Featured Posts

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?

02. தஃவீல் என்றால் என்ன?:
இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் ‘முடிவு’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக,

‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பிவிடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்.’ (4:59)

இங்கே முடிவு என்ற அர்த்தத்தில் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறே விளக்கம் என்ற அர்த்தத்திலும் சில இடங்களில் இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சூறா யூசுபில் ‘தஃவீலுல் அஹாதீஸ்’ கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் கலை பற்றி பேசப்படுகின்றது.

இவ்வாறே தப்ஸீர் கலையில் குர்ஆனுக்கு இவர் ‘தஃவீல்’ பண்ணுகின்றார் என்ற பதம் பயன் படுத்தப்பட்டால் குர்ஆனின் வெளிப்படையான அர்த்தத்திற்கு முரணாக விளக்கம் சொல்கின்றார் என்பது அர்த்தமாகும்.

குர்ஆனுக்கு உரிய முறையில் விளக்கம் சொன்னால் அது அங்கீகரிக்கப்பட்ட தஃவீலாக இருக்கும். உள்ள அர்த்தத்திற்கு முரணான விளக்கத்தைச் சொல்வது பொதுவாக தஃவீல் செய்தல் என்று விமர்சிக்கப் படுவதைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *