தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் …
Read More »ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு)
‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு: கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு …
Read More »உம்ராவிற்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் வதா) செய்வது கட்டாயமா?
ஹஜ் கடமையை செய்வதற்காக மக்கமா நகருக்கு வருவோர் கடைசியாக ஊர் திரும்ப முன் பயணத் தவாப் செய்வது கட்டாயமாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (தவாபை) கடைசிக் கடமையாக செய்யும் படி நபியவர்களின் காலத்தில் மக்கள் ஏவப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் உடைய பெண்களைத் தவிர’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம் நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வந்த சமயம் ஹஜ் முடிந்து மக்கள் எல்லாத் திசைகளினாலும் சென்று கொண்டிருக்கும் போது “கடைசி …
Read More »ரமழான் மாத நோன்பு தொடர்பான மார்க்க தீர்ப்புகள்
ஃபத்வா ரமழானிய்யா (ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்) நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன். இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் …
Read More »பிடிவாதத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் இடையில் விட்டுக் கொடுப்பு
தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா கேள்வி: நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா? பதில்: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக! மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் …
Read More »ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?
ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள்.
Read More »ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு …
Read More »ஹஜ் தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் ஃபத்வாக்கள்
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 07.11.2010 (ஞாயிறு) இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா Download video – Size: 176 MB
Read More »