Featured Posts

ஜாஃபர் அலி

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.

1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்றார்கள். புஹாரி …

Read More »

மரணம் குறித்து முஸ்லிம்களின் கண்ணோட்டம் என்ன?

மரணத்துக்குப் பின் வரவுள்ள நிரந்தர மறுமை உலகத்துக்காகத் தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதற்கான செயற்களமே இந்த உலகம் என்று யூதர்கள், கிறிஸ்தவர்களைப் போன்றே முஸ்லிம்களும் நம்புகின்றனர். இறுதித் தீர்ப்பு நாள், மீண்டும் உயிர்தெழுதல், சுவனம்-நரகம் ஆகியன இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்களில் அடங்கும். ஒரு முஸ்லிம் – அவர் ஆணாக இருப்பினும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி மரணமடைந்து விட்டால் முதலில் அவர்கள் குளிப்பாட்டப்படுகின்றார்கள். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் …

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிற பெயர்கள்.

1517. எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ (குஃப்ரை) அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஞர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி …

Read More »

மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்?

1516. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப்பட்டார்கள். தமக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின்மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள். புஹாரி : 3902 இப்னு அப்பாஸ் (ரலி).

Read More »

முதல் வஹியின் போது நபிகளாரின் வயது.

1514. அனஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் …

Read More »

மூத்தோரை முஸ்லிம்கள் மதிப்பது எவ்வாறு?

மிகவும் கடினமாதொரு காலச் சூழலில் மனித சமூகம் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு சிரமநிலையில், தம்மைப் பெற்ற தாய்-தந்தையரைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது, இறையருளுக்கும், மதிப்புக்கும் உரிய செயலாகும். அதுமட்டுமல்ல, இறைகட்டளையை மதித்து தமது ஆன்மிக நிலையை வளர்த்து கொள்ளும் ஒரு மாபெரும் வாய்ப்புமாகும் அது! தம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தையருக்காக பிரார்த்திக்கும்படி மட்டும் மனிதனுக்கு இறைவன் கட்டளையிடவில்லை. மாறாக, நம்மைப் பராமரித்து வளர்க்க யாருமில்லாது நிராதரவான நிலையில் குழந்தையாக நாம் இருந்தோம். …

Read More »

நபித்துவ முத்திரை பற்றி….

1513. ‘என்னுடைய சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்’ எனக் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். …

Read More »

நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றி….

1510. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்)அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். புஹாரி :5894 அனஸ் (ரலி). 1511. நபி (ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன். புஹாரி : 3545 வஹப் அபீ ஜூஹைஃபா (ரலி). 1512. …

Read More »

நபி (ஸல்) அவர்களின் முடி பற்றி….

1508. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். புஹாரி :5905 அனஸ் (ரலி). 1509. நபி(ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. …

Read More »