Featured Posts

நினைவுத் திரும்பிய பி. ஜைனுல் ஆபீதீன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)

நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும், இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த செய்தியையும் அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை இனைத்தும் சில செய்திகளை பீ. ஜைய்னுல் ஆபிதீன் எழுதியிருக்கிறார்.

மாய்ந்து மாய்ந்து அவர் எழுதியருப்பதில் முக்கிய பாயிண்ட் என்னவென்றால், ‘கடந்த மார்ச் மாதம் பீ. ஜைய்னுலாபிதீனின் தர்ஜமா தவறுகள் தொடர்பான விவாதத்தில் ஜைனுலாப்தீன் வென்றார் முஜிபுர்ரஹ்மான் தோற்றார். அதனால் அடுத்த கலந்துரையாடல்களுக்கு முஜிபுர்ரஹ்மான் பயப்படுகிறார்’ இது தான் அவர் முக்கியமாக வைப்பது.

தோல்வி அடைந்தது பீ. ஜைனுல் ஆபிதீன்-தான்:

அவர் தோற்றதற்கு தெளிவான ஆதாரத்தைத் தருகிறோம். அதை மூளை சரியாக வேலை செய்யக்கூடிய, சிந்திக்கின்ற ஆற்றல் உள்ள தமிழ் படிக்கத்தெறிந்த எல்லோரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

முஜிபுர்ரஹ்மான் எடுத்துவைத்த பீஜேவின் தவறுகளில் முக்கியமான ஒன்று, ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கருத்தைப் புகுத்துவதற்காக ஹதீஸில் இடைச்செறுகள் செய்துள்ளது பற்றியதாகும்.

அதாவது ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதி செல்வது பற்றிய ஹதீஸில், “அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை திரும்ப” என்று எழுதி, அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி இருக்கிறார்.

இது, அவர் பின்னால் சொல்லப்போகிற ஒரு கருத்தை முன் கூட்டியே படிப்பவர்கள் மனதில் பதியவைப்பதற்காக செய்துள்ள காரியம் எனபதனால் இது ஹதீஸில் செய்கிற தில்லு முல்லு என்ற ரீதியில் முஜிபுர்ரஹ்மான் தனது வாதத்தை வைத்தார்.

ஆனால் ஜைனுல் ஆபிதீன் இதனை மறுத்தார். விவாதத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்கள் இது பற்றி பேசப்பட்ட போதும், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் எழுதியது சரிதான் என்று சமாளித்தார்.

ஆனால் விவாதத்திற்குப் பின் வெளியிட்டுள்ள தனது தர்ஜமாவின் எட்டாவது பதிப்பில், முஜிபுர்ரஹ்மான் தவறானது என்று நிரூபித்த வாசகத்தை பீ ஜைனுல் ஆபிதீன் நீக்கியுள்ளார். இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிபிட்டாக வேண்டும். இதே தவறை விவாதத்தில் சுட்டிக்காட்டும் போது அந்த நேரத்திலும் பிடிவாதமாக மறுத்தார். விவாதத்தின் இறுதி உரையிலும் முஜிபுர்ரஹ்மான் ஒரு தவறையும் எடுத்து வைத்து நிரூபிக்கவில்லை என்றும் இவர் கூறும் தவறு எதுவும் தவறு இல்லை என்றும் திமிராக பேசினார்.

இங்கே விவாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்புகளில் இடைச்செறுகலான வாசகம் இடம் பெற்று இருப்பதையும் விவாதத்திற்கு பின்பு அது நீக்கப்பட்டிருப்பதையும் தருகிறோம்.-
பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமாவில் ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ தலைப்பின் கீழ் ஏழாம் பதிப்பிலும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் இடம் பெற்றதாவது

அதாவது விவாதத்துக்குமுன்:
இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார்.
(பக்கம்:35-36 ஏழாம் பதிப்பு)

பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்

விவாதத்திற்குப் பின்
இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரில் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை திரும்ப நினைவு படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 41, எட்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2009)

பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்

முந்தைய பதிப்புகளில் ‘அந்த வருடத்தில்’ என்று செறுகியிருந்த வாசகத்தை விவாதத்திற்குப் பின் நீக்கியுள்ளார்.

இந்த வாசகத்தின் விபரீதத்ததை புரியாதவர்கள் இதிலென்ன பெரிய தவறு வந்துவிடப்போகிறது என்று நினைக்கலாம். இதற்கு ஒரு சில பக்கங்களுக்குப் பின் குர்ஆனின் சூராக்களின் வரிசை நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்டதல்ல என்ற கருத்தை பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கருத்தை முன்பே வாசகர்களின் மனதில் போடுவதற்காக மேற்கண்ட ஹதீஸூக்கு மாற்றமான செய்தியை அதற்குள் லாவகமாக இடைச் செறுகல் செய்துள்ளார்.

ஹதீஸ் வாய்வழியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாழ்ந்திருந்தால் ஹதீஸ் கலை அறிஞ்ர்கள அவரை இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் என்று அறிவித்திருப்பார்கள்.

தான் எழுதியது சரி தான் என்று விவாதத்தில் வைத்து சமாளித்ததுக்கொண்டிருந்தவர் இதனை நீக்கியிருக்கிறார். நீக்கியபின், முஜிபுர்ரஹ்மான் அது எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னாரோ அப்படியே வந்திருக்கிறது. (இன்னும் பல திருத்தங்கள் உள்ளன நாம் பின்பு மக்களுக்கு எடுத்துவைப்போம் இன்ஷா அல்லாஹ்) ஆனாலும் தானே ஜெயித்தாக பரையடித்ததுக்கொண்டிருக்கிறார் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் விவாதத்தில் தோற்றவர்தான் தனது தோல்வியையும் பலவீனமான வாதத்தையும், விதண்டாவாதத்தையும், மறைப்பதற்காக சீடியை எடிட் செய்து வெளியிடுவார். ஆகவே விவாத சீடியை எடிட் செய்து வெளியிட்ட சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் மேற்படி விவாதத்தில் தோற்றவர் என்பது நிரூபனமாகிவிட்டது.

ஆனாலும் அவர் துணிச்சலாக, தான் வென்றதாக எழுதிக்கொண்டும் எதிராளியை மட்டம் தட்டி பரிகாசம் செய்து கொண்டும் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?

அதற்குக் காரணம் மக்களை (அதாவது அவரது இது போன்ற பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம்பும் மக்களை) அவர் ஆடு மாடுகள் போல் கருதுவதால்தான், இதை நாமாகச் சொல்லவில்லை. அவர் வாயினாலேயே சொன்னது!

TNTJ உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதன் மாநிலச்செயலாளராயிருந்த ஒரு சகோதரர் அப்போது நடந்த (சகோதர இயக்கத்துக்கெதிரான) வன்முறை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

அது பற்றி பேசுவதற்காக, பீ ஜைனுல் ஆபிதீனுக்கு போன் செய்த அந்த சகோதரரின் டிரைவர் (இவர் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளவர்) இப்போது நடக்கும் சம்பவங்களால் மக்களிடத்திலே தவ்ஹீத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்ற கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு பீ.ஜைனுலாபிதீன் சொன்ன பதில்:

‘மக்கள் என்பது ஆடு மாடுகள் மாதிரி , சீக்கிரமே மறந்து விடுவார்கள்.

ஆக இவரை நம்பும் TNTJ காரர்களை இவர் இப்படித்தான் வைத்திருக்கிறார். இவர் நிலையை தெரிந்து கொண்ட எங்களைப்போல் பலர் அவரிடமிருந்து விலகிக் கொண்டோம். இவ்வளவும் தெரிந்த பின்னும் அவருக்கு ஆதரவாளர்களாயிருக்கும் சகோதரர்கள் சற்று யோசிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் ஆடு மாடுகள் மாதிரி இருக்கப்போகிறீர்கள்? ஜைனுல் ஆபிதீனிடம்!

அவர் இவ்வாறு கருதும் மக்களை –குறிப்பாக TNTJ-யிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரீயுடன் கலந்துரையாடல் நடக்காதது குறித்து தவறான தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளார். ஆடு, மாடுகள் மாதிரியில்லாத மனிதர்களுக்கு அது குறித்து சுருக்கமான தெளிவைத் தருகிறோம்.

பீ. ஜைனுல்ஆபீதீனீன் தர்ஜூமா தவறுகளின் விவாத முடிவில், மற்ற தலைப்புகளை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளும்படி ஜாக் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் கேட்டுக் கொண்டதனால் கலந்துரையாடலுக்கு தாம் ஒப்புக் கொண்டதாக எழுதி தவறான செய்தியை தருகிறார். உண்மையில் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்ததே ஜைனுல் ஆபிதீன்தான்.

அடுத்த மூன்று தலைப்பு விவாதங்கள் பற்றி மேடையில் இருந்நதவர்கள் ஆலோசனை செய்த போது ஒரே நாளில் மூன்று விவாதங்களையும் வைத்துக் கொள்ளலாம். என்று நான் கூறினேன். அதை இமாம் ஹூசைன் ஜைனுலாபீதீன் அவர்களிடம் சொன்ன போது, ஒரு நாளா? போதாது அப்படியென்றால் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம், என்று முதலவாதாக கூறியது ஜைனுலாபிதீதான் அதனை முஜீபுர்ரஹ்மானிடம் இமாம் ஹூசைன் எடுத்துக்கூறிய போது அவரும் ஒப்புக்கொண்டார்.

இதுவெல்லாம் சிடியில் பதிவாகியிருந்தும் அதை மட்டும் துண்டித்திருக்கிறார். பிறரை மட்டம் தட்டுவதற்காக இவர் கையாளும் இழிந்த தந்திரங்களில் இது முதலாவது அல்ல என்பது ஆடு, மாடுகள் போல் இல்லாத மக்களுக்கும் தெரியும்.

முஜிபுர்ரஹ்மான் உமரீ ஓடி ஒளிவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு தான் மவுனம் காத்ததாகவும் பி.ஜைனுலாபிதீன் கதைத்திருக்கிறார். ‘வாக்களித்த காலம் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறார். என்று எழுதிய ஜைனுலாபிதீனுக்கு நாம கூறுகிறோம் வாக்களித்த காலம் முடிந்தவுடன் உடனடியாக நேரில் அவரிடம் ஆள் அனுப்பிக்கேட்கவில்லை. விருதுநகரில் அவர் இருக்கும் பகுதியில் தான் TNTJ மாவட்டச் செயலாளாரும் நகர நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அல்லது நேரடியாக தபால் எழுதியும் கேட்க வில்லை. நாம் இதில் தொடர்ந்து தலையிட மறுத்து நேரடியாக பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிய பின் மேற்கண்டவாறு பீ ஜைனுல் ஆபிதீன் செய்திருந்தால் இப்போது அவர் கதைப்பது உண்மையாக இருந்திருக்கும். ஆனால் நேரடியாக தனது கட்சி பொறுப்பாளரை அனுப்பி பேசுவதற்கோ அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ளவோ பயந்தார் ஜைனுலாப்தீன். ஏனென்றால் அப்படிச் செய்திருந்தால், விவாத சி.டி.யில் பல இடங்களில் எடிட் மோசடி செய்து வெளியிட்டது அதைப்பற்றி முஜிபுர்ரஹ்மான் கேள்வி எழுப்புவார் தான் அவமானப்பட வேண்டியது வரும் என்ற பயத்தினாலேயே மவுனம் காத்தார்.

ஆனால் முஜிபுர்ரஹ்மான் உமரீ மீது பரிதாபப்பட்டு மவுனம் காத்ததாக சொல்லி இவர் ஆடு மாடுகளாக கருதும் மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.

யாருக்கு பரிதாபப்படுகிறாராம் இவர்? இவரது கருத்துப்படி
தவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய, பணத்துக்காக சத்தியக் கொள்கையிலிருந்து வழி கெட்டுக்குபோய் அந்த வழிகேட்டைப் பிரச்சாரம் செய்யக்கூடிய, இவரது தர்ஜமாவில் தவறே இல்லாதவற்றை தவறென்று கூறிய, தவ்ஹூதுக்கு எதிராக சதி செய்யக்கூடிய, இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே மாற்றம் செய்துவிட்ட ஜாக் இயக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் குழப்பம் செய்யும் ஒருவரை மார்க்க அடிப்படையில் எதிர்கொண்டு அடையாளம் காட்டாமல் பரிதாபப்பட்டு சும்மா இருந்நதாராம். இதை நம்புபவர் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் அல்ல, ஆடுமாடுகளாகத்தான் இருக்க முடியும்!

முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் குறித்துப் பேச நாம் மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகள் இருக்கும் போது குப்பை, குப்பை என பிதற்றிக்கொண்டு டாட்காம்களுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் மூலம் ‘இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!’

கடந்த 25.9.2009 அன்று முஜிபுர்ரஹ்மான் உமரீ தொண்டியில் பீஜே அவர்களை எதார்த்தமாக கண்டபோது தானே சென்று , ஸலாம் சொல்லி கைகுலுக்கியதை இவர்களாக வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசியதாக திசை திருப்பியிருக்கிறார்.

அதோடு அப்போது நடந்த பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (அதிலும் கட்டிங்)

அதை வெளியிட்டதும் மிகுந்த நன்மையாக போய் விட்டது. பீ. ஜைனுலாபிதீன் அவர்கள் தன் ஆதரவாளர்களை ஆடு மாடுகளை மாதிரி கருதி வைத்திருக்கிறார். என்பது அவரே சொன்னது. அதன் உதாரண நிகழ்வுதான் அந்த பதிவில் நாம் காண்பது.

முஜீபும் பீ.ஜைனும் லாபிதீனும் உரையாடியதை சற்று நேரம் அமைதியாக தொடரவிட்டிருந்தால், சில உண்மைகள் வெளிப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல், இருவரும் பேசுவதை குழப்பும் விதத்தில் சுற்றி நின்றவர்களில், பீ.ஜைனுவால் ஆடு மாடுகள் மாதிரி என்று சரியாக கணிக்கப்பட்டவர்கள், இடையிலே தாங்கள் சொல்வதையே திரும்பத்திரும்ப சொல்லி கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.

மரியாதையான வார்த்தைகளால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, தரக்குறைவான வார்த்தைகளை – வேண்டுமென்றே இடையில் புகுந்து பேசி அதை சண்டையாக மாற்றும் ததஜ ஜமாஅத் பொறுப்பாளர்களையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.

பேச்சு நாகரீகமும், மரியாதையும் ஒழுங்கும் அறியாத முரடர்கள் தான், ததஜ ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் என்பதால் அந்த ஜமாஅத்தின் தரம் பற்றி முடிவு செய்வது மக்களுக்கு எளிதாகி விட்டது.

பீ.ஜைனுல் ஆபிதீன் பெரிய அறிவாளி, புத்திசாலி, மனோநிலை அறிந்து பேசுபவர் என்பது எல்லோருக்கும் தெரியும், அதன்படி தன் ஆதரவாளர்களைப்பற்றி ஆடுமாடுகள் மாதிரி என்று அவர் கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டாக இப்போது தனது இணைய தளத்தில் வெளியிட்ட – முஜிபுர்ரஹ்மானுடன் சச்சரவு செய்த – வீடியோ காட்சிகள் உள்ளன.

ஆகவே, அதை அவசியம் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்! அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்குமாறு ஆன்லைன் பீஜே இணைய தளத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் விட்டு வைத்திருப்பதை தவறாக பயன்படுத்தி மேலும் மேலும் தவறுகள் செய்து, தங்களை கூடுதல் அழிவுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் வழிகேடர்கள்.

அத்தகையவர்களின் வழிமுறையில் தொடர்ந்து செயல்படாமல், வருந்தி திருந்துங்கள் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)

– M. அப்துர் ரஹ்மான் மன்பஈ

17 comments

  1. அப்துல் காதர்

    அன்புள்ள சகோதரர் அப்துர் ரஹ்மான் மன்பயீ அவர்களுக்கு,

    நீங்கள் தவறு என்று கூறிய விஷயத்தை பிஜே திருத்தியுள்ளார் என்றால் அவரை நீங்கள் பாராட்ட வேண்டும். அதை விடுத்து இவ்வாறு விமர்சிப்பது தவறு, இது அவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலைக்கு தள்ளும். எஸ்.பி பட்டினம் போன்ற பிரச்சினைகளை நீங்கள் கையில் எடுக்க வேண்டாம், பிஜேவிடம் உள்ள தவறுகளை அழகிய முறையில் கூட்டிக்காட்டி திருத்துங்கள், தவ்ஹீத்வாதிகளை ஒன்றுப்படுத்துங்கள்.

    பிஜே திருத்திய விஷயம் உங்கள் மீதும் பிஜே மீதும் நல்லெண்ணத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

    அன்புடன்,
    அப்துல் காதர்.

  2. Dear Manbaee,

    All human beings are vulnarable for mistakes… as long as they understand and correct the same, it is fine and should be appreciated…. not criticise it.

    regards
    SALAH

  3. ya Allah when these fights will finish ?

  4. pj niraiya thavarukal seithu erukkiraar….Allah anaittaium veli kondu varuvaan insha allah.

  5. மனிதர்கள் அனைவரும் தப்பு செய்யக்கூடியவர்களே…அதில் சந்தேகமெயில்லை.. பி.ஜே. போன்றோர் அதை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. ஈகோ தான் காரணம். தன்னைவிட அறிவாளி உலகிலேயே கிடையாது எனநினைப்பவர் மிஸ்டர்.பி.ஜே. அவரிடம் இப்படிப்பட்ட நல்ல குணங்களை எதிர்பார்ப்பது அறிவீணம்…
    அல்லாஹ் நாம் எல்லோருக்கும் நல்ல புத்தியை தர தூஆ செய்வோம்..

  6. a.alikum
    பீஜே திருந்துவாரோ இல்லையோ, பீஜே பிரியர்கள் உடைய நிலை மிகவும் கவலைக்குறியது.

  7. A.s.Rasool Mohideen

    Assalamu alaikkum

    1237. ”இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
    புஹாரி : 2786 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

  8. Salam,

    Neengalum namma arasiyal vathigalai pola sandai poda vendam. Thavarugalai azhaghiya muraiyil sutti katungal.Thiruthi kondal avarukku nanmai illa yendru avar vembu pidithal atharkan kooliyai avar Allah vidam petruk kolluvar. Neengal ippadi sandai poduvathal yengalai pondra ilaigangarl kulapathil ullom. thayavu seithu nervali kaatungal ithu pondra vimarchangalai yellorum kuraithu kollu vathu nallathu. salam

  9. I wish the publication of Quran Tharjuma should not done immediately after it is prepared, Rather It should be circulated among many scholars as possible to find the possible human errors and go for re-correction.

    No one should be adamant to refuse others opinion in the matter of Islam, rather they should reach many scholars around the world to confirm the correctness of his work before it reaches the hands if public who most of the time get confused by one message and get stick to what ever first they got into.

    So please do take seriously in this regard

    May Allah Bless you according to your intention in your work.

  10. MOHAMED YUSOOF RAJAGHIRI

    Ya allah Ya rahman Br P.Junulabdeen esq, eco andra saitanai velakuvayaha ya allah nal sandanai taruvayaha

  11. miyan|(sri lanka)

    salam!

    according to you people pj tharjima has so many mistake ok, what about other tharjima’s you think that all are 100 percent correct if not why dont you criticise about those.if you are fear to allah you should talk about all,then only ordinary people can get correct one.

  12. Assalamu alaikkum.

    None of the sons of Adam, can be 100% correct. BUt no other Quran tharjuma, other than PJ’s, has written in it that “Quran is not preserved in the written form” . May be the heretics say like that. But none we know among the tamil muslims, other than our PJ , who says like that.
    Mistakes are heavy if you see it from an open mind.

  13. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பிற்குரிய சகோதரர்கலே நாம் அனைவரும் த்வ்ஹீத் வாதிகள் என்பதில். சந்தேகம் கிடையாது,அப்படியிருக்கும் போது ஒருவரையொருவர் ஏன் குற்றம் கூருகின்றீர்கள்.மனிதன் என்ற வகையில் தவாருகள் பீ.ஜே.க்குமட்டுமல்ல அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். நீங்கள் அனைவரும் படித்த உலமாக்கள். நீங்கள் குர் ஆன் கதீஸைப் பேசக்கூடியவர்கள்.இப்படி நீங்கள் பேசுகின்ற போது எங்களைப் போன்ற பாமர மக்கள்.உங்கலில் யார் சொல்வதை சத்தியம் என்று எற்பது. முஸ்லிம் அல்லாத மக்கலும் எத்தனையோ பேர் இதைப் பார்ப்பார்கள் அல்லவா?அவர்கள் இதைப்பார்க்கும் போது இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்.தயவு செய்து.ஒர்வரை ஒருவர் குற்றம் கூருவதை விட்டு விட்டு. நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள். நமக்கு முக்கியம் சத்திய மார்க்கத்தைச் சொல்வது தான் என்று சிந்திது செயல் படுங்கள். நீங்கள் கூறலாம் தவரைத்தானே சுற்றிக் காட்டினோம் என்று.ஆனால் சவுதி அரேபியாவில் மொழி பெயர்க்கப்பட்ட.குர் ஆனிலே.7வது அத்தியாயத்திலே150வது வசனதில்.மூஸா[அலை]அவர்கள் ஹாரூன் [அலை]அவர்கலுடையதலை முடியைப்பிடித்ததாக மொழி பெயக்கப் பட்டுள்ளது. ஆனால் நம்முடைய உலமாக்கள்பயான் செய்யும்போது தாடியெனச்சொல்கிரார்கள்.இதில் எது சரி?

  14. Brothers Assalamu alaikum!
    It seems to be that so many muslim brothers are got confused because the muslim scholars fight between them. To avoid confusion some tips for your consideration.
    1. Pray ALLAH to show the straight way in every
    prayer. And ask HIM to clear the doubts.
    Please read quran in arabic regularly with the
    translation in our mother tongue. In tamil language
    the saudiarabian translation is marvellous!
    2. Keep the translations of Bukhari,muslim,tirmidhi and
    other authenticated hadeedh books refer them
    regularly. Work hard to clear your doubts on the
    basis of that.
    3. The first and foremost condition is hear and read the
    speeches and writings of the scholars of islam and
    please do not come in to conclusion that particular
    scholar’s opinion is always correct. Because this kind
    of thinking leads to thaqleed. do not follow any one
    blindly.
    4. Remember our beloved Imam Malik(raha) show his finger to the graveyard of Nabi(sal) and said. which means there are words and opinions of the persons which could be accepted and rejected Except the word of “sahibul khabar” (Rasoolullah salalahu alahi wassalam)
    This declaration show us only words of Allah’s messenger is completely accepted by every muslims. and there are opinions of scholars which should be subject to accept an reject. We are spending so many time to earn our livelihood. But not spending our time to our life after death. May ALLAH show us the right way.

  15. மார்க்க அறிஜர்கள் தவறு விடுவதும் , திரிதிக்கொல்வதும் இஸ்லாமிய வரலாறில் புதிது அல்ல ..

  16. ASSALAMU ALAIKUM ISLAM KALVI.COM
    WE ARE MUSLIMS AND WE WELCOME CRITICISM IN ISLAM
    THERE ARE TWO KINDS OF CRITICISM IN EVERYTHING
    1-CONSTRUCTIVE
    2-DESTRUCTIVE,
    WE MUSLIMS WELCOM CONSTRUCTIVE CRITICISM RATHER THAN DESTRUCTIVE ONE,SO PLEASE AVOID ALL THOSE THINGS AND COME TO A SETTLEMENT TO PROPEGATE THE WAY OF ISLAM IN EVERY NOOK AND CORNER OF THE WORLD AND GET REWARDED THE GREAT PARADISE.ALHAMDULILLAH
    SAMEER M SAHIB
    QATAR

  17. DEAR ALL

    ASSALAMU ALAIKUM…

    HUMAN MISTAKE YOU CAN FIND EVEN IN ANY TRANSLATION BUT IF WE TRY TO CRITICIZE NO ONE WILL COME FORWARD TO DO THIS JOB…

    LET US UNITED AND SUPPORT NOT ONLY P.J BUT THE PEOPLE WHO ARE IN THE FIELD OF DAWAH AND SPEND MORE TIME IN THE PATH OF ALLAH (SWT) THE US…

    JAZAKALLAH KHAIR
    RISHAD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *