189- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய் நின்றபின் எப்படிக் குளிக்க வேண்டும்? என வினவினார். நபி (ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்கு கூறிவிட்டு கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் சுத்தம் செய் எனக் கூறினார்கள். அப்பொது அப்பெண் நான் எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதைக் கொண்டு நீ சுத்தம் செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் எப்படி? என்று கேட்ட போது ஸூப்ஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்! எனக் கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய் என அவளுக்குக் கூறினேன்.
மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…
புகாரி-314: ஆயிஷா (ரலி)