உங்களில் மிகச் சிறந்தவர் எவரெனில், குர்ஆனை தானும் கற்று, மேலும் அதை கற்றுத் தருபவரே‟ என, அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
குர்ஆனைக் கற்பது; மற்றும் கற்பிப்பதில் இச்சிறப்பு இருக்கிறது என்பது ஒரு புறம், மறுபுறம் அரபி மொழி பேசத்தெரியாத நம்மவர்களின் மிக மோசமான நிலை 70 அல்லது 80 விழுக்காடு மக்கள் தொழுகையைப்பற்றியோ, குர்ஆனிலிருந்து அன்றாட தொழுகையில் தேவைப்படுகின்ற பொதுவான அத்தியாயங்கள் அல்லது வசனங்களைப்பற்றியோ அறியாதவர்களாக உள்ளனர். இன்ஷா அல்லாஹ் தொழுகையை எளிய முறையில் விளக்குவதற்கும், குர்ஆனிய அரபியை கற்பிப்பதற்குமே இப்பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி இவை அனைத்தையும் அவர்களுக்குப் போதிக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்! இப்பயிற்சியை வரிசைப்படுத்த நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆனது. எனினும் இச்சிறிய காலக்கட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலும் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்! ஆயிரக்கணக்கானோர் இதைக்கொண்டு பயனடைந்து கொண்டிருக்கின்றனர், உலகின் முக்கிய மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பைன், துருக்கி, வங்காளம், போஸ்னி, மலாய், இந்தோனேஷி, சீன மொழி, போhச்;சுகல் மொழி மற்றும் தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன.
இப்பயிற்சியின் மிகவும் முக்கியமான, தனித்தன்மை வாய்ந்த வியப்பு என்னவெனில்; இதன் பெரும் பகுதி குர்ஆனிய வசனங்கள், இறைவனை துதிக்கும் வார்த்தைகள், பிரார்த்தனைகளின் அடக்கமாகும், இதையே அதிக பட்ச முஸ்லிம்கள் ஓதி வருகின்றனர். ஒரு முஸ்லிம் ஐவேளைத் தொழுகைகளில் சுமார் ஒரு மணி நேரம் தன்னைப் படைத்த எஜமான் அல்லாஹ்வுடன் அரபி மொழியில் உரையாடுவதில் செலவிடுகின்றான் எனவேதான் ஒரு முஸ்லிம் அரபியைக் கற்பதின் துவக்கமும் இதைக்கொண்டே இருக்க வேண்டும் என எங்களின் முயற்சி தொடர்கிறது.
இம்முறையை செயல்படுத்துவதன் பயன்கள் பல. எடுத்துக்காட்டு:
- ஒரு புதிய மொழியைக் கற்க, புரிந்து கொள்ள பயிற்சி என்பது மிக அதிக அளவில் பங்கு வகிக்கிறது. தினமும் தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகளில் ஓதப்படும் சுமார் 150 முதல் 200 வரை உள்ள அரபி வார்த்தைகள் அல்லது 50 வாக்கியங்களையே திரும்பத் திரும்ப ஓதுகிறோம், அவ்வாக்கியங்களை புரிந்து கொள்ளும்போது; அரபி மொழியின் வாக்கிய அமைப்பு (நடை) மற்றும் முறையை புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
- இதன் முதல் வகுப்பிலிருந்தே இப்பயிற்சியின் பயனை உணரலாம். தொழுகையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகளும் புரிய ஆரம்பித்து விடும்.
- தொழும்போது தனக்கு ஓர் ஈர்ப்பு ஈடுபாடு மற்றும் கவனத்தில் ஒரு வேறுபாட்டை உணர முடியும்.
இவை அல்லாத மற்ற எப்பயிற்சியின் போதனையிலும் இது போன்ற பயன்களை உணரமுடியாது.
இப்பயிற்சியின் முக்கியமான அடுத்த தனித்தன்மை:
அரபி இலக்கணத்தை கற்பிக்கும் யுக்தி ஏனெனில் இப்பயிற்சியின் நோக்கம் மாணவனுக்கு நடைமுறையில் உள்ள குர்ஆனிய மொழிபெயர்ப்புகள் மூலம் குர்ஆனை புரிந்து கொள்ள உதவுதல் இதன் காரணமாகத்தான் இப்பயிற்சியில் (رف ) சொல்லிணக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது, சொல்லிலக்கணத்தை போதிப்பதற்காகவே சாதாரணமாக புரிந்து கொள்கிற TPI (Total Physical Interaction என்ற) முக்கிய செயல்பாட்டின் முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆரம்பமான பயிற்சியே, அரபி மொழியைக் கற்க இதன் பின் வேறு பல அரபி நூல்களை அவசியம் படிக்கவேண்டும்.
இப்பயிற்சியின் முடிவின் போது 125 வார்த்தைகளைக் கற்றுக்கொள்வீர்கள். அவை குர்ஆனில் வருகின்ற சுமார் 78,000 வார்த்தைகளிலிருந்து சுமார் 40,000 முறை வருகின்றன. அதாவது இவ்விதத்தில் 50 சதவிகித வார்த்தைகளின் பொருள் மற்றும் கருத்தினை தெரிந்து கொள்வீர்கள்.
இன்ஷா அல்லாஹ் நீங்கள் இப்பயிற்சியை கற்க எளிதாகவும், ஓர் ஈர்ப்போடும், ஈடுபாட்டை ஏற்படுத்தும் விதத்திலும் பெற்றுக்கொள்வீர்கள். அல்லாஹ்விடம் பிரார்த்திப்பீர்களாக! அவன் நமது எண்ணத்தையும் செயலையும் இந்த ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்வானாக! மேலும் உங்களிடம் எமது வேண்டுகோள்: தொழுகையை விளங்கி தொழுவதோடு குர்ஆனையும் விளங்கிக்கொள்வதற்காக மதரஸா, பள்ளிக்கூடம், பள்ளிவாசல், தாம் வசிக்கும் தெரு, குடும்பத்தினர் போன்றோர்களில் எங்கெல்லாம் முடியுமோ அங்கு எல்லாம் இதை அறிமுகப்படுத்துங்கள் என்பதாகும்.
இதில் (உருது மொழியில்) அதிக பட்சம் ஹாபில் நதிர் அவர்களின் மொழி பெயர்ப்பிலிருந்து உபயோகப்படுத்தியுள்ளோம். இது அனைத்து பிரிவினராலும் ஏற்கப்படுகின்ற மொழிபெயர்ப்பாகும், (தமிழில் : அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து உபயோகப்படுத்தியுள்ளோம்) அல்லாஹ் நம்மை தவறுகளை விட்டும் பாதுகாப்பானாக! அவ்வாறு தவறு ஏற்பட்டு விட்டால் மன்னிப்பானாக! நீங்களும் ஏதாவது பிழையினை இதில் கண்டால், அடுத்த பிரதிகளில் சரி செய்து கொள்ள அவசியம் தெரியப்படுத்துங்கள்.
உங்களுடைய மேலதிக கருத்துக்களை தெரிவிக்க:
Email : abdulazeez@understandquran.com
தமிழில் பிழை கண்டால்: uqchennai@gmail.com
இந்த மின்னனு புத்தகம் understandquran என்ற இணையதள குழுவினர்களால் உருவாக்கப்பட்டது இதனை தஃவா-விற்காக பயன்படுத்துவோர் எவ்வித மாற்றமும் செய்யாமல் பயன்படுத்திகொள்ளவும். ஏனைய பயன்பாட்டிற்கு மின்னஞலில் தொடர்பு கொள்ளவும். abdulazeez@understandquran.com
இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு இங்கே பதிவிடப்படுகின்றது. தொடந்து வாசிக்க நூலை பதிவிறக்கம் செய்யவும்…
நன்றி: understandquran