Featured Posts

இஸ்லாம்

2.ஈமான் எனும் இறைநம்பிக்கை

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8 ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 2, எண் 9 ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை …

Read More »

1. இறைச்செய்தியின் ஆரம்பம்

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1 ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Read More »

ஸஹீஹுல் புகாரி நபிமொழித் தொகுப்பு – நூல் அறிமுகம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பெரும் …

Read More »

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

(மீள்பதிவு) கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். நூஹ் நபியவர்கள் மக்கள் …

Read More »

முன்னுரை

யா அல்லாஹ்! நீயே புகழுக்குரியவன்! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்! உன்னிடமே உதவியும் தேடுகிறோம்! எங்களை நேரான பாதையில் வழிநடத்துவாயாக! அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த தூதர், உயிரினும் மேலான எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் அவர்களின் வழியை பின்பற்றுவோர் அனைவரின் மீதும் உன் அருளை என்றென்றும் பொழிந்திடுவாயாக! 1. வேதமும் விரிவுரையும் மகத்துவமிக்க அல்லாஹ் தன்னை வணங்கி, வழிபடும் நோக்கத்திற்காகத்தான் மனிதர்களையும் ஜின்களையும் …

Read More »

புத்தாண்டும் பெருநாளும்!

மூன்று ஆண்டுகளுக்குமுன் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் என் சீன நண்பர் ஒருவர் என்னிடம் வந்து “புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றார். இடையிடையில் சில சிறு குறிப்புகள் கொடுத்தால்தான், மேற்கொண்டு தொடரும் உரையாடலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். சிறுகுறிப்பு 1: சீனர்கள் தங்கள் புதுவருட பிறப்பை மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அவர்களுக்கு வேறு சில திருநாட்கள் இருந்தாலும், புதுவருடம்தான் தலையாயது. பெரும்பான்மையான சீன நிறுவனங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு …

Read More »

அறிவைத் தேடி…!

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, இறைவனின்; தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்: ”அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம்; அறிவுடையோரே!’ (அல்குர்ஆன் 39:9) என்னருமைச் சகோதரர்களே! நாம் அனைவரும் ”சுவனத்தை” அடையவே விரும்புகிறோம்… ஆம் எந்த ஒரு ஆரோக்கியமான மனமும் ”சுவர்க்கம்” எனும் சுந்தரவனப் பாதையை விரும்பாமலும் நரகம் எனும் நாசகாரப் பாதையை …

Read More »