உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம் துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன. குர்பானை யார் வேண்டுமானாலும் …
Read More »உண்மை உதயம் மாத இதழ்
ஃபிக்ஹுல் இஸ்லாம் – 47
-S.H.M. Ismail Salafi கிதாபுல் ஜனாயிஸ் -(ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்) குளிப்பாட்டத் தகுதியானவர்கள்: ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விடயத்தில் யார் பொருத்தமானவர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் யார் பொருத்தமான வர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நல்லவர்கள்: குளிப்பாட்டுபவர்கள் மார்க்க விழுமியங் களைப் பேணி நடப்பவராக இருக்க வேண்டும். அவர் …
Read More »வர்ணம் தீட்டுவோம்!
ஆசிரியர் பக்கம் – ஜனவரி 2020 அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகின்றான் (முஸ்லிம்) என்பது இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்களது போதனையாகும். அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும். ‘நாம் வானத்தில் கோள்களை அமைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்;.’ (15:16) வானத்தில் கோள்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு …
Read More »அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – சூறா அந்நிஸா(4) தொடர்- 30
– S.H.M. Ismail Salafi ஈமானின் அடிப்படைகள் ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை யும் அவனது தூதரையும், அவன் தனது தூதருக்கு இறக்கிவைத்த இவ்வேதத்தையும், இதற்கு முன் அவன் இறக்கிவைத்த வேதத்தையும், நம்பிக்கை கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வை யும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவன் வெகு தூரமான வழி கேட்டில் சென்று விட்டான்.’ (4:136) இந்த வசனத்தில் ஈமானின் ஆறு அடிப்படைகளில் …
Read More »இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
– S.H.M. Ismail Salafi உண்மை உதயம், Jan 2020 இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் …
Read More »பகிடிவதையின் (ராக்கிங்) மறுபக்கம்
படாத பாடுபட்டு படித்து முடித்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு முன்னால் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் அடுத்த பிரச்சினைதான் பகிடிவதை. இந்தப் பகிடி வதையினால் படிப்பை விட்டவர்கள் உண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. ஏன், உயிரைக் கூட விட்டவர்கள் உண்டு! கடும் தியாகத்துடன் படித்து, குடும்பத்துக்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய நினைத்த ஒரு உயிர் நமது நடத்தையால் பறிபோய்விட்டதே, என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இந்தப் பகிடிவதை அரக்கர்களுக்கு மருந்துக்கும் …
Read More »பிக்ஹுல் இஸ்லாம் – 20 – ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை-
சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் …
Read More »காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்
மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …
Read More »பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]
பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும். அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.பின்னர் முதல் ரக்அத்தில் …
Read More »எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]
‘நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், ‘இது அல்லாஹ்விடமிருந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘இது உம்மிடமிருந்துள்ளது’ என்கின்றனர். ‘அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துள்ளவையே’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! எந்தச் செய்தியையும் விளங்கிக் கொள்ள முற்படாமலிருக்க இந்தக் கூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?’ ‘உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே. …
Read More »