பீ.ஜே. ஒரு பேச்சாளர், எழுத்தாளர், ஷிர்க் பித்அத்துக்களில் மூழ்கி இருந்த தமிழ் பேசும் தென்னிந்திய மற்றும் இலங்கை மக்கள் பலரைத் திருத்தி பொதுமக்கள் மனங்களில் குடி இருப்பவர்.
பீ.ஜே. யின் ஆரம்பம்:
பீ.ஜே. தனது சகோதரர் அலாவுத்தீன் பாகவி (ரஹ்) அவர்கள் மூலம் தனது தஃவா பணியை ஆரம்பித்து, பின்னர்; அந்நஜாத் ஆசிரியராக இருந்து மரணித்த சகோதரர் மதுரை அபூஅப்தில்லாஹ் அவர்களால் அவர்களின் பத்திக்கை மூலம் அறிமுகமானார்.
அக்காலத்தில் இவர் எவ்வாறு நடந்து கொள்வார்? இவரது ஆன்மீகம் தொடர்பான வங்கரோத்து நிலை என்ன என்பது பற்றி அபூ அப்துல்லா அவர்கள் முஜீபுர் ரஹ்மான் உமரி vs பீ.ஜே.-வுடனான தொண்டி விவாத சந்திப்பு ஒன்றில் என்னிடம் கூறினார்கள்.
அல்ஜன்னத் மாத இதழில்…
பீ.ஜே அல்ஜன்னத் இஸ்லாமிய மாத இதழில் பிரதம ஆசிரியராக இருந்த போது தமிழ் உலகில் பிரசித்தி பெற்ற பேச்சாளராக விளங்கினார்.
அதற்கு அரபு நாடுகளில் தொழில் புரிந்த சகோதரர்களின் கணிசமான ஆதரவும் ஜாக் அமைப்பும் காரணமாக இருந்தை மறுக்க முடியாது.
அல்ஜன்னத்தில் பணி புரிந்த வேளை…
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நமது கருத்துக்களில் உள்ள குறைகளை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினால் நாம் வாபஸ் பெறுவோம் எனக் கூறியவர் பிற்பட்ட காலங்களில் அந்த நிலையில் இருந்து தன்னை ஒரு தனித்துவான அறிஞராகக் காட்ட விளைந்தார்.
இதன் விளைவாகவும் காதியானிகள் கப்று வணங்கிகள் போன்றோருடு விவாதங்களை சந்தித்த போது அவர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தற்போது தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் சார்பாக பீ.ஜே வுக்கும் அவரது ரசிகர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கும் முன்வைக்கப்படும் மறுப்பு பதில்களை காதியானிகள் , அஹ்லுல் குர்ஆன் மற்றும் கப்று வணங்கிகளிடம்
கூறி வந்த பீ.ஜே தற்போது தனது வாதங்களை காதியானிகள் , ஷீஆக்கள் போன்று முன்வைப்பதை தனது நிலைப்பாடாக ஆக்கிக் கொண்டு செயல்படுகின்றார்
சில உதாரணங்கள்…
- அல்ஜன்னத் பத்திரிக்கையில் 1990 ல் பன்றியின் மாமிசம் தொடர்பாக எழுதிய பீ.ஜே அதன் பாகங்கள் பற்றி குர்ஆன் நேரடியாக பேசாமல் இருப்பது நவீன விஞ்ஞான உலகில் மனித உடலில் பன்றியின் மாமிசத்தைப் பொருத்த முடியும் என்ற மறைமுகமான விளக்கத்தின் அடிப்படையில் உள்ளதாககக் கூட இருக்க முடியும் என வாதிட்டார்.
- இலங்கையில் ஏத்தாளை உமர் அலி அவர்களோடு விவாதம் செய்த பீ.ஜே யிடம் “வரலாறு என்பது ஆதாரமாகாது” என உமர் அலி முன்வைத்த போது அறிவிப்பாளர் வரிசைகளில் இருப்பவர்கள் யாரிடம் பைஅத் செய்தார்கள், அவர்கள் முஸ்லிம்களா? என்றெல்லாம் குறுக்கு கேள்விகள் கேட்டு உமர் அலியை வாயடைக்கச் செய்த பீ.ஜே, ஒரு அமீருக்கு பைஅத் செம்யாமல் வாழ்வதால் முஸ்லிம் காஃபிராக மயணிப்பதில்லை.
- பைஅத் அவசிமற்றது என்பதை நிரூபிக்க அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்யாமல் இருந்து ஆறுமாத காலங்களில் மரணித்தை தனது கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
- ஈஸா நபி (அலை) அவர்கள் மீண்டும் உலகுக்கு வருவது குர்ஆனுக்கு முரண்பட்டது என வழிகெட்ட காதியானிகள் கோவை விவாதத்தில் முன்வைத்த போது, ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படமாட்டாது என மாற்றி விவாதம் செய்த பீ.ஜே. தற்போது ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் ஸஹாபாக்களின் நடைமுறைகளையும் (பீ.ஜே பார்வையில்) குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் எனப் போலிக் காரணம் உலக அறிஞர்களுக்கு மாறாக மறுத்துரைத்தப்பது தெரிந்ததே!
