Featured Posts

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02

அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …

Read More »

அடிபணிந்தால் அதிகாரம் வரும்

அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் முறையாக அடிபணிந்தால் ஆட்சி அதிகாரம் வரும் என அல்லாஹ் அல்குர்ஆனில் வாக்களிக் கின்றான். ‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங் களும் புரிந்தோருக்கு, இவர்களுக்கு முன்னுள் ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் …

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்

இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா உமர்(வ) அவர்கள் இஸ்லாமிய வருடக் …

Read More »

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் யார்?

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் ஈமானிய எழுச்சி மாநாடு நாள்: 21.05.2016 இடம்: கிண்ணியா பொது மைதானம், இலங்கை தலைப்பு: அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் யார்? வழங்பவர்: மவ்லவி இஸ்மாயில் ஸலபி MA நன்றி: Islamic Media City

Read More »

தவறாக புரிந்துகொள்ளப்பட்ட தவ்ஹீத்

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு நாள்: 24-09-2016 (சனிக்கிழமை) நேரம்: பிற்பகல் 3:30 முதல் இரவு 10:30 வரை இடம்: பொது விளையாட்டு மைதானம் நிந்தவூர் – கிழக்கு மாகாணம் – இலங்கை தலைப்பு: தவறாக புரிந்துகொள்ளப்பட்ட தவ்ஹீத் வழங்பவர்: மவ்லவி. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) படத்தொகுப்பு: Rabita Media Unit நன்றி: Islamic Media City Download …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்

‘அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ ‘நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே’ என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ‘ (30:7) இந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?

02. தஃவீல் என்றால் என்ன?: இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் ‘முடிவு’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக, ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்

‘ஆல்’ என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே ‘இம்ரான்’ என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.’ (3:33) இந்த வகையில் …

Read More »

தஸ்பீஹ் தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-18)

தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-14

முன்னைய இறைத்தூதர்கள் பலரும் நபி(ச) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளனர். முன்னைய வேதங்களில் தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என்பன முக்கியமானவையாகும். இவை காலப்போக்கில் திரிவுபடுத்தப்பட்டு விட்டன. ஈஸா நபி போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகம் தொலைத்துவிட்டது. இருப்பினும் ஈஸா நபியின் மாணவர்கள் எனக் கருதப்படுபவர்களால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் மற்றும் பல நிரூபங்களையுமே அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஈஸா நபிக்கு முந்திய ஆகமங்கள் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா …

Read More »