Featured Posts

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

பத்ர் தரும் படிப்பினைகள்

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே ‘பத்ர்’ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். சுருக்கமான தகவல் (ஹிஜ்ரி 2-ஆம் …

Read More »

கண்ணியமிக்க இரவு..!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.

Read More »

ரமழான் மாத நோன்பு தொடர்பான மார்க்க தீர்ப்புகள்

ஃபத்வா ரமழானிய்யா (ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்) நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன். இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (05)

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – (18) – ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – 10

ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்’ என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்’ இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -12

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிப் பேசும் புதிய ஏற்பாடு ஆதி முதல் அந்தம் வரை முரண்பட்ட தகவல்களையே தந்து கொண்டிருக்கின்றது என்பதை விரிவாகப் பார்த்து வருகின்றோம். இந்த முரண்பாடுகள் அந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையில் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றது. கல் எப்போது உயர்த்தப்பட்டது? இயேசுவின் கல்லறைக்கு வந்தவர்கள் யார் என்பது பற்றிப் பேசும் போதும் சுவிசேசகங்கள் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றன. ‘அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி …

Read More »

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – வட்டியை அல்லாஹ் அழிப்பான்

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – கடனுக்கு பெண்ணின் சாட்சியம்

‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன் பொறுப்புள்ளவர், விபர மற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது …

Read More »

மரணம் அழைக்கிறது..

இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா அல்லாஹ்! மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு! ஏற்கனவே நாம் …

Read More »