Featured Posts

ஜாஃபர் அலி

78. நற்பண்புகள்

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 5970 வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ …

Read More »

77. ஆடை அணிகலன்கள்

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5783 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5784 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ …

Read More »

76.மருத்துவம்

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5678 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5679 ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார். நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு …

Read More »

75. நோயாளிகள்

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5640 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5641 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், …

Read More »

74. குடிபானங்கள்

பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5575 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5576 அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) …

Read More »

73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே …

Read More »

72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5475 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)’ என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி …

Read More »

71. அகீகா

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5467 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார். எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்து விட்டார்கள். அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் …

Read More »

70. உணவு வகைகள்

பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5373 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்அனீ’ எனும் சொல்லுக்குக் ‘கைதி’ என்று பொருள். பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5374 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் முஹம்மத்(ஸல்) …

Read More »

69. (குடும்பச்) செலவுகள்

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5351 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்: நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் …

Read More »