325– அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆம் எனப் பதில் கூறினார்கள். புகாரி-386: ஸயீது பின் யஸீதுல் அஸ்தி (ரலி)
Read More »அல்லுஃலுவு வல்மர்ஜான்
தொழுகையின் போது துப்புதல் பற்றி..
319– நபி (ஸல்) அவர்கள் கிப்லா திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதை சுரண்டி விட்டு மக்களை நோக்கி உங்களில் ஒருவர் தொழுதுக்கொண்டிருக்கும் போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது: ஏனெனில் அவர் தொழும் போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான் என்று கூறினார்கள். புகாரி-406:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) 320– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து …
Read More »தொழுகையில் ஸஜ்தா செய்யுமிடத்தை சரிசெய்தல்..
318– ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1207 முஐகீப் (ரலி)
Read More »தொழும்போது இடுப்பில் கை வைப்பது பற்றி..
317– ஒருவர் இடுப்பில் கை வைத்து தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 1220. அபூஹுரைரா (ரலி)
Read More »நபியவர்களின் மிம்பர்!
316– நபி (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) இடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை நான் அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த …
Read More »தொழும்போது குழந்தைகளை….
315– நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஸைனப் அவர்களின் குழந்தை உமாமாவைத் (தோளில்) சுமந்து கொண்டு தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள். புகாரி-516: அபூ கதாதா அல் அன்சாரி (ரலி)
Read More »தொழுகையில் ஷைத்தான்.
314– இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என் தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டும் என இந்தப் பள்ளி வாசலில் உள்ள ஒரு தூணில் அதைக் கட்டிவைக்க என்னினேன். இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஒரு ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக! (38:35) என்ற என் …
Read More »தொழுகையின் போது பேசக்கூடாது.
311– (ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீசீனியாவின் மன்னர்) நஜ்ஜாஸியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) ‘நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 312– (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் …
Read More »ருக்உவின் நிலையில்….
310– நான் எனது தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின் போது எனது இரு கைகளையும் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார். புஹாரி-790: முஸ்அப் இப்னு ஸஃது (ரலி)
Read More »அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியை நிர்மாணிப்பவருக்கு..
309– உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவு படுத்தியபோது நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள் என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபணை செய்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள். புகாரி-450: உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரலி)
Read More »