans have a university degree

    16. Gaddafi carried out the world’s largest irrigation
    project, known as the Great
    Man-Made River project, to make water readily
    available throughout the desert
    country.

  10. ஜசாக்கல்லாஹ் ஹைரூன்

    இந்த கடாபியை பற்றி இதுவரைக்கும் நல்லவர், இஸ்லாத்திற்காக நல்லது செய்தவர் என்ற தவறான எண்ணத்தை போக்க கூடியதாக இருந்தது

  11. அஸ்ஸலாமு அலைக்கும் மாஷால்லாஹ் மிக மிக தெளிவை ஏற்படுத்தி தந்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ் அலலாஹ் ரஹ்மத் செய்வானாக. கடாபி ஆதரவாளர்களுக்கு எனக்கு இது ஒரு அத்தாட்சி
    ஜஸாகல்லாஹ்

  12. Anbu Thozhare Kaddafi n Maranathai patri niyayam pesi kondirukum Muslim samuthayathirku unmayai velicham potru kaatriya ungaluku allah immayilum marumayilum nanmai seyvanaha

  13. assalamualaikum
    bro, obviously this article is news to me. May Allah Almighty forgive our own judgment which some times goes against Allah & Rassool sal. ! Jazakkallahu kairan!

  14. Asselamualeikum,

    i like to ask you,or any commenters if the article is true story why the NATO play a big role? if Gaddafi really against islam he is best friend of NATO. so why are they destroyed? i met many Libyan ask about Gaddafi they says the same which is the Comments of Mr. ABUTHAHIR. but he has forget 1 subject Libya has no credit in IMF and WORLD BANK.

    and during the war time i saw in TV many many Masjid every corner in Libya. so where is the true??????

  15. alllahu akbar..

  16. Masha Allah

  17. அஸ்ஸலாமு அழைக்கும்

    உங்கள் கட்டுரை மூலம் சர்வாதிஹாரி கதாபி பற்றி நான் உண்மையை தெரிந்து கொண்டேன்.எங்களுக்கு உண்மையை எடுதுரைதமைக்கு நன்றி வஸ்ஸலாம்.

  18. jaskallahu haira
    unkal katturai ankal annangalai sarikanac saitullatu

  19. السلام عليكم . ما شاء الله , ماأحسن هذه المقالة. أن القذافي كذاب ومنافق وكافر أعرف هذا. ولكن عرفت بعض المعلومات المهمة عن هذا الرجل القبيح. جزاك الله خير الجزاء. بارك الله لك وزادك الله في علمك ويطيل الله حياتك في مجال الدعوة والإرشاد في سريلانكا والعالم.

  20. alfayes (alfakinniya)

    assalamu alaikum

    Kadafi ptri anaku ippothan welankittu.
    ithatkumun nan kadafiyai patri ariyamel kadafi kolla pattathukku anathu manam sirithu warthappattathu.
    ippothan kolla pattathu sarithan anru puriuthu wilakathukku

    Jasakallah haira

  21. Assalamualaikum,

    neegal solvathayku ner matrama nan oru article parten athil gadafi mihavum nallavar natu makkaluku
    mihavum nallathu panni irukar

    inda puratsi allam america and israida velathandu athu unma athu poi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *