தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு …
Read More »Tag Archives: வஸீலா
நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?
நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி …
Read More »நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்
நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் ஏசினாலும் அப்படி ஏசுபவன் காஃபிராகி விடுவதுடன் முர்தத்தான (மதம் மாறிய)வனுடைய சட்டம் இவன் …
Read More »ரஸூல்மார்களின் பணிகள் யாவை?
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.
Read More »இறைவன் அனுமதித்தவை
எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: “அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் …
Read More »சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்
ஒருவன் மற்றவனிடம் ‘சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் சிலருக்கு மற்றவர்கள் மீது சில உரிமைகள், கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால் …
Read More »அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?
அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னைக் கொண்டு எப்படி உதவித் தேட முடியும். அல்லாஹ்வைக் கொண்டுதான் உதவி …
Read More »கப்றும் வைபவங்களும்
நபி (ஸல்) அவர்கள் தம் கப்றை பள்ளியாகத் திருப்பி விடாமலிருக்க (அதில் வைபவங்கள், கூடு, கொடிகள் எடுக்காமலிருக்கச் சொல்லியிருப்பதுடன்) தம் மரணத் தருவாயில் ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்’ என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார். இவர்கள் செய்கின்ற இந்தச் செய்கையைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
Read More »இது விஷயத்தில் அப்துல் மலிக் பின் ஹாரூன் ரிவாயத்
ஆனால் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத் செய்கிறார். அதில் இப்னு அப்பாஸ் ‘கைபரில் உள்ள யூதர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் போராடி யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூதர்கள் கத்பான்களுடன் மோதும் போதெல்லாம் தோல்வி அடைந்து விடுவது வழக்கம். எனவே கீழ்வரும் துஆவைக் கொண்டு யூதர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்களாம். ‘இறைவா! எழுதப்படிக்கத் தெரியாத நபியான முஹம்மத் (ஸல்) அவர்களின் …
Read More »மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)
இறுதி நாளில் பரிந்துரை செய்வது பற்றி ஸஹீஹான சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அன்று மக்கள் அனைவரும் ஆதம் நபி அவர்களிடமும், (உலுல் அஸ்ம்) திடகாத்திர, உறுதிபாடுள்ள நபிமார்களான நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) ஆகியோரிடமும் வந்து தமக்காக ஷபாஅத் செய்ய வேண்டுமென்று கெஞ்சுவார்கள். அந்த நபிமார்களில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மக்களைத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறுதியில் நபி ஈஸா (அலை) அவர்களிடம் மக்கள் திரண்டெழுவார்கள். அப்போது ஈஸா (அலை) …
Read More »