ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க பொய் சத்தியம் செய்பவன் குறித்து…….. 84- ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண(வாக்கு மூல)த்தின் போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும்,தம் சத்தியங்களுக்கும் …
Read More »அல்லுஃலுவு வல்மர்ஜான்
ஷைத்தானிய எண்ணம்
ஒரு விசுவாசியின் உள்ளத்தில் எழும் கெட்ட எண்ணம் குறித்து…… 83- மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்விகேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில்,அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ், இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7296: அனஸ் பின் மாலிக்(ரலி) 82- உங்களில் ஒருவரிடம் (அவர் மனதிற்குள்) ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? …
Read More »நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..
79 – என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-5269: அபூஹுரைரா(ரலி) 80- உங்ளில் ஒருவர் தமது இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அந்த தீமையின் அளவு …
Read More »அல்லாஹ்வுக்கு இணைவைத்தலே மாபெரும் அநீதி
78- எவர் இறைநம்பிக்கைக் கொண்டு(பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திட வில்லையோ என்னும்(6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்? ஏன்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல, அது இணைவைப்பையே குறிக்கின்றது. என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே நிச்சயமாக இணைவைப்பு மாபெரும் அநீதியாகும் என்று (அறிஞர்) …
Read More »இஸ்லாத்திற்கு முந்தைய நல்ல செயல்கள்
ஒரு நிராகரிப்பவன் இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நல்லறங்கள் பற்றி……. 77- அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்,போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிற்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா? என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்! என்று பதிலளித்தார்கள். புகாரி-1436: ஹகீம் …
Read More »இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்
இஸ்லாம் முந்தைய கெட்ட செயல்களை அழித்து விடுகிறது என்பது பற்றி….. 76- இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர். விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுகின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்டப்பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது …
Read More »போர் வெற்றிப் பொருட்களைத் திருடுபவர் நரகில்.. .
74- நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம் (வீட்டுப்) பொருட்கள்,தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச்செல்வமாக பெற்றோம். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) வாதில் குரா என்னுமிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். நபியவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை பனூளிபாப் குலத்தாரில் (ரிஃபாஅ பின் ஸைத் என்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக …
Read More »சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா!
71- அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்து …
Read More »அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!
70- யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார்.தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது எதன்மூலம் ஒருவர் தம்மைத்தாமே தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். யார் ஒர் இறை நம்பிக்கையாளரை இறைமறுப்பாளர் …
Read More »தற்கொலையும் நரக நெருப்பும்……
69- யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில்(தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தை கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொணடேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக …
Read More »