சலாஹுத்தீன்
லண்டன் புகைப்படங்கள்
அர்ஜென்டினா – 2
போனஸய்ரஸ் நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது Plaza de Mayo எனப்படும் அர்ஜென்டினாவின் சரித்திரப் புகழ் பெற்ற சதுக்கம். சதுக்கத்தின் ஒருபுறத்தில் இருக்கும் cabildo எனப்படும் எளிமையான இந்தக் கட்டிடம் ஆகப் பழமை வாய்ந்தது. 1748-ல் காலனி ஆதிக்கத்தின்போது கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் எவ்வளவோ அரசியல் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் மவுன சாட்சியாக நிற்கிறது. Cabildo – விற்கு நேரெதிரில் அமைந்திருப்பது Casa Rosalda (Pink House) எனப்படும் அதிபர் மாளிகை. ஒரு …
Read More »அர்ஜென்டினா – 1
போனஸ் அய்ரஸ் (Buenos Aires) – அர்ஜென்டினாவின் தலைநகர். அழகிய இந்த தென்னமெரிக்க நகருக்கு அலுவலக வேலையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு எடுத்த சில புகைப்படங்கள்: அகலமான சாலைகள்… பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.. உலகின் மிக அகலமான சாலை என கருதப்படும் Avenida 9 de Julio இங்குதான் இருக்கிறது. (படத்தில் இருப்பது அந்த சாலை அல்ல!). போனஸய்ரஸின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்று. அர்ஜென்டினா …
Read More »துள்ளி எழுந்தது நாகப்பட்டினம்!
எனது முதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: “அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். “ இனி ஜூனியர் விகடன் 21-12-05 இதழில் வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் ஸ்டோரியிலிருந்து சில பகுதிகள்: (நன்றி ஜூனியர் விகடன்) இன்றைக்கு ஒருவேளை சுனாமி அரக்கன், தான் விளையாடிய தேசத்தை சுற்றிப் பார்க்க வந்தால், …
Read More »தோல்வியடைந்த துணிகர முயற்சி!
மனிதன் உயிர் வாழ மூச்சுக்காற்று எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்திற்கு எண்ணை வளம் அவசியம். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் போல தோன்றினாலும் உண்மை நிலவரத்திற்கும் இதற்கும் தூரம் அதிகமில்லை. உலகின் மிகப்பெரிய 50 எண்ணை நிறுவனங்களின் பட்டியலில் பத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க நிறுவனங்களே. இந்த நிறுவனங்களில் ஒன்றான Unocal-ஐ சில நாட்களுக்கு முன் சீனா விலை பேசியது. China National Offshore Oil Corporation (CNOOC) …
Read More »வாழைப்பழ விவகாரம்!
வெகு காலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வினோத வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. வெகுகாலமாக என்றால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்திலிருந்து. உலகின் பலம் பொருந்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் மூல காரணம் வாழைப்பழம்! ஆம்.. வாழைப்பழம்தான். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றிடம் காலனியாக இருந்த பல சிறிய நாடுகள் சுதந்திரமடைந்தன. இருந்தாலும் தமது முன்னாள் காலனி நாடுகளின் …
Read More »G8 நாடுகளின் ‘கரீபி ஹட்டாவ்’
ஜூலை முதல் வாரத்தில் ஸ்காட்லாந்தின் கிளனிகல்ஸ் நகரின் நடந்து முடிந்த கூட்டத்தில் G8 எனப்படும் உலகின் ஆகப்பெரிய 8 பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப்போவதாக சூளுரைத்தன.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த G8. உலகின் பெரும் பணக்கார இந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி உலக பொருளியல் தொடர்பான விஷயங்களை விவாதித்து சில பல அறிவிப்புகளை …
Read More »குண்டு மனிதருக்கு வந்த கோபம்!
‘விர்’ரென்று வேகமாக வந்து வளாகத்துக்குள் நுழைந்து ‘கிரீச்’சென்று நின்றது அந்த கருப்பு வண்ணக் கார். ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டுப்பிறவி படாரென்று கதவை மூடிவிட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்தது. அரங்குக்குள் நுழைந்து மூச்சிரைக்க, கோபம் கொப்புளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டிஷர்ட் ஆசாமியை நெருங்கி, ‘மொத்’தென்று விட்டார் ஒரு குத்து. டிஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் …
Read More »வேண்டாத பிள்ளை! (சிறுகதை)
(‘நம்பிக்கை’ ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..) அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். …
Read More »