Featured Posts

கஸ்ஸா நகரின் கோரக் காட்சிகள்!

Articleபஹ்ரைன் ஸல்மானியா மெடிக்கல் சென்டரிலிருந்து கஸ்ஸாவுக்கு மருத்துவ சேவைக்குச் சென்று திரும்பியுள்ள டா க்டர் அலி அல் இக்ரி மற்றும் நபீல் தம்மாம் ஆகியோர் கூறிய செய்திகள் கல்நெஞ்சங்களையும் கரையச் செய்வதாய் உள்ளன.விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இருவரும் கூறிய செய்திகளாவன.

இஸ்ரேலின் கோரத் தாக்குதலுக்குள்ளாகி தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டவர்களும் உயிருக்குப் போரடிக் கொண்டிருப்பவர்களும் இப்போது மருத்துவமனையில் உள்ளனர். இவர்களைப் பராமரிப்பதற்காக இன்டென்சிவ் கேர் யூனிட்டுகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. நோயாளிகள் எகிப்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்னவென்று விவரித்துக் கூற முடியாத அவல நிலையில் கஸ்ஸா நகரம் இப்போது உள்ளது. ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்ட அழிவை விட கோரமாக உள்ளது அதற்கு ஏற்பட்ட இழப்புகள்! ரோடுகள், வீடுகள், தெருக்கள் என்று இடங்கள் அடையாளம் தெரியாத நிலையில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. பெரும் பெரும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் இப்போது பெரும் குழிகளாக உள்ளன! கஸ்ஸா நகரின் மையப்பகுதியில் மக்கள் வசிப்பிடம் இன்று மயானமாகக் காட்சியளிக்கிறது!

வாகனங்களுக்கு பெட்ரோல் இல்லாததால் அத்தியாவசியப் பொருட்கள் கழுதைகளின் மேல் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மக்களின் வாழ்வாதார இடங்களான விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் தகர்ந்து தரிப்பணமாகி விட்டன!

6000 வீடுகள் உட்பட கிட்டத்தட்ட 10000 ஹவுசிங் யூனிட்டுகள் அழிந்துவிட்டன! வீடுகளை விட்டு வெளியேறி வாகனங்களிலும் நடந்தும் தப்பிச் சென்றவர்ளைக் கூட டாங்கர்கள சிதைத்துக் கொலை செய்து விட்டன. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சாதாரண வாழ்வை நோக்கி திரும்ப முயற்சிக்கின்றனர் கஸ்ஸாவாசிகள்.

பாதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் சாதாரண குடிமக்கள்! அவர்களுக்கு இப்போது உண்ண உணவில்லை! உணவு வாங்க பணமும் இல்லை! இருளைப் போக்க மெழுகுவர்த்தியும் மண்ணெண்ணெயும் மட்டுமே உள்ளன. எல்லாவற்றையும் இழந்து விட்டனர்!

டாக்டர் அல்-இக்ரி கூறுகிறார்: கஸ்ஸாவில் நாங்கள் கண்டு அனுபவித்த கோரக் காட்சிகள் எங்கள் மனதைவிட்டு இன்னும் மறையவில்லை!

நன்றி: கல்ஃப் மாத்யமம் – 24-01-2009 பஹ்ரைன் பதிப்பு

3 comments

  1. May Allah Grant then Jennathul Pirdouse. Ameen

  2. We are unable to see the disturbing images of Gaza. The Mother die in front of her son, The childrens are killed in front of their parents, civilians have no place to go, no where it is safe. The International community and the Arab world can only see the media reports in news channel and warn the israel in the name of Arab League which do not have any value in the Muslim & non-Muslim community.
    We see today that, America take strict action against the Rajapakshe government for his war crimes during 2009 war against LTTE. There were thousands of civilians, childrens and womens were killed unanimously. The womens were gang rapped and shot dead on their head. Channel 4 released the disturbing images from the battle field. As Sri Lanka, the war by Zionist killed thousands of civilians in Gaza.
    The US always take double standard. They are against to the Sri Lankan government and supporting the Zionists in Palestine. The crime is same and decisions are double standard…

  3. ya allah save my kassa city sisters and brothers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *