அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.
“ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது சிறிய நூலாக இருந்தாலும் அறியபல புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக,
- ஷஃபான் மாதம் என்றால் என்ன?
- அதன் சிறப்புக்கள் எவை?
- அதன் நடுப்பகுதி தொடர்பான ஹதீஸ்கள் எவை?
- அவைகள் தொடர்பாக அறிஞர்களின் நிலைப்பாடும், மார்க்க தீர்ப்புக்களும் எவை?
- இந்த ஷஃபானின் நடுப்பகுதி இரவில் பித்அத்தான செயற்பாடுகளை முதன்முதலில் உறுவாக்கியவர்கள் யார்?
- உலகின் பல்வேறு நாடுகளிலும் இதனை எப்பெயர் கொண்டு அழைக்கின்றார்கள், என்பதுடன் அதனை எந்த அமைப்பில் கொண்டாடுகின்றார்கள்?
- இத்தினத்தை விலாவாக கொண்டாடுவதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் எவை, அவைகளுக்கான பதில்கள் எவை?
என்பவைகள் மாத்திரமில்லாமல் இம்மாதத்தை ரமழானுக்காக எந்த அமைப்பில் சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்ற பல விடயங்களை அல்குர்ஆன், சுன்னா அடிப்படையில் தனக்கே உரிய தோரனையில் தொகுத்துள்ளார்.
எனவே, இவரின் இந்தத் தொகுப்பை வாசிக்கக்கிடைத்ததினால் என்னாலும் பல புதியவிடயங்களை தொpந்துகொள்ள முடியுமாக இருந்தது. ஆகவே, நான் பெற்ற இந்த பிரயோசனங்களை தமிழ்மொழி பேசும் எம் சமூகமும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில், என் சக்திக்கு உட்பட்ட விதத்தில் அல்லாஹ்வின் உதவியால், தமிழுக்கு “மொழியாக்கம்” செய்துள்ளேன். நானும் ஒரு சாதாரண மனிதன் என்பதால், மொழியாக்கத்தில் தவறுகள் இறுப்பின் அன்போடு சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நபியவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!
உங்கள் சகோதரன்,
றஸீன் அக்பர் மதனி
தபூக் அழைப்பு நிலையம் – சவூதி அரபியா
இந்நூலை பதிவிறக்கம் செய்ய…