187- நானோ மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன். இதை அறிவிக்கும் ஜூபைர் பின் முத்யிம் (ரலி) நபி (ஸல்) அவர்கள் தாங்கள் இரு கைகளால் சைகை செய்து காட்டினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
188- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களிடத்தில் குளிப்பைப் பற்றிப் கேட்டோம். அதற்கு ஒரு ஸாவு அளவு தண்ணீர் போதும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடிவைத்திருந்த நபி (ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவர்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library