அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதா் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள், அன்னாரின் குடும்பத்தினா், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவாின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.
“ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள்” என்ற இச்சிறிய நூலின் அரபுமொழியிலான மூலவடிவத்தை அத்துஸரா் அஸ்ஸனிய்யா கலைக்களஞ்சியத்தின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவா்களின் மீள்பாிசீலனையின் பின்னா் அவா்களின் உத்தியோகபூர்வமான இணையதளமான “அத்துரா் அஸ்ஸனிய்யா” என்ற வலைதளத்தில் காணக்கிடைத்தது.
இச்சிறிய நூலில், ஷஃபானின் நடுப்பகுதியான 15ஆம் பிறை தொடா்பான விடயங்களை அடங்கியதாகவே தொகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அன்றைய தினத்தை எங்களுடைய சமூகம் ஒரு கொண்டாட்டதினமாகக் கருதி, இஸ்லாத்தில் கூறப்படாத விடயங்களை மார்க்கம் என்ற பெயாில் நடைமுறைப்படுத்துகின்றார்கள். மேலும், அதற்கு என்றே சில ஹதீஸ்களை ஆதாரமாகவும் எடுத்துக் காட்டுகின்றார்கள். எனவே, அப்படியாக அவா்கள் எடுத்துக்காட்டும்:
- ஹதீஸ்கள் எவை?
- அந்த ஹதீஸ்கள் எப்படிப்பட்டன?
- அவைகளின் தராதரங்கள் எப்படிப்பட்டன?
- அவைகள் சம்பந்தமாக ஹதீஸ் துறை அறிஞா்களின் நிலைப்பாடு என்ன?
போன்ற விடயங்களை அழகான முறையில் 12 பக்கங்களைக் கொண்ட சிறிய நூலாக இருந்தாலும், காலத்திற்கு தேவையான அமைப்பில் பலவிடயங்களை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட்டிருந்தன. எனவே, இவைகளை தமிழ் பேசும் சசோதரா்களும் இதன் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எனது சக்திக்குற்பட்ட விதத்தில் அல்லாஹ்வின் உதவியால் 24-04-2018 (ஹிஜ்ரி 1439 ஷஃபான் 08) ஆம் திகதி ‘தமிழில் மொழியாக்கம்’ செய்துள்ளேன்.
மொழியாக்கத்தில் தவறுகள் இறுப்பின் அன்போடு சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நபியவா்களின் வழிகாட்டுதலில் அடிப்படையில் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!
உங்கள் சகோதரன்,
றஸீன் அக்பர் மதனி
தபூக் அழைப்பு நிலையம் – சவூதி அரபியா
இந்நூலை பதிவிறக்கம் செய்ய…