அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் முறையாக அடிபணிந்தால் ஆட்சி அதிகாரம் வரும் என அல்லாஹ் அல்குர்ஆனில் வாக்களிக் கின்றான்.
‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங் களும் புரிந்தோருக்கு, இவர்களுக்கு முன்னுள் ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தாம் பாவிகள்.’
‘நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்.’
‘நிராகரித்தோர் இப்பூமியில் தப்பித்துக் கொள்ளக்கூடியவர்கள் என்று நிச்சயமாக (நபியே!) நீர் எண்ண வேண்டாம். நரகமே அவர்களின் ஒதுங்குமிடமாகும். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.’ (24:55-57)
இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா முஃமின்களுக்கு சில வாக்குறுதிகளை அளிக்கின்றான்.
உங்களுக்கு முன்பிருந்தவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியது போல் உங்களுக்கும் பூமியில் அதிகாரத்தைத் தருவான்.
மார்க்கத்தை உறுதிப்படுத்தித் தருவான். (மார்க்கத்தைப் பின்பற்ற முடியாத நிலை நீங்கிவிடும்.)
அச்சமான சூழ்நிலை நீங்கி பாதுகாப்பான அமைதியான சூழலை ஏற்படுத்துவான்
இதற்காக நாம் செய்ய வேண்டியது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதாகும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது.
அடுத்து, தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து சகல விடயங்களிலும் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இப்படி நடந்து கொண்டால் ஆட்சி அதிகாரம் மற்றும் மார்க்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழ்நிலை, பாதுகாப்பு என்பன ஏற்படும்.
அப்படியென்றால் காபிர்கள் பெரும் செல்வாக்கோடு இருக்கிறார்களே அவர்களது நிலை என்ன? என்றால் பூமியில் காபிர்களை முறியடிக்க முடியாது என எண்ண வேண்டாம் என அடுத்த வசனம் பேசுகின்றது.
எனவே, ஆட்சி, அதிகாரம், அமைதி ஏற்பட வேண்டும் என்றால் அடிப்படையில் இணை வைத்தல் ஒழிக்கப்பட வேண்டும். தவ்ஹீத் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது குர்ஆனின் போதனையாகும். இப்படியிருக்க ஆட்சியைப் பிடிப்பதாக இருந்தால், கிலாபாவை ஏற்படுத்துவதாக இருந்தால் தவ்ஹீத், ஷிர்க் பற்றியெல்லாம் பேசக் கூடாது எனப் போதிப்பதும் இபாதத்தை விட கிலாபத் முதன்மையானது. இபாதத் தேவையில்லை. குர்ஆனில் கூட மறுமையின் அதிபதி எனக் கூறிய பின்னர்தான் உன்னையே வணங்குகின்றோம் என்பது இடம்பெற்றுள்ளது. எனவே, அதிகாரம்தான் முக்கியம் என்று கூறுவதும் தவறானதாகும்.
அதிகாரம் நிலைக்க வேண்டும் என்றால் தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தைக் கொடுங்கள். அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுங்கள் என இங்கே கூறப்படுகின்றது.
எனவே, அதிகாரத்தையும் அமைதியையும் நாடுபவர்கள் இந்தக் குர்ஆனின் போதனையைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது அவசியமாகும்.