சஹர் உணவின் bபரக்கத்தை இழந்து விடாதீர்கள்!
அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் bபரக்கத் (அல்லாஹ்வின் அருள் வளம்) இருக்கிறது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்காக வேண்டி கொஞ்சமாக இருப்பினும் சஹர் உணவு உண்பதை விட்டு விடாமலிருப்பது நோன்பாளிக்கு அவசியமாகும்.
இந்த அருள் வளம் வீணடிக்கப்படலாகாது; மார்க்க மற்றும் உலகியல் ரீதியான பகல் நேர வேலைகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு உணவிலிருந்து, அல்லது பேரீத்தம் பழங்களிலிருந்து, அல்லது பாலிலிருந்து சிறிதளவேனும் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட வேண்டியது இறைவிசுவாசிக்கு கட்டாயமானதாகும்!”.
قال العلامة عبدالعزيز بن عبدالله بن باز رحمه الله تعالى:-
[ فينبغي للصائم أن لا يدع السحور ولو قليلا لقول النبي صلى الله عليه وسلم: « تسحّروا فإن في السحور بركة ». وهذه البركة لا ينبغي أن تضيّع، بل ينبغي للمؤمن أن يحرص عليها ولو بشيئ قليل من الطعام، أو من التمرات أو من اللّبن يستعين بذلك على أعمال النهار الدينية والدنيوية”
{ www.binbaz.org.sa }
தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)