Featured Posts

நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..

79 – என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-5269: அபூஹுரைரா(ரலி)

80- உங்ளில் ஒருவர் தமது இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அந்த தீமையின் அளவு போன்றே பதிவு செய்யப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-42: அபூஹுரைரா(ரலி)

81- (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்(அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே- அதை செயல்படுத்தாமல் விட்டாலும் சரி- அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் தீமை செய்ய எண்ணி,(அல்லாஹ்வுக்கு அஞ்சி)அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

புகாரி-6491: இப்னு அப்பாஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *