அல்லாமா ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதை அல்லாஹ் தடுத்தேவிட்டான்! அவர் அதற்குத் தகுதியில்லாதவராக இருந்தார்; அதனால்தான் அதை விட்டும் அவர் தடுக்கப்பட்டார். நேர்வழி கிடைப்பது தடைபட்டுப் போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில், ‘அசத்தியத்தில் பிடிவாதம், அறியாமைக்கால மூடத்தனமான வைராக்கியம்’ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். நேர்வழிக்காக ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்காமல் இருப்பதற்கு இவையிரண்டும் காரணமாகி விடுகின்றன!. சத்தியம் இதுதான் என்று ஒருவனுக்குத் தெளிவாகி, அதை அவன் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் சத்தியத்தில் இருப்பது தடுக்கப்படுவதுகொண்டு அவன் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்! நேர்வழியை விட்டும் தடம்புரளுதல், வழிகேடு ஆகியவற்றைக்கொண்டே அவன் தண்டிக்கப்படுவான். இதன்பின்னர் சத்தியத்தை அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
எனவே, சத்தியம் யாரை வந்தடைகிறதோ அதை அவர் உடனடியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் கூறி அவர் தாமதிக்கவும் கூடாது; பிற்படுத்தவும் கூடாது. அப்படி அவர் பிற்படுத்திவிட்டால் சத்தியத்தை விட்டும் தடுக்கப்படத் தகுதியானவராகி விடுவார்!”
அல்லாஹ் கூறுகிறான்:
“(சத்தியத்தை விட்டும்) அவர்கள் தடம்புரண்ட போது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம்புரளச் செய்துவிட்டான்!”
(அல்குர்ஆன், 61:05)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“ஆரம்பத்தில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் நாம் புரட்டுவோம்!”
(அல்குர்ஆன், 06:110)
{ நூல்: ‘இஆனதுல் முஸ்தபீfத்’, 1/259 }
قال العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:-
[ حرمان أبي طالب، حرمه الله من الهداية لأنه لا يستحقها، فلذلك حرمه منها. والحرمان له أسباب:
ومنها:- التعصب للباطل، وحمية الجاهلية، تسبّبان أن الإنسان لا يوفقه الله جلّ وعلا. فمن تبيّن له الحق ولم يقبله فإنه يعاقب بالحرمان – والعياذ بالله – . يعاقب بالزيغ والضلال، ولا يقبل الحق بعد ذلك.
أن من بلغه الحق وجب عليه أن يقبله مباشرة، ولا يتلكّأ ولا يتأخر، لأنه إن تأخر فحريّ أن يحرم منه. قال الله تعالى: « فلما زاغوا أزاغ الله قلوبهم »، وقال أيضا: « ونقلّب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة » ]
{ إعانة المستفيد ، ١/ ٢٥٩ }
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக்கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கு அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். மேலும் அவனது செவிப்புலனிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டு அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார் இருக்கின்றான்? நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?!”
(அல்குர்ஆன், 45:23)
ஆசிரியரின் ஏனைய கட்டுரைகளை காண: https://islamkalvi.com/?author=171
தமிழில்…
அஷ்ஷெ/ய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)