தொன்று தொட்டு இன்று வரை அனைத்து நபிமார்களும் போதித்து வந்த ஒரேவழி நாம் விளக்கிக் காட்டிய இதே இஸ்லாம் ஒன்றே. இதுவே நேர்மையான வழி. இதுவே உண்மையான இஸ்லாமிய வழி. நேர்மையில்லாச் செய்கைகளை இஸ்லாமியச் செய்கைகள் எனக்கருதி எவர் செயல்பட்டாலும் அவை இஸ்லாத்திற்குப் புறம்பான செய்கைகள் என்றே கருதப்படும். இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன்: “இஸ்லாத்தைத் தவிர வேறொரு மார்க்கத்தை யாரும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. …
Read More »ஜாஃபர் அலி
சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?
கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)
Read More »அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை
வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் …
Read More »இறை நேசர்கள் (2)
வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்’ என …
Read More »இறை நேசர்கள்.(1)
மெய்யான இறை நேசச்செல்வர்கள் இறை நம்பிக்கையிலும், பக்தியிலும் தீர்க்கமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பயம் என்றும் அவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். அல்லாஹ் அல்லாத எவரையும் (அவர் நபியாகட்டும், வலியாகட்டும், ஜின்னாகட்டும்) அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே இவர்கள் பக்தி செலுத்துவார்கள். உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும் இவர்கள் இசைய மாட்டார்கள். திருக்குர்ஆனையும், ஹதீஸையும் வைத்து துருவி ஆராய்ந்து இஸ்லாத்தில் உள்ளவற்றை மட்டும் எடுத்துச் செயல்படுவார்கள். …
Read More »கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?
புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு காட்சி இத்தகைய காட்சிகளைச் சிலர் காணுகின்றனர்.
Read More »ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.
இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு இனத்திலுள்ள அனைத்து ஷைத்தான்களையும் அடித்து அமர்த்துவதற்குரிய ஆற்றலை பெற்றிருக்கிறார்கள். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் …
Read More »நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.
தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள் (நாத்திகர்கள்) ஸியாரத்தின் போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும் மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய சித்தாந்தம் வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான் என்பதெல்லாம் உவமிப்புகள்தாம் உன்மையல்ல என்பதாகும்.
Read More »காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன.
Read More »முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?
கப்று (சமாதி) தரிசனம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். அனுமதிக்கப்படாத நூதன முறையில் அனுஷ்டிக்கப்படும் அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத் இரு வகைப்படும். ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம் விளக்கம் தரும்போது ‘எந்த ஸியாரத்தினால் ஸியாரத் செய்கிறவனின் எண்ணம் கப்றாளிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்’ என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில் அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும். மனிதன் இறந்ததன் பின் (ஜனாஸா) தொழுகை நடத்துகிறோமென்றால் அத்தொழுகையின் உட்கருத்து ஜனாஸாவுக்காக பிரார்த்தனை புரிவதாகும்.
Read More »