by ஹாபிழ். எம்.ஏ. அஹமது ஹசன்
(முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயீ)
அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும் ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர்.
இந்த எச்சரிக்கை பொதுமக்களை சென்றடையும் சூழல் உருவாகும் போதெல்லாம் தன் அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது? என்பதற்காக ‘என் தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார்’ என்று சவ(ட)ால் விடுவதை தன் வழமையாக்கிக் கொண்டுள்ளார்.
தொண்டியில் நடந்ததென்ன?
தொண்டியில் நிகழ்ந்ததும் இதுபோன்றதே! 11-12-2008 அன்று தொண்டியைச் சார்ந்த முஜீபுர்ரஹ்மான் உமரீ (கேம்ப் விருதுநகர்) பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி தொண்டியில் உரையாற்றினார்.
அடுத்த இரு நாட்களில் ‘தர்ஜமா பற்றி விவாதிக்க பீ.ஜை தயார்’ என்று தொண்டி முழுக்க வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜை, அதனைத் தொடர்ந்து வினியோகித்த நோட்டீஸில் முறையே 1) சஹாபாக்களை பின்பற்றுதல் 2) பீ.ஜை தர்ஜமாவில் தவறுகள் 3) ஹிஜ்ரா காலண்டர் 4) முஜீப் ஏன் தடம் புரண்டார் ஆகிய நான்கு தலைப்புகளை விவாதப் பொருளாக்கினார்.
விவாத ஒப்பந்தத்திற்கு ததஜ பிரமுகர்களைத்தான் அனுப்புவேன்! நான் நேரடியாக வரவே முடியாது! என்று தொண்டியைச் சார்ந்த திரிஸ்டார் அப்துல் அஜீஸ் மற்றும் நைனார் காஜா ஆகிய இரு தூதுவர்களின் மூலம் இறுதி அறிவிப்பு செய்து விட்டார்.
ஆனால் 18-12-2008 அன்று பீ. ஜைனுல் ஆபிதீனின் வண்டவாளங்களை தோலுரித்துக் காட்டும் ‘அன்பான வேண்டுகோள்’ என்ற தலைப்பில் முஜீபுர்ரஹ்மான் வெளியிட்ட நோட்டீஸ் பொதுமக்களை சென்றடைந்தது. இதை அறிந்தவுடன் விவாதத்திலிருந்து பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த பீ. ஜை தன் சொந்த ஊரில் தன் இமேஜ்(?) மேலும் பாழாகி விடக்கூடாது என்ற நிர்பந்தத்தால் இவ்வொப்பந்தத்திற்கு தானே வருவதாக சம்மதித்து(?) நோட்டீஸ் வெளியிட்டார்.
அதில் தான் தர்ஜமாவில் செய்துள்ள தவறுகளை இருட்டடிப்பு செய்வதற்காக முந்தைய நோட்டீஸில் கூறப்பட்ட தலைப்புகளில் சிலதை நீக்கியும் சிலதைப் புதிதாதச் சேர்த்தும் குழப்பியிருந்தார்.
பின்வாங்கும் தந்திரங்கள்!
மேலும் விவாத ஒப்பந்தத்திற்காக இருதரப்பும் இணைந்து முடிவெடுக்க வேண்டிய இடம், காலம் ஆகியவற்றை நியாயமின்றி தானே முடிவு செய்தார். 20-01-2009 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தனது தொண்டி கட்சி அலுவலகத்தில் (சுலைா மகாலில்) காத்துக் கொண்டிருப்பதாகவும் இதனைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் வீர(?) பிரகடனம் செய்திருந்தார். இதன் மூலமாவது இவ்விவாதம் நின்று விடாதா? என்று மனப்பால் குடித்தார்.
இவ்வாறு ஒரு தரப்பாக முடிவெடுப்பது அயோக்கியத்தனம்! என்றும் அதனை அறிவுள்ள எவனும் ஏற்றுக் கொள்ள முடியாது! என்றும் பிறர் விஷயத்தில் இவரே கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
பீ.ஜையின் ஈனச் செயல்!
இவ்விவாதத்திலிருந்து எப்படியேனும் தப்பிக்கத் திட்டமிட்ட இவர் சுய வாழ்வில் ஒழுக்கக்கேட்டின் உச்சக் கட்டத்தில் இருக்கும் சாதாரண முஸ்லிமுக்குக் கூட மனம் வராத ஈனச் செயலில் ஈடுபட்டார். 21-12-2008 அன்று தொண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ர்மானை தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக அவதூறு கூறி அவரை பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சித்தார்.
