Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 109)

ஜாஃபர் அலி

மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…

189- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய் நின்றபின் எப்படிக் குளிக்க வேண்டும்? என வினவினார். நபி (ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்கு கூறிவிட்டு கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் சுத்தம் செய் எனக் கூறினார்கள். அப்பொது அப்பெண் நான் எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதைக் கொண்டு நீ சுத்தம் செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். …

Read More »

மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…

187- நானோ மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன். இதை அறிவிக்கும் ஜூபைர் பின் முத்யிம் (ரலி) நபி (ஸல்) அவர்கள் தாங்கள் இரு கைகளால் சைகை செய்து காட்டினார்கள் என்று குறிப்பிட்டார்கள். புகாரி-254: ஜூபைர் பின் முத்யிம் (ரலி) 188- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களிடத்தில் குளிப்பைப் பற்றிப் கேட்டோம். அதற்கு ஒரு ஸாவு …

Read More »

குளிக்கும் நீரின் அளவு…

184- ஃபரக் என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம். (ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பண்ணிரண்டு மடங்காகும்) புகாரி-250: ஆயிஷா (ரலி) 185- நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களுடைய குளிப்பு எப்படியிருந்தது? என்று கேட்டார். ஆயிஷா (ரலி) ஸாவு, போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு …

Read More »

கடமையான குளிப்பின் முறை

182- நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக்கரத்தால் தமது இடது கையில் தண்ணீரை ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள். தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். மேலும் தமது தலை மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தமது இரு …

Read More »

கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்றுவது

181- நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்கள் இரு முன் கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் முக்கி அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதி விடுவார்கள். பின்னர் அவர்கள் தலை மீது மூன்று முறை கையினால் தண்ணீரால் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள். புகாரி-248: ஆயிஷா …

Read More »

பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…

180- உம்முஸூலைம் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம்! அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக்கேட்டுக் கொண்டிருந்த உம்முஸலமா (ரலி) அவர்கள் …

Read More »

குளிப்பு கடமையான நேரத்தில் உறங்க….

175- மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் (ரலி)யை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். அதற்காக உளூ செய்வது தான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-178: அலீ (ரலி) 176- நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க …

Read More »

மாதவிடாயின் போது….

174- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-297: ஆயிஷா (ரலி)

Read More »

மாதவிடாயின் போது மனைவியுடன்….

173- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையை கழுவுவேன் புகாரி-2030 – 2031: ஆயிஷா (ரலி)

Read More »

6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்குப் பயந்த மார்க்க அறிஞர்கள் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் கண்டித்து வருகிறார்கள். …

Read More »