அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள்.
இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் ஒப்பிட்டாலும் இஸ்லாம் தனித்துவமாக சிறந்து விளங்கும். காரணம் அது படைப்பாளன் தனது அடியார்களுக்காகத் தெரிவு செய்த மார்க்கமாகும்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
‘எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்களே அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு மற்றும் மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறனார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6599 6600.
அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;
وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்.
وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
(அல்குர்ஆன் : 3:19)
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி விட்டேன்.
وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ
மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;
وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்கை நெறியாகாப் பொறுந்திக் கொண்டேன்.
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே கட்டுப்படுகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
1) அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமும் இந்தமனித சமூகம் பின்பற்ற வேண்டிய மார்க்கமும் இஸ்லாமாகும்.
2)இஸ்லாம் அல்லாத ஒரு வாழ்கைநெறியை ஒருவர் சிறந்த வாழ்கை நெறியாகவோ, சிறந்த கலாச்சாரமாகவோ தெரிவு செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தவர்களில் தான் இருப்பார்.
(அல்குர்ஆன் : 3:85)
3) அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற திணிப்பு ,வற்புறுத்தல் இஸ்லாத்தில் இல்லை.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை.
قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.
فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புகின்றவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:256
4) ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதால் இஸ்லாத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது.
சிலர் தாங்கள் இஸ்லாத்துக்கு வந்ததை நபிகளாருக்கு செய்த உபகாரமாகப் பேசிய போது அல்லாஹ் உடனே வசனத்தை இறக்கினான்.
يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا ۖ
- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் உமக்கு உதவி செய்து விட்டதாக நினைக்கின்றனர்.
قُل لَّا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُم ۖ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்குச் செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். அல்லாஹ்வே நம்பிக்கை கொள்ள உங்களுக்கு வழி காட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்.” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 49:17
¶இஸ்லாம் தனித்துவமான மார்க்கமாகும். அதிலே அன்னியக் கலாச்சாரங்களை நுழைவிப்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் விரும்பவில்லை.
5)இஸ்லாத்தின் தத்துவங்களைப் பேணுவோம்.
1: ஒரு முஸ்லிமுக்கு ஈமான் கொண்ட ஒருவரை விட நேசத்துக்குரியவராக. யூத கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ
(உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்;
وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ
உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்.
اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
(அல்குர்ஆன் : 5:51)
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள் தான் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியாளர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 5:56)
உள்ளத்தில் ஈமானைச் சுமந்து பாவம் செய்து கொண்டுள்ள இறைவிசுவாசி இறை மறுப்பாளனை விட மேலானவன்.
2: யூதகிறிஸ்தவர்களுக்கு மாறு செய்வோம்.
حَدَّثَنِى سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ حَدَّثَنِى زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ
நீங்கள், உங்கள் முன்சென்றவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முலத்துக்கு முலம் பின்பற்றுவீர்கள்.
حَتَّى لَوْ دَخَلُوا فِى جُحْرِ ضَبٍّ لاَتَّبَعْتُمُوهُمْ »
எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்புப் பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள்.
قُلْنَا يَا رَسُولَ اللَّهِ آلْيَهُودَ وَالنَّصَارَى قَالَ « فَمَنْ ».صحيح مسلم – (8 / 57) 6952 –
அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும் நஸாராக்களுமா என்று நாம் கேட்டோம்? அதற்கு அவர்களல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம் 6952
¶ இஸ்லாம் தனித்துவமான கொள்கைக் கோட்பாடுகள், கலாச்சாரங்களைக் கொண்ட மார்க்கமாகும் . தூய தீனுல் இஸ்லாத்திலுள் மாற்று மதக் கலாச்சாரங்களைப் புகுத்தி இஸ்லாத்தில் கலப்படம் செய்வதை அல்லாஹ்வும், ரஸுலும் விரும்பவில்லை.
3: யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறும் அவர்களை நேசர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ஏன் சொல்கிறோம்..?
யார் இந்த யூத, கிறிஸ்தவர்கள்?
¶ இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு மனைவிமார்கள்.
1: ஸாரா – அவர்களின் மகன் இஸ்ஹாக் (அலை) அவரின் மகன் யஃகூப் (அலை)
இவரில் இருந்து உருவான சந்ததியினரே பனூ இஸ்ராயில்கள்.
(இஸ்ஹாக் அலை, அவர்களின் மகன் யஃகூப் (அலை), அவர்களின் மகன் யூஸுப் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை), யூஷஃ (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை), ஈஸா (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) )
அதிகமான இறைத்தூதர்களை பனூஇஸ்ராயீல்களில் இருந்தே அல்லாஹ் அனுப்பினான்.
2: ஹாஜர் (அலை) – அவர்களின் மகன் இஸ்மாஈல் (அலை) அவர்களின் மூலம் இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்களைத் தவிர எந்த நபியும் வரவில்லை. இவர் மதீனாவில் பிரச்சாரம் செய்தார்.
அவர்கள் அனைவரும் இஸ்லாத்தையே சிறந்த வாழ்க்கை நெறியாகப் பிரச்சாரம் செய்தார்கள்.
அல்லாஹ் பல அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கி இருந்தான்.
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ
وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ
இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!
திருக்குர்ஆன் 2:47
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنبِيَاءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَآتَاكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ
“என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததின் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 5:20
وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா(எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “
திருக்குர்ஆன் 2:57
¶ ஆனால் அவர்களோ வரம்பு மீறி இறைத்தூதர்களையே கொலை செய்தார்ககள்.
¶ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்தார்கள்.
¶நபி ஈஸா (அலை) விபச்சாரத்தில் பிறந்தவர் எனக் கூறி அவர்களை சிலுவையில் அறைய முயற்சித்தார்கள்.
¶ அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறினார்கள். (யூதர்கள் உஸைர் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள். கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
¶அவர்களின் மத குருமார்கள் வேதத்தைத் தங்கள் சுய விருப்பப்படி மாற்றியமைத்து பின்னர் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இட்டுக்கட்டினார்கள்.
¶இறைத்தூதர்களில் சிலரை ஏற்று சிலரை மறுத்தார்கள்.
யூதர்கள்:
ஈஸா (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) , முஹம்மத் (ஸல்) ஆகியோரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.
கிறிஸ்தவர்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரையும் நபியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
முஸ்லிம்களாகிய நாம்:
لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ
அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம்.
திருக்குர்ஆன் 2:285
وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
(அல்குர்ஆன் : 2:4)
4: யூத, கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை விட்டும் பிரிந்து போனவர்கள்.
அல்லாஹ் கூறுறான்:
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
- தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 3:105
¶அல்லாஹ் இவர்களுக்கு இஸ்லாத்தைத் தான் மார்க்கமாக வழங்கினான். அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தையே பிரச்சாரம் செய்தார்கள். பின்னர் வேதத்தில் கையாடல் செய்தார்கள். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள்.
5: இன்று உலகில் பெறும் சமூகமாக உள்ள கிறிஸ்தவர்களினதும். இன்று உலகில் சிறிய சமூகத்தாராக உள்ள யூதர்களினதும் விருப்பம் என்ன தெரியுமா..?
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ
யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ
“அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’ எனக் கூறுவீராக!
وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.
திருக்குர்ஆன் 2:120
¶இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் முழு உலகமக்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் கலாச்சாரம் உலக அளவில் பரவ வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோர் இவர்கள்.
6: இத்தகைய பெறுமை பிடித்த பண்புடைய சபிக்கப்பட்ட சமூகமான யூத,கிறிஸ்தவ சமூகத்துக்கு மாறு செய்வதை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது.
1)காலணிகளுடனும், காலுறைகளுடனும் தொழுதல்.
. روى أبو داود (652)
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( خَالِفُوا الْيَهُودَ ، فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا خِفَافِهِمْ ) وصححه الألباني في صحيح أبي داود .
காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்
¶வாழ்வில் ஒருமுறையாவது இந்த சுன்னாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிஞர்கள் சொல்லுகின்றார்கள்.
2) தலை முடிக்குச் சாயமிடுதல்:
عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ ) رواه البخاري (3462) ومسلم (2103) .
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா (ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 3462
¶நபிகளார் யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யும்முகமாக தலைமுடிக்குச் சாயமிடச் சொன்னார்கள் இன்று நாம் யாரைப் பின்பற்றிச் சாயமிடுகிறோம்..?
3) மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் ஒன்றாக இருத்தல்:
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே,நபித்தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.
அப்போது ,2:222 வசனத்தை அல்லாஹ் அருளினான்.
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’ எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:222
அதனையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரின் விருப்பம் என்று கூறினார்கள்.
உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது…..
ஸஹீஹ் முஸ்லிம் : 507.
¶இஸ்லாம் தனித்துவமான மார்க்கம் இறைத் திருப்தியைத் தவிர வேறு நோக்கம் இஸ்லாத்தில் இல்லை.
4) ஸஹர் செய்தல்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது நோன்பிற்கும், வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2001.
عن أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً. رواه البخاري (1923) ، ومسلم (1095).
நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சியமாக ஸஹர் செய்வதில் பரக்கத் உள்ளது.
5) ஆஷுரா நோன்பில் யூத,கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
¶பிறை ஒன்பது பிடிக்கும் தாஸுஆ நோன்பானது யூதர்களுக்கு மாறு செய்வதற்காகப் பிடிக்கின்ற நோன்பாகும். பிறை பத்து பிடிக்கும் ஆஷூரா நோன்பு மூஸா (அலை)
அவர்களும், பனூ இஸ்ரவேலர்களும் பிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டு பிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதற்காகவுமே இந்த நோன்பை மூஸா (அலை) அவர்களும் , அவர்களின் சமூகமும் நோற்றுள்ளார்கள்.
6) ரோம், பாரசீக மன்னர்களுக்கு முன் மரியாதைக்காக எழுந்து நிற்பதைப்போல் எழுந்து நிற்பதை தடுத்தார்கள்:
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்தநிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ரோம், பாரசீக மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அதுபோன்ற செயலைச் செய்யமுற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்றுதொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்துதொழுங்கள் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 701
¶இன்று ஆசிரியர் வரும்போது மாணவன் எழுந்து நிற்காவிட்டால் என்னவாகும்…?
(7) யூதர்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு மாற்றமாக அல்லாஹ் வசனத்தை இறக்கினான்:
யூதர்கள் நபிகளார் (ஸல்) அவர்களை இரட்டைப் பொருள் கொண்ட “ராஇனா”
(எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்,ஆடுமேய்க்கும் இடையரே ) பொன்ற கருத்துடைய வாசகத்தைப் பயன்படுத்தி வந்த போது அல்லாஹ் 2:104 வது வசனத்தை இறக்கினான்.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராஇனா” என்று சொல்லாதீர்கள்.
وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ
(இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 2:104)
8) நபிமார்களின் அடகஸ்தளங்களை வணக்கஸ்தளமாக ஆக்கிக் கொள்வது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கை :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொண்டார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கஸ்தலங்களை அவர்கள் வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள்’ என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3453, 3454.
¶நபிகளாரின் இந்த இறுதி வஸிய்யதுக்கு மாறு செய்வோர் எம்மில் எத்துணைப் பேர்..?