அந்த அவதூறை நீக்கி எடிட்டிங் செய்யப்பட்டு ‘ததஜ சந்தித்த விவாதங்கள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு, சீடியாகவும் வெளியிடப்பட்டது. முஜீபுர்ரஹ்மான் தொடர்பாக நீர் கூறியது உண்மையாக இருந்தால், உமக்கு திராணி இருந்தால் எடிட்டிங் செய்யாமல் அந்த சீடியை அப்படியே தாருங்கள்! என்று தொண்டியில் 07-03-2009 அன்று ஊரறிய அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதனைக் கொடுக்காமல் அவர் பொய்யன்! அவதூறு ஆசாமி! என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் அவதூறுக்கு அஞ்சாமல், ஒருதலைப்பட்சமான அவரின் காலம், இடம் பற்றிய முடிவை முஜீபுர்ரஹ்மான் துணிவுடன் ஏற்றுக் கொண்டார்.
ஒப்புதல் கடிதம் தராது ஓட்டம்!
விவாதத்திலிருந்து பின்வாங்கும் பீ.ஜையின் சூழ்ச்சியை முஜீபுர்ர்மான் நன்கறிந்திருந்ததால் அவருடன் நடைபெறும் விவாதம் அவரது தர்ஜமா மற்றும் விளக்கவுரை பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக பீ.ஜையின் ஒப்புதல் கடிதத்ததை 11-01-2009 மாலை 5 மணிக்குத் தரவேண்டும் என்று ஊரறிய தொண்டியில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.
குறிப்பிட்ட தேதியில் பீ.ஜையின் தொண்டி கட்சி அலுவலகத்திற்கு முஜீபுர்ரஹ்மானே நேரடியாக சென்றபோது பீ.ஜை ஒப்புதல் கடிதத்தை தர மறுத்தது தெரிய வந்தது. வெற்றிடமாகக் கிடந்த அவரது தொண்டி கட்சி அலுவலகத்தின் முன் நின்று ‘பீ.ஜையின் விவாத பித்தலாட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தி வீடியோ பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட அவரது கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவனின் வேஷம் கலைந்து விட்டதே! என்ற பயத்தில் வீடியோ கேமராவை தூக்கிக் கொண்டு இரவு 7 மணிக்கு தொண்டி மேலப்பள்ளிவாசலுக்கு ஓடோடி வந்தனர்.
பீ.ஜை விவாதத்திலிருந்து பின்வாங்கியது முடிவானதற்கு பிறகும் கூட அல்குர்ஆனின் முக்கியத்துவம் கருதி பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி மட்டும் விவாதிக்க ஏற்பாடு செய்ய இரு தரப்பு ஆதரவாளர்களில் சிலர் தங்களிடையே ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
விவாத ஒப்பந்தம்?
அதன் அடிப்படையில் 20-01-2009 அன்று பீ.ஜைக்கும் முஜீபுர்ரஹ்மானுக்கும் இடையே விவாத ஒப்பந்தம் நடைபெற்றது. சில நிமிடங்களில் நடந்து முடிய வேண்டிய ஒப்பந்தம் பீ.ஜையின் பிடிவாதத்தால் காலை 10:15 மணி முதல் துவங்கி மாலை சுமார் 6 மணி வரை நீடித்தது.
இவ்விவாதத்தில் தர்ஜமா மற்றும் விரிவுரை பற்றி மட்டும் விவாதிக்க பீ.ஜை இறுதிவரை ஏற்க மறுத்துவிட்டார். ஒரே விவாதத்தில் பல தலைப்புகளுடன், பல நாட்கள்தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பல மணி நேரங்களைக் கடத்தினார்.
அல்குர்ஆனின் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு தர்ஜமா தவறுகளைப் பற்றி தனித் தலைப்பாக முதலில் விவாதிப்போம். பிற தலைப்புகளை தர்ஜமா பற்றிய விவாதத்திற்குப் பிறகு தனியாக விவாதித்துக் கொள்வோம்! என்று முஜீபுர்ரஹ்மான் தரப்பு கூறியதை பீ.ஜை தொடர்ந்து மறுத்து வந்தார்.
ரோஷத்தை கிளப்பிய திராணி!
நீங்கள் எழுதிய தர்ஜமா பற்றி தனித் தலைப்பாக விவாதிக்க உங்களுக்கு திராணி இல்லையா? ஏன் பயப்படுகிறீர்? என்று முஜீபுர்ர்மான் கேட்டது வீடியோவில் பதிவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த பீ.ஜை தன் தர்ஜமா தொடர்பான தனி விவாதத்தை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எனவே அவரது தர்ஜமா தொடர்பான தனி விவாதம் 29-03-2009 அன்றும் பிற தலைப்புகள் மற்றொரு நாளில் தனி விவாதமாக நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பீ. ஜை கேட்ட வினாத்தாள்!
தர்ஜமா விவாதம் தொடர்பான பீ.ஜையின் சம்மதத்தை பொதுவானவதாகக் கருதி விடாதீர்கள்! அவரது தர்ஜமாக பற்றி முஜீபுர்ர்மான் இதுவரை விமர்சித்தவைகளைப் பற்றி மட்டுமே விவாதப் பொருளாக பீ.ஜை ஏற்றுக் கொண்டார். விரல் விட்டு எண்ணும் சில தவறுகளைப் பற்றி விவாதம் செய்ய ஒப்புக் கொள்ளத்தானா இந்த இரண்டு(?) மாதப் போராட்டம்???!
தான் பல ஆண்டுகளாக எழுதி, 2002ம் வருடம் முதல் 2008 வரை ஏழு பதிப்புகளை பல முறை சரிபார்த்து வெளியிட்டதாகக் கூறும் இவர், இது போன்ற சிறு பிள்ளைத் தனமான நிபந்தனைகளை முன் வைக்க வெட்கப்பட வேண்டாமா?
பேசப்படாத இன்னும் ஏராளமான தவறுகள் உள்ளனவே என்று முஜீபுர்ரஹ்மான் கேட்டதற்கு இப்போதே அந்தப் பட்டியலைத் தந்து விடுங்கள்! அப்போதுதான் நான் பி(?)ரிப்பேர் செய்து கொண்டு வரமுடியும் என்று பீ.ஜை கூறினார்.
தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார் என்று ஊரறிய வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜையின் பரிதாப நிலை பாரீர்!
முஜீபுர்ர்மானை விவாத்திற்கு அழைத்;து வந்தால் ரூபாய் 5000 பரிசு என்று பொதுமக்களிடம் ஃபிலிம் காட்டிய பீ.ஜையின் இழிநிலை பாரீர்!
இது, மக்கு மாணவன் பரீட்சையில் பாஸாக ஆசிரியரிடம் பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் கேட்பது போன்றதல்லவா? என்று கூறி பொதுமக்கள் சிரிக்கின்றனர்.
இப்படி இவர் வினாத்தாள் கேட்பது நியாயம் என்றால் 21-12-2008 தொண்டி பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ரஹ்மானின் முகத்திரையை கிழிக்கப்போவதாக ஆணவத்தோடு எதற்காக கொக்கரித்தார்? தவறுகளின் பட்டியலைத் தாருங்கள்! பரிசீலிக்கிறேன் என்று பணிவுடன் கூறி தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பை(?) தக்க வைத்திருக்கலாமே! அந்தோ பரிதாபம்!
அந்த வினாத்தாள் பட்டியலை கொடுக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பீ.ஜை தப்பிவிடுவார் என்பதை உணர்ந்த முஜீபுர்ர்மான் பீ.ஜை கேட்ட பட்டியலை தரவும் சம்மதித்தார்.
பீ.ஜை தர்ஜமாவின் 399 விளக்கக் குறிப்புகளில் வெறும் 28 விளக்கக் குறிப்புகளையும் தர்ஜமாவில் காணப்படும் மொழியாக்கப் பிழைகள், தொகுக்கப்பட்ட வரலாறு, இம்மொழிபெயர்ப்பு பற்றி. . . ஆகிய தலைப்புகளைக் கொண்ட பட்டியலை 03-02-2009 அன்று ஒப்படைத்தார்.
இரு தரப்பினரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கிணங்க முஜீபுர்ர்மான் மேற்கண்ட பட்டியலை ஒப்படைத்த பிறகும் கூட, அதிலும் மேலதிக விபரங்கள் கேட்டு, பீ.ஜை அங்கலாய்ப்பது மீண்டும் விவாதத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
‘ஏகத்துவம்’ மாத இதழின் தில்லுமுல்லு!
இந்த விவாத ஒப்பந்தத்தின் நிகழ்வுகள் இவ்வாறு இருக்க மார்ச் 2009 ‘ஏகத்துவம்’ மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் வழமை போல பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர்.
பீஜைனுல் ஆபிதீனின் மூன் பப்ளிகேஷன் மூலமாக வெளியிட்டுள்ள, அவரது தர்ஜமா தொடர்பான விவாத ஒப்பந்தத்தை ததஜவுக்கும் முஜீபுர்ர்மானுக்கும் நடந்ததாக சித்தரித்து பீ ஜையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இதன் நன்றிக் கடனாக, தர்ஜமா வியாபாரத்தில் பீ.ஜைக்கு கிடைக்கும் இலாபத்தில் துன்பத்தில் கைகொடுக்கும் தன் தொண்டர்களை இணைத்துக் கொள்வாரா?!
இவர்களின் சல்லித்தனத்தை இவர்களின் உயிர் நண்பர்களே மேடை போட்டு உலகறிய முழங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் பிறரைப் பார்த்து சல்லிக் காசுக்காக செயல் படுபவர்கள் என்று குற்றம் சாட்டுவது கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிவதற்குச் சமமல்லவா?
வேதம் ஓதும் சாத்தான்கள்!
இந்தப் புல்லுறுவிகள் தங்களின் அயோக்கியத் தனங்களை மறைப்பதற்காக கட்டுரையின் துவக்கத்திலும் இறுதியிலும் அல்குர்ஆனின் சில வசனங்களை எழுதி மார்க்கச் சாயம் பூசிக் கொள்கின்றனர். வேதம் ஓதும் சாத்தான்கள் இவர்கள் தானோ?!
விவாதத்திற்கு முன்னரே இவ்வாறு திசை திருப்புவோர் விவாதத்தின் போதும் அதற்குப் பிறகும் என்னென்ன நரித்தனங்களை அரங்கேற்றப்போகிறார்களோ?
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கிணங்க, இவர்களின் போலித்தனங்களை அறிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அல்ம்துலில்லாஹ்!
பலரை சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரை பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை பீ.ஜையும் அவரது ஆதரவாளர்களும் உணர்வது எப்போது?
பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! பிறர் பற்றி இவர்கள் கூறும் எந்த தகவல்களையும் உரிய முறையில் தீர விசாரிக்கமால் தயவு செய்து நம்பி ஏமாறாதீர்கள்!
சத்தியம் நிலை நாட்டப்படவும் இந்தப் போலிகள் முழுமையாக அடையாளம் காட்டப்படவும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள்!
– அல்லாஹ் போதுமானவன் –
(மார்ச் 2009 ஏகத்துவம் மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் தவறான பல தகவல்களை பதிய வைத்ததே இதனை நான் எழுதி வெளியிடுவதற்குக் காரணம்!)
Dear Brothers in Islam,
Please avoid PJ. Once he did a mistake we should avoid him, Why? we don’t have other islamic scholars in the world. This is not only for PJ, one who doing Business in the name of Islam we should avoid from islamic community.
Like PJ all are dividing Islam for Money and Posting. Our community is very poor to indentify this kind of Lizards.
Wassalaam,
I know about pj, one day his time will be end, so, be carrefull
about pj, nobody can understand why pj do this one?
i can say onething, the speech of pj make seduce the all people, so , who can fall in his speech, that’s all.
allah will give us hidayath, and for pj and his people.
bismillahirrahmanirraheem
assalamu alikum wa rahmathuullahi wa barakathuh…….
i am advising to ordinary people(who didnt read abt full islam),they should be silent.bcoz allahu subhanahu wa tha’ala should asks question in judgement day.these types of peoples are not read abt islam…why they r supporting to leaders and following them…..if u want to be a good mulim you should be silent in the matters of islam.otherwise u r not loving islam. u r hating islam…u r thinking to classify the muslim ummah…. and u r all only big shythaans to islam…..
Brother…. Assalamu alaikum…
Debating, are the way of Salaf
why did you remove my comments…
is it because that comments is not in your favor???
all of you re business mind not only PJ….
remember you all will be the first group that going to be answer in qiyamathe ( the day of judgment)
May Allah show us the right path…
Mohamed – MW SL
Dear brothers al over the world,
Assaamu Alaikum wr…
Today the debate is going on with this guy. All pople will understand him after this insha Allah,
அஸ்ஸலாமு அலைக்கும். அணைத்து முஸ்லிம்களுக்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தூய குர் ஆனின் மூல மொழி அரபியை நன்கு கற்றரியாதவரை. இப்படித்தான் யாரையாவது நம்பி.அல்லது யாரிடமாவது தன்னை ஒப்படைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படவேண்டியுள்ளது. மேடை பயானை கேட்டுத்தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு மக்களை நெருக்குவது அவ்வளவு நல்லதல்ல.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
அன்பின் இஸ்லாமிய சகேதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்,
பிஜே ஒரு நல்ல மனிதர், என்றுதான் 2002ம் ஆண்டு வரை பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
எப்போது அவர் குர்ஆனின் நம்பகத்தன்மை மீது கை வைத்தாரோ அன்று முதல் அல்லாஹ் அவரின் முகத்திரையை கிழிக்க ஆரம்பித்து விட்டான். அவ்வப்போது அவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் போன்றோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பிஜேக்கும் அவரது பக்தர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.
