Featured Posts

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 9)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா? சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.

Read More »

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

Read More »

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் (1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …

Read More »

புகை! உனக்குப் பகை!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.

Read More »

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

Read More »

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

Read More »

மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.

Read More »

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

Read More »

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-3)

– இஸ்மாயில் ஸலபி மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.

Read More »