316– நபி (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) இடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை நான் அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் (அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள்) ஆளனுப்பி நான் மக்களிடம் பேசும் போது அமர்ந்து கொள்வதற்காகத் தச்சு வேலை தெரிந்த உன் வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்! எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப் பட்டது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்வதையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்து விட்டு மீண்டும் மேலேறியதையும் நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி மக்களே நீங்கள் அறிந்து கொள்வதற்காக நான் இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டார்கள்.
நபியவர்களின் மிம்பர்!
புஹாரி-917: அபூ ஹாஸிம் பின் தீனார் (ரலி)