Featured Posts

சிறந்த சந்ததிக்குத் தேவையான வழிமுறைகளைக் கையாள்வோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 008]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“தனது சந்ததி, சிறந்த சந்ததியாக இருப்பதற்கான காரணிகளைச் செய்ய வேண்டியது மனிதனுக்கு மிக அவசியமானதாக இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் அல்லாஹ்விடத்தில் (அதற்காக) அவன் பிரார்த்தனை செய்தலாகும்! அக்காரணிகளில் இது மிகப்பெரியதுமாகும். தனது வாலிபத்தை முழுமையாக அடைந்த ஒருவன் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.

‘அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும்போது, என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக்கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்காக என் சந்ததியில் சீர்திருத்தத்தைச் செய்வாயாக!’என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்’.
(அல்குர்ஆன், 46:15)

சந்ததிச் சீர்திருத்தம் என்பது, மிக வேண்டப்படுகின்ற விடயம் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், சிறந்த சந்ததிதான் இவ்வுலக வாழ்க்கையிலும்,மரணத்தின் பின்னரான வாழ்க்கையிலும் உனக்குப் பயனளிக்கும்!”.
{ நூல்: ‘தப்ஸீர் சூரது ஆல இம்ரான்’, 1/238 }

قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ ينبغي للإنسان أن يفعل الأسباب التي تكون بها ذرّيّته طيبة، منها دعاء الله، وهو من أكبر الأسباب، وقد ذكر الله سبحانه وتعالى عن الرجل يبلغ أشدّه أنه يقول: « حتى إذا بلغ أشدّه وبلغ أربعين سنة قال ربّ أوزعني أن أشكر نعمتك التي أنعمت عليّ وعلى والديّ وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذرّيّتي »
ولا شك أن صلاح الذّرّيّة أمر مطلوب؛ لأن الذّرّيّة الصالحة تنفعك في الحياة وفي الممات ] { تفسير سورة آل عمران ، ١/ ٢٣٨ }

அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் அவர்கள், ‘எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் கண் குளிர்ச்சியை எமக்கு வழங்குவாயாக! பயபக்தியாளர்களுக்கு எம்மை முன்மாதிரிமிக்கவர்களாகவும் ஆக்குவாயாக! என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்”(அல்குர்ஆன், 25:74)

ஆசிரியரின் ஏனைய கட்டுரைகளை காண: https://islamkalvi.com/?author=171

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *