181- நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்கள் இரு முன் கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் முக்கி அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதி விடுவார்கள். பின்னர் அவர்கள் தலை மீது மூன்று முறை கையினால் தண்ணீரால் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள். புகாரி-248: ஆயிஷா …
Read More »அல்லுஃலுவு வல்மர்ஜான்
பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…
180- உம்முஸூலைம் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம்! அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக்கேட்டுக் கொண்டிருந்த உம்முஸலமா (ரலி) அவர்கள் …
Read More »குளிப்பு கடமையான நேரத்தில் உறங்க….
175- மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் (ரலி)யை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். அதற்காக உளூ செய்வது தான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-178: அலீ (ரலி) 176- நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க …
Read More »மாதவிடாயின் போது….
174- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-297: ஆயிஷா (ரலி)
Read More »மாதவிடாயின் போது மனைவியுடன்….
173- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையை கழுவுவேன் புகாரி-2030 – 2031: ஆயிஷா (ரலி)
Read More »மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…
172- நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள். புகாரி-2029: ஆயிஷா(ரலி)
Read More »கடமையான குளிப்பு!
171- நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம். புகாரி-322: உம்முஸலமா (ரலி)
Read More »மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.
170- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொன்னேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள் நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் …
Read More »சுப்ஹானல்லாஹ்!
169- நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். புகாரி-303: மைமூனா (ரலி)
Read More »மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…
168- (நபி (ஸல்) அவர்களது மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப் படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? புகாரி-302: ஆயிஷா (ரலி)
Read More »