Moulavi P.Jainul Abideen Ulavi does not have enough knowledge of Islam. Hence, He translated the Quran with more mistakes. I kindly request him to improve his skill and avoid new fatwa which is against to the Imams.Haneef Jamali.
Dear Brothers,
I have no comments regarding this article, but i just wonder its been more than 5 days since the debate held but why not upload the video for people to understand the truth?
PJ site have uploaded them for everyone to watch the debate and understand the truth, so i request you should also upload the video to everyone see and understand the truth.
Regards
Mohamed
PS : Kindly treat me the one as being in middle and accepting what is known as truth and not depending anyone blindly.
சலாம், அன்பு சகோதரர் முஜிப் அவர்கள் அறிவது, த.த.ஜா. இணைய தலத்தில் தங்களும் பி ஜெ யும் நடத்திய விவாதே வீடியோ வை பப்ளிஷ் செய்து உள்ளார்கள் தாங்கள் உண்மையானவர் என்று நிரூபிக்க விரும்பினால் தாங்களும் தங்கள் இணைய தலத்தில் அந்த வீடியோ காட்சியை ஒளிப்பரப்ப வேண்டும்.
in the world only muslim society accused each other party or group.. i never say htat ur side ok… or pj is ok there may be some some mistakes in each groups…. if we find like some mistakes as muslim ummah… we have to peacefully solve, those problems… otherwise every day if ur site also blame to pj in ur front page of ur site it will be same ….. so pls stop blame and what the good way to spread the islam on right path do it….. may allah protect muslim ummath…. wassalam
சலாம்
தாங்கள் செய்த விவாதே வீடியோ காட்சியை தங்கள் இணைய தலத்தில் வெளிஇடவும்
அதை பார்த்துதான் மக்களாகிய நாங்கள் உண்மையை விளங்கி இயலும்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் விவாத வீடியோ பப்ளிஸ் செய்யப்படும்.
why didn’t u put my comments. If u are a real mulims you should put comments. so you want everyone to support u. are u guys running political party or working for Allah? Please fear Allah and put evryone comments.
Assalamu alaikum.
Iruttadippu seiyyum Online PJ
VIvatham video paarthen. PJ pesum idangalai silathai censore
senju irukkaanga. MUjeeb pesiyathai niraiyya cut panni irukkaanga. Unmai video neengal pottaal thaan makkalukku theriyum.
ASALAMU ALAIKKUM ,
WHY DELAY !
PUBLISH IT ASAP.
ASSLAMU ALAIKUM BROTHER & SISTER
IF ANY BODY SEE THE VIDEO FIST OF ALL. WHO SENT COMMANTS PLZ SEE THE VIDEO .THEN TYPE UR COMMANTS OK OTERWISE DONT SENT COMMANDS .
I SAW THE VIDEO .I M WATING FOR THE VIDEO OF ISLAM KALVI .UPDATE ANY USEFUL ARTICLE OF ISLAM .DONT WASTE UR TIME .I SAW UR WEBSITE WEELY 2 TIMES BUT COMING DAYS ????????????????????????????????????????????????????????????????????????????????????????
I M WATING FOR THE VIDEO
Assalamu Alaikkum,
Attn : Admin of Islamkalvi.Com
Please go through once before puhlishing this kind of articles which has no base at all for anything as mentioned in the article above.
Its almost 2 weeks since the debate held, but still this article writer has done nothing to proove the contents of his article is wright or atleast some part of the article is wright.
There are many viewers / readers for this site to enhance their knowledge about Islam but posting such these kinda of ego based articles would surely hurt them.
Please publish the debate video for other viewers to watch and understand the truth or remove this article immediately as no point of having this article as it has nothing to proove but just the article alone.
