Featured Posts

Tag Archives: ரமளான்

ரமழானும் தர்மமும்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

Read More »

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

Read More »

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் – உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே …

Read More »

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

Read More »

96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …

Read More »

95. தனிநபர் தரும் தகவல்கள்

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7246 மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், …

Read More »

90. தந்திரங்கள்

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6953 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறவருடைய …

Read More »

66. குர்ஆனின் சிறப்புகள்

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4978 – 4979 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4980 அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் …

Read More »

குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)

இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.

Read More »

அல்குர்ஆனின் மாதம்

முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான். இது நோன்பின் மாதமாகும், இது அல்குர்ஆனின் மாதமாகும், இது பொறுமையின் மாதமாகும், இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும், இது இரவு வணக்கத்தின் மாதமாகும், இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

Read More »