Featured Posts

பெண்கள் எவ்வாறு பைஅத் வழங்கினர்.?

1221. ”நம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:10 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தினால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (இணைவைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது …

Read More »

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய உறுதிமொழி.

1218. ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாஹித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள். 1219. மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் …

Read More »

எது இஸ்லாம்?

இஸ்லாம்! இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது! உலகில் வாழும் ஐவரில் ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும்.

Read More »

பைஅத்து ரிழ்வான் பற்றி…

1213. ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்” என்று கூறினார்கள். புஹாரி : 4154 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 1214. (பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு …

Read More »

குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.

1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ …

Read More »

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

Read More »

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.

Read More »

தவ்ஹீத் உலமாக்கள், ‘ததஜ’வினரை (TNTJ) விமர்சிப்பது ஏன்?

உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அல்ஜுபைல் தஃவா சென்டர் வழங்கும் சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: முகாம் 2, இஸ்லாமிய நூலகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள் : 08.02.2008

Read More »