Wasalam
Mohamed
Please release the video in this site so that we ourselves can analize the truth….. mail me if video is ready for download
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஆன் லைன் PJ வில் விவாதம் பார்த்தேன். களியக்கவிளையில் நடந்த வார்த்தைஜால காமெடி மீண்டும் அரங்கேற்றம் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது. விவாத இறுதியில் உண்மையான இறையச்சம் சகோதரர் முஜீபுர்ரகுமான் அவர்கள் வெளிப்படுத்தியது முத்தாய்ப்பு. இதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும்கூடும் ஏனென்றால் அவர்களுக்கு (இறையச்சமென்றால்) கிலோ என்ன விலை? உண்மையை ஊமையாக்க (பாக்கருடன்) ஏசி ரூம் போட்டு வார்த்தைக்கு வார்த்தை வல்லாஹியை அள்ளிவீசிய வள்ளல்கள்தானே இவர்கள்??????
ஒன்று மட்டும் மிகத்தெளிவாக விளங்கியது, இவர்களுடன் விவாதம் நடுத்துவதற்கு இரண்டு தன்மை மிகமுக்கியம். ஒன்று: இறையச்சம் இல்லாமை, மற்றொன்று: செவிடன் காதில் சங்கொலித்ததுபோல் தனது வாதத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பிதற்றிக்கொண்டிருப்பது. இலகுவாக சொல்லப்போனால் அவர்களளவில் தரம் தாழ்ந்து வார்த்தை விளையட்டில் அவர்களை அப்படியே பிரதிபலிப்பது மிகவும் அவசியம். இந்த தகுதிகளை நம்முள் உருவாக்கி நம் ஈமானை இழப்பதைவிட, இவர்களின் அயோக்கியத்தனங்களை சமுதாயத்திற்கு அடயாளம் காட்ட நம் நேரத்தை செலவிடுதல் நலம்.
அனைவரும் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக்கொள்வோமாக!!
Ansari B A – London
a.alikum ur web is very usefull to tamil talking muslims
we well come ur activities
thank u
Assalamu Alaikkum,
I’ve downloaded the files regarding the debate from tntj website. Unfortunately in half way, it is stopping. I don’t know the reason/s. So please you upload as soon as possible without any censor.
Assalamu Alaikkum,
I’ve downloaded the files regarding the debate from tntj website. Unfortunately in half way, it is stopping. I don’t know the reason/s. So please you upload as soon as possible without any censor
Assalamu Alaikum
Dear Admin,
Why have you not posted my comments, because it was the truth? You people are the worst of all creation in this world.
You had posted around 26 comments till now but you did not have the courage to post my comment.
Out of these 26 comments so far, most of them are criticising and accusing PJ which your aim and mission of this website. thats the reason why you have posted.
If you are true muslism as you are claiming to be and fighting for the truth then you should have posted every comments unless or otherwise if there was any vulgarity.
I’m 100% sure Alhamdulillah, I have not used even a single words as such inspite of which my comments are not posted.
Now, this really make us wonder how many peoples comments you would have not posted.
Please do not forget that Allah (SWT) is watching everyone.
Falsehood will perish as Falsehood is bound to perish.
I ‘m also pretty sure that you will not have the guts post even this.
Fear Allah.
From
Hajakudbudeen
Kingdom of Bahrain
00973 39740498.
நிர்வாகி
on 07 Apr 2009 (2 weeks ago) at 4:42 am
14இன்ஷா அல்லாஹ் விரைவில் விவாத வீடியோ பப்ளிஸ் செய்யப்படும்.
Viraivil means how many days?
any editing need?
plz release video?
Don’t Delay
assalamualaikum,
i m waiting for your debate video why so late . if you going publish it when.if you dont publish the video every one know who are u
assalamu alaickum
I watch the debate video on onlinepj.com, and please do release the video soon that every one can understand who is misguiding the Muslim umma.
NOTE: you havent posted my last comments,
May Allah forgive all these above commented ignorant so called muslims, who doesn’t know the exact teachings & history of Islam.
Thanks
so far i am watching this web site &pj web sites as a mid way both sites search for true path of islam as a human bieng everyone do mistakes its acceptable but the intention is purely for allah or worldly benufits here some of sentances above given is it possible to digest? first u should accept the followers of the thowheed cann’t be fool. anyone playing with islam in wrong intention this evil hearted people never succeed even worst thing they will face
வாய் சூனியம் ஒன்று மட்டும் போதும் எப்படிப்பட்ட கூட்டத்தையும் முட்டாள் ஆக்கலாம் என்பதற்கு பிஜே உதாரணம். ஒரு குடம் பால் கொடுத்து அதில் ஒரு துளி விஷத்தை கலந்தால் குடம் முழுவது விஷமாகி விடும் என்ற ஒரு சிற்றறிவு இல்லாத பிஜேவை மார்க்க அறிஞர் என்று அழைப்பது பெரும் தவறு. நல்ல அறிவுரை சொல்வது சரிதான் ஆனால் இஸ்லாமிய மக்கள் மனங்களில் விஷத்தை விதைத்து பிரிவினையை உண்டாக்கினால் சமுதாயத்துக்கு மாபெரும் ஆபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும்.