9) முஷ்ரிகீன்களுக்கு (இணைவைப்பாளர்களுக்கு) மாறு செய்தல்
قال صلى الله عليه وسلم : ( خَالِفُوا الْمُشْرِكِينَ ؛ وَفِّرُوا اللِّحَى ، وَأَحْفُوا الشَّوَارِبَ ) رواه البخاري (5892) ومسلم (259).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 259
وقوله : ( جُزُّوا الشَّوَارِبَ ، وَأَرْخُوا اللِّحَى ، خَالِفُوا الْمَجُوسَ ) رواه مسلم (260) .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். நெருப்பு வணங்கிகளுக்கு (மஜூசிகளுக்கு) மாறு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 260
¶நபிகளாரின் இந்த உபதேசத்தை நடைமுறைப் படுத்துவோர்
எத்துணைப் பேர்..?
¶ இன்றைய முஸ்லிம் பாடசாலைகளின் நிலை எப்படி மாறியுள்ளது? நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு மாற்றம் செய்யுமாறு ஏவியும் அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக மாணவர்களின் தாடியைக் களைய வைக்கின்றார்கள் இஸ்லாமியப் பாடசாலை நிர்வாகங்கள்.
10) செமம்மஞ்சல் (காவி ) நிற ஆடை அணியத் தடை:
. عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما قال : رأى رسول الله صلى الله عليه وسلم عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ ، فَقَالَ : ( إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا ) رواه مسلم (2077)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, “இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்” என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2077
10) தொழத்தடை செய்யப்பட்ட நேரமும் அதற்கான காரணங்களும்.
மூன்று நேரங்களில் தொழுவது தடை.
1: நபி (ஸல்) அவர்கள், கூறினார்கள் “சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரைவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும்.
2: ஈட்டியின் நிழல் கிழக்கிலோ, மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத்தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர்.
3:பிறகு அஸர்வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும்வரைத் தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்” என்று கூறினார்கள்.
11) மாற்றுமதக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது தவறாகும்.
அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வார்கள். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர்,
“பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.
(நாம் அப்படிக் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர்.
நபிகளார் சொன்னார்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி 2180)
¶இன்றைய மஸ்ஜித்களில் கந்தூரி எனும் பெயரில் மாற்றுமதக் கலாசாரங்கள் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்படுவதை நாம் பாக்கின்றோம்.
ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ 4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» ( رواه الترمذي)
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மதி).
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?
- صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).
- அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றி நடக்காத வரை மறுமை நாள் வராது“ என்று . உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி
¶பிறமதக் கலாசாரங்களிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.!
குறிப்பு:
1: நபிகளார் சந்தர்பம் இருந்தும் செய்யாமல் விட்ட மார்க்க விடயங்களை நாமலும் செய்யக் கூடாது.
உதாரணமாக: பெருநாள் தொழுகைக்கு அதான், இகாமத் கூறவில்லை. நாமும் சொல்லக்கூடாது. சொன்னால் அது பித்அத்தாகிவிடும்
2:நபிகளார் செய்யாமல் விட்ட வழக்கங்களை (உலக விடயங்களை) பொருத்தமட்டில். மாற்றுமதக் கலாச்சாரம் என்ற காரணத்தால் விட்டால் நாமும் அதை விட வேண்டும். காரணம் சொல்லாமல் விட்டவை மாற்று மதத்தினரின் தனி அடையாளமாக அது இன்று இல்லா விட்டால் நாம் அதைச் செய்யலாம்.
முரண்படுவதென்பது மாற்று மதத்தினருக்கென குறிப்பான
விடயங்களில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர பொதுவானவைகளில் அல்ல.
¶புரிந்து கொள்ள வேண்டிய பகுதி:
மாற்று மதத்தினருடன் சக வாழ்வைப் பேணுதல் , கொடுக்கல் வாங்கள் ,வியாபாரம் செய்தல், அவர்கள் மார்க்கத்துக்கு முரணற்ற விருந்துகளுக்கு அழைத்தால் அதில் கலந்து கொள்ளுதல்’ அவர்களுக்கு ஆபத்தின் போது உதவி செய்தல், போர்களின் போது சமாதானத்தை விரும்புவோருக்கு அடைக்களம் கொடுத்தல் போன்றவை தடை கிடையாது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் தெளிவைத் தருவானாக.!
நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை
1442/01/10