- அண்ணன் தனது குர்ஆன் விளக்க உரையில் சொன்ன அவரது ஆதாரமில்லாத பல கருத்துக்களைச் சரி கண்ட தொண்டித் தொண்டர்கள் தாவூத் நபி திருடர் எனக் கூறாமல் கூறியதையும் சரி அண்ணா என்றது போல, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒருவரான ஈஸா நபி (அலை) அவர்கள் குலோனிங் முறையில்தான் பிறந்தார்கள், அதனால்தான் அவர்களால் பேச முடிந்தது, போன்ற குஃப்ரை உச்சரிக்க தம்பிகளும் தமது கண்புருவங்களை உயர்த்தி நமது தலைவர் தலையயல்லவா அது? இந்தக் கருத்தை மதனிகளே! ஸலஃபிகளே உங்களால் கூற முடிந்ததா என கேள்வியும் கேட்டனர்.
இவ்வாறு தொடர்ந்தும் தடம் புரழ்ந்து வந்த அண்ணனை தம்பிகள் வழிகேடர்களில் ஒயுவயாகப் பார்ப்பதற்குப் பதிலாக நவீன مجدد முஜத்தித்களில் ஒருவராகவும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவராகவும் பார்த்தது மட்டுமின்றி,
- அண்ணன் சொன்னால் பிழை வருமா என்ற நிலைக்கு மாறினார்கள்.
- காலப் போக்கில் அண்ணன் கூறும் பிழையான கருத்துக்களையும் தமது அமைப்பின் கருத்தாக மாற்றினார்கள்.
- பின்னர் அவற்றை மக்கள் மன்றத்திலும் அசுர வேகத்தில் கொண்டு சென்றார்கள்.
தவ்ஹீத் களம் தக்லீத் களமாக மாறிய அற்புதம்…
தம்மை சுவனத்து வாரிசுகள் போலவும் பிற தவ்ஹீத் மற்றும் ஷிர்க் செய்யாத பல இஸ்லாமிய அறிஞர்கள், அமைப்புக்களை நரகின் அழைப்பாளர்களாகவும் சித்தரித்ததனர். அதன் காரணமாக பிற முஸ்லிம்களில் பள்ளிகள் مسجد الضرار என தீர்ப்பு எழுதினார்கள் .
தமது ஜமாத் உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்வதற்காக ஸலஃபிகள், மதனிகள் இன்னபிற நல்லறிஞர்கள் என்போர் ஸஹாபாக்களைப் பின்பற்றுபவர்கள். நாம் மாத்திரமே குர்ஆன் மற்றும் ஹதீஸை இன்றும் சரியாகப் பிற்பற்றுவோர் என்றனர்.
பீ.ஜே. என்ற குறைமதியாளரை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றிக் கொண்டே இவ்வளையும் சமூகத்தில் பேசித் திரிந்தனர். இன்றும் அதே பல்லவிதான்.
பிற முஸ்லிம் மக்களின் மானத்தை போக்கும் வகையில் கட்டுரைகள் எழுதுவது, சமூக வலைத் தளங்களில் பேசுவது நல்லதா? எனக் கேட்போரிடம் சத்தியத்தை உடைத்தே பேச வேண்டும், இமாம்கள் அறிவிப்பாளர்களைக் குறை கண்டுள்ளனரே என மொட்டைத் தலைக்கும் முழம் காலுக்கும் முடிச்சுப் போடுவர்.
இலங்கையில் ரஸ்மின் என்பவர் ஒரு நூலை எழுதி இது யாருடைய சரக்கும் இல்லை. எனது ஆய்வூதான் எனக் கூறி வெளியிட்ட புத்தகம் தக்லீதின் உச்சத்தை அடையாளட்படுத்திக் காட்டியது.
பீ.ஜே. வீடியோ&ஆடியோ…
பீ.ஜே.வின் ஆபாச ஆடியோ வெளிவந்த போது தம்பிகள் இன்பொக்ஸில் வந்து பீ ஜே மீது அவதூறு சொல்லி பாவத்தை சுமந்து கொள்ளுங்கள் என்றனர். அண்ணன் மீது அவதூறு சொல்வதாகச் சொன்ன இலங்கைத் தம்பிகள் அண்ணன் அண்ணல் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய தனது தவறை ஒத்துக் கொண்டதால் ஜமாத்தின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கி விட்டோம் என்று அறிவித்ததல் வந்ததும் TNTJ அமைப்பு யார் தவறு செய்தாலும் அவரைத் தண்டிக்கும் என அந்தர் பல்டி போட்டனர். இது தக்லீத் மட்டுமல்ல ஷீஆக்களின் இமாமிய்யாகக் கோட்பாட்டை ஒத்த போக்காகும்.
விபச்சாரம் செய்யாத தம்பி அல்தாஃபியை விபச்சாரம் செய்தவராகவும் கட்டுக்கோப்பான தமது ஜமாத்தின் ஒழுங்கை சீர் குலைப்பதாகவும் அண்ணன் தலைமை கூற தம்பிகளும் ஆமாம். உண்மை எனக் கூறினார்கள்.
அண்ணன் விவகாரம் வெளியானதும் நீங்கள் நேரடியாக உங்கள் கண்களால் பார்த்தீர்களா என மாறிக் கேட்டனர்.
இப்படி பயணிக்கும் இலங்கை மற்றும் இந்திய தம்பிகளே தக்லீத் வழிகேட்டில் இருந்து நிதானமான நிலையை அடைய ரொம்ப நாளாகும் என்பது மட்டும் உண்மை.
—
✍ எம்.ஜே எம். ரிஸ்வான் மதனி