பிஜே போன்ற ஒருவர் குர்ஆனை மொழிபெயர்க்க தகுதி உள்ளவரா என்பதை முதலில் ஆராயுங்கள். ஒரு மாபெரும் இறைவேதத்தை மொழிபெயர்க்க அதன் மூல மொழியான அரபியிலும் மொழிபெயர்க்கும் தமிழிலும் சிறந்த மொழியறிவு (நிபுணத்துவம்) வேண்டும். இது அனைவருக்கும் தெரிந்த அடிப்படை. பள்ளிக்கூடம் செல்லாத அரபி பட்டத்தையும் முழுமை செய்யாத ஒருவர் குர்ஆனை மொழிபெயர்க்க கொஞ்சமும் தகுதி இல்லாதவர். இதற்கு முன் குர்ஆனை மொழிபெயர்த்தவர்கள் அனைவரும் பண்டிதர்கள். மேலும் வெளியிடும் முன் அதை பல பேர் மேலாய்வு செய்து ஒப்புதல் தந்துள்ளார்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்
கபுறு கட்டி வணக்கபடும் அவுலிய :- .மக்களை மயக்கும் வண்ணம் பேசுவதில் வல்லவர்.தான் சொல்ல வரும் கருத்தை மிக தெளிவாக, துல்லியமாக சொல்ல கூடியவர்.இஸ்லாத்தை முழுமையாக தெரிந்து நம்மை நேர்வழி படுத்தியவர் , நாம் செய்து கொண்டு இருந்த தவறுகளை எல்லாம் சுட்டி காட்டி நம்மை திருத்தி நேர்வழி படுத்தியவர்,தனக்கு இவ்வளவு பேரும் புகழும் இருந்தாலும் அதை வைத்து காசு பார்க்காமல் ஏழ்மையாக வாழ்பவர்.நமக்கு வந்த நோய் நொடி எல்லாம் தீர்த்து வைப்பவர்.அவரை எதிர்த்து பேசுபவர்கள் பாவிகள் அன்றைய தக்லித்துக்கள் (இன்றைய கபுறு வணங்கிகள் )
பி.ஜே.மக்களை மயக்கும் வண்ணம் பேசுவதில் வல்லவர்.தான் சொல்ல வரும் கருத்தை மிக தெளிவாக, துல்லியமாக சொல்ல கூடியவர்.இஸ்லாத்தை முழுமையாக தெரிந்து நம்மை நேர்வழி படுத்தியவர் , நாம் செய்து கொண்டு இருந்த தவறுகளை எல்லாம் சுட்டி காட்டி நம்மை திருத்தி நேர்வழி படுத்தியவர்,தனக்கு இவ்வளவு பேரும் புகழும் இருந்தாலும் அதை வைத்து காசு பார்க்காமல் ஏழ்மையாக வாழ்பவர்.அவர் சொல்லுவதெல்லாம் சரியாக தான் இருக்கும் .இவருக்கு புடிக்காதவர் எல்லாம் பொம்புள பொருக்கியாகபடுவார்.தனக்கு வரும் எடிட் செய்த சி.டி மூலம் தன தக்ளித்களை நம்ப வைப்பார்.இன்றைய தக்ளிதுக்கள் (அல்லா காப்பாத்தனும் .)வருங்காலத்தில் கபுறு கட்டாமல் இருக்கணும்
தான் மொழிபெயர்த்த குரானை எந்த ஒரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் எடுத்தேன் கவுத்தேன் என்கிற போல ,வெளியிட்டு இன்று தவறுகளை திருத்திய குரான் திருத்தாத குரான் என்று வெளியிட்டு கொண்டே இருக்கிறார் .
மேலும் தன மேல் சுத்திய குற்றச்சாட்டுகளை ,சுமத்துபவர், அவரிடம் அல்லா மீது ஆணையிட்டு இல்லை என்று சத்தியம் செய்து மறுக்க சொல்லுகிறார் அதை இந்த பி ஜே ஏற்காமல் மறுத்து, நேரடி விவாதம் வா என்கிறார் .அல்லா சாட்சியாக வேண்டாம் நீயும் நானும் பார்ப்போம் வா என்கிறார் இப்படி பட்ட மனிதர் மொழி பெயர்த்த குரானின் நிலை எப்படி இருக்கும்.
அல்லா சுபஹனதால ஒரு பெண்ணோ இல்லை ஆணோ தவறான வழியில் விபச்சாரம் செய்து விட்டால் எப்படி தண்டிக்க அல்லது கண்டிக்க வேண்டும் என்கிற வரைமுறை சட்டங்களை நமக்கு அளித்துள்ளான்.ஆனால் அண்ணன் பி ஜே (குரான் வலி நடப்பவர் )செய்யும் செயலை பார்த்தால் அம்மாடியோ தன்னுடைய அதரவாளர்கள் வலை தளங்களில் பெண்களின் மானத்தை பறக்கவிடும் காட்சிகள் அல்லா பாதுக்ககனும்.இப்படி பட்ட மனிதர் மொழி பெயர்க்கும் குரானின் நிலை .
இறைவன் மிக கடுமையாக எச்சரிக்கும் இஸ்லாத்தின் பெயரால் மனிதர்களை பிரித்தல்.அதை சர்வ சாதரணமாக செய்யும் இவர் மொழி பெயர்க்கும் குரான் எப்படி சரியாக இருக்கும் எந்த ஒரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்று கொள்வது எப்படி ஏதுவாகும் .
இப்படி இஸ்லாத்தின் அடிப்படையை சிறிதும் கடைபிடிக்காமல்.
ஒற்றுமை எனபது எவ்வாறு இருக்க வேண்டும் மார்க்க விசயத்தில ,சமுதாய விசயத்தில என்று தன்கூட்டத்தை பார்த்து ஒரு கேள்வி ஒன்னு கேட்டு மார்க்க விசயத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிறார் .தாய் தகப்பன் குடும்பமாக இருந்தாலும் மார்க்கம் தான் நமக்கு முக்கியம் என்கிறார் (அது சரிதான் ).ஆகையால் மார்க்க விசயத்தில் உரசினால் குடும்பத்தை விட்டு பிரிவது தவறில்லை என்று கூறிவிட்டு ,மறுபக்கத்தில் வயதான பெற்றோர்களை கைவிடல் கூடாது என்று கூறி முதியோர் காப்பகம் வைத்து இலவசமாக வசூல் செய்கிறார் .குடும்பத்தை நடுவீதியில் விட்டு வா என்று இவர் சொல்லாட்டி ,அல்லா சொல்லி காட்டாத ,நபிகள் காட்டிகொடுக்காத முதியோர் இல்லம் ஏன் வைக்க வேண்டும் .
நோயை முதலில் அனுப்பி விட்டு மருந்தை பின்னாடி அனுப்பும் அமெரிக்கவின் நாசகார சூழ்ச்சி போல் அல்லவே இருக்கு உமது மார்க்க பற்று .தொப்பி போடுவது நபிகள் காட்டிகொடுத்த வழி இல்லை ஆகையால் அதை நாம் கடை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை (சரி தான் ),
1-முதியோர் இல்லம் ,
2-தனி பள்ளிவாசல் ,
3-மாநாடு ,
4-பெண்களை வீதிக்கி இழுத்து போராட்டம் நடத்துவது ,
5-விபச்சாரம் செய்தவராக சுட்டிகாட்டபடும் உங்கள் இயக்க முன்னாள் தலைவர்களை வலையில் மானத்தை வாங்குவது ,
6-வாய்ப்புகள் இருந்தும் ஹஜ் செய்யாதது ,
7-மரணம் அல்லா நாடிய நேரத்தில் வரும்,வரும் என்கிற இஸ்லாத்தின் அடிப்படை அதை நம்புவதாக கூறிவிட்டு பக்கத்துல துப்பாக்கி ஏந்திய கருப்பு படை வைத்துக்கொண்டது ,………………………
எப்படி எதுவுமே நபிகளோ அல்லாஹ்வோ காட்டிகொடுக்காத பல செயல்களை செய்யும் நீங்கள்.தான் செய்யும் செயல் தப்பாக இருந்தாலும் மார்க்கம் என்று கூறி வளைத்து ,வணங்காமுடி கூட்டங்களை நம்பவைத்து நயவன்ஹகம் செய்யும் நீங்கள் தொகும் குரானை எப்படி எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்று கொள்வது
ஷாகுல்