Featured Posts

அல்குர்ஆன்

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (71 -80)

71) சூரது நூஹ் அத்தியாயம் 71 வசனங்கள் 28 இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் தமது வாழ்நாளையே தியாகம் செய்த நபி நூஹ் (அலை) அவர்களை பற்றி பேசும் அத்தியாயம் நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; ‘நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ என (ரஸூலாக) அனுப்பினோம். ‘என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக …

Read More »

அல்-குர்ஆன் இலக்கணம் [E-BOOK] | குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை அறிந்து கொள்ள

உங்களில் மிகச் சிறந்தவர் எவரெனில், குர்ஆனை தானும் கற்று, மேலும் அதை கற்றுத் தருபவரே‟ என, அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். குர்ஆனைக் கற்பது; மற்றும் கற்பிப்பதில் இச்சிறப்பு இருக்கிறது என்பது ஒரு புறம், மறுபுறம் அரபி மொழி பேசத்தெரியாத நம்மவர்களின் மிக மோசமான நிலை 70 அல்லது 80 விழுக்காடு மக்கள் தொழுகையைப்பற்றியோ, குர்ஆனிலிருந்து அன்றாட தொழுகையில் தேவைப்படுகின்ற பொதுவான அத்தியாயங்கள் அல்லது வசனங்களைப்பற்றியோ …

Read More »

இரண்டு பாதைகளில் எந்தப் பாதையை நீ தேர்ந்தெடுத்திருக்கின்றாய்? [உங்கள் சிந்தனைக்கு… – 016]

அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கு நீ உதவி செய்தது பற்றியும், அல்லது அதற்கு உதவி செய்யாமல் விட்டு விட்டது பற்றியும் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ வினவப்படுவாய். அப்போது, சத்தியத்திற்கு உதவி புரிந்தவனாக நீ இருந்துவிட்டால் (அல்லாஹ்வின் அருட்பேறுகளைக்கொண்டு) நீ நன்மாராயம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், சத்தியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் இவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் …

Read More »

அல்லாஹ்வின் வல்லமையை சரியாகப் புரிந்தவன், பக்குவமாக வாழ்ந்து கொள்வான்! [உங்கள் சிந்தனைக்கு… – 011]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற …

Read More »

முஃமீன்களே…! அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்ய வேண்டாம்!

தன் மானமுள்ள மனிதன் எதை சகித்துக் கொண்டாலும் தன் மீது சுமத்தபடும் மானக்கேடான அவதூறுகளை சகித்துக் கொள்ளவே மாட்டான் காரணம் இப்படியான செய்திகள் ஒருவரை பற்றி  வந்து விட்டால் அதை உரியவரிடம் விசாரணை செய்து அவர் கூறுவதை  நம்புகின்றவர்களை விட உண்மைக்கு மாற்றமாக உள்ள அந்த அவதூறை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பரப்பி சந்தோஷம் அடைகின்றவர்கள். தான் எம்மில் அதிகம் என்பதால் இப்படியான சந்தர்ப்பங்களில் பொறுமையுடன் அதை அனுகுவது கடினம். நிச்சயமாக பொறுமையுடன் அதை எதிர் கொள்கின்றவர்களுக்கு அல்லாஹ் …

Read More »

அசத்தியத்தில் பிடிவாதமும், அறியாமைக்கால மூடத்தன வைராக்கியமும் நேர்வழிக்குத் தடையாக இருக்கும் காரணிகளாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 009]

அல்லாமா ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதை அல்லாஹ் தடுத்தேவிட்டான்! அவர் அதற்குத் தகுதியில்லாதவராக இருந்தார்; அதனால்தான் அதை விட்டும் அவர் தடுக்கப்பட்டார். நேர்வழி கிடைப்பது தடைபட்டுப் போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில், ‘அசத்தியத்தில் பிடிவாதம், அறியாமைக்கால மூடத்தனமான வைராக்கியம்’ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். நேர்வழிக்காக ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்காமல் இருப்பதற்கு இவையிரண்டும் காரணமாகி …

Read More »

சிறந்த சந்ததிக்குத் தேவையான வழிமுறைகளைக் கையாள்வோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 008]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “தனது சந்ததி, சிறந்த சந்ததியாக இருப்பதற்கான காரணிகளைச் செய்ய வேண்டியது மனிதனுக்கு மிக அவசியமானதாக இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் அல்லாஹ்விடத்தில் (அதற்காக) அவன் பிரார்த்தனை செய்தலாகும்! அக்காரணிகளில் இது மிகப்பெரியதுமாகும். தனது வாலிபத்தை முழுமையாக அடைந்த ஒருவன் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். ‘அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும்போது, என் …

Read More »

நாவின் விபரீதங்களை நம்மில் பலர் உணர்வதில்லை! [உங்கள் சிந்தனைக்கு… – 007]

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்ட விடயங்களில் பார்வையைச் செலுத்துதல் போன்ற இன்னோரன்ன தீய விடயங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு முடியுமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான விடயமாகும்!! மார்க்கம், …

Read More »

நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-16]

“(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.” (3:128) உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.”(முஸ்லிம்: 1791-104) இந்த …

Read More »

மலக்குகளின் எண்ணிக்கை எத்தனை? ஏன்? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-15]

“நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத்(ர்ப் போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.” “மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புhpந்தது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக!) ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) …

Read More »