Featured Posts

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-14

முன்னைய இறைத்தூதர்கள் பலரும் நபி(ச) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளனர். முன்னைய வேதங்களில் தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என்பன முக்கியமானவையாகும். இவை காலப்போக்கில் திரிவுபடுத்தப்பட்டு விட்டன. ஈஸா நபி போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகம் தொலைத்துவிட்டது. இருப்பினும் ஈஸா நபியின் மாணவர்கள் எனக் கருதப்படுபவர்களால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் மற்றும் பல நிரூபங்களையுமே அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஈஸா நபிக்கு முந்திய ஆகமங்கள் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியினதும் அவரது மாணவர்களினதும் போதனைகள் புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகின்றது. இவை இரண்டையும் இணைத்தே பைபிள் என்று கூறப்படுகின்றது.

பைபிளில் ஏராளமான இடைச் செருகல்களும் இட்டுக்கட்டப்பட்ட அம்சங்களும், முரண்பாடுகளும், பொய்களும், பொருத்தமற்ற போதனைகளும், ஆபாசங்களும் மலிந்திருந்தாலும் நபி(ச) அவர்கள் பற்றிய சில முன்னறிவிப்புக்கள் இன்று வரை பைபிளில் காணப்படுகின்றன.

‘(நபியே!) நீர் தூதராக அனுப்பப்பட்ட வரல்ல என நிராகரித்தோர் கூறுகின்றனர். ‘எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சி கூற அல்லாஹ்வும், வேதத்தின் அறிவு யாரிடம் இருக்கிறதோ அவர்களுமே போதுமானவர்கள்’ என்று கூறுவீராக!’ (13:43)

நபி(ச) அவர்கள் ஓர் இறைத்தூதர் இல்லை என மறுப்பவர்களைப் பார்த்து நான் இறைத்த}தன் என்பதற்கு அல்லாஹ் சாட்சியாளன். அத்துடன், வேத அறிவு யாரிடம் இருக்கிறதோ அவர்களும் சாட்சியாளர்கள் என்று கூறுமாறு குர்ஆன் நபிக்குக் கட்டளையிடுகின்றது.

முன்னைய வேதங்களில் மனிதக் கரங்கள் புகுந்து அதன் புனிதத் தன்மையை மாற்றி விட்டாலும் நபி(ச) அவர்கள் ஓர் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள் அதில் இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. முன்னைய வேதங்களை முறையாகக் கற்றவர்கள் நபி(ச) அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தால் முன்னைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட இறைத்தூதர் இவர்தான் என்பதற்கு சாட்சியாளர்களாக மாறிவிடுவார்கள்.

இந்த வசனம் முன்னைய வேதங்களில் முஹம்மத்(ச) அவர்கள் பற்றிய முன்னறிவிப்புக்கள் இன்றும் இருக்கின்றது என்பதற்கான அத்தாட்சி யாக அமைந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் பைபிளைப் பார்த்தால் நபி(ச) அவர்கள்பற்றிய பல முன்னறிவிப்புக்களை அதில் காணலாம்.

‘அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப்பட்டிருப்பதை, தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கண்டு கொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவி, தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும், அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.’ (7:157)

தவ்றாத், இன்ஜீலில் எழுதப்படிக்கத் தெரியாத இந்தத் தூதர் பற்றி எழுதப் பட்டிருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.

ஈஸா(ர) அவர்களும் தனக்குப் பின்னர் வரக் கூடிய முஹம்மத், அஹ்மத் என்றெல்லாம் அழைக்கப்படக் கூடிய தூதர் பற்றி முன்னறிவிப்புச் செய்ததாகக் குர்ஆன் கூறுகின்றது.

”இஸ்ராஈலின் சந்ததியினரே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப் படுத்துபவராகவும், எனக்குப் பின்வரும் ‘அஹ்மத்’ என்ற பெயரையுடைய ஒரு தூதர் பற்றி நன்மாராயம் கூறுப வராகவும் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன்’ என மர்யமின் மகன் ஈஸா கூறியதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) அவர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது, ‘இது தெளிவான சூனியமே’ என அவர்கள் கூறினர்.’ (61:6)

நிச்சயமக இந்த முன்னறிவிப்புக்களின் எச்ச சொச்சங்கள் திரிவுபடுத்தப்பட்ட இன்றைய பைபளிலும் இருக்கவே செய்யும்.

‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும், அவருடன் இருப்போர் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும், தமக்கிடையே கருணையுடை யோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத் தையும், அருட்கொடையையும் நாடி, ரூகூஃ செய்பவர் களாகவும், சுஜூது செய் பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். இதுவே தவ்றாத்தில் அவர்களுக் குரிய உதாரணமாகும். இன்ஜீலில் மேலும் அவர்களுக்குரிய உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தனது முளையை வெளிப்படுத்தி, பின்னர் அதனைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பலமாகி தனது தண்டின் மீது நிலையாக நிற்கின்றது. விவசாயிகளை அது ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்கள் மூலம் நிராகரிப்பாளர்களை அவன் கோபமூட்டுவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்.) மேலும், அவர்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோருக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கின்றான்.’ (48:29)

இந்த வசனத்தில் நபி(ச) அவர்களது தோழர்கள் பற்றியும் பைபிளில் உவமித்துப் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

எனவே, இவை இன்றைய பைபிளில் இருக்கின்றதா என ஓர் ஆய்வுக் கண்ணோட் டத்தைச் செலுத்திப் பார்க்க இருக்கின்றோம். இங்கு பைபிளின் வசனங்கள் அவற்றில் உள்ள பிழைகளை விமர்சனம் செய்வது எமது நோக்கம் அல்ல. குர்ஆனில் கூறப்பட்டுள்ளது போன்று பைபிளில் முஹம்மத்(ச) அவர்கள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதைத் தேடுவதே இந்தத் தேடுதலின் நோக்கமாகும்.
மூஸா நபியைப் போன்றவர் முஹம்மத்(ச):
மூஸா(ர) அவர்கள் மோஸே என பைபிளில் அழைக்கப்படுவார்கள். எகிப்திய மன்னன் பிர்அவ்ன் (பர்வோன்) இடம் அவர் பிரச்சாரத்திற்காக அனுப்பப்பட்டார். இதோ இந்த வசனத்தைப் பாருங்கள்.

‘பிர்அவ்னிடம் ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று உங்களுக்குச் சாட்சியாளராக ஒரு தூதரை உங்களிடம் நிச்சயமாக நாம் அனுப்பியுள்ளோம்.’
(73:15)

பிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போன்று உங்களிடம் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம் என இந்த வசனம் கூறுகின்றது. பிர்அவ்னிடம் அனுப்பப்பட்ட தூதர் மூஸா – (மோஸே)(ர) அவர்களாவார்கள். இங்கே முஹம்மத் நபி மூஸா நபிக்கு ஒப்பிடப் படுகின்றார்.

மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார்:
முஹம்மத்(ச) அவாகளை மூஸாவைப் போன்றவர் எனக் குர்ஆன் கூறுகின்றது. பைபிளில் மூஸா நபியைப் போன்ற ஒரு தூதர் வருவார் என மூஸா நபியைப் பார்த்து முன்னறிவிப்புச் செய்யப்படுகின்றது.

‘உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.’

‘என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.’

‘சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.’

‘கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,’

‘ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.’
(உபகாமம் 18:18-22)

மூஸா நபியைப் போன்ற ஒரு தூதர் மூஸா நபியின் சகோதரர் பரம்பரையில் வருவார். கடவுளின் வார்த்தை அவர் வாயில் அருளப்படும். கடவுள் அவருக்குக் கற்பிப்பதை அவர் மக்களுக்குச் சொல்லுவார். கடவுளின் பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குக் கட்டுப் படாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். கடவுளின் நாமத்தினால் அவர் சொல்லாததைக் கூறும் தூதன் சாவான். ஒருவர் இறைவனிடமிருந்து தனக்கும் செய்தி வராமல் தானாக இட்டுக் கட்டிச் சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், நடக்கும் என அவர் சொன்னது நடக்காவிட்டால் அது கடவுளால் சொல்லப்பட்டது அல்ல என்பன போன்ற முக்கிய விடயங்களை இந்த வானங்கள் கூறுகின்றன.

உபாகம் 18:15 இலும் மூஸா நபியைப் போன்ற ஒரு தூதர் வருவார். அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறப்படுகின்றது.

மூஸா நபியைப் போன்ற தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் தேவனால் தண்டிக்கப் படுவார்கள் எனக் கூறப்படுவதால் மூஸா நபியைப் போன்ற அந்தத் தூதர் யார்? என்பதை ஆராய்ந்து அறிவது பைபிளை நம்பும் ஒவ்வொரு கிறிஸ்தவர் மீதும் கடமையாகும். மூஸாவைப் போன்ற அந்தத் தூதரைப் புறக்கணித்துவிட்டு நீங்கள் மறுமைப்பேற்றைப் பெற முடியாது!

எனவே, மூஸா நபியைப் போன்ற அந்தஇறைத்தூதர் யார்? என்பதை அறிய முயற்சிக்கமாட்டீர்களா?

மூஸா நபியைப் போன்ற அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

‘மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.’

‘அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.’
‘சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.’

‘நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.’

‘அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.’
(அப்போஸ்தவர் 3:22-26)

மேற்படி வசனத்தில் பவுலடிகளாரும் இந்தக் கருத்தைத் தான் கூறுகின்றார்.

ஆனால், மூஸாவைப் போன்ற ஒரு தூதர் வருவார் என இரண்டு முறை முன்னறிவிப்புச் செய்யப்பட்ட உபாகமம் ஆகமத்திலேயே இன்னுமொரு செய்தியும் பதியப்பட்டுள்ளது.

‘கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.’ (உபாகமம் 34:12)

மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்தில் வந்ததில்லை என்று கூறப்படுகின்றது. எனவே, இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த இயேசு மூஸாவைப் போன்ற இறைத்தூதர் வருவார் என்ற வர்ணனைக்குள் வரமாட்டார். இயேசு ஓர் இறைத்தூதர் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. இயேசுவின்தூதுத்துவத்தில் சந்தேகித்தால் அவன் முஸ்லிமாகவும் இருக்க முடியாது!

ஆனால், மூஸாவைப் போன்ற ஒரு இறைத்தூதர் வருவார். அவருக்குக் கட்டுப்படுங்கள் என்ற போதனை இயேசுவைக் குறிக்கவில்லை. முஹம்மத் நபி(ச) அவர்களையே குறிக்கின்றது. இதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் என்ன என்பதை அடுத்த இதழில் ஆராய்வோம். இன்ஷா அல்லாஹ்.

One comment

  1. hi frnd,

    israel entral(jacob and his sons).

    moses “ungal sagotharer” entru avar sonnathu “judha” vai because moses is the son of “levi”

    jesus is not a “prophet”

    jesus is “GOD” (GOD IN FLESH)

    nangal illivupaduthavillai(jesus) engal uyirai vida athikamaga neasikkirom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *